http://i67.tinypic.com/20s9idd.jpg
Printable View
தமிழக அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்டி தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது (கெஜட் அறிவிக்கை எண்.163,நாள் 5.04.2019,மற்றும் அரசாணை எண்.217,பொதுத்துறை நாள் 5.04.2019) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயர் வைக்க முதன்மை அழுத்தம் கொடுத்த உலக எம்.ஜி.ஆர் பேரவை தலைவர்,மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அவர்களுக்கு இன்று (6.04.2019)மூத்த எம்.ஜி.ஆர் பக்தர்கள் .நெல்லை எஸ். எஸ்.மணி,ஒம்பொடி C.பிரசாத் சிங்,ஹயாத்,புதியவன்,வெங்கட்ராமதியாகு,சரவணராஜ்கோபால ் ஆகியோர் ஆளுயரமாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.......... Thanks wa.,
உலகநாடுகள் போற்றி புகழ் பாடிய பொன்மனச் செம்மலுக்கு நமது பாரதமும் பரந்த மனதுடன் உண்மையான புகழாரத்தை கடந்த காலங்களில் சூட்டி மகிழ்ந்தது.... பாரத் விருது, பாரத ரத்னா விருது பெற்ற ஒரே இந்திய நாயகன் புரட்சித்தலைவரே ! அது மட்டுமின்றி ஓரு தேசத்தின் தலைவராகவும், இந்தியா என்றால் எம்.ஜி.ஆர் என்று வெளி நாடுகளில் புகழாரம் சூட்டப்பட்டு, .இந்திய திரைப்பட கலைஞர்களில் பலர் இருந்தாலும்.... வெளிநாட்டு மக்களுக்கு உடனே நினைவுக்கு வந்தது தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் மட்டும் தான். அந்த அளவுக்கு 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் புகழ் மனம் வீசிய ஒரே திரைப்பட கலைஞர் நமது மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ஒருவரே! சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்த காலத்தில் புகழ் பெற்று மறைந்த பின் சுமார் 30.ஆண்டு காலம் மக்கள் மனதில் வைத்து பூஜித்து கொண்டிருக்கும் ஒரே தேசபிதா மகன். மனித சக்தியின் பேராற்றலின் திருவுருவம். வரலாற்று சிற்பமாம் வள்ளல் திருமகன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே!. பட்டங்கள் பல வந்தாலும், அப்பட்டங்கள் சிறப்பு பெற்றது என்றால் பொன்மனச் செம்மலின் திருமுகத்தின் ஒலியால் தான்... அதுப்போல தான் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது என்றால் அதன் மூலம் இன்று தான் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கே புதுப்பொலிவு வந்துள்ளது... ஆகையால் தலைவர் திருமந்திரத்தை நல்ல முறையில் பயன் படுத்தினால் மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாழ்வு நிச்சயம் உதயமாகும்... தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் எதிர்காலத்தில் இல்லை. இது தான் தலைவரின் ஜாதகமாகும்.!. நன்மையே உன் வாழ்வில் ஒளி வீசட்டும்... நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்....அன்பு கொண்ட வள்ளலை தூயமனதுடன் தினமும் வணங்குங்கள் ! வாழ்வில் ஒழுங்கும், ஒழுக்கமும் , பக்தியும் மனநிறைவுடன் கிடைக்கும்.... இது தான் உண்மை நிலவரம். வாழ்க மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். புகழ்! .....என்றும் வள்ளலை நித்தம் வணங்கும். உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
" புரட்சி தலைவர் Dr.எம்ஜிராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் " என்று சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு பெயர் வரக்காரணமான அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு கோடானு கோடிகள் நன்றிகள்,
நாளை 8-04-2019 காலை 9:00 மணிக்கு புரட்சி தலைவரின் நினைவிடத்தில் அரசு வெளியிட்ட அரசாணையை சமர்ப்பணம் செய்யப்படும், அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்,
கலந்து கொள்பவர்கள் நடிகை
"எம்ஜிஆர் லதா " அவர்கள், முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், எஸ்.ஆர்.ராதா, ஐசரி கணேஷ், அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ், முருகு பத்மநாபன், ஓமபொடி பிரசாத், மற்றும் புரட்சி தலைவரின் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்,
அனைவரும் வருக...! வருக...!!!............ Thanks wa., Friends...
இன்று (07/04/19) பிற்பகல் 3 மணியளவில் சென்னை தி.நகர் , பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் , மேடை பேனர் , மற்றும் நுழைவு சீட்டு .
http://i64.tinypic.com/versp2.jpg
நண்பர் சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,
சீன போருக்கு அட்வான்ஸ் தொகையாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் அளித்த தொகை எழுபத்து
ஐந்தாயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக எழுத்து ஐந்தாயிரம் ரூபாய் என்று
பதிவாகியுள்ளது . ஒரு எழுத்து தவறினாலே அர்த்தமே மாறிவிடும். எனவே
பதிவுகள் செய்யும்போது சற்று கவனமாக செயல்படவும் .நன்றி .
http://i63.tinypic.com/67pqv6.jpg
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல் பயணிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள பயணசீட்டில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர்
இடம் பெற்றுள்ளது என்பதை கவனிக்கவும் .
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .
மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .
சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு
சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .
சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .
பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .
மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.
சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .
வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .
இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,
அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.
தினத்தந்தி -07/04/19
http://i64.tinypic.com/2hnuhwp.jpg
நம் மக்கள் திலகம் திரியில் உறுப்பினர்களின் பதிவை உன்னிப்பாக கவனித்து, திருத்தும் பெரும் பொறுப்பை ஏற்று கொண்டு தவறை சுட்டி காட்டும் மூத்த சகோதரர் திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி... இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.............
கடவுளிடம் முதுமை அடைய கூடாது ஆயிரம் ஆண்டு வாழவேண்டும் எனவும் எவரும் வேண்டுவதில்லை ...
ஏன் என்றால் இவை கடவுள் நிறைவேற்ற மாட்டார் , இது இயல்பு என தெரியும்
கடவுளிடம் அதைதா இதைதா என கேட்பது அவர் தருவார தரமாட்டாரா என தெரியாமலேயே....
ஆனால் கடமையை பற்றறு எதை விதைக்கிறாயோ , அதுவே உன்னை வாழவைக்கும் ஆனால் எவரும் அதை. மதிப்பதில்லை ...
கேட்காமாலே மக்கள் குறைதீர்த்தார் எம் .ஜி .ஆர் .,
மனிதநேயம் காத்தார் எம் ஜி ஆர்
வள்ளலாய் வாழ்ந்தார் எம் ஜி ஆர்
நான் என்ற கர்வம் இல்லா எம் ஜி ஆர்
அத்தனையும் மக்களுக்கு என எம் ஜி ஆர் வாழ்ந்ததால் அவர் கேடாகாமலே பதவி புகழ் எல்லாம் கிடைத்தது
மனிதனாக வாழ எல்லாம் படைத்த கடவுளுக்கு இனி எப்படி வாழவைக்கவேண்டும் என்பதும் தெரியும் என்பதை உணர்ந்து மனசாட்சி உறுத்தாத செய்கைகளை செய்து கடமையுடன் வாழ்வதே மனிதனின் கடமை ..........
வள்ளலே எங்கள் வாழ்வே எங்கள் கடவுள்....
வாழ்க எம் .ஜி .ஆர் .,. புகழ்........ Thanks wa.,
திரையுலகம், மற்றும் அரசியல் உலகம் என்ற இரண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும், களங்களிலும் எவரும் நெருங்க இயலாத முதலிடத்தில் தொடர்ந்து கோலோச்சி வருடம் மாறாமல் அப்படியே உறுதியாக இருந்தார் என்பதும், மறைந்து 32 ஆண்டுகள் ஆக போகும் இந்த நேரம் வரை மக்கள் திலகம், மக்கள் தலைவர் மங்காத புகழ் வேறு பலராலும் போற்றப்படுகிறது ... இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் j j., இருந்திருந்தால்... மக்கள் திலகம் நூற்றாண்டு விழா வைபவங்கள், பேருந்து நிலையங்கள் திருபெயர் சூட்டுதல், ரயில்வே ஸ்டேஷன் எம்.ஜி.ஆர்., திருப்பெயர் நிகழ்வுகள் இப்படி மகோன்னதமாக நடைபெற்றிருக்குமா என நண்பர்கள் சிலர் கேட்டபோது சிந்தனையில் இருந்தேன்...
