Quote:
எனவே தாங்கள் தங்கள் நண்பர்களோடு நிர்வாகத்திடம் நெறியாளரைக் கேட்டுப் பெற்று தாங்களே சுய கட்டுப்பாட்டோடு பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் நலம். இதனைத் தாங்களே முன்னின்று கேட்டுப் பெறலாம். அல்லது உங்கள் நண்பர்கள் யாரையாவது நீங்களே தேர்ந்தெடுத்து நெறியாளராக நியமிக்கச் சொல்லியும் கேட்கலாம்.
விலகுவதை விட ஆக்கபூர்வமாக இந்தப் பணியினை செய்து உங்கள் நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டுவதே சாலச் சிறந்தது.
ஒரு நண்பனாக இதுவே என் ஆலோசனை.
என்னைப் பொறுத்த மட்டில் மீண்டும் தங்களுக்குக் கூற விரும்புவது, இம் மய்யம் இணையதளத்தில் சார்பு நிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை