இன்று (20/07/2017) மாலை 6மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி /பேனர் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i67.tinypic.com/14bs1fd.jpg
Printable View
இன்று (20/07/2017) மாலை 6மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி /பேனர் நண்பர்களின்
பார்வைக்கு .
http://i67.tinypic.com/14bs1fd.jpg
இந்த வார கல்கி இதழ்
http://i65.tinypic.com/4szi54.jpg
தினத்தந்தி ,திருவண்ணாமலை -19/7/2017
http://i63.tinypic.com/34zx2zb.jpg
தினத்தந்தி ,திருவண்ணாமலை - 20/07/2017
http://i66.tinypic.com/rti4xx.jpg
பாரத ரத்னா எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் ......
இந்திய திரை உலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சக்தி 70 ஆண்டுகளாக மக்கள் உள்ளங்களிலும் திரை உலக ரசிகர்களின் உள்ளங்களிலும் ஆளுமையுடன் இருந்து வருவது உலகத்தில் எந்த ஒரு மொழி நடிகருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருப்பது சரித்திர சாதனை .
எம்ஜிஆர் ரசிகர்கள்என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள் .ஆம் .
48 ஆண்டுகளுக்கு பிறகும் எம்ஜிஆரின் அடிமைப்பெண் மீண்டும் பல சாதனைகளை உருவாக்கியுள்ளது .
14.7.2017 அன்று சென்னை நகரில் மட்டும் 18 திரை அரங்குகளிலும் , கோவை நகரில் 3 அரங்கிலும் புதுவையில் 4 அரங்கிலும் , சேலத்தில் 2 அரங்கிலும் நெல்லை வேலூர் திருவண்ணாமலை குடியாத்தம் மற்றும் பல ஊர்களிலும் திரையிடப்பட்டு தற்போது 2 வது வாரமாக சென்னை , சேலம் திருப்பூர் நகரங்களில் நடை பெறுகிறது .
மதுரை நகரில் இன்று முதல் மினிப்ரியா , வெற்றி ,சண்முகா 3 திரை அரங்கில் அடிமைப்பெண்
திரையிடப்பட்டுள்ளது ,
சென்னை அண்ணா சாலையில் 900 இருக்கைகள் கொண்ட தேவி அரங்கில் ரூ 154 கட்டணத்தில் 16.7.2017 அன்று இரவு காட்சி அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது .பல வணிக வளாகங்களில் அமைந்துள்ள திரை அரங்கில் அடிமைப்பெண் அரங்கு நிறைந்துள்ளது
எம்ஜிஆரின் நேற்றய தலைமுறை ரசிகர்களும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் டிஜிட்டலில் வெளிவந்த அடிமைப்பெண்ணை மிகவும் ரசித்து ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள் .
எம்ஜிஆரின் புகழிற்கு புகழ் சேர்த்த திருதிண்டுக்கல் நாகராஜன் அவர்களை மனதார பாராட்டுகிறோம் ..அவருடைய உழைப்பில் அடுத்து வர உள்ள நமது மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் -2017 வரவேற்க காத்திருப்போம் .
https://s10.postimg.org/705xvnvtl/Untitled-2.jpg
அடிமைப்பெண்
அசத்துகிறது இரண்டாவது வாரம்
திருப்பூர் - அபிராமி சினிமா - தினசரி 4 காட்சிகள்
இணைந்த இரண்டாவது வாரம்
சேலம் - கீதாலயா - தினசரி 4 காட்சிகள் - இரண்டாவது வாரம்
http://i65.tinypic.com/2d1v9nc.jpg
இன்று மதுரை மினிப்பிரியாவில் வேங்கயனை தரிசித்தேன். படம் பிரிண்ட் நன்றாக துல்லியமாய் உள்ளது. ஆனால், இசை சரியில்லை. சில இடங்களில் புதிதாக இசை சேர்ப்பு செய்திருக்கிறார்கள். ரீ ரிகார்டிங் சரியாய் இல்லை.
தாய் இல்லாமல் நான் இல்லை பாட்டுக்கு முன் வரும் இசை இல்லை. ஏற்கனவே நாம் பல தடவை படம் பார்த்திருப்பதால் இந்த முறை நாம் பார்க்கும் காட்சிகளில் வரும் இசை வித்தியாசம் போல ஒலிக்கின்றது.