தினத்தந்தி -08/04/19
http://i67.tinypic.com/2qapu0j.jpg
தினமணி -08/04/19
http://i63.tinypic.com/xp1vgj.jpg
தமிழ் இந்து -08/04/19
http://i68.tinypic.com/2s165up.jpg
தினமலர் -08/04/19
http://i64.tinypic.com/2rrp7a0.jpg
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று (பெயர் மாற்றம் ) செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது . அந்த அரசாணையின் நகல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் வைத்து மலரஞ்சலியுடன் பூஜைகள் செய்யப்பட்டன .
இன்று காலை (08/04/19) 9 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தலைமையில், நடிகை லதா,
முன்னாள் அமைச்சர் திரு.விவி. சுவாமிநாதன், திரு.ஐசரி கணேஷ் (வேல்ஸ் பல்கலை கழகம் ),திரு.ஓமப்பொடி பிரசாத் திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ), திரு.மின்னல் பிரியன் , மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர் .
அதன் புகைப்படங்கள் பதிவுகளை காண்க .
http://i66.tinypic.com/jiomt0.jpg
யுக புருஷர்!!
-----------------------
எம்.ஜி.ஆரின் சாதனைகள்!!
அவ்ரது திரைத் துறையை எடுத்துக் கொண்டாலே--
முதல் வேற்று கிரகத்தில் எடுக்கப்பட்ட படம்!
முதல்--பகுதி வண்னத் திரைப்படம்!
முதல் முழு நீள வண்னப்படம்!
பெரிய படக் கம்பெனிகள் எடுத்த முதல் வண்ணப்படம்!
நடிகர் சங்கம் ஆரம்பித்தது!
துணை நடிகர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டது!
ஒரு நடிகனாக இருந்து ஒரு கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் முதல்வரானது!
உலக வரலாற்றிலேயே ஒரு நடிகன் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்றது!!
இப்படி முதல்--முதல்--என்று அவர் பதித்த முத்திரைகளை முழங்கிக் கொண்டே போகலாம்!!
தற்போது மலர்ந்திருப்பது--
எம்.ஜி.ஆர் பெயரில் மத்திய ரயில் நிலையம்!!
காலம்,, ஒருவருக்கான அங்கீகாரத்தை சரித்திரம் என்னும் மகத்துவத்தில் வைக்கும்!
ஆனால் இதிலும் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்ட இடமும்,,உயரமும் உலகில் வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்பதிலும்--முதல் சாதனையாளராக எம்.ஜி.ஆரே நிற்கிறார்?
எப்படி என்றால்??
ஒருவர் ,,வாழும் காலத்தில் அவரைப் புகழ்பவர்கள்,,காலப் போக்கில் மறந்துவிடுவார்கள்!!
அவரது கடந்த கால சாதனைகள் சரித்திரத்தில் இடம் பெறுமே தவிர--அவரின் சிறப்பு கூடுவதற்கு வாய்ப்பில்லை!!
ஆனால்,,எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால்--
அவரது புகழை இன்னும் வளர்த்துக் கொண்டே போகிறது வரலாறு!!
ஆங்கிலத்தில் ரசிப்பவர்களுக்காக--இந்த வார்த்தை!!
அன்று ஏழ்மை நிலையில் இன்னலுற்று--
ப்ளாட்-ஃபார்ம் டிக்கட்டுக்கே வழியில்லாதவருக்கு--மிக உயர்ந்ததொரு-
ஃப்ளாட்-ஃபார்ம் கொடுத்து --
ஃப்ளாட்-ஃபார்ம் டிக்கெட்டிலேயே அவர் பெயரைப் பொறித்து---
கௌரவித்திருக்கிறது--சென்ட்ரல் -ரயில் --
ஃப்ளாட்--ஃபார்ம்??
