Quote:
கவலையின்றி காளைபோல துள்ளித்திரிந்த மன்னருக்கு வந்த சோதனை அண்ணன் முத்துராமன் வழியே....குடும்பபாரம் சுமக்க வேண்டிய சுமை தாங்கியாகிறார்.....முழு நேர வேலையான காதலுக்கு டாட்டா சொல்கிறார் காதல் பிர்லா !
சகிக்கமுடியாத மன்னரின் மனசாட்சி மனக்கூண்டை விட்டு வெளியேறி கார்பரேட் கனவான் தோற்றத்தில் ஜெமினிக்கு ஆறுதல் அளிப்பதோடு மனம் நொந்த இளைஞர்களின் சிரஞ்சீவித்துவ தன்னம்பிக்கைத் தத்துவப் பாடலை பாடி ரசிகர்களின் மனதை ஈர்க்கிறது!
எத்தனை இடர் வரினும் மனசாட்சியால் மட்டுமே சிரித்துக் கொண்டிருக்க முடியும் மானிடரே !!