-
குமுதம் வார இதழ் -08/01/20
--------------------------------------------
பொங்கலுக்கு போட்டி வைத்த எம்.ஜி.ஆர். -சபீதா ஜோசப்*
-----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே பண்டிகை பொங்கல் மட்டும் தான்.* அதற்கு பல காரணங்கள் உண்டு .*
எம்.ஜி.ஆர். உழவர் தினமான 17ம் தேதி பிறந்தார் .* பிறந்த நாள் கொண்டாடாத எம்.ஜி.ஆர். அந்த நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடுவார் .* அவருடைய பெரும்பாலான* படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன .
அவரது நண்பரும் நடிகருமான எம்.என்.நம்பியார் ஒரு சமயம், எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிட சிறப்பாக கொண்டாடி வந்தார் .* நலிந்த* கலைஞர்களுக்கு*பொங்கல் பரிசுகள் கொடுப்பார் .* *அன்று காலை முதல் மாலை வரை அவருடன் இருப்பேன் என்றார் .
சரி, எம்.ஜி.ஆர். வீட்டு பொங்கல் திருநாள் எப்படி இருக்கும் .அந்த நாளில் என்னென்ன விஷேசம் நடைபெறும் என்பதை* 1957 முதல் 1987 வரை எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் (இப்போது 90 வயது ) அவர்களிடம் பேசியதில் இருந்து :*
புரட்சி தலைவர் தமது வாழ்நாளில் பொங்கல் திருநாளைத் தவிர* வேறு இந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை* *அந்த நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவார் .* இப்போது அ. தி.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் அப்போது எம்.ஜி.ஆரின் நாடக மன்றமாக இயங்கி வந்தது .* அங்கு தான் வருசா வருஷம் எம்.ஜி.ஆரின் குடும்ப* விழாபோல பொங்கல் விழா நடைபெறும் .**
பொங்கலுக்கு முதல்நாளே எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தை சேர்ந்தவர்களும், அவரது ஸ்டண்ட்* குழுவை சேர்ந்த நாங்களும் அங்கு கூடிவிடுவோம் .* அன்னான் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் அந்த இடத்தை அலங்கரிப்பது, முதல் லாரியில் வந்த புடவைகள், வேட்டிகள், பரிசு பொருட்களை அலுவலகத்தில் அடுக்கி வைப்பது வரை அனைத்தையும் செய்வோம்.* அந்த புடவைகள் வேட்டிகள் எல்லாம் ஒரே விலையில் , ஒரே தரத்தில் இருக்கும்.**
பொங்கல் அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர்.அவரது மனைவி, அவரது* அண்ணன் ,சக்கரபாணி, அவர் மனைவி மீனாட்சியம்மாள் , அவரது மைத்துனர் , அவர் மனைவி உள்பட குடும்பத்தினருடன் வந்ததும் விழா களை கட்டும் .* தன் கையாலேயே அனைவருக்கும் புடவை வெட்டி கொடுப்பார்.* அதையே தன குடும்பத்தாருக்கும் வழங்குவார் .* அதே வேட்டியை அவரும்* அணிந்து கொள்வார் . எல்லோரும் புது டிரஸ் போட்டு ஒன்பது மணிக்கு வந்துவிட வேண்டும் .* எம்.ஜி.ஆர். வீட்டில் பொங்கல் வைத்து* நடக்கும்* நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படும் .* ஆண் பெண் வரிசையாக வந்து உண்டு மகிழ்வார்கள் .* அங்கு ஏராளமான இனிப்பு பதார்த்தங்கள் சிறுசிறு துண்டாக வெட்டிவைத்த* கரும்பு துண்டுகள் வழங்கப்படும்* *காலை 10* மணி அளவில்* நாடக மன்ற நிகழ்ச்சிகளை தலைவர் ஆரம்பித்து வைப்பார்*
கயிறு இழுத்தல்* போட்டி, பெண்களுக்கான மியூசிக்கல் சேர் , ஓட்டப்பந்தயம் , சாக்கு கட்டி குதித்து* ஓடுதல், நடத்தல், ஸ்டண்ட் நடிகர்களின் வீரசாகஸங்கள் , என்று ஏராளாமான போட்டிகள் தொடர்ந்து வரிசையாக நடக்கும் .* எம்.ஜி.ஆர்.* வீட்டு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இயக்குனர் சுப்பிரமணியன் , சக நடிகர்களான டி.எம்.கே. முஸ்தபா , என்.என்.நாராயண பிள்ளை, சிவானந்தம்,நீலகண்டன், டி.ஏ* மதுரம், சி.டி.ராஜகாந்தம், புஷ்பலதா , ஜி.சகுந்தலா, கே.ஏ. தங்கவேலு , நம்பியார் . அவர் மதிக்கும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன், சத்யவாணிமுத்து, என்.வி.நடராசன் , துரைமுருகன் என பலரும் வருவார்கள் .**
1962ல் நடந்த பொங்கல் விழாவில், எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் ஊழியர்களும்* எம்.ஜி.ஆர். நாடக குழுவினரும் , கயிறு இழுக்கும் போட்டியின்போது* கலந்து கொண்டனர் . எம்.ஜி.ஆரும்,அவரது அண்ணனும் எதிரெதிர் நின்று வீட்டுக் கொடுக்காமல் கயிறு இழுத்தார்கள்.* திடீரென்று நடுமத்தியில்* கயிறு அறுந்துவிட* இரு கோஷ்டிகளும் தரையில் விழ ஒரே சிரிப்பு, கரகோஷம்தான் .**
ஸ்டண்ட் கலைஞர்களின்* வீர* தீர சாகச நிகழ்ச்சிகளின்போது* கலைவாணர் என்.எஸ். கே.வின் நண்பர் வி.கே.ஆசாரி தமது வயிற்றின் மேல் பெரிய பாறாங்கல் வைத்து எங்கள் இருவரை கொண்டு சுத்தியலால் உடைக்க சொல்வார் . சிலம்பாட்டம் , குத்துசண்டை என்று அவரவர்களுக்கு தெரிந்த கலைகளை செய்து காட்டுவார் .* அவர்களுக்கு புரட்சி தலைவர் சிறப்பு பரிசுகளை வழங்குவார் .**
ஊர்வலம் என்ற நாடகத்தில் ஸ்டண்ட் நடிகர்களான நான், தர்மலிங்கம், புத்தூர் நடராசன், குண்டுமணி, முத்து , திருப்பதிசாமி, கோலப்பன் , என அனைவரையும் நடிக்க வைத்து தலைவர் ரசிப்பார் .* இறுதியில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின் திறமையை நகைச்சுவையை பாராட்டி பேசி பரிசுகளை வழங்குவார் . இந்த மகிழ்ச்சியான பொங்கல் நிகழ்ச்சிகள்* முடிய இரவு 11 மணியாகி விடும் .* அளவுகடந்த* மகிழ்ச்சியுடன்* வீடு திரும்புவோம் .* இதுதான் புரட்சி தலைவர் வீட்டு பொங்கல் என்றார் .* **
-
-
தினமலர் -13/03/20- மறக்கமுடியுமா ?எங்க வீட்டு*பிள்ளை*
--------------------------------------------------------------
வெளியான நாள் : 14/01/1965
நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரு வேடம் ) பி.சரோஜாதேவி, ரத்னா , எம்.என்.நம்பியார், நாகேஷ், மாதவி, தங்கவேலு ,எஸ்.வி.ரங்காராவ் மற்றும் பலர்*
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி* *வசனம் : சக்தி கிருஷ்ணசாமி*
ஒளிப்பதிவு : வின்சென்ட்* * * * * * இயக்கம் : சாணக்யா*
தயாரிப்பு :பி. நாகிரெட்டி*
கடந்த 1958ல்* வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது .* ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும் பழைய கதைதான் .* ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது .**
ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார் .* நம்பியாரின் கொடுமை தாங்காமல் , ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார் .* மறுபுறம், இளங்கோ, என்பவர், வீரனாக வளர்கிறார்**சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர் .* *இதனால் நிகழும், மாற்றங்களே கதைக்களம் .
ராமு, இளங்கோ, என இரு கதாபாத்திரங்களிலும் , எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடி இருப்பார் .* அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் ஆதி வாங்கும் போது, அட எம்.ஜி.ஆரா* இது என விமர்சகர்களை ஆச்சர்யப்பட வைப்பார்.* அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன ரசிகர்களை கொண்டாட வைத்தார் .**
தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான ராமுடு பீமுடு* படத்தின், ரீமேக் தான் இந்த படம்.* ஹிந்தியில் திலீப்குமார் நடிப்பில் ராம் அவுர் ஷ்யாம் என வெளியானது .**
எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு , 45 நாட்களில் நிறைவடைந்தது .* படபூஜை போட்ட இரண்டே மாதங்களில் முடிந்து வெளியாகியுள்ளது .*
மாடிப்படியில் ஏறியும் , இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கிய பின்னர்* , நான் ஆணையிட்டால், பாடல் இடம் பெறும் .* இதற்காகவே, எங்க வீட்டு பிள்ளை படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .
1965ல் 7 அரங்குகளில் வெள்ளிவிழா கண்ட படம்.* எம்.ஜி.ஆர். படங்களும் சரி,*அவர் திரைத்துறையை விட்டு விலகும் வரை , வேறு எந்த படங்களும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை .
-
தினமலர் - வாரமலர்*- திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் (1918-2018)01/03/2020
--------------------------------------------------------------------------------------------------------------------
பாய்ஸ் கம்பெனி நடிகராக இருந்து, எந்தவித பெரிய பக்கபலமும் இல்லாமல் , திரை யுலகில் படிப்படியாக உயர்ந்த எஸ். ராகவன், எம்.ஜி.ஆரை* வைத்து படம் இயக்கி தயாரிக்கும் அளவிற்கு , சபாஷ் மாப்பிள்ளை படத்தில் வளர்ந்திருந்தார் .
அவருடைய முயற்சிக்கு துணையாக இருந்து , கே.வி.மகாதேவனும் படத்திற்கு வெற்றிப்பாடல்கள் அமைத்துக் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். படம் பெற வேண்டிய* வழக்கமான வெற்றியை சபாஷ் மாப்பிள்ளை பெறவில்லை என்றாலும், வித்தியாசமான முயற்சி என்கிற அளவில் பெரிய பாராட்டை பெற்றது .* இன்றளவும், அதன் பிரதி கிடைக்கிறது .* இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக , தன்* மனைவி மாலினியை நடிக்க வைத்திருந்தார் எஸ். ராகவன் .
-
27 03 2020
Book park
Mynaty media
M Shajahan Bsc
இறைவனின் முடிவில் எதுவுமே நமது கையில் இல்லை.யாராவது யோசித்தோமா...?
இருபது நாள் வெளியே வர முடியாமல் இருந்த இடத்திலேயே முடங்க வைத்தது நாமாகத் தேடிக்கொண்டதல்ல...!
இருக்கும் நாட்களை எப்படி ஓட்டுவது என்ற கவலை ஒருபுறம்.எதுவுமே இல்லாத ஏழைகள் எப்படித் தவிப்பார்கள் என நினைக்கும்போது வரும் சோகம் மறுபுறம்...!
எதுவுமே நிரந்தரமல்ல என்ற எதார்த்தம் ஒன்று தான் கொஞ்சம் நிம்மதி தருகிறது.சோகத்திலும் கொஞ்சம் சுகம் தருவது இந்த எழுத்துப்
பணி தான்...!
இன்று நாம் காணப்போவது...,
திரையில் இணைந்து சொந்த வாழ்க்கையில் கடைசி வரை இணை பிரியா தம்பதியை இந்தப் பதிவு நினைவு கூர்கிறது...!
தமிழ்த் திரையுலகம் கண்ட முக்கிய ஜோடியான...,
மக்கள் திலகம்
நம் சின்னவர்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியம்மா தான் அது...!
இந்த நாளில் நாம் அவர்களை நினைவு கூறக் காரணம் ஒரு திரைப்படம் தான்.
ஜூபிடரின் பொக்கிஷத்திற்காக நமது வரிசையில் அடுத்து வருவது மோகினி என்ற திரைப்படம்...!
தமிழகத்து இரு முதல்வர்கள் முதன் முதலில் திரையில் தோன்றக் காரணமான படம்...!
கலைஞர்கள் என்ற தகுதியை மீறி நம்மை இந்த ஜோடி வியக்க வைக்கக் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.
இருவரும் முதன் முதலில் சந்திக்கும்போது தங்களது இல்லற வாழ்க்கையில் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தார்கள்.
அதைப் பற்றி விவரிக்கும் முன்பாக மோகினியைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.
1948 இறுதியில் வெளியான மோகினி ஜூபிடரின் ஒரு முக்கியமான படம்...!
அபிமன்யு இதே ஆண்டு தான் வெளியாகியிருந்தது.36 படங்கள் இந்த ஆண்டு வெளியாக அதில் முக்கியமான படமாக சந்திரலேகா இருந்தது...!
சிட்டாடலின் ஞான சௌந்தரியும் ஹிட்டாக வாசனின் இன்னொரு ஞானசௌந்தரி தோல்வி கண்டது...!
இன்னொரு தோல்வி சூப்பர் ஸ்டார் பாகவதரின் ராஜமுக்தி...!
இதிலும் பாகவதருக்கு ஜோடி ஜானகியம்மா தான்...!
ஜூபிடரின் பிஸியான நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் என வெளியாக அவர்களது ஆஸ்தான கதாசிரியர் ஏ.எஸ்.ஏ.சாமி பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த நேரம்...!
அபிமன்யுவிற்கு காசிலிங்கத்தை இணை இயக்குநராகப் போட்ட முதலாளி சோமு இந்த மோகினிக்கும் ஒரு புதுமுக இயக்குநரைத் தேடினார்...!
அப்படி தேடும்போது அகப்பட்டவர் லங்கா சத்யம்...!
தெலுங்கில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கிய சத்யம் செண்பக வல்லியில் இயக்குநராக வாழ்க்கையைத் துவக்கியவர்.42 ல் வெளியான புல்லைய்யா இயக்கிய பாலநாகம்மாவில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர்...!