தமிழில் சொல்ல வேண்டுமென்றால்--
அன்று சீட்டு வாங்கி -படம் பார்த்தவர்களின்--
வாழ்க்கைப் பயணத்தை செழிக்க வைத்த--
எம்.ஜி.ஆர் பெயரில் இன்று--
பயணச் சீட்டு???
இந்த சிறப்பின் மூலம்--
தமிழகத்தின் ஒட்டு மொத்த தேர்தல் பிரச்சாரமும்--
தலை நகரின் மத்திய ரயில் நிலையத்திலேயே நடந்து முடிந்திருக்கிறது??
சீட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பெயரையும்--நிலையத்தின் உள்ளே உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தும் மெய் மறந்து--
ரயிலைக் கோட்டை விடுபவர்கள் எத்தனை பேரோ??
பெரும்பாலானவர்கள் வீட்டில் இனி குவியப் போவது-பயணச் சீட்டும்,,நடை மேடை சீட்டும் தான்??
சைதையார்,,ஐசரி கணேஷ்,,எம்.ஜி.ஆர் லதா, முன்னாள் அமைச்சர் திரு வி.வி.சாமினாதன்,, மெகா டி.வி ஆதவன் போன்றோருடன்--இதயக்கனி விஜயன்,,மின்னல் பிரியன்,,பவானி மின்னல் பிரியன்,,திரு மனோகரன்,,ஹயாத்,,கனரா வங்கி சரவணன்,,மூத்த சகோதரர் ஹம்ஸா அமீர் உட்பட நேற்று மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் தலைகளை விட அலைகளின் எண்ணிக்கைக் குறைவு என்பதே நம் கருத்து!!
விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்தியவர் நம் ஓமப்பொடியார்!!
முற்றுப் புள்ளி இல்லா எம்.ஜி.ஆரின் சாதனைகளை---
சற்றுத் தள்ளிக் கூட இனி எவராலும் பெற இயலாது என்பது என் கருத்து!!
உங்கள் கருத்து???.............. Thanks wa., fb.,
இந்து மத காவியங்களை
நோன்றதை விட்டால் உங்களுக்கு வேறு ஒன்னும் தெரியாதுங்களா ?
இந்து மதத்தை கிண்டல் செய்ற நீங்கள் அறிவாளி.
இந்து மதத்தை வணங்குறவன் முட்டாளா ?
தலைவர் னா
எங்கள் புரட்சித் தலைவர் போல எல்லா சமுதாய மக்களையும்
மதங்களையும் கலாச்சாரங்களையும்
மதிக்கிறவன் தான் தலைவன்.மதங்களை கேலி செய்வதை விட்டுட்டு
பின் தங்கிய சமூக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்......... Thanks wa.,
#புரட்சித் #தலைவருக்கு #புகழ் #சேர்த்த #கவிஞர்கள்
நமது தமிழக ரசிகர்களைத் தனது துடிப்பான நடிப்பாலும் வாரி வழங்கும் வள்ளல் குணத்தாலும் ஆளுமை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவருக்கு எழுதிய பாடல்களில் இலக்கியம் மற்றும் தத்துவம் போன்ற தாக்கங்களால் அவருக்கு பெருமை சேர்த்தவர்கள் கவியரசு கண்ணதாசன் மற்றும் வாலிபக் கவிஞர் வாலி.
கவியரசு அவர்களின் "அச்சம் என்பது மடமையடா",வாலி அவர்களின்" நான் ஆணையிட்டால் " போன்ற பாடல்கள் எம் ஜி ஆர் அவர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.
1931 ம் ஆண்டு பேசும் படம் வரத்தொடங்கிய காலங்களில் வசனங்களை விட பாட்டுகளே நிறைந்து வசனங்கள் குறைந்த படங்கள் தான் வெளிவந்தன.
பாடல்களே அதிகம் உள்ள இது போன்ற படங்களைப் பேசும் படம் என்பதை விட பாடும் படம் என்பதே சரியாக இருக்கும்.
