http://i1273.photobucket.com/albums/...vee6/133-1.jpg
Printable View
சபாஷ் ஜெய்சங்கர் சார். அருமை. ஆருயிர் நண்பர் திரு.வினோத் அவர்கள் வெளியிட்டிருந்த 'மாலைமலர்' 'மதுரை வீரன்' கட்டுரையின் பிழையை மிக அழகாக கண்டு பிடித்துள்ளீர்கள். அதுமட்டுமல்ல... 'ராஜா தேசிங்கு' திரைப்படத்தில் இஸ்லாமியப் பெண்ணான பத்மினி எப்படி பாற்கடல் அலைமேல் பள்ளி கொண்டுள்ள பெருமானை(ளை) எண்ணிப் பாட முடியும் என்று எம்ஜியார் அவர்கள் அப்பாடலை நீக்கச் சொன்னது நியாயமே. தான் நடிக்கும் ஒரு படத்தின் மீது எம்ஜியார் அவர்களுக்குள்ள ஈடுபாட்டிற்கு இது ஒரு சிறந்த சான்று. நீங்கள் சொன்னது போல வலைத்தளங்களின் பல்வேறு குழப்பமான கருத்துக்களும், பத்திரிக்கைகளின் பலே' அதிமேதாவி ஆய்வுகளும்தான் இது போன்ற குழப்பங்களுக்குக் காரணம். சிவபெருமான் புகழ் பாடும் அற்புதமான பாடலான 'ஆடல் காணீரோ' பாடலை நீக்கச் சொல்லி எம்ஜியார் அவர்கள் வற்புறுத்தினாரா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் 'மதுரை வீரன்' படத்திற்கு மேலும் புகழ் சேர்த்த பாடல் அது. இன்றளவும் 'மதுரை வீரன்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். எம்ஜியார் அவர்களே ரசிப்பது போல வேறு அப்பாடல் காட்சி இருக்கும். எனவே அந்தப் பாடல் காட்சியை நீக்கச் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.. இது என் சொந்தக் கருத்து. மேலும் நீங்கள் சொன்னது போல கடவுள் மறுப்புக் கொள்கையில் எம்ஜியார் அவர்களுக்கு உடன்பாடில்லை. பழுத்த ஆத்திகவாதியாக நெற்றியில் திருநீறணிந்து ஆன்மீக வாதியாக இருந்த மக்கள் திலகம் தான் சேர்ந்த கட்சியின் கொள்கைக்காக கடவுள் மறுப்புக் கொள்கைக்கு உடன்பட்டது கிடையாது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. (சற்று அடக்கி வாசித்தார் என்று வேண்டுமானால் கூறலாம்) மேலும் இதில் தவறே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது. தேவரின் 'தனிப்பிறவி' (எம்ஜியார் அவர்கள் திமுகவில் இருக்கும் போதே) படத்தில் முருகன் வேடமிட்டு ஒரு பாடல் காட்சியில் நடித்தது '(எதிர்பாராமல் நடந்ததடி' பாடல்) நம் எல்லோருக்கும் தெரிந்ததே. எம்ஜியார் அவர்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் முருக பக்தர் தேவர் அவர்களின் பிடிவாதத்தால்தான் எம்ஜியார் முருக வேடமிட்டார் என்போர் உண்டு. 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் "கடவுள் இருக்கின்றான்... அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?" என்ற பின்னணிப் பாடல் காட்சியும் உண்டு.
'ராஜா தேசிங்கு' படத்தில் இடம் பெற்ற 'பாற்கடல் அலைமேலே' பாடலையும், 'மதுரை வீரன்' படத்தின் 'ஆடல் காணீரோ' பாடலையும் you tube இல் இருந்து எடுத்து இங்கே இடுகை செய்திருக்கிறேன். ஆ.. மறந்து விட்டேனே. மக்கள் திலகம் திரியில் புது உறுப்பினராக வரவு அளித்தமைக்கு என் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய் சார். இது போன்ற நிறைய விஷயங்கள் தங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
'பாற்கடல் அலைமேலே'(ராஜா தேசிங்கு) இந்தப் பாடலின் இடையே 'தசாவதாரம்' என்று படத்தின் பெயர் போல மார்க் செய்திருப்பார்கள். அது வேறு பார்ப்பவர்களை இன்னும் குழப்பும். பலர் இது 'தசாவதாரம்' படப் பாடல் என்று நம்பி விடக் கூடும்.
https://www.youtube.com/watch?featur...&v=oKlIb3PDAVs
'ஆடல் காணீரோ'
https://www.youtube.com/watch?v=qxqsFvf8IBg&feature=player_detailpage
'கடவுள் இருக்கின்றார்' (ஆனந்த ஜோதி)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YuM7GxWZaN0
எம்ஜியார் அவர்கள் முருகன் வேடமிட்டு நடித்த 'தனிப்பிறவி'யில் வரும் 'எதிர்பாராமல் நடந்ததடி' பாடல்
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=aSp13YmPbA4
ஒரு சிறிய தவறு - மாலை மலர் பதிவில்
சரியான நேரத்தில் கண்டுபிடித்த நண்பர் ஜெய்
ராஜாதேசிங்கு - மதுரைவீரன் - ஆனந்த ஜோதி - தனிப்பிறவி
-
யார் தருவார் இந்த ......விரிவான விளக்கம் -
வீடியோ பதிவுகள்.
தங்க சுரங்கத்தின் வழி வந்த நெய்வேலியார் ...எங்களின்
பாசமிகு வாசு தேவனாரே .....
பதிவுகளை பாராட்ட வார்த்தை இல்லை .
நன்றி வாசுதேவன் சார் .
THEDI VANTHA MAPPILLAI
http://i47.tinypic.com/2h7gmqf.png