மோகினி தவிர மறுமலர்ச்சி மற்றும் பாரிஸ்டர் பர்வதம் என பல படங்களை இயக்கியவர்.தான் படித்த கதைகளில் இருந்து வழக்கம்போல சாமியின் ஸ்கிரிப்ட் மோகினிக்கும் பயன்பட்டது...!
ஷேக்ஸ்பியரின் முதல் நாடகமாக கருதப்படும் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனாவிலிருந்து இந்த மோகினி பிறந்தாள்...!
வெரோனா ஒரு நகரின் பெயர்.இரு நண்பர்கள் வெரோனா விலிருந்து மிலன் நகருக்கு வருவதில் தொடங்கி அவர்களது காதல் சோகம் வீரம் என ஷேக்ஸ்பியர் ட்ராமா நகரும்.சில்வியா ஜூலியா என இரு யுவதிகள் நண்பர்களின் வாழ்க்கையில் குறுக்கிட அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்த நாடகம்...!
சாமியின் திரைக்கதைக்கு இந்த வெரோனா பெரிதும் உதவியது.அது போக அரேபிய இரவுகளில் வந்த பறக்கும் குதிரையை கொஞ்சம் உல்டாவாக்கி உள்ளே புகுத்த ஒரு பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடி.நமது மோகினியின் திரைக்கதை என்ன சொன்னது...?
மோகன் குமார் மற்றும் விஜயகுமார் இரு நண்பர்கள்.மோகன் அந்த நாட்டின் இளவரசன்.தந்தை மன்னர் ஒரு வித்தியாசமான பேர்வழி.நாட்டு மக்களின் நலனை விட விதவிதமான விநோத கலைப் பொருட்களை சேகரிப்பதற்கென்றே பிறவி எடுத்தவர்.அவருக்கு அழகானதொரு மகள்.அவள் தான் மோகினி.
இளவரசன் மோகனின் நண்பனான விஜயகுமார் மோகினி மீது மையல் கொள்ள தந்தைக்குத் தெரியாமல் இருவரும் வெளியே சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.இந்தக் காதல் இளவரசன் மோகனுக்கும் தெரியும்.இந்த நேரத்தில் மன்னருக்கு பிறந்த நாள் வருகிறது.
என் வாழ்க்கையில் இது வரை காணாத விநோத பொருளை அன்பளிப்பாகக் கொண்டு வருபவருக்கு எதைக் கேட்டாலும் தருவேன் அமைச்சரே .அதை கண் குளிர கண்டுவிட்டு கண்ணை மூடினாலும் பரவாயில்லை என புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த ஊர் கை வினைஞனான காளிநாதன் ஒரு விநோத பொருளை படைத்துக்கொண்டிருக்கிறான்.அது மரத்தாலான பறக்கும் குதிரை...!
பிறந்த நாள் பரிசாக தான் பாடுபட்டு உழைத்த பறக்கும் குதிரையோடு வரும் காளிநாதன் மன்னரின் முன் மண்டியிட என்ன மரக் குதிரை பறக்குமா ?
அப்படி மட்டும் பறந்துவிட்டால் நான் இது வரை கண்ட விநோதங்களில் இது தான் தலை சிறந்தது.எங்கே பறக்க வை பார்க்கலாம்.? ஒரு நிமிடம் மன்னா அதற்கு முன்பாக இந்த குதிரைக்கான விலையையும் சொல்லி விடுகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்.அள்ளித் தர தயாராக இருக்கிறேன்.அள்ளியெல்லாம் தர வேண்டாம் மன்னா உங்களது மகள் மோகினியை மட்டும் தந்தால் போதும்...!
ஏற்கனவே ஒரு முறை அவளைப் பார்த்து மயங்கிய காளிநாதன் கிடைக்கிற இடைவெளியில் காய் நகர்த்த தடுமாறிப்போகிறார் மன்னர்.
ஆசைக்கும் ஒரு அளவில்லையா காளிநாதா.?
என் நாட்டை வேண்டுமானா
லும் எடுத்துக் கொள். குதிரை பறப்பதை ஒரு முறை பார்த்து விடுகிறேன்...!
காளிநாதன் மசிவதாக இல்லை.ஒரு நாள் அவகாசம் கொடு. மன்னரின் வீக்னஸ் அவனுக்குத் தெரியும்.எப்படியும் ஓகே சொல்லிவிடுவார்.மயங்கிய மோகினியை தேற்றிவிட்டு அவளிடம் மன்றாடுகிறார் மன்னர்.நாளை வரை பறக்கும் குதிரைக்கு நீ தான் பாத்காப்பு.காதலன் விஜயன் விக்கித்து நிற்கிறான்.மன்னரின் கிறுக்குத்தனத்திற்கு ஒரு அளவில்லையா...?
வெளியே சென்ற இளவரசன் அரண்மனை திரும்ப அழுது புலம்புகிறாள் தங்கை.ஆறுதல் சொல்லிவிட்டு நண்பன் விஜயனுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த நாள் ஒரு திட்டத்தோடு காளிநாதனிடம் வருகிறான்.என் தங்கையை உனக்கே மணமுடிக்கிறேன் அதற்கு முன்பாக ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கலாமா...?
இளவரசன் மோகனின் தந்திரம் எனக்கா தெரியாது.விடாக்கண்டன் காளி நாதன் ஓகே சொல்ல பறக்கும் குதிரை மீது அமர எங்கே பறக்க வை பார்க்கலாம்.காளியின் விஞ்ஞான மூளை ஒரு விசையில் இருக்கிறது.கழுத்துப் பக்கம் ஒரு திருகு திருக மரக் குதிரை உயிர் பெற்று பறந்தேவிட்டது...!
அனைவரும் வாய் பிளக்க காலையில் போன இளவரசன் மாலையான போதும் அரண்மனை திரும்பவில்லை...!
அடே அயோக்கியா.
எங்கடா இளவரசன்? பறக்குமா என கேட்டீர்கள் பறந்ததா இல்லையா?. சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள்.
என்ன காளிநாதா விளையாடுகிறாயா?. இளவரசன் வரும் வரை இவனை சிறையில் தள்ளுங்கள்.
விஜயன் ஓடிச் சென்று இழுத்துச் செல்ல எங்க தான் போனான் இளவரசன் மோகன்?
காளிநாதன் களி தின்றது நீடித்ததா? மோகினி விஜயனின் காதல் என்னவானது? ஒரே பெனிஃபிட் பறக்கும் குதிரையை பார்த்த மன்னர் தான்.வித்தியாசமான இந்த திரைக்கதையின் இன்னொருபக்கம் எப்படி இருந்தது என்பதை மீதிக் கதை அழகாகச் சொன்னது...!
இதில் குதிரையை பறக்க வைக்க இயக்குநர் லங்கா சத்யம் என்னவெல்லாமோ செய்ய முதலாளி சோமுவிற்கு கடுப்பானது தான் மிச்சம்...!
இயக்குநர் ரகுநாத் உதவிக்கு ஓடி வர ஒருவழியாக பறந்தது குதிரை...!
மோகினியில் இளவரசன் மோகனாக டி.எஸ்.பாலையா.அவரது நண்பன் விஜயகுமாராக மக்கள் திலகம்.அவரது ஜோடி மோகினியாக வி.என்.ஜானகி...!
மோகனின் காதலி குமாரியாக மாதுரி தேவி என இரண்டு ஜோடிகளின் காதல் கலைகளை இந்த மோகினியில் காணலாம்...!
வித்தியாசமான திரைக்கதைக்கு காளிநாதன் அஸிஸ்டெண்ட் பாத்திரத்தில் நம்பியார் வருவார்.எம்.எஸ்.பாக்கியம் டி.பாலசுப்ரமணியன் புளிமுட்டை ராமசாமி கே.மாலதி டி.பாரதி நிர்மலா தேவி கமலா பாய் ரங்கநாயகி என நிறைய பேர் இருந்தனர்...!
சாமியின் கதைக்கு வசனம் எஸ்.டி.சுந்தரம்
இசைக்கு ஜூபிடரின் ஆஸ்தான சுப்பையா நாயுடு மற்றும் சுப்பராமன் ஜோடி...!
சுந்தர வாத்தியார் பூமிபாலகதாஸ் வரிகள் தர சுப்பராமன் லீலா கே.வி.ஜானகி ஆகியோரோடு நம்பியார் குரலும் இருந்தது.கொரியோகிராஃபி வேதாந்தம் ராகவைய்யா.சுப்பராமன் இவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் தான் புகழ் பெற்ற தேவதாஸ் பாடல்கள் நமக்குக் கிடைத்தது...!
வித்தியாசமான வெஸ்டர்ன் மிக்சிங்கை துவக்கி வைத்தது சுப்பராமன் என்றால் மிகையில்லை.
இள வயதில் மறைந்த சுப்பராமன் நமக்கெல்லாம் பேரிழப்பு தான்...!
மோகினியின் சிறப்பு மக்கள் திலகம் ஜானகி ஜோடியின் ஈடுபாடு.இனி எவரும் நம்மை பிரிக்கவே முடியாது.பிரிக்கவே முடியாத பிரகாச ஜோடி போன்ற எஸ்.டி.சுந்தரத்தின் வசனங்கள் இவர்களுக்கு அழகாக செட்டானது...!
தாமதம் ஏனென்றால் தாமரை வாடுவதேன்? சூரியன் என்ன நம் சொந்தக்காரனா? சொந்தம் இல்லாமலா தன் சிவந்த கதிரை உனக்கு இரவல் தந்திருக்கிறான்..
நம் நட்பு மறையும் மின்னலல்ல.மங்காத மாலைச் சூரியனுமல்ல.அஸ்தமனமில்லா ஆனந்த வாழ்வு.முதல் முதலாக திரையில் இணைந்த இந்த ஜோடிக்காக அமைந்த வசனம்
கலைஞருடையது.!
கலைஞர் அவர்கள் ராஜகுமாரிக்கும்
அபிமன்யுவிற்காகவும்...,
ஜுபிடருக்கு எழுதிக்கொடுத்த
வசனங்களில்
மீதம் இருந்ததை
கனகச்சிதமாக
எடுத்து...,
நிறையவே மெனக்கெட்டு தகுந்த இடத்தில்
இணைத்துக் கொண்டார்கள்...!
மக்கள் திலகம் முதன் முதலில்
ஜானகியம்மா உடன் இம்ப்ரஸ் ஆனது தியாகி படத்தைப் பார்த்தபோது தான்...!
நரசிம்ம பாரதி ஜமீனாக, ஜானகியம்மா அரிஜனப் பெண்ணாக நடித்த படமது...!
இருவருக்கும் இடையே ஏற்பட்ட,
காதலை அப்போதே சொன்னார்
சின்னவர்...!
மக்கள் திலகம் மறைந்த தன் மனைவியின் சாயலை அந்தப் பெண்ணிடம் கண்டார்.அதை மறந்தும் போனார்.ஆனால் விதி நேரில் சந்திக்க வைத்தது ராஜமுக்திக்காக..!
அந்தப் படத்தில் இருவரும் இருந்தாலும் ஜோடியில்லை.
மனம் விட்டு இருவருமா பேச பாகவதர் உதவி செய்வதாக உறுதியளித்தார்...!
அப்போது அவருக்கு ஒரு மகன் இருந்ததும் இல்லற வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததும் இருவரும் பறிமாறிக்
கொள்ள இங்கும் அதே சோகம்...!
அதைப் பற்றி தனது சுய சரிதையில் ஒளிவு மறைவின்றி உள்ளதைச் சொல்லியிருக்கிறார் மக்கள் திலகம்...!
வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என்.ஜானகி இளமையில் நிறைய சோகத்தை அனுபவித்தவர்...!
கேரள வழக்கப்படி தாயின் முக்கியத்துவம் பெண்களுக்குக் கிடைக்கும்.அப்பா ராஜகோபாலய்யர் தஞ்சையை பூர்வீகமாகக்கொண்டவர்.சித்தப்பா பாபநாசம் ஏற்கனவே திரையில் முக்கிய ஆளுமை...!
தந்தையும் பாடல் எழுதுவதால் திரையில் ஈஸியாக நுழைய வாய்ப்பு.ஆரம்ப காலங்களில் ஆடல் மட்டுமே...!
39ல் வெளியான மன்மத விஜயத்தில் ஆடத் தொடங்கியது.கிருஷ்ணன் தூது கச்ச தேவயானி சாவித்திரி அனந்த சயனம் கங்காவதார் தேவகன்யா சந்திரலேகா என நிறைய படங்களில் நடித்து மோகினிக்கு வரும்போது நல்ல நிலையில் தான் அவர் இருந்தார்...!
இன்னும் சொல்லப்போனால் மக்கள் திலகத்தை விட அதிக சம்பளம் பெரும் இடத்தில் இருந்தார்...!
கொத்தமங்கலம் சீனு ஜோடியாக சகடயோகத்தில் இவர் தான் ஹீரோயின்.பதினாறு வயதில் கணபதி பட்டிடம் எப்படியோ ஏமாந்தார்...!
பணம் ஒன்றையே குறியாகக் கொண்டது பிறகு தான் புரிந்தது.பிரிய விரும்பியபோது சட்ட சிக்கல்கள் குறுக்கிட்டது.பர்த்ருஹரியில் கே.சுப்ரமணியம் சந்திரலேகாவில் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் தான் அப்போதைய ஒரே ஆதரவு...!
பாபநாசத்தின் பெண் என்பதால் இருவரும் தக்களது மகளாகவே நடத்தினர்...!
மனைவி நோயில் விழுந்து முதல் இல்லறமும் சட்டென மறைய இரண்டாவது வாய்ப்பும் நோயிலேயே கழிய தன்னையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள இன்னொரு துணை மக்கள் திலகத்திற்கு அப்போது தேவைப்பட கையில் குழந்தையோடு நிற்கும் ஜானகி மீது வந்த பரிதாபமே காதலாக மாறியது...!
பஞ்சாயத்து பெரியவர்களிடம் வரும்போது மக்கள் திலகத்தின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.அந்த நேரத்திலும் தைரியமாக எடுத்த முடிவு அனைவருக்கும் சுபமாக முடிந்தது...!
மனைவி சதானந்தவதியின் இறுதிக் காலங்களில் கூடவே இருந்து கவனித்துக்கொண்டது ஜானகி தான்.அவரது மகன் அப்புவை தனது மகனாகவே ஏற்றுக்கொண்ட மக்கள் திலகம் இறுதி வரை அப்படியே இருந்தார்...!