ஒரு வேளை தியேட்டரில் சவுண்ட் கோளாறா என்று தெரியவில்லை. இடைவேளையில் மற்றவர்களும் என்னைப் போலவே சொன்னார்கள். மற்ற ஊர்களில் நன்றாக இருக்கிறதா? படம் பார்த்த நண்பர்கள் விளக்கி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
உலகம் சுற்றும் வாலிபனில் ஏற்கனவே 2009ல் வந்தபோது இசையை கெடுத்து வைத்தார்கள். மறுபடி உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வரும்போது இந்த தவறு இருக்கக் கூடாது.
http://i68.tinypic.com/2nqv050.jpg
உலகிலேயே இப்படிப்பட்ட.....
ஒரு முதல்வரை கண்டதுண்டா?
பொன்மனச்செம்மலுடன்.... அமர்ந்து உரிமையுடன் .
பேசிக்கொண்டிருக்கும் சாமான்யன்.
ரசிகர்களுடன் ...
போட்டோ எடுக்க ..
ஏக கெடுபிடியுடன் ...
ஆதார்கார்டு,
அடையாள அட்டையை காண்பித்தால்தான் ...அனுமதி!
இந்த நபருக்கு ....
ரேஷன் கார்டு கூட இருக்காது.
மனிதருள் புனிதர் மக்கள் திலகம்!
நன்றி : ராமச்சந்திரன் சீனிவாசன் முகநூல்
http://i65.tinypic.com/2a2ts0.jpg
ஈழ விடுதலை போராட்டத்திற்க்காக மரணிக்கும் முன்புகூட 21-கோடிகளை அள்ளி கொடுத்த கொடை வள்ளல். அதை கொண்டு இரண்டு கப்பல்கள் வாங்கிய #புலிகள்...
செத்தும் கொடுத்தார் சீதக்காதி. ஆனால், செத்துக் கொண்டு இருக்கும் போதும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் மனிதநேயத்தை மறுக்கவில்லை. மரணத்தை அணைத்துக் கொண்ட போதும் தமிழ் ஈழ மக்களை மறக்கவில்லை. அவர்களின் விடுதலைக்காக, கடைசி வரை நின்று போராடியவர். தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்று அசை போட்டு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அவர் தான் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கடைசி மூச்சு நிற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, தான் சம்பாதித்த தன் சொந்தப் பணத்தில் பல கோடி ரூபாய் தரத் தயாராக இருந்தார். பிரபாகரனை வரச் சொல்லி ஆளையும் அனுப்பி இருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆரால் அதிகமாகப் பேச முடியவில்லை. மூச்சுத் திணறல். மருந்து கொடுத்து இருக்கிறார்கள். மயக்கமான நிலை. இருந்தாலும் கடைசி நிமிடம் வரை ஈழத் தமிழர்களை அவர் மறக்கவில்லை.
பிரபாகரன் போர் முனையில் இருந்தார். அதனால் அவர் வரமுடியவில்லை. அவர் சார்பில் தளபதிகளில் ஒருவரை அனுப்பி இருக்கிறார்கள். வழக்கமாக எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவித் தொகைப் பெற்றுச் செல்பவர், அந்தச் சமயத்தில் இல்லை. அவரும் போர்முனையில் இருந்தார். அதனால் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் இல்லாத வேறோர் ஆளை அனுப்பி இருக்கிறார்கள்.
அவரிடம் பணம் கொடுக்க எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை. கொடுக்கப் போவது பெரிய தொகை. எப்போதும் வாங்கிச் செல்வாரே, அவரையே அனுப்பி வையுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருக்கிறார். கடைசியில், அந்தப் பழைய ஆளைத் தேடிப் பிடித்து சென்னைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர் வந்து சேர்வதற்குள் காலதேவன் எம்.ஜி.ஆரைக் கொண்டு சென்று விட்டான்.
