இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் அவர்களால் , மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் காட்சி.
http://i66.tinypic.com/2vuen3n.jpg
Printable View
இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் அவர்களால் , மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படும் காட்சி.
http://i66.tinypic.com/2vuen3n.jpg
http://i68.tinypic.com/2u6cyvb.jpg
நினைத்ததை முடிப்பவன் (பூமழை தூவி ) பாடல் ஒப்பனையில் மலேசிய
நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி.
பெங்களூர் திரு. கானா பழனி , தன் மனைவி , மகளுடன் , மதுரையில் இருந்து
வந்திருந்த எம்.ஜி.ஆர். பக்தரின் மகளுக்கு, திருமண பரிசாக பட்டுப் புடவை வழங்கும் காட்சி.
http://i63.tinypic.com/2hrmipf.jpg
இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷுடன் சைதை திரு. ராஜ்குமார் குடும்பத்தினர்.
http://i63.tinypic.com/5e8rpk.jpg
திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா , திரு. எம்.ஜி.ஆர். ஹரிக்கு நினைவு பரிசு
வழங்கும் காட்சி.
http://i64.tinypic.com/258uikm.jpg
திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா , நினைவு பரிசு திரு. எம்.ஜி.ஆர். ஹரியிடம் பெறும் காட்சி
http://i67.tinypic.com/53lr3p.jpg
மலேசிய நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி, திரு. ஆர். லோகநாதனுக்கு
நினைவுபரிசு வழங்கும் காட்சி.
http://i64.tinypic.com/2e0lb1c.jpg
.முற்றும் .
விரைவில் மக்கள் திலகத்தின்
பறக்கும் பாவை
கோவை டிலைட் திரை அரங்கில்.
http://s12.postimg.org/75hspgljh/WP_20141102_039.jpg
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு
திரு மின்னல் பிரியன் நடத்திய விழாவிற்கு
தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ள
இயலவில்லை. அந்த கவலையை விழாவின்
அனைத்து நிகழ்வுகளையும் பதிவிட்டு
போக்கிவிட்டீர்கள். நன்றி.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நாளை மெகா தொலைக்காட்சியில்
மதியம் 3 மணிக்கு
முகராசி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பறக்கும் பாவை " வெளியான தினம்.-11/11/1966. 49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இயக்குனர் ராமண்ணா தயாரித்த முதல் முழு நீள வண்ணப்படம்.
மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பல வண்ண உடைகளில் ஜொலித்தார்.
புதுமையான, வித்தியாசமான, மாறுபட்ட சண்டை காட்சிகள் நிறைந்தது.
குறிப்பாக ஸ்டன்ட் நடிகர் புத்தூர் நடராஜனிடம் புரியும் சண்டை காட்சிகள்
வேறு எந்த படத்திலும் இடம் பெறாதது போல் சுவையாகவும், சுறுசுறுப்பாகவும்
விறுவிறுப்பாகவும் , அடிக்கடி காணும் ஆவலை தூண்டுவது போலும் இருந்தன.
கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட படம்.
நகைச்சுவை காட்சிகள் நல்ல கலகலப்பு.
படத்தின் டைட்டில் காட்சியிலும், சர்க்கஸ் காட்சிகளிலும், மெல்லிசை மன்னரின்
பின்னணி இசை மிகப் பிரமாதம்.
காதல் காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி (கெமிஸ்ட்ரி )
நெருக்கம், அபிநயம், நடனம், - அழகு, அருமை. இனிமை.
கதாநாயகிக்கு வரும் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி கரை சேர்ப்பது தான் கதாநாயகனுக்கு முழு வேலையும், பொறுப்பும், கடமையும். அதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிறைவாகவும், இயல்பாகவும், அசத்தலாகவும் செய்துள்ளார் .
பாடல்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடன அசைவுகள் வித்தியாசமாகவும்,
ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது போல் இருந்தன.
இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாத இடைவெளியில் , பெற்றால்தான் பிள்ளையா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் , எதிர்பார்த்த
வெற்றி இலக்கை இந்த திரைப்படம் அப்போது அடையவில்லை.
ஆனால் மறுவெளியீட்டில் பறக்கும் பாவை சக்கை போடு போட்டுள்ளது.
இப்போதும் அடிக்கடி திரை அரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
அன்பு நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.