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற இலக்கணத்திற்கு இந்த இணை இன்னொரு உதாரணம்...!
தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்களுக்காக இல்லாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஜோடி.கணவனை கண் போல காத்தது திரையுலகமே அறிந்தது தான்...!
மோகினியில் தொடங்கிய இந்த பந்தம் நாம் படத்தோடு நிறைவடைந்தாலும் மரணம் வரை கூடவே நிழலாக நின்று மக்கள் திலகத்தை கவனித்துக்கொண்டது...!
இல்லத்தரசிகளுக்கு ஒரு முன் மாதிரி அவர்...!
ஆஹா..வசந்த மாலை நேரம் என குதிரை மீதேறி ஆரம்ப காட்சியாக ஜானகி பாடும் பாடல்.மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும் வசந்த மாலை நேரம்.மல்லிகை அல்லி முல்லை மலர வரி வண்டுகள் அலறும் நேரம்.என் காதலர் உள்ளம் தேடும்.காதல் வேகம் போல் இல்லையே உனது கால்கள் தாவும் வேகம்.செல்லு செல்லு பரியே என குதிரையை விரட்ட அங்கே காதலிக்காக காத்திருக்கும் விஜயனாக மக்கள் திலகம்...!
எந்தன் உயிர் மோகினி.மான் தான் வண்ண மயில் சாயல் காண்கிறேன் என சுப்பராமன் குரலில் பாடியது மக்கள் திலகம் தான்...!
ஆஹா...இவர் யாரடி? என்னை ஆள வரும் பால வடி வேலனைப் போல் காணுதடி என லலிதா பத்மினி ஜோடியின் ஆடலோடு ஒரு பாடல்...!
வேலையில்லாதவரடி.வெள்ளையர்கள் அணியும் சேலைகள் பாவாடைகள் மேலாடைகள் கொண்டோடிடும் கண்ணனோ.அறியாமல் உளறாதடி அடீ லலிதா.அடீ பத்மினிப் பெண்ணே எனையே பார்க்கிறார் என அக்கா தங்கையின் அழகான பாடல்...!
ராஜாதி ராஜன் மெச்சும் ரஞ்சிதம் என் பேரு என்றொரு பாடல்.ஜோராய் நடை நடக்கும் என மற்றொரு பாடல்.ஆஹா..ஆஹா...அதிசயம் அழகான ஓவியம் மற்றும் மாயமாய் வந்தேன் போக வா என் அருகே வா என ஏகப்பட்ட பாடல்களோடு வந்த மோகினி...,
ஜூபிடரின் முக்கியமான படம் என்பதை விட மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இது இன்னும் முக்கியம்...!
இல்லறத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்ன இந்த ஜோடி...,
இன்றைய இணைகளுக்கு இன்னொரு உதாரணம்...!
மீண்டும்
சந்திப்போம்...!!!......... Thanks.........
-
தினமலர் -வாரமலர் -23/02/20-* நெல்லை*
---------------------------------------------------------------
திரை இசை திலகம் - கே. வி. மகாதேவன்* (1918-2018)
----------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆரின் மிக வித்தியாசமான படமாக பேசப்பட்ட சபாஷ் மாப்பிள்ளை படத்திற்கு 1960 களின் துவக்கத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார் .
ஏகப்பட்ட ராஜா, ராணி திரைபடங்களில்* எம்.ஜி.ஆர். நடித்து கொண்டிருந்த 50 களில்* அவரை ஒரு காமெடி படத்தின் நாயகனாக* பார்ப்பது , ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாகத்தான் இருந்தது .
எம்.ஜி.ஆருக்கு புதுமையான பாகம்தான் .* ஒரே தமாஷாக நடித்திருக்கிறார் .**அவரது வழக்கமான ராஜ உடையும், கிருதா கிராப்பும்* மாறி இருப்பதே மாறுதல்தானே .* அசல் காமெடியனாக மாறி சக்கை போடு போட்டிருந்தார் .**நடனம் ஆடுகிறார், கத்திச்சண்டை, குத்து சண்டை க்கும் இடமளித்திருக்கிறார் .இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் முழு திறமையும் உண்டு .* அவருக்கு ஒரு சபாஷ் போடாமல் இருக்க முடியாது .* இந்த படம் அவரை பொறுத்தவரை பூரண வெற்றிதான் . என்று விமர்சித்தது அந்நாளைய பிரபல வார பத்திரிகை .**
இந்த வகையில் எம்.ஜி.ஆரை புது பாணியில் காட்டியவர்* பெரிய பின்னணி ஏதும் இல்லாத எஸ். ராகவன் என்பவர் .* காரைக்குடி சாமி ஐயங்காரின் மகனான ராகவன் , வைரம் அருணாச்சலம் செட்டியாரின் நாடக குழுவில் பால்ய நடிகனாக இருந்தவர் .* நாடக உலகத்திலும், திரையுலகத்திலும் ஓரளவு அனுபவமும் பயிற்சியும் பெற்றார் .* சபாஷ் மீனாவில்* நடித்த நடிகை மாலினியை மணந்தார் .இந்தப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை அணுகி சம்மதம் பெற்றார் .* எம்.ஜி.ஆரின் துணை ராகவனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் கூட மகாதேவன் அவருக்கு இசையமைத்து உதவி இருப்பார் .**
ராகவன் புரொடக்சன்ஸ் சார்பில்* ராகவன் கதை, வசனம் எழுதி இயக்கிய படமாக* எம்.ஜி.ஆர். நடித்த சபாஷ் மாப்பிள்ளை வெளி வந்தது .* படத்தில் எம்.ஜி.ஆரின் பணத்திமிர் பிடித்த மாமனாராக வந்த எம்.ஆர். ராதாவின் கதறல்களில் சிரிப்பு வரவில்லை என்றாலும் எம்.ஜி.ஆர். கைப்பணம் இல்லாமல் பசியோடு மும்பை நகர வீதிகளில் அலையும் காட்சிகள் மனதிற்கு இறுக்கமாக அமைந்தன .
அப்போது அவர் பாடும் பாடல் , சிரிப்பவர் சில பேர், அழுபவர் பல பேர் , இருக்கும் நிலை என்று மாறுமோ ?**
மருதகாசியின் வரிகளை மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன்* பாடும் இந்த பாடலில் அவல* சுவை அழகாக முன்வைக்கப்படுகிறது .இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பையில் படம் பிடிக்கப்பட்ட பாடல் என்பதால், வாத்திய இசை சேர்ப்பிலும் , நாகரீக முத்திரை அமைந்தது.* சோகம் இழையோடும் பாடல், செல்வரைக் குருட்டு தனமாக பழி க்காமல், எம்..ஜி.ஆரின்*எதிர்பார்ப்பை இப்படி முன்வைத்தது .**
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை*உள்ளதை இழந்திட சொல்லவில்லை*உழைப்பவர் உயர்ந்தால் போ துமய்யா*
மெய்க்காதலர்கள் சந்திக்கும்போது காலம் தயங்கி நிற்கும்.* இந்த உணர்வைத்தருகிறது, யாருக்கு யார் சொந்தம் என்பது என்ற பாடல்* அதன் கனிவான* கவர்ச்சியைக் கண்ட ராகவன், சுகமாக ஒரு முறையும், சோகமாக ஒரு முறையும் அதை பயன்படுத்தினார் .* காதல் உணர்ச்சியின் மென்பையான ஈர்ப்பு, கர்நாடக இசையின் இதமான கவர்ச்சி ஆகியவற்றுடன், 50 களின் சில பாடல்களுக்குரிய அவசரம் இல்லாத போக்கில் யாருக்கு யார் சொந்தம் என்பது விளங்குகிறது .
சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, ஆகியோரின் குரல்களில் ஒலிக்கும் இந்த பாடலில் மகாதேவனின் மேஜிக் உள்ளது .* சீர்காழியில் எதிரொலிக்க குரலாக 90களில் *வலம்* வந்த ஒரு மெல்லிசை பாடகர், ஜோடி சேர்த்துக்* கொண்டு இந்த பாடலை பாடிக் கொண்டிருந்தார் .
சபாஷ் மாப்பிள்ளை படத்தில் கவுரவ நடிகராக ரயில் வண்டியை கூறலாம் .அதியற்புதமாக நடித்திருக்கிறது .* படத்திற்கு நல்ல ஓட்டத்தையும் தந்திருக்கிறது . உண்மையிலேயே திரைக்கதை ஆங்காங்கே ரயிலில் ஏறித்தான் செல்கிறது .என்று படத்தின் ரயிலோட்டம் ஒரு விமர்சகரை கவர்ந்தது .இதற்கு ஏற்ப, திரைக்கதையின் ஒரு திருப்பத்தில் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தன் மீது திணிக்கப்படும். திருமணத்திலிருந்து தப்பிக்க ரயிலேறுகிறாள் கதாநாயகி .**
அப்போது ரயில் பிச்சைக்காரனின் பாடல், அவளுடைய அப்பாவின் பணத்தாசையை* எதிரொலிக்கிறது .*
வெள்ளிப்பணத்துக்கும், நல்ல குணத்திற்கும் வெகுதூரம் , இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் .ஒரு பாடம் . என்கிற பாடல் பி.பி.சீனிவாசன் குரலில் ஒலிக்கிறது .* ஸ்ரீநிவாஸின்* சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாடல் இது .**
சபாஷ் மாப்பிள்ளை படத்தில் பாடல்கள் வெற்றியடைந்ததோடு , அவற்றுக்கான வாத்திய இசை சேர்ப்புகளும் ரம்மியமாக அமைந்தன .* 50களை* பின்னுக்கு தள்ளி மகாதேவன் 60களின் பாணிகளுக்கு* பயணப்பட்டுவிட்டதை அவை குறித்தன ..
-
இன்று 28-03-1936 - 28-03-2020 மகத்தான ஒரு மனிதரை, நடிகரை பொது மக்கள் அரங்கத்திற்க்கு அறிமுகம் செய்த நாள் "சதி லீலாவதி" காவியம் வழியாக......... திரையுலக, அரசியலுலக சக்கரவர்த்தி ஆக என்றும் திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புகழ் எப்பொழுதும் வாழியவே...
-
நண்பர்களே, கொரோனா கவலை ஒருபக்கம் 3 நாட்களாக வாட்டி வதைக்கும் சூழலில் அதிலிருந்து மனதை விலக்கி வைக்க நினைத்தேன் அதன்படி இன்று உலக திரையரங்க தினத்தையொட்டி 1980 களின் ஞாபகங்களில் சில துளிகள் இதோ.... படத்தொகுப்பு- (சித்தரிக்கப்பட்டவை)
உடன்குடி ஷண்முகானந்தா திரையரங்கம்...1980 களில் அவ்வட்டாரத்து மக்களின் கவலைகளை மறக்கடித்து சிரிக்க வைத்த மேடை. ரஜினி, கமல் ஹீரோக்களாக வலம் வந்த அக்காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரின் பழைய திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. குறிப்பாக ஞாயிறு மேட்னி 50 பைசா கவுண்டரில் பெரியதாழை, மணப்பாடு மீனவர்கள் கூட்ட ( கடல்) அலையில் மற்ற ஊர்களில் இருந்து வந்த ரசிகர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி வியர்வையில் குளித்தபடி நிற்பார்கள். மீனவர்கள் முழங்கிய வாழ்த்து கோஷம் இன்றும் அப்பகுதியில் செல்லும்போது ஞாபக அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இடைவேளையில் பாட்டுப் புத்தகம், உள்ளங்கை அளவிலான எம்ஜிஆர் படங்கள் மற்றும் ப்ளோ அப் அளவில் படங்கள் வாங்கி மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அடுத்த படம் என்ன என்பதை ஒரு பாடல் காட்சி திரையில் ஓடவிட்டு நடுவில் சிலைடு காட்டுவார்கள். கைத்தட்டல் ஆரவாரம் அதிர வைக்கும். காலைக் காட்சியில் திரையிடப்பட்டிருக்கும் படத்தின் ஒரு பாடலைக்கூட மேட்னி படத்தின் இடைவேளையில் காட்டுவார்கள். பெரும்பாலும் சுற்று வட்டார ரசிகர்கள் சைக்கிளில் மூன்று மூன்று பேராக வந்து இறங்குவார்கள். அந்த வழியாக பயணிக்கும் டவுன்பஸ் இரவு 9.30 க்கு குறிப்பிட்ட சில ஊர் ரசிகர்களுக்காக படம் முடியும் தருணத்தை அட்ஜஸ்ட் செய்து லேட்டாக வரும். அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துநருக்கு மறுநாள் காலையில் பதநீர் வாங்கி கொடுத்து ரசிகர்கள் நன்றி செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊர்கள்தோறும் உள்ள பஸ்நிறுத்தம் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையின் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவார்கள். அதில் வெறும் எழுத்துக்களும் அப்படத்தின் கதாநாயகன் போட்டோ மட்டுமே பிரிண்ட் இருக்கும். வண்ண சுவரொட்டி மெஞ்ஞானபுரம் போன்ற பெரிய கடைவீதி உள்ள ஊர்களில் சென்று பார்ப்பது தனி ஆவலாக இருக்கும். இந்த தியேட்டர் அய்யனார், மாயா என பெயர்கள் மாறி தற்போது வணிக வளாகமாக காட்சி அளிக்கிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆறுமுகநேரி போன்ற ஊர்களுக்கு இரவு காட்சிக்கு 20 வயதுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் சென்று படம் பார்த்து வருவதை பெரிய சாதனையாக பேசிக் கொள்வார்கள். கடைசியாக உடன்குடி தியேட்டரில் கரகாட்டக்காரன் உள்பட 3 படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு திருவிழாக் கூட்டம்போல மக்கள் திரண்டது ஞாபகம். அப்போது டெண்ட் கொட்டகை திரையரங்குகள் வீரபாண்டியன்பட்டணம், கொட்டங்காடு உள்ளிட்ட பல ஊர்களில் செயல்பட்டன. குறிப்பாக இந்த கிராமங்களில் டெண்ட் கொட்டகை அமைக்கும் பணியை ஊரே உற்சாகத்தில் திரண்டு வந்து பார்க்கும். நாளடைவில் கிராமங்களில் இவையெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன. இதனிடையே கிராமங்களில் விசேஷ நாட்களில் 16 mm திரையில் கருப்பு வெள்ளை படங்கள் திரையிடுவார்கள்( இதுபற்றி முதல் கட்டுரையில் கடந்த மாதம் விரிவாக எழுதி உள்ளேன்) பக்கத்து கிராமங்களில் இன்று இரவு படம் போடுவதாக நியூஸ் காட்டுத்தீயாக பரவும். ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுடன் படையெடுத்துச் செல்வார்கள். குறிப்பாக செம்மறிக்குளம் என்ற ஊரில் அப்போது ரிலீசாகி ஒருமாதமே ஆன புதிய திரைப்படங்கள் திரையிடுவார்கள். இக்காலக்கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கலர் படங்களை கலரிலேயே இந்த ஊரில் கண்டுகளிப்புறும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் டிவி, டிவிடி பிளேயர் கொண்டு வந்து நடுத்தெருவிலும் வீட்டுத் திண்ணைகளிலும் ஒரே இரவில் நாலைந்து சினிமா காட்டினர். இதற்காக பெண்களும் ஆண்களும் ஐந்தோ பத்தோ பணம் வசூலித்து 150 அல்லது 200 ரூபாய் கொடுத்து விரும்பிய சினிமா படம் பார்த்து மகிழ்ந்தனர். விடிய விடிய 4 சினிமா பார்த்துட்டு மறுநாள் பள்ளி வகுப்பறையில் தூங்கி தூங்கி விழுந்து வாத்தியாரிடம் அசடு வழிந்ததும் உண்டு. விடுமுறை காலங்களில் சினிமா துண்டு பிலிம்களை வைத்து முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரிய ஒளி பாய்ச்சி வீட்டுக்குள் சிறுவர்கள் சினிமா படம் காட்டி விளையாடியதையும் மறக்க முடியுமா? இதே போல சர்ச்சிலும் சிலைடுகள் மூலம் பைபிள் கதை திரையிடுவார்கள். காலங்கள் உருண்டோடின. இன்று வீட்டிலேயே புரஜக்டர் வைத்து படம் பார்க்கும் வசதி வந்துவிட்டது.என்ன நண்பர்களே கொரோனா துக்கத்தில் இருக்கிற இந்த நேரத்துல இப்படி சினிமா பைத்தியமான ஆட்டோகிராப் கட்டுரையா? என கேட்க தோன்றும். இன்று மார்ச் 27 உலக திரையரங்க தினமாச்சே...3 நாள் கவலை தோய்ந்த கொரோனா செய்திகளிலிருந்து விடுபட நினைத்து இந்த நினைவுகளில் மூழ்கினேன். நம்ம வாழ்க்கையும் சினிமா போலத்தான் போய்கிட்டிருக்கு....இப்போ கொரோனா படம் ஓடிகிட்டிருக்கு...முடிவில் சுபமா? அல்லது ரீல் பாதியிலேயே அறுந்துடுமா?..????..?? ... Thanks...