இருந்தாலும் அவருடைய உதவியாளர் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்து இருக்கிறது. மொத்தம் 21 கோடி ரூபாய். அந்தக் காலத்துப் பணம் எவ்வளவாக இருக்கும். அதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்தப் பணத்தைக் கொண்டுதான் 18 முதியோர் காப்பகங்கள், நான்கு மருத்துவமனைகளைக் கட்டி இருக்கிறார்கள். மேலும் இரண்டு கப்பல்களையும் வாங்கினார்கள் என்பது ஒரு கூடுதலான தகவல். இந்த விஷயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். இது மட்டும் இல்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.
தொடரும்.....
(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.) - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
நன்றி - மலாக்கா முத்துக் கிருஷ்ணன் எம்ஜிஆர் தளம் முகநூல்
http://i67.tinypic.com/52m1s.jpg
எம்.ஜி.ஆர். ஒரு சாமான்யராகப் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தார். ஒரு கலைஞராக வளர்ந்தார். ஒரு நடிகராக உயர்ந்தார். உண்மைதான். இருந்தாலும், ஒரு நடிகர் என்பதைத் தாண்டிய நிலையில், ஒரு மனிதநேய மாந்தராக மறைந்து போனார் என்பது தான் பெரிய விஷயம்.
அரசியலை விட்டு விடுங்கள். #ஆயிரத்தில்__ஒருவன் சினிமாவையும் விட்டு விடுங்கள். இரண்டையும் சேர்க்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு அவர் செய்த நல்லவற்றை மட்டும் மனிதத் தன்மையோடு பார்ப்போம். ஈழத் தமிழ் மக்கள் மீது வற்றாத வாஞ்சை காட்டிய பொன்மனச் செம்மலாக வாழ்ந்தாரே... அதைப் பார்ப்போம்.
பிறப்பால் அவர் தமிழர் அல்ல. இருந்தாலும், தமிழராய்ப் பிறக்காமலேயே அவர் ஒரு தமிழராக வாழ்ந்து காட்டினாரே; தமிழர்களின் சரித்திரத்தில் சாதனை படைத்துக் காட்டி இருக்கிறாரே; வேறு என்னய்யா வேண்டும்.
அது தானே மிகப் பெரிய விஷயம். இன்றைக்கு அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் செய்த நல்ல காரியங்கள் தானே முன் வந்து நிற்கின்றன. அந்த நல்ல செய்கைகள் தானே அவரை முன் நிறுத்தி அடையாளப் படுத்துகின்றன.
எம்.ஜி.ஆரை ஒரு மலையாளி என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். ஒரு தமிழன் செய்யாததை எம்.ஜி.ஆர். செய்து காட்டி இருக்கிறாரே. அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்.
என்னய்யா தமிழன், என்னய்யா மலையாளி, எல்லாருமே ஒரே தாய்மடி உறவுகள் தான். ஒரே இரத்தத்தில் ஊறிய மட்டைகள் தான்.
சில ஆளவந்தான்களும் சில சோளவந்தான்களும் செய்த குசும்புகள் குறும்புகள். அதனால் வந்த குளறுபடிகள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, எல்லாரும் சேர்ந்து பிரபாகரனைக் கழற்றி விட்டார்களே. அதுதான் இப்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
அடுத்து ஒரு சின்னக் கேள்வி. தமிழ்நாட்டின் தமிழ்த் தலைவர்களில் எத்தனைப் பேர், எம்.ஜி.ஆரைப் போல ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்கள். சொல்லுங்கள். விரல்விட்டு எண்ணி விடலாம்.
ஆரம்பத்தில் கலைஞர் உதவி செய்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதிலே சொந்த நலன்கள் கொஞ்சமாய் மறைந்து நின்றன. சான்றுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் போல நிறைவு நலன்கள் இல்லை.
தொடரும்.....