ஒரு படத்தில் 50 பாடல்கள் இருந்த நிலை மாறி படிப்படியாக 1960 களில் ஆறு அல்லது ஏழு பாடல்களோடு நின்றன.
இப்படி வானும் நிலவும் போல, நிலமும் நீரும் போல, மலரும் மணமும் போல, காதலனும் காதலியும் போல படமும் பாடல்களும் இணைந்தே இருந்தன.
இந்தப் பாடல்களை கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் மூவர் கூட்டணி அமைத்துப் பாடுபட்டால் தான் பாடல் வெற்றி பெறும். படமும் வரவேற்பைப் பெறும். இதில் முக்கிய பங்கு வகிப்பது பாடல் வரிகள்.
பாடல் வரிகள் சிறப்பாக இருந்து நல்ல இசையுடன் ஒரு பாடகர் அதை இனிமையாகப் பாடிவிட்டால் அத்தனை பெருமையும் பாடலுக்கு நடித்த நடிகரையே பெருமைப்படுத்தும்.
இப்படிப்பட்ட பாடல் வரிகளை திரைமறைவிலிருந்து எழுதி படத்திற்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியர்கள் எத்தனையோ பேர் .
அவர்களில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்குப் பாடல் எழுதிய கவிஞர் களைப்பற்றிய ஒரு தொகுப்பு.
எம் ஜி ஆருக்கு அதிக அளவில் பாடல் இயற்றியவர்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் முதலிடத்தில் உள்ளார். வாலி அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்.
கவியரசு அவர்கள் எம் ஜி ஆரின் 48 படங்களில் 218 பாடல்களும் ,வாலி 51 படங்களில் 182 பாடல்களும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதி உள்ளனர்.
இருவரும் சேர்ந்து எழுதிய படங்கள்
மற்ற கவிஞர்கள் விபரம்
டி.கே.சுந்தர வாத்தியார் - நான்கு படங்கள்.
கே.பி. காமாட்சி சுந்தரம் - மூன்றுபடங்கள்.
கவி சி.ஏ.லட்சுமண தாஸ் - ஜந்துபடங்கள்.
கலைஞர் கருணாநிதி -மூன்று படங்கள் .
சுரதா -நான்கு படங்கள்
முத்துக்கூத்தன் -ஐந்து படங்கள்.
எம்.கே.ஆத்மநாதன்- நான்கு படங்கள்.
ஆலங்குடி சோமு - பதினாறு படங்கள்.
பஞ்சு அருணாசலம் _ மூன்று படங்கள்
உடுமலை நாராயணகவி -ஆறு படங்கள்
தந்சை ராமய்யா தாஸ் -பத்து படங்கள்
கே.டி.சந்தானம் -ஒரு படம்
க்ளவுன் சுந்தரம் -ஒரு படம்.
ரோஷனாரா பேகம் - ஒரு படம்.
பூவை செங்குட்டுவன் -இரண்டு படங்கள்.
புலமைப்பித்தன் -பத்தொன்பது படங்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஏழு படங்கள்.