-
22 .03.2020
M.Shajahan Bsc.,
சதிலீலாவதி : 28-03-1936
இன்று என் பிறந்தநாள்...!
சதிலீலாவதி பிறந்த
மார்ச் 28 ல் தான்
நானும் பிறந்தேன்...!
வருடம் தான் வேறு(28.03.1960)
நமது சின்னவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி "...!
இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார்...!
இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா; சதிலீலவதியின் கதாநாயகன்...!
இந்த படம் எம்.கே.ராதா..., என்.எஸ்.கிருஷ்ணன்...,
டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம்...,
ஆகியோருக்கும் கூட முதல் படம்...!
சதிலீலாவதி : 28-03-1936
தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
கதை : -
எஸ்.எஸ் வாசன்
இசை : -
சுந்தர் வாத்தியார்
கதாநாயகன் : - M.K.ராதா
கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
வெளியான தியதி :-
28 -03-1936
இதே மார்ச் 28
எனக்கும் பிறந்நாள் என்பதில் பெருமை கொள்கிறேன்...!
ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்...!
1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது...!
பின்னர்...,
28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது...!
கதைச்சுருக்கம்:-
சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார்...!
தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது...!
பின்னர் மோகனாங்கி என்ற பெண் வசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!
கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார்...!
அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்..!
அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்...!
பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுதுதன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து...,
மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று...,
ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!
லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்...!
தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு...,
மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு...!
இதில்
சின்னவர் இன்பெக்டராக நடித்திருப்பார்...!
பின்னொரு நாளில்
இப்படத்தை
இயக்கிய டங்கன்
அவர்கள்...,
காட்சிப்படுத்திய
வீடியோ தொகுப்பை
பதிவிடுகிறேன்...!
இன்னும் சந்திப்போம்...!......... Thanks.........
-
துக்ளக் வார இதழ் -11/03/2020
--------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் பணிபுரிந்தால் பத்துப்படத்தின் அனுபவம் கிடைக்கும் . -1973ல் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் பாடலாசிரியர் ஆக உருவெடுத்தவர் கவிஞர் திரு.முத்துலிங்கம் , பின்னாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த பாடலாசிரியர் ஆனார் . கவிஞர் முத்துலிங்கம்* கலைமாமணி மற்றும் பல விருதுகள், பட்டங்களை பெற்றுள்ளார். அவரை துக்ளக் வாசகர்கள் துக்ளக் பத்திரிகை அலுவலகத்தில் கண்ட பேட்டி விவரம் ;
கே.எஸ். ராமன் : ஆரம்பத்தில் முரசொலியில் பணிபுரிந்த நீங்கள் , அங்கிருந்து* எப்படி எம்.ஜி.ஆர். பக்கம் வந்தீர்கள் ?
முத்துலிங்கம் : இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை .* 1966ல் நான் முரசொலியில் துணை ஆசிரியராக இணைந்தேன்.* 1972ல்* எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அவருடன் சென்றுவிட்டேன் .* பிறகு அலைஓசை பத்திரிகையில் வேலை பார்த்தேன்.* அவர்களும் பின்னாளில் எம்.ஜி.ஆரை விமர்சிக்கத் துவங்கியதும் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, நான் ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆர். பக்கம் தான் இருந்தேன் .* எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியதும் அ/ தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தேன் .* இன்றுவரை அ.தி.மு.க. வில் ஒரு நட்ச்சத்திர பேச்சாளராகவே தொடர்ந்து இருந்து வருகிறேன் .**
எஸ்.டி.வரதராஜன் :* எம்.ஜி.ஆர். படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு எப்படி தேடி வந்தது ?
முத்துலிங்கம் : நான் முரசொலியை விட்டு விலகியதும் அலை ஓசை பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .* அந்த பத்திரிகை எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் , நான் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, எம்.ஜி.ஆரை சந்தித்து வாய்ப்பு கேட்கலாம் என்று அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன் .* இண்டர்காமில் என்னுடன் பேசிய எம்.ஜி.ஆர். நான் விஷயத்தை சொல்லும் முன்பாகவே, வேலையை விட்டுடீங்க .போலிருக்கு .* பணம் கொடுக்க சொல்கிறேன் .* வாங்கிட்டு போங்க என்றார் .* நான் எனக்கு பணம் வேண்டாம் .* பாட்டெழுத்தும் வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.* அதைக் கொடுக்கும்போது கொடுக்கிறேன் .* இப்போது பணத்தை வாங்கிக்கங்க என்றார் அவர். ,* நான் திரும்பவும் எனக்கு பணம் வேண்டாம் , வேலை கொடுங்கள்* என்றேன்* *அவர் கோபமாய் போனை வைத்துவிட்டார் .* ஆனாலும் என்னை நினைவில் வைத்திருந்து அவராகவே "நினைத்ததை முடிப்பவன் " என்ற படத்திற்காக அழைத்தார் .* ஆனால் அந்த நேரம் எனக்கு அம்மை போட்டிருந்ததால் நான் ஊருக்கு சென்று விட்டேன் . பின்னர் நான் எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் "உழைக்கும் கரங்கள் " படத்தில் கந்தனுக்கு மாலையிட்டால் என்ற துவங்கும் பாடல்.
நான் அவரிடம் பணம் வாங்கி கொள்ள மறுத்தது 1974ம் வருடம் .* ஆனால் , அவர் முதலமைச்சராகி பல்வேறு பணிகளுக்கு இடையே, இருந்தபோது கூட இதை நினைவில் வைத்து* 1981ல் எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கியபோது , முத்துலிங்கத்திற்கு நானாக* வலிய சென்று உதவ முற்பட்டபோதும் கூட, அவர் எனக்கு பணம் வேண்டாம்.* வேலை கொடுங்கள் என்று கேட்டதை என்னால் மறக்க முடியாது .* பாவேந்தர்* பாரதிதாசன்* தன்* காலைக்கூட குனிந்து பார்க்க தயங்கும் சுயமரியாதைக்காரர் .* அப்படிப்பட்டவரின் பெயரிலான விருதை நான் முத்துலிங்கத்துக்கு தராமல் வேறு யாருக்கு தரப் போகிறேன்* என்று பேசினார் .* அவர் இதயத்தில் இடம் பிடித்திருந்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்து போனேன் .*
ஆர். ரெங்கசாயி : பாடல்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* அது எந்தளவிற்கு உண்மை ?
முத்துலிங்கம் : நூறு சதவிகிதம் உண்மை .* எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுதுவது என்றால் மூன்று, நான்கு பல்லவிகள் , சரணங்கள் எழுத வேண்டும் .* அதில் ஏதேனும் ஒன்றை எம்.ஜி.ஆர். தேர்வு செய்வார் .* வரிகளில், வார்த்தைகளில் நிறைய மாற்றங்கள் சொல்லுவார் .* எம்.ஜி.ஆரிடம் ஒரு படத்தில் பணிபுரிந்தால், பிறரிடம் பத்து படங்களில் பணியாற்றிய அனுபவம்* நமக்கு கிடைத்துவிடும் .**
எஸ். பாஸ்கரன் :* ஒரு பாடலாசிரியருக்கு* எங்கிருந்து வார்த்தைகள் கிடைக்கும்?
முத்துலிங்கம் : காதுகள் திறந்திருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும்.* *ஊருக்கு உழைப்பவன் என்ற படத்தில்* எம்.ஜி.ஆருக்கு உண்மையிலேயே ஒரு மனைவியும் , குழந்தையும் இருக்கும்போது , அவர் இன்னொரு பெண்ணுக்கு கணவனாக வும் , அவளது குழந்தைக்கு தந்தையாகவும் நடித்துக் கொண்டிருப்பார் .* அந்த நிலையில், தனது நிஜமான குழந்தை இறந்து* போய்விட, அதை அடக்கம்* செய்துவிட்டு* தான் தந்தையாக நடிக்கின்ற வீட்டுக்கு போகும்போது அங்கே உள்ள குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் .* அப்போது எம்.ஜி.ஆர். பாடவேண்டும் . அவர் தனது நிஜ குழந்தை இறந்ததை நினைத்து அழுவதா அல்லது இந்த குழந்தையின் சந்தோஷத்தை நினைத்து சிரிப்பதா என்ற தடு மாற்றமான காட்சியில் பாட வேண்டிய பாடலை நான் எழுதினேன் . பல்லவியை உடனே எழுதி கொடுத்துவிட்டேன் .* அடுத்த பல்லவியை* உடனே எழுத முடியவில்லை .* நான்* எழுந்து நார்த் போக் சாலையில் சுருட்டு பிடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்
.
நான் இதுவரை 1994 பாடல்களை எழுதியிருக்கிறேன் .* சுமார் 200,300பாடல்களுக்கு மட்டும் சுருட்டு புகைத்தபடியே , அங்குமிங்கும் நடந்துதான் பாடல் எழுதி கொடுத்திருக்கிறேன் .* இந்த பாடலுக்காக வும் அப்படி நடந்தபோது , வழியில் ஒரு கார் என்னை உரசியபடி வந்து நின்றது .* உள்ளே பார்த்தல் நடிகர் இசரிவேலனும், வில்லன் கண்ணனும் இருந்தார்கள் .* அவர்கள் என்னை பார்த்து, இந்த வாரம் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்* அருமையாக இருந்தது . சற்றுமுன்பு கூட* தலைவரிடம் முத்துசாமி அதை சிலாகித்து கூறிக்கொண்டிருந்தார் என்று சொன்னார்கள் .* உடனே எனக்கு பொறி தட்டியது . அவர்களை அனுப்பிவிட்டு நேரே எம்.எஸ். வி. முன்பாக பொய் அரமந்தேன். பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் .* என்று ஆரம்பித்து கிடுகிடுவென்று பாடலை* எழுதி முடித்தேன்.* ஆனாலும் , எம்.ஜி.ஆர் . திருப்தியடைய**மாட்டார் என்பதற்காக, மூன்றாவது* ஒரு பல்லவியும், சரணமும் எழுதி எம்.ஜி.ஆரிடம் மூன்றையும் காட்டினேன் .* அவர் ஓ.கே. செய்த பாடல்தான் பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் என்று ஹிட்டான பாடல் .*
*
ஆர். சுந்தரராமன் : எம்.ஜி.ஆருடைய* தேர்தல் பிரச்சாரத்திற்கு , உங்கள்பாடல்கள்தான் உபயோகமாக இருந்தது* என்பது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்தானே :?