(இது ஒரு தொடர் கட்டுரை. மலேசியா தினக்குரல் நாளிதழில் 14.06.2015 தொடங்கி 19.06.2015 வரை ஆறு நாட்களுக்கு எழுதப்பட்டது. அதை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.) - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
நன்றி மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எம்ஜிஆர் தளம் முகநூல்
http://i67.tinypic.com/6dwavc.jpg
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா
உலகம் நினைக்க வேண்டும்
சொன்னான் செய்தான் என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும்
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
http://i64.tinypic.com/1556jpx.jpg
சென்னை பேபி ஆல்பட் மற்றும் தேவி பாலா திரை அரங்குகளில்
தினமலர் -22/07/2017
http://i68.tinypic.com/2j176e1.jpg
தினத்தந்தி-திருவண்ணாமலை -19/07/2017
http://i66.tinypic.com/9unjmu.jpg
தினத்தந்தி- -21/07/2017
http://i63.tinypic.com/15ead0i.jpg
இந்த வார நக்கீரன் இதழ்
http://i63.tinypic.com/2ur8bo6.jpg
சென்னை தேவி திரை அரங்கில் 1970ல் ''மெக்கனாஸ் கோல்ட் '' நான் முதல் முதலாக பார்த்த படம் .47ஆண்டுகளுக்கு பிறகு தேவி அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது.
16.7.2017
சென்னை - தேவி திரை அரங்கம் .... இரவு 7.15 மணி காட்சி
மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 2017 திரைப்படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் அரங்கு நிறைந்த காட்சியில் நான் கண்டு களித்த அடிமைப்பெண் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்
படம் துவக்கத்தில் தாய் குலத்திற்கு பெருமை சேர்த்த அன்னை தெரசா, விண்வெளி பயணித்த கல்பனா ஆகியோருக்கும் சேவை செய்து வரும் தாய் குலத்திற்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தோடு படம் துவங்குகிறது .
தேவி திரை அரங்கத்திற்கு மிக அருகில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலை முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் பதவி ஏற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் நிழற்படத்துடன் அவருடைய ''ரத்தத்தின் ரத்தமான என் உடன் பிறப்புகளே '' எம்ஜிஆரின் குரல் அகன்ற திரையில் தோன்றியதும் திரை அரங்கில் ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் அரங்கத்தையே அதிர வைத்தது .
அடிமைப்பெண் -2017 லோகோ மிக பிரமாண்டமாக கிராபிக்சில் திரையில் காட்டும் போது அரங்கமே விசில் சத்தத்தில் பிரமிக்க வைத்தது .அதற்கான நவீன தொழில் நுட்பத்தில் இசை அமைப்பும் 5.1 ஒலியில் மிரள வைத்தது .
அடிமைப்பெண் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சிகள் வரை துல்லியமாக புத்தம்புதிய படமாக ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது . ஒவ்வொரு பிரேமிலும் எம்ஜிஆர் அவர்கள் மிக சிரத்தையுடன் எடுத்த காட்சிகள் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது . அத்தனை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தது .
அசோகனுடன் ஒத்தை காலில் எம்ஜிஆர் மோதும் சண்டை காட்சி
சிறையிலிருந்து தப்பித்து வரும்போது எம்ஜிஆரின் குனிந்த நடை
ஒகேனக்கல் நீர் அருவி காட்சிகள் - மிக பிரமாண்டம்
அம்மா என்றால் அன்பு - ஜெயாவின் இனிய குரல் பாடலில் எம்ஜிஆரின் அழகு தோற்றம் .
ஒகேனக்கல்லில் எம்ஜிஆர் சண்டை பயிலும் காட்சிகள்
தன்னுடைய தாயை காண பாசத்தோடு அருவியில் குதிக்கும் காட்சிகள்
தாயிடம் உரையாடும் உணர்ச்சிகரமான காட்சிகள்
அடிமை விலங்கை உடைத்தெறியும் காட்சிகள்
தாயில்லாமல் நானில்லை - எழுச்சியான பாடலில் எம்ஜிஆரின் நடிப்பு
காலத்தை வென்றவன் - மனதை கொள்ளை கொண்ட பாடல்
எம்ஜிஆர் - மனோகர் சந்திக்கும் காட்சியில் எம்ஜிஆரின் வசனங்கள்
எம்ஜிஆர் - ஜெயலலிதா பிரிந்து விடும் ஊட்டி வெளிப்புற காட்சிகள்
ராஜஸ்தான் பாலைவன காட்சிகள்-
ஏமாற்றாதே - பாடல் காட்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - ஜெயாவின் அருமையான நடனம்
ஜெய்ப்பூர் அரண்மனையில் எம்ஜிஆர் அவர்களின் வனப்பான தோற்றத்தில் கட்டு மஸ்தான உடல் வலிமையை காட்டும் காட்சி
எம்ஜிஆரின் பேரழகில் ஜெயா மயங்கி பாடும் ஆயிரம் நிலவே வா -பாடல்
மனோகரனுடன் மோதும் கத்தி சண்டை காட்சி
உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் ....