கோவை -டிலைட் -பறக்கும் பாவை தகவலுக்கும்
தர்மம் தலை காக்கும் மாத இதழ் - விழா பதிவுகள் குறித்த பாராட்டுகளுக்கும்
கனிவான நன்றிகள்.
கோவை- ராயல் -நினைத்ததை முடிப்பவன் -வெற்றி மட்டும் வசூல் நிலவரம்
விரைவில் எதிர்பார்க்கும் நோக்குடன்
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை - பொன்விழா ஆண்டில் கோவை நகரில் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
1966 ஆண்டில் இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை .
9 படங்களில் கதாநாயகனாக நடித்து அத்தனை படங்களிலும்
பல காதல் கீதங்கள் வெற்றி பெற செய்த சாதனையாளர் எம்ஜிஆர் .
ராஜாவின் பார்வை ... ராணியின் பக்கம் [அன்பே வா ]
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ..[அன்பே வா ]
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் ...[ முகராசி ]
முகத்தை மூடி வைத்து கொண்டு ...............[முகராசி]
என்னென்ன இன்பங்கள் .................................[முகராசி ]
பாட்டு வரும் ..உன்னை பார்த்து ......[.நான் ஆண்யிட்டால் ]
உலகமெங்கும் ஒரே மொழி ----- [நாடோடி]
அன்றொரு நாள் அதே நிலவில் ....[.நாடோடி]
திரும்பி வா ஒளியே திரும்பி வா - [நாடோடி]
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - [சந்திரோதயம் ]
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே - [சந்திரோதயம் ]
கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது -[ தாலிபாக்கியம் ]
உள்ளம் ஒரு கோயில் ... கண்கள் [ தாலிபாக்கியம்]
இப்படியே இருந்து விட்டால் .......[தாலிபாக்கியம் ]
ஒரே முறைதான் உன்னோடு பேசி ..[.தனிப்பிறவி ]
நேரம் நல்ல நேரம் ..கொஞ்சம் நெருங்கி ..[தனிப்பிறவி ]
கன்னத்தில் என்னடி காயம் ........[தனிப்பிறவி]
முத்தமோ மோகமோ .. தத்தி வந்த ---[பறக்கும் பாவை]
நிலவென்னும் ஆடை கொண்டாளோ -[பறக்கும் பாவை]
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - [பறக்கும் பாவை ]
உன்னைத்தானே .. உன்னைத்தானே ...[பறக்கும் பாவை]
சக்கர கட்டி ராஜாத்தி உன் மனசை[பெற்றால்தான் பிள்ளையா ]
மேற்கண்ட 22 காதல் பாடல்களை ஆண் குரலில் பாடகர் திலகம் டி .எம் .சௌந்தராஜன் பாடியது குறிப்பிடத்தக்கது .
அவருடன் சுசீலா - ஈஸ்வரி இணைந்து பாடினார்கள் .
கண்ணதாசன் - வாலி பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் கே .வி . மகாதேவன் இசையினில்
மக்கள் திலகம் - சரோஜாதேவி
மக்கள் திலகம் - ஜெயலலிதா
மக்கள் திலகம் - பாரதி
மக்கள் திலகம் - காஞ்சனா
ஜோடி காதல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இன்றும் எல்லா ஊடகங்களிலும் ஏதாவது மேற்கண்ட பாடல்கள் தினமும் ஒளி பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது
1966ல் வந்த 9 படங்களில் இடம் பெற்ற இந்த 22 பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின்
சிறப்பான உடை அலங்காரம்
எழிலான தோற்றம்
சுறுசுறுப்பான நடனம்
மனதை மயக்கும் காட்சிகள்
நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள்
இனிக்க வைக்கும் முக பாவங்கள்
என்று படத்திற்கு படம் வித்தியாசமாக மக்கள் திலகம் பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் கண்களுக்கு விருந்து படைத்தார் .
மறக்க முடியாத 1966 ஆண்டு மக்கள் திலகத்தின் திரையுலக
பாடல்கள் காதல் கீதங்கள் மூலம் மாபெரும் சாதனை நிகழ்த்தினார் நம் மக்கள் திலகம் .
1966ம் ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகத்தின் 9 படங்களில் இடம் பெற்ற பாடகர் திலகத்தின் 11 புகழ் பெற்ற பாடல்கள் .