முத்துலிங்கம் : 1977ம் ஆண்டு வெளியான , இன்று போல் என்றும் வாழ்க என்ற படத்திற்காக, நான் எழுதிய இரண்டு பாடல்களும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கான பிரசார பாடல்கலாக அமைந்தன . அந்த படத்தில் முதல் பாடலுக்கான பல்லவியை எம்.ஜி.ஆர். ஓ.கே. செய்து விட்டதால், மறுநாள் காலை 9 மணிக்கு ரெக்கார்டிங் கிற்கு ஏற்பாடு செய்து, கே.ஜெ. ஜேசுதாஸ் உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள் .* நான் இரவோடு இரவாகச் சரணங்களை எழுதிக் கொண்டு பொய் அதிகாலை எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். ஆனால் எம்.ஜிஆர். சரணங்கள் திருப்தியாக இல்லை என்று கூறிவிட்டார் .* அதனால் ரெக்கார்டிங் திட்டமிட்டபடி தொடங்கவில்லை . ரெக்கார்டிங் தியேட்டரில் ஏ.சி.ரூமில் அமர்ந்து கொண்டு என்னால் சரியாக யோசிக்க முடியவில்லை .* எனவே, வெளியே வந்து சுருட்டு புகைத்தபடி , அங்கிருந்த சவுக்கு மரங்களை ஒவ்வொன்றாக பிடித்தபடி நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன் .* அதை பார்த்த தயாரிப்பாளர் லட்சுமணன் செட்டியார், இந்த முத்துலிங்கம் என்ன இந்த மரத்தைப் பிடிக்கிறான் .* அந்த மரத்தைப் பிடிக்கிறான் . ஆனால் ஒரு சரணத்தைப் பிடிக்க மாட்டேங்கிறானே என்று கமெண்ட் செய்ய ,அது என் காதில் விழுந்தது . உடனே, கோபமடைந்த நான், எம்.எஸ். வியிடம் சென்று ஒழுங்காக சரணம் பிடிக்கிறவனை வச்சுப் பாட்டு எழுதிக்கோங்க என்று கோபப்பட்டு வெளியேற முற்பட்டேன் .**
எம்.எஸ். வி.யம், இயக்குனர் சங்கரும் என்னை தடுத்து நிறுத்தி , சினிமா துறையில் இதெல்லாம் மிகவும் சகஜம் .* நாங்களெல்லாம் இதை விட பெரிய அவமானங்களை* சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். என்று கூறி என்னை சமாதானப்படுத்தினர்.* அதன் பிறகு ஒரு வழியாக சரணங்களை எழுதி, எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கி இரவு 9 மணிக்கு அந்த பாடலின் ரெக்கார்டிங் நடைபெற்றது.* அந்த பாடல்தான் , அன்புக்கு நான் அடிமை , தமிழ் பண்புக்கு நான் அடிமை என்ற ஹிட்டான பாடல் .* அந்த படத்தில் இடம் பெற்றஇன்னொரு பாடல் , இது நாட்டைக் காக்கும் கை, உன் வீட்டை காக்கும் கை , இந்த கை நாட்டின் நம்பிக்கை என்ற பாடல்.* இந்த இரண்டு பாடல்கள்தான் அ .தி.மு.க. வின் பிரசார பாடல்களாக வீதிகளெங்கும் ஒலித்தன .* எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றதும் ,* அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட்* பத்திரிகையில், அந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு , இப்படி சினிமாப்பாடல்கள் மூலமாக பிரசாரம் செய்து* இந்தியாவில் ஒரு நடிகர் ஆட்சியை பிடித்திருக்கிறார்* என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள் .* அது எனக்கு பெருமையாக இருந்தது உண்மைதான் .*
ஆனால், இப்படி நாம் சந்தோஷப்படலாமே தவிர இதுதான் உண்மை என்று நம்பிவிடக் கூடாது .* ஏனென்றால், வெறும் பாடல்களால் மட்டுமே, மக்கள் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வாக்களித்து விடவில்லை .* ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் செய்து வந்த சேவைகள், மக்கள் மீது காட்டிய அக்கறை ,அவர் செய்த தான தருமங்கள், ஆகியவை காரணமாக குழந்தைகளும், தாய்மார்களும் அவர்* மீ து மிகுந்த மரியாதையையும்* பாசத்தையும் பொழிந்தனர் .* அதன் காரணமாகத்தான் அவர் வெற்றி பெற்றாரே தவிர , வெறும் சினிமா காட்சிகளும், பாடல்களும் அவரை முதல்வராகி விடவில்லை .* *இன்று பல நடிகர்கள் , தங்களின் சினிமா பிரபலத்தை வைத்து அரசியலுக்கு வந்து முதல்வராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.* அது எல்லோருக்கும் வசப்பட்டு விடாது .எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான் .
-
அந்தி மழை மாத இதழ் _மார்ச் 2020
------------------------------------------------------
தமிழக சினிமா மற்றும் அரசியலில் எம்.ஜி.ஆர். - ஒரு அலசல்*
------------------------------------------------------------------------------------------------
காங்கிரசில் இருந்துவிட்டு 1953ல் தி. மு.க. வில் இணைந்த எம்.ஜி.ஆர். 1962ல் எம்.எல்.சி.ஆனார் .* 1967 தேர்தலில் அரசியலில் பங்கேற்று , எம்.எல்.ஏ ஆகி கட்சியின் பொருளாளராக பதவி உயர்வு பெற்று பின் கட்சியின் தலைமையோடு மனக்கசப்பில் புதிய கட்சி தொடங்கினார் .**
ஆக்டொபர் 1972ல் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஜூன் 1977ல் முதல்வராகிறார் .இதே கால கட்டத்தில் , அவர் நடித்த 17 படங்கள் வெளியாகி, எம்.ஜி.ஆரின் பிம்பத்தை மக்கள் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தின .புதிய கட்சி ஆரம்பித்த 1972ம் ஆண்டில் , சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன்,அன்னமிட்டகை , இதய வீணை என்று ஆறு படங்கள் வெளியாகின .* அது தற்செயலா அல்லது உச்சத்தில் இருக்கும்போது கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்ற* திட்டமிடலா என்ற கேள்விக்கு விடையில்லை .ஆனால் 1973ல் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்கள் மட்டும் வெளியாகின .* எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் திறம்பட இயங்கின .* ஒரு கட்சியின் கிளைகள் போன்று செயல்பட்ட மன்றங்களுக்கு போதுமான நேரத்தை செலவழித்துதான் கட்சியின் பொறுப்புகளைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இருமுறை (1957-59,1961-63) பதவி வகித்துள்ளார் .* அவர் தயாரித்த மூன்று படங்களான நாடோடி மன்னன், அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவை மூன்று மிக பெரிய கமர்ஷியல் வெற்றி படங்கள் .* தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தகுதியின் அடிப்படையில் முதலிடம் எம்.ஜி.ஆருக்குத் தான் .மக்களின் நாடி துடிப்பு, பற்றிய புரிதலும், கட்சியை நடத்தும் திறனும் அவருக்கிருந்தாலும், எம்.ஜி.ஆர். 1953-1977ஆண்டுகளுக்கு மத்தியில் சுமார் 42,000 மணி நேரங்கள் அரசியலுக்காக செலவழித்திருக்க கூடும்* என்பதையும் மறந்துவிட முடியாது .அவருடைய சினிமா* மற்றும் அரசியல் சாதனைகள், வெற்றிகள், ஒரு வரலாறு, சகாப்தம் . வேறு எவராலும் இனி சாதிக்க முடியுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி .
-
கடந்த*20/02/20* வியாழனன்று*மாலை 5 மணியளவில் , சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில் வேல்ஸ்*பல்கலை*கழக*வேந்தர்*திரு.ஐசரி*கணேஷ்*தலைமையில ் , பிரபல*திரைப்பட*இயக்குனர் எஸ். பி. முத்துராமன் சிறப்புரையில் , பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி* இன்னிசையில்* ஒளி - ஒலி* *காட்சிகளுடன் , கவிஞர் காவிரி*மைந்தன் அவர்களின்*நூல் *20-20-20 (மணியளவில் ) பொற்கால*பாடல்களின் பூக்கோலங்கள்* வெளியீட்டு*விழா , பார்வையாளர்களின் இலவச*அனுமதியுடன் அரங்கம்* நிறைந்த*காட்சியாக*நடைபெற்றது .**
மறைந்த*பிரபல*திரைப்பட*பாடலாசிரியர்களின்* வாரிசுகள் பிரம்மாண்டமாக*ஒரேமேடையில் பங்கேற்று நிகழ்ச்சியை*சிறப்பித்தனர் .
பிரான்ஸ்*எம்.ஜி.ஆர். பேரவை, மற்றும் புதுவை*எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு*பத்மநாபன்* சிறப்பு*விருந்தினராக கலந்து கொண்டார்.* மேலும் சிலர்*வெளிநாட்டில் இருந்து வந்து சிறப்பு*விருந்தினர்களாக கலந்து கொண்டனர்*.
நிகழ்ச்சியில் பேசும்போது*கவிஞர் திரு.காவிரி*மைந்தன் இந்த நூல் வெளியீட்டு*விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு ,ஆதரவு மற்றும் உதவிகள்*செய்த*திரு. சைலேஷ்*பாசு*அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .* நிகழ்ச்சியில் கவிஞர்களின் வாரிசுகளுக்கு**மேடையில்*பொன்னாடை அணிவிக்கப்பட்டு , நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன . கவிஞர்களின் வாரிசுகளும் தங்களது*பெற்றோர்களின் சினிமா*தொடர்பு, பாடல் களின்*பெருமை குறித்து*பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .,*
நிகழ்ச்சி தொகுப்பாளர்* ஒவ்வொரு பாடலுக்கும்* திரைப்படத்தில்*இடம் பெற்ற சூழல், சில*பாடல் வரிகள், பாடலாசிரியரின் பெயர் , போன்ற விளக்கத்துடன்*மிக அழகாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு*தகுந்தாற்*போல பழைய பாடல்களுக்கு பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி*மிகுந்த சிரத்தையுடன் கம்போஸ் செய்து பாடல்களை*இனிமையாக வழங்கினார் . சுமார்*3 மணி நேரம் மறைந்த*பிரபல*தமிழ் பின்னணி பாடகர்*திரு.டி.எம்.எஸ். அவர்களின்*புதல்வர்*திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார ் பாடல்களை*பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்*நிகழ்ச்சியில் பெரும்பான்மை பங்கு பெற்றிருந்தது .* தொகுப்பாளர்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல் பற்றி விளக்கம் தரும்போதும், புரட்சி தலைவர் பெயரை*மேடையில்*யார் உச்சரித்தாலும்,*ரசிகர்கள் / பக்தர்கள்*கரகோஷம் அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .கவிஞர் காவிரி*மைந்தன் , இயக்குனர் எஸ். பி. முத்துராமன், திரு.முருகு*பத்மநாபன் ஆகியோர்*பேச்சுகள்*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழாரம்*சூட்டும் வகையில் இருந்தது*என்பது குறிப்பிடத்தக்கது . மொத்தத்தில்*ஒரு அருமையான நிகழ்ச்சியை*கண்டுகளித்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது*என்று கூறினால் மிகையாகாது .
இன்னிசை நிகழ்ச்சியின் போது இசைக்கப்பட்ட பாடல்களின் விவரம் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது*
படம்* * பாடல்* * * * * * * * * * * *ஆசிரியர்
1.குலேபகாவலி* * - மயக்கும்* மாலை பொழுதே* - தஞ்சை*ராமையாதாஸ்*
2. சபாஷ்*மீனா* * *- சித்திரம் பேசுதடி*-* * * * * * * * * -கு.மா. பாலசுப்ரமணியம்*
3. அரச கட்டளை* *- ஆடி வா , ஆடி வா* * * * * * * *- முத்து கூத்தன்*
4.சிரித்து*வாழ வேண்டும்* -மேரா நாம் அப்துல்ரஹ்மான் -புலமைப்பித்தன்*
5.கலங்கரை விளக்கம்* *- சங்கே*முழங்கு* * * * * * * * - பாரதிதாசன்*
6.குடியிருந்த கோயில்* * -குங்கும*பொட்டின்*மங்கலம் -ரோஷனாரா* பேகம்*
7.அடிமைப்பெண்* * * * * *-தாயில்லாமல் நானில்லை* - ஆலங்குடி*சோமு*
8.வஞ்சி கோட்டை*வாலிபன் -கண்ணும்*கண்ணும்*கலந்து*-கொத்தமங்கலம் சுப்பு*
9.நினைத்ததை முடிப்பவன்* -கண்ணை*நம்பாதே* -* * * * * * *மருதகாசி*
10.உத்தம*புத்திரன்* * * - முல்லை மலர் மேலே* * * * * -* * * * *மருதகாசி*
11.நீதிக்கு*தலைவணங்கு* - கனவுகளே, ஆயிரம்* கனவுகளே /நா. காமராசன்*
12.தை பிறந்தால்*வழி பிறக்கும்*-அமுதும்*தேனும்*எதற்கு*-* சுரதா*
*13.நான் பெற்ற செல்வம்*-வாழ்ந்தாலும்* ஏசும்* * * * * - கா. மு. ஷெரீப்*
14.மிஸ்ஸியம்மா - பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -தஞ்சை ராமையாதாஸ்*
15.உயிருள்ளவரை உஷா* *- வைகை*கரை*காற்றே நில்லு*- டி.ராஜேந்தர்*
16.குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை*கேட்டு -ஆலங்குடி*சோமு*
17.புதிய பூமி* * * * * * * * *-நான் உங்கள் வீட்டு*பிள்ளை -பூவை செங்குட்டுவன்*
18.பொன்னகரம்* -வாழுகின்ற மக்களுக்கு*வாழ்ந்தவர்கள்* பாடமடி**-காமகோடியான்*
19.கொஞ்சும் சலங்கை*- சிங்கார வேலனே*தேவா*- கு.மா.பாலசுப்ரமணியம்*
20.இதயவீணை* * * * -பொன்னந்தி* மாலை பொழுது* - புலமை பித்தன்*
21. உதயகீதம்* * * * * - பாடு நிலாவே*தேன் கவிதை*-மு. மேத்தா*
22.நீதிக்கு*தலை வணங்கு* - இந்த பச்சைக்கிளிக்கு* - புலமை பித்தன்*
23.ஆடிப்பெருக்கு -* தனிமையிலே*இனிமை காண முடியுமா*-கே.டி.சந்தானம்*
24.அரசிளங்குமரி* - சின்னப்பயலே, சின்னப்பயலே -ப.கோ.கல்யாணசுந்தரம்*
25.தங்கமலை*ரகசியம் - அமுதை*பொழியும்*நிலவே*-கு.மா. பாலசுப்ரமணியம்*
26. விவசாயி* * * * * * * * *-கடவுள்*எனும்*முதலாளி* * * * * *மருதகாசி**
27. ராஜாதிராஜா* * * -மீனம்மா , மீனம்மா* * * * * * * * *-* * *பிறைசூடன்*
28.மீனவ*நண்பன்* * - தங்கத்தில் முகமெடுத்து* * *- முத்துலிங்கம்*
29.உலகம் சுற்றும் வாலிபன் - நமது வெற்றியை*நாளை* சரித்திரம்* *-* *வேதா*
-
தினமலர் - மறக்க முடியுமா*?* - அன்பே வா*
----------------------------------------------------------------------
வெளியான நாள் : 14/01/1966
நடிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பி.சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மாதவி,** * * * * * * *டி.ஆர். ராமச்சந்திரன், ராமராவ்* மனோரமா மற்றும் பலர்*
வசனம் : ஆரூர் தாஸ்* * * * * * *இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்*
ஒளிப்பதிவு : மாருதிராவ்* * * *இயக்கம் : ஏ.சி.திருலோகச்சந்தர்*
தயாரிப்பு* ஏ.வி.எம்.