ஜஸ்டின் மோதும் ஆக்ரோஷமான கத்தி சண்டை கட்சி
இறுதியில் சிங்கத்துடன் போராடும் வீரமான காட்சி என்று அடிமைப்பெண் படம் 3 மணி நேரம் விறுவிறுப்பாக சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
தேவி திரை அரங்கின் அகன்ற திரையில் 5.1. ஒலியோடு புத்தம்புது படம் போல் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்தேன் . எந்த குறையும் இல்லை . இன்றைய தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் இசையில் சிறிது மாற்றம் செய்துள்ளார்கள் . மிகவும் அருமையாக இருந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அடிமைப்பெண் 2017
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாகும் . இந்த பொன்னான வாய்ப்பை தந்த திரு திண்டுக்கல் நாகராஜனை மனமார பாராட்டுகிறோம் . வாழ்த்துகிறோம் ..
தினஇதழ் -22/07/2017
http://i66.tinypic.com/10hu1e1.jpg
http://i65.tinypic.com/2w4bo03.jpg
http://i68.tinypic.com/2zstoa9.jpg
இனிய காலைவ*ண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே! நவரத்தினம் ப*ட*த்தில் தலைவர் பாடும் "மானும் ஓடி வ*ர*லாம், மாந*தியும் ஓடிவ*ர*லாம்! ம*ங்கை த*னியே வ*ர*லாமா! தன்மான*ம் ம*ற*ந்து ஓடிவ*ர*லாமா?" என்ற நவ*ர*த்தின*ம் ப*டத்திற்காக ஜேசுதாஸ் பாடிய ப*டத்தில் இடம்பெறாத காட்சியே இந்த ப*திவு.
படத்தில் சுபா என்ற பெண் வீட்டை விட்டு ஓடி வ*ந்து சிலமுரட*ர்க*ளிடம் அக*ப்ப*ட்டுகொள்கிறாள். எம்ஜிஆர், முரடர்களிடமிருந்து அவ*ளைக் காப்பாற்றி விவர*ம் கேட்கிறார். மீண்டும் வீட்டுக்கு செல்ல* ம*றுக்கும் பெண்ணை புத்திபுகட்டுவதற்காக எம்ஜிஆர் குடித்துவிட்டு வந்து அச்சத்தை ஏற்படுத்தி அப்பெண்ணை வீட்டிற்கு திரும்ப அனுப்ப எடுக்கப்ப*ட்ட* பாட*ல்காட்சி இது.
பின்ன*ர் படத்தை பார்த்த எம்ஜிஆர், இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் நானே க*தைப்ப*டி வீட்டை விட்டு ஓடிவந்தவன்! இன்னொரு வீட்டை விட்டு ஓடிவந்த பெண்ணிற்கு இப்படி அழுத்தமாக அறிவுரை சொல்வது சரியாக இருக்காது. நாமும் பிறர்க்கு அறிவுரை கூற தகுதியுடையவ*னாக இருக்கவேண்டும். எனவே அந்த பாடற்காட்சியை நீக்கிவிட்டு அந்த பெண்ணை காப்பாற்றி வீட்டிற்கு அனுப்புவதுபோல் மாற்றிவிடுங்கள் என்று கூறிவிட்டார். அதன்படியே காட்சி மாற்றப்பட்டது.
நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்
இந்தப் பதிவுக்கு மதுரை எஸ்.குமார் பின்னூட்டம். மதுரை தங்கம் தியேட்டரில் 50 வது நாளில் மானும் ஓடிவரலாம் பாடல் காட்சியை சேர்த்துள்ளார்கள்.
S Kumar நான்மதுரை.தங்கம்.தியேட்டரில் இந்தப்பாடல்காட்சியை 50.வது
நாளில்தான்சேர்த்தார்கள் நான்மூன்றுமுறைகண்டுமகிழ்ந்தேன்
LikeShow more reactions
· Reply ·
1
· July 19 at 10:13am
TIMES OF INDIA -20/07/2017
http://i67.tinypic.com/9hteyx.jpg
LAST FRIDAY,MGR'S 1969HIT FILM "ADIMAIPENN" HAD A DECENT RE-RELEASE IN THE DIJITAL FORMATIN SEVERAL THEATERS IN CHENNAI EVEN AS TICKET PRICES WENT UP DUE TO GST.