மருதகாசி -பத்தொன்பது படங்கள்
அவிநாசி மணி, நா.காமராசன், முத்துலிங்கம் பாடல்கள் சரியான விபரம் கிடைக்கவில்லை. எனவே பதிவிடவில்லை
கவியரசுவும், வாலிபக் கவிஞர் இருவரும் பாடல் எழுதிய படங்கள்
பதினொன்று............. Thanks wa.,
தலைவர் இராமபுரத்தில் பயன் படுத்திய கட்டில் மெத்தை இது.1987 டிசம்பர் 24 ம் தேதி அன்று தூயில் கொண்டு கடைசி யில் தன் மீளாதூக்கத்தில் உயிர் பிரிந்த கட்டில் இது. தலைவர் பயன்படுத்திய இந்த அறை இரண்டாவது மாடியில் சிறிய அறை தான். நான் சில தலைவர் அபிமானிகளுடன் மறைந்த ஒரிஜினல் எம்.ஜி.ஆர் விஜயன் அவர்களின் மூலம் அந்த கட்டிலில்1997 ம் ஆண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஜானகி அம்மாள் மறைவுக்கு பின் நடந்தது. தலைவர் வாழ்ந்த எளிமை அன்று பார்க்கும் போது எங்கள் அனைவருக்கும் கண்ணீர் வந்து விட்டது. இப்படி ஒரு தலைவர் நம் தமிழ் மண்ணில் ஏழேழு ஜென்மத்திலும் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டார் என்று எனக்குள்ளே பேசிக்கொண்டேன். 22 .ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்று தலைவர் வாழ்ந்த இராமபுரத்தோட்டம் அங்கு வசிப்பவர்களுக்கு ஏற்றாற் போல் உள் அறைகள் மாற்றபட்டு விட்டன... தலைவர் வாழ்ந்த வீட்டை அப்படியே ஏதும் மாற்றமல் இருந்தால் இன்றைய தலைமுறைகளின் பார்வையில் பட்டால் இப்படி ஒரு தலைவர் இவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்று வாழ்த்த தோன்றும் . மேலும் நான் பதிவிட்டால் பல உண்மைகளை சொல்லத்தோன்றும் ஆகையால் இத்துடன் நன்மையாகவே முடித்து நிறைவு கொள்கிறேன். நன்றி! உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
எங்கு நோக்கினும் புரட்சித்தலைவரின் சக்தியப்பா... அது எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து திரு நாமத்துடன் எங்கும் முழுங்குதப்பா..... நாடோடி மன்னன் மூலம் நல்லாட்சி தந்த நல் முதல்வரின் திருப்பெயர் எங்கும் கொடிகட்டி பறக்குதப்பா... வீணர்களின் பொய் முகத்தை கிழீத்து இன்று இந்திய ரயில் நிலைகளில் எல்லாம் உலகின் மும்மொழிகளில் (.தமிழ் இந்தி ஆங்கிலம்) நம் தலைவரின் பெயர் புரட்சியுடன் ஒலிக்குதப்பா.... முப்பதாண்டு காலம் கடந்த பின்னும் காலத்தை வென்ற முதல்வர் எம்.ஜி.ஆரின் திருமந்திரம் 125 கோடி மக்கள் மூலம் ரயில் நிலையங்களில் உச்சரிக்கபடுகிறதப்பா..இந்திய வரலாற்றில் எந்த ஒரு தனி மாநில முதல்வருக்கு கிடைக்காத புகழை பெற்ற முதல்வர் நம் தங்க தலைவரப்பா.... மாநிலம் கொண்டாடுவதை காட்டிலும் இன்று மத்திய அரசும் நம் தலைவருக்கு சென்ட்ரல் ரயில் மூலம் புகழ்பாடுகிறதப்பா... இந்திய வரலாற்றில் உண்மையும் நேர்மையும் அழியாது எற்பதற்கு எடுத்துக்காட்டாக அகிலம் புகழ்பாடும் அன்பு தலைவருக்கு தமிழகமும் தலை வணங்கி மகிழ்கின்றதப்பா.... அன்று : பாரத் விருது மூலம் 1972.ல் உலக புகழ் பெற்று மக்கள் திலகமாக பவனி வந்தார். நேற்று : பாரத ரத்னா மூலம் 1988 ம் ஆண்டு பார் முழுவதும் புகழ் பெற்றார். இன்று :2019 ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூலம் தினமும் மக்கள் உச்சரிக்கும் புனித பெயராக புரட்சித் தலைவர் எம் ஜி.ஆர் என்று டிக்கட் வாங்கும் பொழுதெல்லாம் அழைக்கப் படுகிறாறப்பா...... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை! அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வியில்லை..... ஆம் ! நம் புரட்சித் தலைவருக்கு என்றுமே ஆண்டுகள் பல கடந்தாலும் வெற்றி தான்.! அப்பாடலே.மீண்டும் உயீர் பெற்றுவிட்டது. நம் இதய தெய்வத்திற்காக.... வணங்குவோம் வள்ளலை! 👍 👌 💐 நன்றி... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
தினமலர் -08/04/19
http://i63.tinypic.com/o0c8cy.jpg
தினகரன் -08/04/19
http://i68.tinypic.com/124y81c.jpg