இது வழக்கமான எம்.ஜி.ஆர். படமல்ல .* ஈகோவில் துவங்கி , காதலில் முடியும் .அழகான காதல் படம்.* ஏ.வி.எம்.நிறுவனத்தின்* 50 வது படம் . முதல் வண்ண படம் அந்நிறுவன தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் .* என பல்வேறு சிறப்புகள் உண்டு .**
ராபர்ட் முல்லிகன் இயக்கத்தில் உருவான கம் செப்டம்பர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் என்றாலும் , தமிழுக்கு ஏற்றவிதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் .*
பணம் இருந்தும் ஓய்வுக்காக ஏ ங்கும், எம்.ஜி.ஆர். சிம்லாவில் இருக்கும் தன்*மாளிகைக்கு செல்கிறார்.* அங்கு பணிபுரியும் நாகேஷ் அந்த மாளிகையை சரோஜாதேவி குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்.* நான் யார் என்பதை சொல்லாமல் , அங்கு எம்.ஜி.ஆர். நடத்தும்* நாடகமே கதைக்களம்
*.ஜே,பி.என்கிற பாலுவாக* எம்.ஜி.ஆரும், கீதா கதாபாத்திரத்தில் சரோஜாதேவியும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கியிருந்தனர் .* நாகேஷ் மனோரமா கூட்டணி வழக்கம் போல நகைச்சுவையில் வெற்றிக்கொடி நாட்டியது .
ரொமான்டிக் காமெடி வகையை சார்ந்த இப்படம், விமர்சகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது .* எம்.எஸ். விஸ்வநாதன் இன்னிசையில் , வாலியின் வரிகளில் புதிய வானம், லவ் பேர்ட்ஸ் , நான் பார்த்ததில், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் , அன்பே வா,* நாடோடி, வெட்கமில்லை* ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* நாடோடி பாடலில் எம்.ஜி.ஆரின் நடனம் புதுமையாகவும் இளைஞர்களை கவரும் விதமாகவும், மிகவும் சுறுசுறுப்பாக ,*நளினமாக , அற்புத நடனம் ஆடியிருந்தார் .* நெல்லூர் காந்தாராவுடன் மோதும் சண்டை காட்சியில் அவரை அலாக்காக தூக்கி போட்டு சண்டை பிரியர்களின் பாராட்டை பெற்றார் எம்.ஜி.ஆர்.*
எம்.மாருதிராவின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு குளிர்ச்சியான அனுபவத்தை* கொடுத்தது எனலாம்.* காதல், மோதல், நடனம், நகைச்சுவை என கொண்டாட்டமான படம் .* *விஜய் நடித்த குஷி போன்ற படங்களின் முன்னோடி அன்பேவா தான் . சிறந்த பொழுது போக்கு சித்திரம் .
-
இனிய உதயம் மாத*இதழ் -மார்ச்*2020
--------------------------------------------------------------
பிம்பங்களின் அரசியல் -எம்.ஜி.ஆர் -பாலமுரளிவர்மன்*
---------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். தனது படங்களிலும், பாடல்களிலும் நல்ல* நல்ல கருத்துக்களை பரப்பினார் .* நேர்மையாளராக , ஊழலுக்கும், அநியாயத்துக்கு எதிரானவராக தனது பிம்பத்தைக் கட்டமைத்தார் .* அடித்தட்டு மக்களின் நேர்மறைத் தன்மையை கிளர்ந்தெழ செய்து அவர்களது தன்னம்பிக்கையைத் தூண்டி நிலையான நம்பிக்கையை பெற்று, தமிழகம் எதிர்கொள்ளும் நிலைக்கு விதைநெல்லாக இருந்திருக்கிறார் .அவரது வெற்றிக்கு சொந்த செல்வாக்கும், குணநலன்களே காரணம் . எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு அவரது உழைப்போடு* தமிழ் மக்களின் எளிய மனமும் அடிப்படையாக இருந்தது .
திரைப்படங்களின் வழியே தி.மு.க ஏற்படுத்திய தாக்கம் அதன் வெற்றிக்கு சமபங்கு வகித்தது போலவே திரைப்படத்தின் வாயிலாகவும், தி.மு.க. வழியேயும் நட்சத்திர குறியீடாக உருவான எம்.ஜி.ஆரின் பிம்பமே தி.மு.க. வை வீழ்த்தவும், எம்.ஜி.ஆரை உயர்த்தவும் செய்திருக்கிறது . காரணம், தமிழ் திரைப்படங்களின் மிக முக்கியமாக சமூகத்தாக்கமென்று குறிப்பிடும்போது, தொலைகாட்சி யுகத்திற்கு முன்பாக* தமிழ் படங்களின் வெற்றி பெண்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது .* குறிப்பாக நடுத்தர , மற்றும் அடிதட்டுப் பெண்களிடையே ஆழமாக வேரூன்றிய திரைப்பட மோகம் அவர்களுக்கு பாரிய ஆற்றுப்படுத்துதலை அளித்திருக்கிறது .* இதனூடாகவே எம்.ஜி.ஆரின் வெற்றி நிர்ணயமாயிருக்கிறது* இங்கு எம்.ஜி.ஆர். தனக்கு தானே கட்டமைத்துக் கொண்ட பிம்பம் அவருக்கு கைகொடுத்தது எனலாம் .
1984 பொதுத்தேர்தலில் நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாது பேச முடியாத நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும்* பிரச்சாரம் செய்யாமலேயே பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து* தேர்தலி ல்* வென்று* முதல்வரானார் என்பது ஒரு தனி மனிதனின் பெருமை .எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இது போல் அமையுமா என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது .* அந்த அளவுக்கு தமிழக மக்கள் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக திகழ்ந்தார் . பரவியிருந்த தன் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவே அவர் முனைந்திருக்கிறார் .எனவே பிம்ப அரசியலே அவரால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது .திரைப்படத்தால் உருவாக்கிக் கொண்டதை அரசியலுக்கும் கடத்தி தக்க வைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு*வெற்றியும் கண்டிருக்கிறார் .**
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
27/03/20* *- வசந்த்* டிவி.* - பிற்பகல் 1.30மணி* *- ஆனந்த ஜோதி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * இரவு 7.30* மணி* - பட்டிக்காட்டு பொன்னையா*
29/03/20* *- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -ஊருக்கு உழைப்பவன்*
* * * * * * * * * * மெகா 24 டிவி* *- காலை 8.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * * * * * சன்லைப்* * * - காலை* 11 மணி* - தாயின் மடியில்*
-
30 03.2020
Book park
M.Shajahan.Bsc.,
Mynaty media
மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...!
போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்...!
நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்
காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை...!
படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார்...!
பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது...!
விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும்...!
இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்
கிவிடும்...!
‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன..!
‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது...!
எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார்.
எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது...!
படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.பாடல் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டது...!
பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்...!
தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார்...!
அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்...!
‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார்...!
பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்...!
ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார்...!
விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது...!
‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது..?
அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே..?’ என்று ஸ்ரீதர் கவலை அடைந்தார்...!
பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்...!
போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார்...!
பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார்...!
சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு...!
எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார்...!
எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார்...!
எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார்...!
எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது...!!!......... Thanks.........
-
[#பழச #மறக்கமாட்டாரு
சிவகங்கை நகர முன்னாள் திமுக செயலாளர்...
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
வாத்தியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
வாத்தியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.
தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு (???) முதல் பத்திரிகை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்பு, கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார்...
உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
அப்போது உடனிருந்த அவரின் சகோதரி மகன்...
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.
"வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.
அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.
நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு...
என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜிஆரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக கூட்டம்.
வாத்தியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும், தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.
வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....நான் கொடுத்தது யாருக்குமே தெரியக்கூடாது...
நல்லபடியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் நம்ம வாத்தியாரு.
சொந்தக்காரனுக்கு மட்டுமே உதவி செய்யும் தானைத்தலைவன் (???!!!) எப்படி
சொந்த கட்சிக்காரனுக்கு உதவி செய்வார்...???]......... Thanks.........
-
[M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,
அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.
கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.
அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.
அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
Cont...]............ Thanks.........
-
காய்ந்து சிவந்தது...
சூரியகாந்தி...
அனலில் தோய்ந்து சிவந்தது...
காய்ச்சிய தங்கம்...!
ஆய்ந்து சிவந்தது...
அறிஞர்தம் நெஞ்சம்...!
தினமும் ஈந்து சிவந்தன...
#எம்ஜிஆர் இருகரமே...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!
தங்கக்குணம் உள்ள
கலை மன்னன்...!
#மக்கள்திலகம் எங்கள்
#எம்ஜிஆர்_அண்ணன்...!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!
வாரி வாரி வழங்குவதில்
பாரிவள்ளல்...!
வண்ணத்தமிழ் வளர்ப்பதிலே
காஞ்சி மன்னன்...!
காரிருளை நீக்கி இன்று
கட்டுப்பாட்டைக் காத்து நிற்கும்...
கொள்கைக் காவலன்...!
கொள்கைக் காவலன்...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!!
மின்னுகின்ற பொன்னைப் போன்ற நிறத்தைப் போன்றவர்...!
மூடிவைக்கத் தெரியாத
கரத்தைப் பெற்றவர்...!!
எண்ணுகின்ற எண்ணத்திலும்
அறத்தைப் பெற்றவர்...!
எல்லோரும் போற்றுகின்ற
தரத்தைப் பெற்றவர்...!!
தன்னலம் கருதாத மனத்தைப் பெற்றவர்...!
#திராவிடர் என்னோர்
இனத்தைப் பெற்றவர்...!!
உண்மையில் வழுவாத
நடத்தை பெற்றவர்...!
ஒவ்வொருவர் உள்ளத்திலும்
இடத்தைப் பெற்றவர்...!!
அன்பு கொண்ட #அண்ணாவின்
தம்பியல்லவா...!
அவர் அறவழியில் நடக்கும்...
தங்கக்கம்பியல்லவா...!
#தங்கக்கம்பியல்லவா...!!
எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!
தங்கக்குணம் உள்ள
கலைமன்னன்...!!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!
மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!!
நன்றி : நாகூர் E.M.அனீபா........... Thanks.........
-
மக்கள் திலகத்தின் 100வது திரைப்பட காவியம் "ஒளிவிளக்கு" இந்த திரைப்படத்தில் இப்போது நாட்டுக்கு வந்திருக்கும் கொரொனோ போல் விஷ காய்ச்சல் பற்றி அப்போதே இந்த திரைப்படத்தில் இடம் பெற்றது அதில் ஊரைவிட்டும் அனைவரும் சென்று விடும்போது மக்கள் திலகம் சொல்வார் "இந்த நோய் கூட என்னைப்பார்த்து ஓடும்" என்பார். விஷ காய்ச்சலால் ஊயுருக்கு போராடும் சௌகார் ஜானகியை காப்பாற்றுவார் எப்போதும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் ஊரைப்பற்றியும் மக்கள் நலனைப்பற்றி கவலைபடுவர் அதுதான் மனித நேயம் எம் ஜி ஆர் (இந்த பதிவு பற்றி தங்கள் எண்ணங்களை பதிவிடவும்).......... Thanks.........
-
-
Mynaty media
M.shajahan.B.sc.,
RR pictures
கொடுத்து வைத்தவள் வெளியான தேதி
09.02.1963.
இதே தேதியில் தான் சிவாஜிக்கு
சித்தூர் ராணி பத்மினி ரிலீஸாகி
படு தோல்வி கண்டது...!
ஜனவரி 11(பொங்கல்) அன்று...,
சின்னவரின்
" பணத்தோட்டம் " வெளி வந்தது...!
அதே தேதியில்
பி மாதவன் முதன் முதலாக இயக்கிய "மணியோசை" வெளியானது...!
இரண்டும் பெரிய வெற்றி பெற்றது...!
அதை அறிந்து தான் தெய்வத்தாய் இயக்கும் வாய்ப்பை சின்னவர் மாதவனுக்கு வழங்கினார்...!
சின்ன இடை வெளியில் தேவரின்"தர்மம் தலை காக்கும்"
பிப்ரவரி 22 ல்
ரிலீஸ்...!
முன்னும் பின்னும் வழுவான வெற்றி
பெற்றதால்...,
இடையில் சிக்கிய கொடுத்து வைத்தவள் சராசரியாகத் தான் போனது...!
மௌண்ட் ரோடு(அண்ணா சாலை) பிளாசாவில் பணத்தோட்டம்...,
தேவர் பொங்கலுக்கே Conform பண்ணியதால் சித்ராவில் தர்மம் தலை காக்கும்...,
தியேட்டர் கிடைக்காததால் வழக்கமாக ஆங்கில படங்களும்..., ஸ்ரீதர் படங்களும் (பின்னாளில் எங்க வீட்டுப்பிள்ளை
அன்பேவா)
வெளியிடப்படும் "காசினோ" வில் கொடுத்து வைத்தவள் ரீலீஸ் அகியிருந்தது...!
அதனால் கதைக்கு முக்கியத்தும் கொண்ட இப்படத்திற்கு High class ரசிகர் ஆதரவு கிடைத்தது...!
பா நீலகண்டன் சின்னவரை இயக்கிய இரண்டாவது படம்...!