புதிய வானம் ...புதிய பூமி ..எங்கும் பனி மழை ..
அன்பே வா ..அன்பே வா .. உள்ளம் என்றொரு கோயிலிலே ...
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு ...
தாய் மேல் ஆணை ...தமிழ் ஆணை ....
நல்ல வேளை .நான் பிழைத்து கொண்டேன் ...
கடவுள் தந்த பாடம் ..இங்கு காணும் துன்பம் ..
புத்தன் ஏசு காந்தி ..பிறந்தது ....
உழைக்கும் கைகளே ..உருவாக்கும் கைகளே ...
பட்டுப்பாவாடை எங்கே .. கட்டி வைத்த ....
செல்லக் கிளியே மெல்ல பேசு ....
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ...
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
courtesy -DR M.G.R- KANNADASAN
‘அச்சம் என்பது மடமையடா!’
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
உண்மைதானே!
அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.
அவர்தானே,
அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.
நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
(திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.
(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).
மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!
நீதி சொல்லும் தேதி!
‘முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.
அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.
இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?
“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!
அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?
பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?
“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’
இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?
எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!
“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”
பாருங்களேன்!
தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.
என்கிறார் எம்.ஜி.ஆர்!
உலகியல் உண்மை இதுதானே!
இன்னும் நீதி சொல்வதென்ன?
“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”
‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’
நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?
“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”
‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?
எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’
வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!
யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?
இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!
Courtesy - kannadasan.
1967
தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.
அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.
தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.
அதிக வாக்கு யாரால் கிட்டியது?
அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.
ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.
தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.
எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டு பெரும் வெற்றி பெற்றது.
1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; தி.மு.கழகம் எனும் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் அவரால் உருவாயிற்று.
திண்டுக்கல் பாராளுமன்ற இதைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னமாம் இரட்டை இலைச் சின்னம் மகத்தான வெற்றி கண்டது.
இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.
ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!
அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார்.
இந்தப் பாடலில்,
“தர்மம் தலைகாக்கும்!
தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”
என்ற வரிகள்,
எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தைனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?
கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….
இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!
“கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்!”
இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!
மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!
அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.
அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.
இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.
இதுவரையிலும் நாம் பார்த்த, கண்ணதாசன் பாடல்கள் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த, பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஒரே சமயத்தில் சென்னை மாநகரத்தில் ஒன்பது திரையரங்குகளில், சென்னை நகரில் சிறந்த படங்கள்’ என்ற தலைப்பில், ‘எம்ஜியார் பிக்சர்ஸ் வெளியீடு’ எனும் பெயரில் ஓடி வசூலைக் குவித்த சாதனைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இம்மூன்று படங்களும் ஒரே நேரத்தில் ஓடி ஒப்பற்ற சாதனைகள்படைத்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நிலையில், தமிழ்க் திரையுலக வரலாற்றை, நடிகர்களின் நிலைமைகளை நினைத்து பார்த்தால்தான், வசூல் சக்கரவர்த்தி, நிருந்திய சக்கரவர்த்தி என்ற பெயர் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமே என்ற உண்மைகளை உணரமுடியும்.
Courtesy - dr.mgr - kannadasan
ஏழைகளின் தலைவன் நடித்த ஊருக்கு உழைப்பவன் படத்தின் வெளியீட்டு நாள் இன்று. நல்ல வெற்றிப்படம். சென்னையில் மகாராணியில் 63 நாளும் அபிராமியில் 49 நாளும் ஓடியது. 1976 டிசம்பர் 31 அன்று வெளியான விளம்பரம் இது. பொங்கல் முதல் ஷிப்டிங் செய்யப்பட்டு 75 நாட்களை கடந்து வசூலை அள்ளிக்குவித்த வெற்றிப்படம்.
http://i64.tinypic.com/332b6g7.jpg
திலகத்தின் தீபாவளி
இந்த தீபாவளி எனக்கும் அன்பு சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கும் மறக்க முடியாத தீபாவளியாக அமைந்து விட்டது. இமயம் டி.வி.யில் திலகத்தின் தீபாவளி என்ற பெயரில் தீபாவளி நாட்களில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை தீபாவளி அன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பினார்கள். தீபாவளி திருநாட்களில் வெளியான மக்கள் திலகத்தின் படங்களையும் அவை வசூலை அள்ளி சிறப்பான வெற்றிகளை பெற்று வரலாற்றில் இடம் பிடித்ததையும் இமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செல்வகுமார் அவர்களும் நானும் சொன்னோம்.