DIVYAA FILIMS CHOKKALINGAM WENT ON TO RE-RELIEASE THE MGR-JAYALALITHA STARRER "AAYIRATHIL ORUVAN" IN2014 IN 120 SCREENS ACROSS TN.IT GARNERED
MIXED RESPONSE. BUT SENT OFF A TREND AND MORE FILMS ENTERED THE FRAY.
SUBSEQUENTLY MGR;S DIJITALLY REMASTERED "RICKSHAAKKAARAN" AND " NINAITHATHAI MUDIPPAVAN" SWARMED THEATERS ACROSS THE STATE.
THE PRESIDENT, T.N.THEATER OWNERS FEDERATION, ABIRAMI RAMANATHAN SAID,
HOW OLD FILMS WERE MADE ITSELF COULD BE A LESSON TO YOUNGSTERS TODAY.
MGR FOR INSTANCE FOUGHT WITH THE REAL LION IN "ADIMAI PENN". IT WAS NOT ONLY
ABOUT ACTING, AND ACTION, BUT ALSO ABOUT BRAVERY. WHICH NOW HAS BEEN
REPLACED BY GRAPHICS. THESE OLD FILMS HAD BEAUTIFUL SONGS ,AS THE MAKERS
RESPECTED LYRICS AND KEPT THE SOUND IN THE BACKGROUND.
AAYIRATHIL ORUVAN -1965
DIRECTED BY B.R. BANDHULU ,IS THE FIRST FILM WHICH FEATURED MGR WITH JAYALALITHA. THE DIJITAL VERSION WAS RELEASED IN 2014 AND RAN FOR MORE THAN
175 DAYS.
ADIMAIPENN =1969
AN MGR - JAYALALITHA STARRER , WAS RECENTLY RE-RELEASED IN SEVERAL THEATERS
ACROSS CHENNAI. IT IS THE FIRST FILM IN TAMIL HISTORY THAT RAN HOUSEFULL SHOWS
FOR MORE THAN 400 SHOWS IN FOUR THEATERS IN CHENNAI, DURING ITS INITIAL RELEASE.
இந்தப் பதிவில் 1969ம் ஆண்டிலேயே அடிமைப் பெண் படம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலித்தது என்று வந்துள்ளது.
புரட்சித் தலைவர் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம், புரட்சித் தலைவர் திரையுலகில் இருந்தவரை அதிக வசூல் பெற்ற படமாக இருந்தது உலகம் சுற்றும் வாலிபன் படம்.
அதுவே 2 கோடி ரூபாய் வசூல் ஆகவில்லை. 6 மாதங்களில் 60 லட்சம் ரூபாய் மாநில அரசுக்கு வரியாகக் கொடுத்துள்ளது என்று 25வது வார விளம்பரத்தில் வந்தது.
http://i65.tinypic.com/353cj76.jpg
அரசுக்கு வரி 60 லட்சம் ரூபாய் கட்டினால் சுமார் ஒன்றரை கோடி அளவுக்குள்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலித்திருக்கும். அப்படி இருக்கும் போது அடிமைப் பெண் படம் 1969ல் 2 கோடியே 30 லட்சம் வசூல் செய்ததாக கல்கி பத்திரிகையில் சொல்லி இருப்பது சரியில்லை.
கல்கி மாதிரி பழம் பெரும் பத்திரிகையிலேயே தப்பான தகவல்களை போடுகிறார்கள். பொய் புகழ் நமக்கு தேவையில்லை.
கடந்த ஞாயிறு (16/07/17) சென்னை தேவி திரை அரங்கில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
பிரம்மாண்ட வெற்றி படைப்பான "அடிமைப்பெண் " கொண்டாட்டம் பற்றிய
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2aiiidk.jpg
கோவையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண் " வெளியீடு பற்றிய
புகைப்படங்களின் தொகுப்பு.
http://i63.tinypic.com/30j6yx0.jpg