மகாதேவன் இசையில்ல அனைத்து பாடல்களும் அருமை...!
கண்ணதாசன் வரியில்...,
'என்னம்மமா சௌக்யமா...?'
TMS PS
'பாலாற்றில் தேனாடுது...!'
சீர்காழி சுசீலா
'நான் யார் தெரியுமா...?'
TMS
ஆலங்குடி சோமுவின் வார்த்தையில்...,
'மின்னல் வரும்'
மருதகாசின் மயக்கும் மொழியில்...,
'நீயும் நானும் ஒன்று;ஒரு நிலையில் பார்த்தால் இன்று'
என்ற தீர்க்க தரிசன சொல்லாடல் கொண்ட பாடல்கள் இப்பபடத்திற்கு தனிச் சிறப்பு...!
இது வெறும் Trailer தான்...,
Main pictures
நிறைய இருக்கு...!........... Thanks.........
-
ரத்னகுமார் படத்தில் தளபதியாக சகஸ்றநாமமும், சேனாதிபதியாக எம்.ஜி.ஆர்.அவர்களும் நடித்து இருப்பார்கள்.
அஸோக்குமார் படத்தில் எம்.கே.தியாகராஜபாகவதரின் உற்ற நண்பராக நடித்து இருப்பார் தலைவர்.
*லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சதி செய்யப்பட்டு பாகவதர், கலைவாணர் சேர்க்கபட்டனர் பின்பு லண்டன் கோர்ட்டில் கேஸ் நடந்து கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்று தீர்ப்பு வழங்கபட்டது*
*பாகவதர் நடித்த ராஜமுக்தி படம் பூனாவில் எடுக்கபட்டது அதில் எம்ஜிஆர் இரண்டாவது நாயகன் ஆவார்."அப்போது தான் எம்ஜிஆருக்கும் ஜானகிக்கும்.திருமணத்தை தனது முன்னிலையில் நடத்தியவர் தியாகராஜபாகவர் ஆவார்*
*நாடோடி மன்னன் படம் எடுக்கும்போது …றாமச்சந்திரா அதிகம் பணம் செலவளிக்காதே கடன் பட்டு விடுவாய் என எம்ஜிஆரை எச்சரித்தார் பாகவதர் ஆனால் தலைவரோ ஜெயித்தால் மன்னன், இல்லை நாடோடி*
என்று பாகவதரின் ஆலோசனையை கேட்டார் ..
எனது நினைவலைகள்.
KSG... Thanks...
-
01.04.2020
Book park.
எம் ஷாஜஹான்.
மைனாட்டி மீடியா
நீதிக்கு தலை வணங்கு படத்தை பற்றிய அபூர்வ செய்தி...!
இறைவன் நம் கண் முன்னால்...,
நாளை நடப்பதை இன்றே காட்டித்தருவான் என்பதற்கு சாட்சி கூறும்...,
ஒர் அதிசய காட்சி நிகழ்வு இடம் பெற்றிருக்கும்...!
ரோஜா ரமணியிடம்..., அவரின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை க்கு ஏற்பாடு செய்ததர்க்கு சாட்சியாக...,
கட்சியின் அன்றய அதிகாரபூர்வ நாளேடான
" சமநீதி " யை எடுத்து வந்து காட்டுவார் நம் சின்னவர்...!
அதில் இரண்டு விசயங்கள் பின் நடப்பதை பிரதிபலிப்பதாக இருக்கும்...!
1. அமெரிக்காவில் இருந்து டாக்டர்கள் வருவதாக இருக்கும்...!
2. அந்த பத்திரிக்கையின் வெளியீட்டு தேதி டிசம்பர் 24...என்று
இருக்கும்...!
இந்த இரண்டும் சின்னவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வுகள்...!
ஒன்று...அவருக்கு அமெரிக்க மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்ட அறுவை சிகிச்சை...!
மற்றொன்று அவர் நம்மையெல்லாம் வீட்டுப் பிரிந்த அந்த கொடிய...,
டிசம்பர்...24...!
இறைவன் மிக........
பெரியவன்...!!!......... Thanks.........
-
-
இந்த இந்தி பாடல்...,
நோயுற்றவரை
குணப்படுத்த வேண்டி...,
இறைவனிடம்
இரஞ்சி பாடும்
பாடலாகும்...!
லதா மங்கேஸ்கர்
அமுத குரலில் ஒலிக்கும் இப்பாடல்...,
மக்கள் திலகத்தின் "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் இந்தி மூலக்கதையான..,
சாந்தாராமின் "தோ ஆங்கன் பாரா ஆத்"(இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள்) படத்தில் இடம் பெற்றது...!
இறுதி காட்சியில் நாயகன் கைதிகளால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் போது நாயகி பாடும் பாடல்...!
தமிழில் புகழ் பெற்ற 'ஒன்றே குலமென்று பாடுவோம்' என்ற பாடலின் காட்சியையும் ராகத்தையும் ஒத்திருக்கும்...!
உலகெங்கும் நோயுற்றவர்களின் அழுகுரல் கேட்கும் இவ்வேளையில் இப்பாடல் பாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்...!
என்றென்றும்
அன்புடன்...,
எம் ஷாஜஹான்......... Thanks.........
-
எம்ஜிஆர் இளமையில்
வறுமை. படிப்பை தொடரமுடியவில்லை. நாடகத்தில் சேர்ந்தார்.
பிறகு சினிமாவில் துணைநடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக
ஜொலித்தார்.
உச்சகட்டத்தில் இருந்தும் ஏழைகள்மீது
அன்பும் கொடுக்கும் குணமும் மனிதநேய பண்பும் ரத்தத்தில் ஊறிவிட்டது.ஏனெனில்
ரத்தத்தின்ரத்தமாயிற்றே.பிறகு அ.தி.மு.க தொடங்கி அரசியலில்
தீவிரமாக ஈடுபட்டு தமிழக முதல்வர் ஆனார். 10 ஆண்டுகள்
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்.
1917 லிருந்து 1987
வரை எம்ஜிஆர் காலம்
கி.மு. கி.பி..என்பது போல் சரித்திரத்தில்
இடம் பெற்று
எம்ஜிஆர் காலம் பொற்காலம். இன்று தெய்வமாக காட்சியளிக்கிறார்.
நாம் அனைவரும் அவர்
செய்த நற்காரியங்களை
வாழ்நாளில் கடைபிடித்தால் நமது
தமிழ்நாடு முதலிடம் பெறும் என்பதில்
ஐயமில்லை.......... Thanks.........
-
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
🌹**********************************🌹
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.
நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்.......... Thanks
-
இது, இப்படியாக....
------------------------.--------
#கோட்டையில் இருந்து சென்ற #முதல்வரின் கார், #இராமாவரம் #தோட்டத்திற்குள் நுழைந்தது. வாசலில் இறங்கிய #எம்ஜிஆர் உள்ளே நுழையாமல் வெளியே பார்த்தபடி நின்றார். இது வழக்கத்திற்கு மாறானது என்று, #அதிகாரிகள் பரபரப்டைந்தார்கள். சற்று நேரத்திற்கு பிறகு, “வெளியே உள்ள கடைக்கு அருகில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருப்பதை பார்த்தீர்களா?” என்றார்.
யாரிடமிருந்தும் பதில் இல்லை.
மூன்று நாட்களாக கவனிக்கின்றேன். அந்த அம்மா, அந்த பெட்டிக் கடைக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். நம் வாகனம் வரும்போதும் போகும்போதும் எழுந்து கும்பிட்டபடி நிற்கிறார். நீங்கள் யாரும் கவனிக்கவில்லையா? என்கிறார்.
#பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் மௌனம்.
போய் அழைத்துவாருங்கள் என்கிறார்.
அதிகாரிகள் சூழ உள்ளே நடந்து வரும் அந்த பெண்மணியை பார்த்தபடியே நிற்கிறார்.
நடுத்தர வயது,காய்ந்த தலை. வாடிய முகம், உழைத்து உருக்குலைந்த தேகம், கையில் ஒரு மஞ்சள் பை. முகத்தில் கலக்கமும், அச்சமும் தெரிய, எம்ஜிஆரை நெருங்க நெருங்க படபடப்பிற்குள்ளாகிறார் அந்த பெண்மணி.
அவரை சமாதானப்படுத்த, சிரித்தபடியே சாப்டீங்களாம்மா? யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? வெளியவே உட்கார்ந்திருக்கீங்களே, என்ன விஷயம் என்கிறார். அந்த அம்மையார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, படபடப்புடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.
சரி, முதல்ல நீங்க சாப்டீங்களா? வாங்க, போய் சாப்டுட்டு நிதானமா பேசுவோம் என சிரித்தபடியே அழைத்துச் செல்கிறார். உணவு இரண்டு பேருக்கும் பரிமாறப்பட்டது. தயங்கி தயங்கி அமர்ந்திருந்த அந்த பெண்மணியிடம் சாதாரணமா பேச்சுகொடுத்து சாப்பிட வைத்தார். இரண்டு பேருமாக சாப்பிட்டு முடித்தவுடன் வெளியே இருந்த அறையில் வந்தமர்ந்து, ‘என்ன ஏது என்று விசாரிக்கின்றார்.
“ஐயா, நான் கூலி வேலை செய்யுறேங்க. வூட்டுக்காரு இறந்து போயிட்டாரு. சட்டுன்னு கையொடிஞ்சமாதிரி ஆயிருச்சி. ஒத்தை ஆளு சம்பாரிச்சு மூணு பொம்பள புள்ளைகளை காப்பாத்த முடியல, பள்ளிக்கூடம் போற புள்ளைங்கள நிறுத்திட்டேன். என்னா பண்றதுன்னு தெரியல. ஊர்ல இருந்த எல்லாரும், எம்ஜிஆர்கிட்ட போய் கேளுங்க, ஏதாவது செய்வாருன்னு சொன்னாங்க. அதான்சாமி வண்டி புடிச்சு வந்துட்டேன். கோட்டைக்கு போனேன். அங்க உங்களை பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அதான் இங்க வந்து (வீட்டுக்கு) வெளியே இருக்கிற பெட்டிக் கடையாண்ட மூணு நாளா குந்திகிட்டிருக்கேன் சாமி” என்கிறார் கையெடுத்து கும்பிட்டழுதபடி..
என்ன #நம்பிக்கையில் இப்படி வண்டி ஏறி வருகிறார்கள் என நினைத்தாரோ என்னவோ, மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எம்ஜிஅர், சற்று நேர யோசனைக்குப் பிறகு அதிகாரிகளை அருகில் அழைத்து ஏதோ சொன்னார். அவர்கள் குறித்துக்கொண்டார்கள்.
ஊர், பெயர் விவரங்களை மீண்டும் கேட்டுக்கொண்ட பிறகு “பிள்ளைங்க படிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். ஒன்றும் கவலைப்படாதீங்க. பத்திரமா போய்வாங்க என்றபடியே, ‘கொஞ்சமாக’ பணத்தை கையில் இருந்த மஞ்சள் பையில் போட்டுக்கொடுத்து, இதை வைத்து ஏதாவது கடை வைத்து வருமானத்த பார்த்துக்கோங்க” என்று கூறி அனுப்பி வைக்கின்றார். ஒரு ஊழியர், பொறுப்பாக வண்டி ஏற்றி அனுப்பி வைத்தார்.
ஊர் சென்று இறங்குவதற்குள்ளாகவே, வீட்டிற்கு, கலெக்டர் ஆபீஸில் இருந்து வந்து விசாரித்துவிட்டு போனதாக சொன்னார்கள். விறு விறுவென வேலைகள் நடந்தது. அந்த பெண் பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையான எல்லா செலவுகளும், எந்த உயர்படிப்பு வரை என்றாலும், எல்லாமுமே எம்ஜிஆரே ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் சொன்னார்கள்.
இந்த சம்பவத்தை, எம்ஜிஆர் நடத்திய ‘தென்னகம் பத்திரிகை ஆசிரியராக இருந்த ‘தென்னகம் மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் என்னிடம் கூறினார்.
#போலீஸ் செய்தி வார இதழில் ‘#தென்னகம் மு.கோ. #வசந்தன் அவர்கள் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சாதாரண வேட்டி சட்டையில் வருவார். நான் ஏலனமாகத்தான் பார்த்தேன். பழகப்பழக அவரது அனுபவம் எனக்கொரு பொக்கிஷமாகப்பட்டது. அண்ணன் தம்பியானோம்.
எம்ஜிஆருடன் நெருங்கியிருந்தவர். அதனடிப்படையில் அவ்வப்போது நிறைய சம்பவங்களை சொல்வார். சில சம்பவங்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி இருக்கும். அவற்றை எல்லாம் நான் எனது டைரியில் குறித்து வந்தேன். அவர் சொன்னது எல்லாமும் அதுவரை யாரும் எழுதியிராத-அறிந்திராத சம்பவங்கள்!
பிறகு நான் 1999-ல் குமுதம் வார இதழுக்கு வந்துவிட்டேன். 2002-ற்கு பிறகு..
வழக்கம்போல் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கான சிறப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, அதை சீனியர் எழுதியிருந்தார். அப்போதுதான், ‘என்னிடம் இப்படியான கதைகள் உள்ளது’ என்று ஆசிரியர் #கிருஷ்ணா டாவின்ஸியிடம் கூறினேன். அப்படியா, எழுதி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னார். இரவெல்லாம் எழுதி காலையில் எடுத்துச் சென்றேன்.
முதல் வாரமே அட்டைப்படக் கட்டுரையாக இந்த உண்மை சம்பவம் வெளியானது. (பிறகு தொடர்ந்து நான்கு வாரங்கள் மினி தொடராக குமுதத்தில் வந்தது)
அந்த பெண்மணிக்கு எம்ஜிஆர் உதவியது பற்றிய அந்த கட்டுரை வந்த இரண்டாம் நாள், ஒரு பெண்மணி அலுவலகம் வந்து ஆசிரியர் கிருஷ்ணா டாவின்ஸியை சந்தித்துவிட்டு போனதாக சொன்னார்கள். அன்று நான் தாமதமாக போயிருந்தேன்.