இதயதெய்வமாம் நம் எழில் வேந்தனின் உரிமைக்குரல் வெள்ளி விழா படமாக அமைந்ததையும், பல்லாண்டு வாழ்க அமோக வெற்றி பெற்றதையும், நீரும் நெருப்பும் திரைப்படத்துக்கு கூட்டத்தை சமாளிக்க துணை ராணுவப்படை வந்ததையும் நம்நாடு திரைப்படம் மற்ற எல்லா படங்களையும் விட தமிழக அளவில் வசூலை குவித்ததையும் செல்வகுமார் அவர்கள் விவரித்தார்.
தீபாவளி திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் பற்றி நான் சொன்னேன். உலகம் போற்றும் உத்தம தலைவர் புரட்சித் தலைவரைப் பற்றி சொல்லும்போது சில இடங்களில் நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். நிகழ்ச்சியைப் பார்த்த நம் தொண்டர்கள் பலரும் எனக்கு போன் செய்து தாங்களும் அதே போன்ற உணர்வுக்கு ஆளாகி கண்ணீர் விட்டதாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்டு மக்கள் தலைவர் ஏழைகளின் வள்ளல் படங்களின் சிறப்புகளை கூறிய சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. விரைவில் அந்த நிகழ்ச்சி திரியில் பதிவு செய்யப்படும். புரட்சித் தலைவரின் பெருமைகளை சொல்ல எங்களுக்கு வாய்ப்பளித்த இமயம் டிவிக்கும் நிகழ்ச்சியை பார்த்து எனக்கு போன் செய்து பாராட்டிய நண்பர்களுக்கும் மிகவும் நன்றி.
இந்த சிறப்பு நிகழ்ச்சி தவிர, தீபாவளி அன்று டிவிக்களில் மக்கள் திலகம் நடித்த 3 படங்கள் (உரிமைக்குரல், தாய்சொல்லை தட்டாதே, தாய்க்கு தலைமகன்) காட்டப்பட்டன. இப்போதும் கூட தீபாவளி அன்று ஒரு நடிகரின் 3 படங்கள் டிவியில் காட்டப்படுகிறது என்றால் அதுதான் மக்கள் திலகம்.
மின்னல் பிரியன் விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுதும் உள்ள நமது தொண்டர்கள் அறியும் வகையில் பதிவிடும் சகோதரர் லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.
மக்கள் திலகத்தின் திரைப்பட, அரசியல் பெருமைகளை பதிவுகள் போடும் நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி.
http://s13.postimg.org/k0uwjxnvr/scan0001.jpg
Courtesy : Anandha Vikatan - weekly.
அருமைச்சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு,
தீபாவளித்திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின்
வெற்றிக்காவியங்களைப் பற்றிக் கூற தங்களுக்கும்
நமது அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும்
அரிய வாய்ப்பை வழங்கிய இமயம் தொலைக்காட்சி
நிர்வாகத்தினருக்கு உலகெங்கும் வாழும் கோடான கோடி
மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக நன்றியை
தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள்திலகம் பக்தர்கள் இங்கு வழங்கி கொண்டிருக்கும் தகவல்கள் , கட்டுரைகள் அருமையிலும் அருமை ... திரு வினோத் அவர்கள் கட்டுரையில் மக்கள்திலகம் திரைஉலகிலும் மற்றும் அரசியல் வானிலும் அவர்தம் ஆளுமைகளும், வளமான செல்வாக்கு வளர்ந்தோங்கிய பாங்கினையும் பதிவு செய்திருப்பது ... சபாஷ்... திரு லோகநாதன் பதிவுகள் சிறப்பு...
தின இதழ் -09/11/2015
http://i68.tinypic.com/1rrioz.jpg
தின இதழ் -10/11/2015
http://i63.tinypic.com/mbgydg.jpg
தின இதழ் -12/11/2015
http://i68.tinypic.com/2uxtmxu.jpg
14.11.1973 MAKKAL THILAGAM MGR'S SPECH AT BOMBAY
http://i63.tinypic.com/10wm7tj.jpg