வந்தவர் ஒரு டெபுடி கலெக்டர். எம்ஜிஆரிடம் உதவி கேட்டு வந்திருந்தாரே, அந்த அம்மையாரின் மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர். “எம்ஜிஆர்-தான் எங்கள் மூவரையும் படிக்க வைத்தார். நாங்கள் மூன்று பேரும் பெரிய அளவில் படித்தோம். எல்லா செலவும் அவருடையதுதான். இன்று நாங்கள் எல்லோரும் நல்ல நிலையில்-உத்தியோகத்தில் இருக்கின்றோம் என்றால் அது எம்ஜிஆரின் உதவிதான் என்று உருகி நன்றி சொன்னதாக கூறினார்.
அதன் பிறகு, என்னையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறினார்.
“அவர் எங்களை படிக்க வைத்தது மட்டுமல்ல. எப்படியாக படிக்கின்றோம் என்பதை எல்லாம் விசாரித்தபடி இருந்தார். அதிக அக்கரை கொண்டிருந்தார். எனக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததும், அம்மா கையோடு அழைத்துக்கொண்டுபோய் (குலசாமி) அவர் முன் நிறுத்தினார் என்ற அந்த சம்பவத்தை சொன்னபோது அப்படி ஒரு நெகிழ்ச்சி...
திரும்பிப் பார்த்தபோது, இது இப்படியாக...
#பத்திரிக்கையாளர் பா. ஏகலைவன் அவர்களின் இன்றைய பதிவு......... Thanks.........
-
எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.
"தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.
ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.
அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:
‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.
‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’
‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’
‘’உங்க பேரு என்ன?’’
’’லச்சுமி’’
‘’எந்த ஊரு?’’
’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’
’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’
’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’
‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’
‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’
’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’
’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’
‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’
’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’
‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’
’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’
’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’
‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’
‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’
‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’
‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’
’’மறுபடி சொல்லுங்க....’’
‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’
அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!
இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.
ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.
நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !......... Thanks.........
-
-
-
அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.
2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.
4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்.,......... Thanks.........
-
*🍁🌺🍂 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. 🌾🌸🌹*
*🍀🌷 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... 🌸💐*
*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...🌷💐💐🍁*
*🌹🍃🍁 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...🌷🌸💐*
*🌺💐🌸 கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...💚💓💜*
*🔥🔥🔥இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥️♥️♥️*
*🌟⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... 💐🌸🌷*
-
தனியார் தொலைக்காட்சிகளில் வாத்தியார் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
29/03/20* *மெகா 24 டிவி - இரவு 8.30* மணி -* காதல் வாகனம்*
31/03/20* - சன் லைப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*
01/04/20* - சன் லைப்* - காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * -புதுயுகம்* *- இரவு 7 மணி - அரச கட்டளை*
02/4/20* *- மெகா 24 டிவி - காலை 8.30 மணி - குடும்ப தலைவன்*
02/04/20* -சன் லைப்* - காலை 11 மணி - நவரத்தினம்*
03/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * * * முரசு டிவி* - இரவு* 7 மணி* *-* பெற்றால்தான் பிள்ளையா*
04/04/20* * சன் லைப்* - காலை 11 மணி* - தெய்வத்தாய்*
* * * * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி _ தொழிலாளி*
-
* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. *
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... *
*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...*
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...*
* கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...*
*இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥♥♥*
*⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... *............ Thanks.........
-
தலைவர் நடித்து
வெளிவராதபடங்களின்
தொகுப்பு பார்ப்போம்.
மொத்தம் 30 படங்கள்.
அரசியலில் ஈடுபட்டதாலும்
ஆஸ்பத்திரியில் சில
மாதங்கள் கால் அடிபட்டதும் துப்பாக்கி சூடுபட்டாதலும்
மற்றும் சில காரணங்களால் தடைபட்டது 1.ஸ்ரீதரின் அன்று சிந்திய இரத்தம்.
2.ஸ்ரீதரின் நானும் ஒரு
தொழிலாளி
3.1970ல் இயேசுநாதர்
4. பரமபிதா
5.இன்பநிலா
6.நாடோடியின் மகன்
7.கேரளகன்னி
8.கேப்டன்ராஜ்
9.உன்னைவிட மாட்டேன் இதில் ஒரு சிறப்பு.வாலி எழுதி
இளையராஜா இசை
பாடல்
நான் படிக்கிறேன்
இன்னும் படிக்கிறேன்
உலகமென்னும் பள்ளியிலே
உண்மை என்னும்
கல்வியினை
ஓய்வில்லாமல் படிக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
படிக்கிறேன்
டி.எம்.எஸ்.பாடியது
தலைவருக்காக.
விவசாய பிரச்சினை தீர்க்கும் படம10.புரட்சிப்பித்தன்
ஜோடி லதா.தங்கை
ஸ்ரீதேவி.
11.தியாகத்தின் வெற்றி
இதில் 20 அம்சதிட்டம்
பற்றி எடுக்கப்பட்டது.
12.இன்பகனவு
இதன் இயக்குனராக எம்ஜிஆர13.சிலம்புக்குகை 1956ல்
14.மலை நாட்டு இளவரசன்
15.சிரிக்கும் சிலை.......... Thanks mr.SR.,
-
04.04.2020 இன்று தலைவர் நடித்து வெளிவராதபடங்களின் தொகுப்பு பார்ப்போம்
நேற்றைய தொடர்ச்சி.......
16.தேவர் பிலிம்ஸ் தலைவரின் நடிக்க இருந்த படம் மறுபிறவி.
19.ராமண்ணா இயக்கத்தில் பாகன்மகள் என்ற படம்
வளர்ந்து பின் நின்றது.
இதில் ஜோடி தேவிகா.
மேலும் நாகேஷ் எம்.ஆர்.ராதா உண்டு 17.அடுத்து தந்தையும்
மகனும் தேவர் பூஜையோடு நின்றது.
18.எம்ஜிஆர் ரசிக மன்ற
தலைவர் முசிறிபுத்தனும் என்.எஸ்.மணியனும்
1974 ல் மக்கள் என்பக்கம் எனும் படம்
நின்றது.
20.1956ல் ஈ.எம்.சி.கார்பரேஷனில்
குமார தேவன் படம்
பாதியில் நின்றது.
இதில் ஜமுனா ஜோடி
தலைவருக்கு.மற்றும்
கண்ணம்பா பி.எஸ்.வீரப்பா சூர்ய கலா நடித்து பின் நின்றது.
21.1957ல் தலைவர்
கே.ஆர்.ராமசாமி
நடித்த வாழப்பிறந்தவன்.
22.1941ல் இழந்தகாதல்
படம் வெளிவந்தது.அந்த படத்தின் பாட்டுபுத்தகத்தில் கடைசி அட்டையில்
சாயா என்ற படம்
வருகிறது எனவும்
நடிகர் பட்டியலில்
எம்ஜிஆர் முதல்இடத்தில் வந்தது
அதுதான் பாடல் முதல் தடவ 23.மேலும் சமூகமே நான் உனகக்கே சொந்தம்
24.ஊரே உன் உறவு
25.அண்ணா பிறந்த நாடு
26.வெள்ளிக்கிழமை
27. இதுதான் என் பதில்
28.தியாகத்தின் வெற்றி
29.கொடை வள்ளல்.
30.கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
தற்போது ஐசரிவேலன்
மகன் ஐசரிகணேஷ்
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
படத்தை அனிமேஷனில் தயாரிக்க உள்ளார்.
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.
: 31
எல்லைக்காவலன் படம்
ஆரம்பித்த நிலையில்
நின்றது......... Thanks...
-
தொண்டனின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதில் ஒரு புரட்சி !
*தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலத்தில் தான் ரசிகர் மன்றங்கள் உருவாகின.. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த ரசிகர் மன்றங்கள் தன்னெழுச்சியாக உருவாகி மாபெரும் சக்தியாக உருவெடுத்தன.*
*தமிழகத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் அதிக படியான மன்றங்கள் உருவாகின...*
*இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் எம்ஜிஆர் மன்றங்கள் பெருமளவில் உருவாகின.*
*அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புரட்சி நடிகர் எம்ஜிஆரை விட எம்ஜிஆர் மன்றங்களின் வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.*
*அவர் தன் மகன் மு.க.முத்துவை திரைப்படத்துறையில் இறக்கினார்.*
*எம்ஜிஆர் நடிக்கும் படங்களின் கதை அமைப்புகள் கொண்ட கதைகளில் நடிக்க வைத்ததுடன், தலைவர் எம்ஜிஆர் போல தோற்றமளிக்கும் வகையில் சிகை அலங்காரம், நடை உடை பாவனைகளையும் தன் மகன் மு.க.முத்துவுக்கு அமையுமாறு கவனித்து வந்தார் கருணாநிதி அவர்கள்.*
*மு.க.முத்து படங்கள் வெளியானவுடன் திமுகவினரை கொண்டு எம்ஜிஆர் மன்றங்களுக்கு எதிராக மு.க.முத்து மன்றங்களை கருணாநிதி உருவாக்கினார்.*
*தனக்கு எதிராக கருணாநிதி எடுக்கும் செயல்பாடுகளை அறிந்திருந்தும் தன்னம்பிக்கை கொண்ட தலைவர் எம்ஜிஆர் மு.க.முத்துவின் திரையுலக பயணத்திற்கு ஒரு உடன்பிறந்த சகோதரனை போல் பெருந்தன்மையுடன் உதவினார்.*
*தலைவர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியவுடன் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான்.*
*சரி விஷயத்திற்கு வருவோம்..*
*அதன் பின்னர் தலைவர் எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார்.. இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான் என்பது உலகறிந்த விஷயமே.*
*ஆட்சிக்கு வந்த பின் நடந்த எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் பேசும்போது:-*
*நாம் இப்போது அஇஅதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்து விட்டோம். இனி அக்கட்சியை மட்டும் வளர்க்கும் பணிகளை மேற்கொள்வோம், எம்ஜிஆர் மன்றங்களை கலைத்து விடலாம் என்று உத்தேசித்துள்ளேன்" என பேசினார்.*
*அப்போது ஆவேசமடைந்த குமரி மாவட்ட முதல் எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் எம்ஜிஆரை பார்த்து*
*"தலைவரே அதிமுகவை உருவாக்கியது யார்??" என்று கேட்டார்*
*அதற்கு எம்ஜிஆர் "நான் தான்" என்றார்..*
*அடுத்த கேள்வியாக தமிழ்மகன் உசேன், "எம்ஜிஆர் மன்றத்தை உருவாக்கியது யார்?" என்று எம்ஜிஆரிடம் கேட்டார்*
*அதற்கு எம்ஜிஆர் "நீங்கள் தான்" என்றார்*
*"அதிமுகவை நீங்கள் உருவாக்கலாம் கலைக்கலாம். அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் உள்ளது.*
*ஆனால் எம்ஜிஆர் மன்றங்களை உருவாக்கியது நாங்கள்.*
*அதை கலைக்க உங்களுக்கு எந்த அதிகாரமோ உரிமையோ இல்லை" என்றார் மறுமுனையில் குமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.தமிழ்மகன் உசேன்.*
*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் அமர்ந்து விட்டார்*
*அதனை தொடர்ந்து எழுந்த மதுரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகி தலைவர் எம்ஜிஆரை பார்த்து*
*"தலைவரே.. எங்கள் மன்றத்தின் உழைப்பு தான் உங்கள் கட்சியும் ஆட்சியும்.. ஆனால் அதை மறந்து உங்கள் அமைச்சர்கள், நாங்கள் பொது பிரச்சனையின் மனு கொடுத்தாலும் அவர்கள் அதை கண்டுக் கொள்வதில்லை" என புகார் கூறினார்.*
*அதற்கு எம்ஜிஆர், "எந்த அமைச்சர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை? இங்கு அனைத்து அமைச்சர்களும் வந்துள்ளார்கள். பெயரை மட்டும் சொல்லுங்கள் உங்கள் முன்னிலையில் கேட்கிறேன்" என்று பதிலளித்தார்.*
*அதற்கு அந்த மதுரை நிர்வாகி.. "தலைவரே உங்களிடமே பொது பிரச்சனைக்காக மூன்று மனுக்கள் அளித்தேன், நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று எதிர் கேள்வி கேட்டார் தலைவரை நோக்கி.*
*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றார்.*
*இதெல்லாம் அந்த காலம்..*
*தலைவனை தொண்டன் கேள்வி கேட்க முடிந்தது.*
*தான் நேசிக்கும்.. ரசிக்கும் நடிகரைப் பார்த்து கேள்வி கேட்க முடிந்தது.*
*தலைவர் எம்ஜிஆர் இருந்த வரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகம் கட்சிக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக செயல்பட்டது.*
*கூட்டங்களை மாநாடுகளை எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளே முடிவு செய்து தலைவருக்கு தெரிவிப்பார்கள்.. அழைப்பார்கள்..*
*எம்ஜிஆர் மன்றத்திற்கு மட்டும் தான் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளர் என்ற பதவி உள்ளது.*
*தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் எம்ஜிஆர் மன்றம் அஇஅதிமுகவின் ஒரு அணியாக மாற்றப்பட்டது.*
*இப்போது எம்ஜிஆர் மன்றத்தின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளராக தலைவரின் நிழலில் வளர்ந்த மூத்த நிர்வாகி
திரு அ. தமிழ் மகன் உசேன் உள்ளார்.
*காகிதம் ராஜன்*
திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு !
படம் : தலைவர் எம்.ஜி.ஆருடன் தொண்டர் தமிழ் மகன் உசேன்.
-#இதயக்கனி எஸ். விஜயன்........... Thanks.........
-
-
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் , கழக நிறுவனர்
புரட்சிதலைவரின் இதயக்கனி ,
" புரட்சித்தலைவியின் ஆங்கில புலமையும் , பன்மொழிபுலமையும்
தமிழகத்திற்கு தெரிந்தால் மட்டும் போதாது ,
இந்தியாவிற்கே , ஏன் உலகத்திற்கே தெரியவேண்டும் என்பதற்காக பாராளுமன்ற ( ராஜ்யசபா ) உறுப்பினராக ,
உருவாக்கியது மட்டுமல்லாமல் , பேரறிஞர் அண்ணா உட்கார்ந்த இருக்கையில் ( 185 ) அமரவைத்து அழகு பார்த்த நாள் இன்று !
M. அமரநாதன் B.Sc, .......... Thanks...