http://i60.tinypic.com/1znamae.jpg
Printable View
dear Muthaiyan Ammu sir. It seems you have an amazing photo bucket collection of MGR stills.May I request you to add salt and pepper :) to these displays by adorning these lifetime photos/monuments with few lines of the movie name, situation of that pose, ...like that ..for the benefit of visitors like me? If you don't mistake..though I am a hubber of another thread.
நீதியரசர் திரு.கற்பக விநாயகம் அவர்களுக்கு தலைவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி. தனக்காக பாதுகாப்புக்கு வந்த போலீசார் சாப்பிட்ட பிறகே தலைவர் சாப்பிட்டிருக்கிறார். திரு.கற்பக விநாயகம் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிலும் சாப்பிட்டு, தொண்டர்கள் வருத்தப்படாமல் இருக்க அவர்களின் வீட்டில் காப்பி சாப்பிட்ட தலைவரின் பண்பு, நமக்கெல்லாம் பாடம். நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[QUOTE=g94127302;1186834]எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் - ஒரு புதிய முயற்சியாக , "என் கண்ணோட்டத்தில் MGR " என்ற ஒரு பாகத்தை ஆரம்பித்து அதில் அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை தொடுத்து ஒரு புஷ்பாஞ்சலியை அவருக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - புதிய முயற்சி - தவறுகள் ஏதாவது இருந்தால் ( எழுத்து பிழைகளையும் சேர்த்து ) தயவு செய்து மன்னிக்கவும் . இங்கு வரும் சுறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்ல படலாம் - இருந்தாலும் அது என் முயற்ச்சியை பாதிக்காது . சில பாடல்களையும் , அவருடைய மிகவும் எனக்கு பிடித்த படங்கள் சிலவற்றையும் , இதன் மூலம் அவர் சமுதாயத்திற்கு கொடுத்த நல்ல புத்திமதிகளையும் வேறு ஒரு கோணத்தில் அலசினால் அவைகள் அனைத்துமே இன்னும் அதிகமாகவே தித்திக்கின்றன --- - பார்த்த படங்கள் , கேட்ட பாடல்கள் - ஆனால் இன்னும் மனதை விட்டு ஏன் நீங்குவதில்லை ?? - சொல்ல முடியாத ஒரு சக்தி நம்மையெல்லாம் கட்டி போட்டு விடுகின்றது - ஒரு பாணபத்திரருக்கு பாண்டிய நாடு அடிமையானது போல , இந்த படங்களுக்கும் பாடல்களுக்கும் நாமும் , நம் சந்ததிகளுக்கும் என்றுமே அடிமை தானே ? ஏன் என்று அலசினால் வரும் ஒரே பதில் MGR - அவர் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளும் , நல்ல விஷயங்கள் மக்களை அடைய வேண்டும் என்று அவர் அதற்காக உழைத்த உழைப்பும், சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி போதாது
ஒரு பிரிவினரை , அவர் படும் கஷ்ட்டங்களை பாடல் மூலம் தெரிவித்து அதன் மூலம் அந்த பிரிவினருக்கும் ஒரு முக்கியத்துவத்தை வாங்கி கொடுத்தவர் .. இந்த பாடலை கேட்ட மீன்களும் , சுறாக்களும் அந்த பிரிவினருக்கு மிகவும் சந்தோஷமாக தங்களை அற்பணித்ததாம் - அவைகளுக்கு அவைகளின் பிறவி பயனை கொடுத்த ஒரே பாடல் இதுதான் - மீனவர்களை மையமாக கொண்டு வெளி வந்த படங்களில் குறவஞ்சியும் , படகோட்டியும் முதல் இடங்களில் நிற்கின்றன - அதுவரை அந்த பிரிவினரை கண்ணெடுத்தும் பார்க்காத இந்த சமுதாயம் - இந்த பாடல் மூலம் தன தவறை திருத்திகொண்டது
இராமயணத்தில் , அந்த ராமன் , வாலியை மறைந்து இருந்து கொன்றான் - ஆனால் இந்த கலியுகத்தில் இந்த ராமன் வாலியை கொல்லவில்லை , மாறாக இருந்தும் , இறந்தும் வாழவைத்தான் - அந்த வாலி அமைத்த கவிதைகளின் பாலத்தில் என்றுமே நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்த ராமன் - வரிகளில் எங்காவது ஈரபசை இருக்குமா ? இதோ இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு ஈரமாக உள்ளது - ஆம் அந்த ஈரம் வெறும் தண்ணீர் இல்லை , நாம் சிந்தும் கண்ணீர்
உலகத்தின் தூக்கம் கலையாதோ -----------
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ------
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ -----
ஒரு நாள் பொழுதும் புலராதோ -----
----------------------------------
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு --
முடிந்தால் முடியும் , தொடர்ந்தால் தொடரும் - இதுதான் எங்கள் வாழ்க்கை -------
கடல் நீர் மேல் பயணம் போனால் , குடிநீர் தருபவர் யாரோ ??
தனியாய் வந்தோர் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ ??
ஒரு நாள் போவார் , ஒரு நாள் வருவார் - ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ----
இந்த பாடல் , பாடலின் வரிகள் , பாடலின் இசை , TMS குரல் வளம் - இவைகள் எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டி போட்ட அந்த காந்த கண்கள் - அந்த கண்களில் ஊறிக்கிடக்கும் மீனவர்களின் நிலைமை - எதை விடுவது , எதை சொல்வது ----
இந்த , பாடலும் படமும் என்னை மிகவும் கட்டி போட்டதன் காரணம் -
1. சிறிய வயதில் அன்னையுடன் சென்று பார்த்த படம் - அன்னையை பார்க்க விடாமல் அங்கு கிடைக்கும் தின் பண்டங்களுக்காக அழுது நின்ற படம்
2. விவரம் தெரிந்தவுடன் அன்னையை அழைத்து சென்ற படம் - என் அன்னை என்னை பார்க்க விடவில்லை - சில மன சச்சரிவினால்
3. ஒரு பிரிவினரை மேல் தூக்கி நிற்க வைத்த படம்
4. சமுதாயத்தை தட்டி கேட்ட படம்
5. மீனவர்கள் நன்றி சொல்லும் படம்
பாடல்கள் சிரஞ்சீவியாக என்றும் நம் மனத்தில் இருக்கும் - MGR யாரை போல
அன்புடன்
ரவி
அருமையான கோணத்தில் பாடலை அலசியுள்ளீர்கள் திரு.ரவி சார். மிக்க நன்றி. இருந்தாலும், இவ்வளவு அழகாக விமர்சனம் தந்துவிட்டு ‘இங்கு வரும் சூறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்லப்படலாம்..’ என்று நீங்கள் கூறியிருப்பது உங்கள் பெருந்தன்மையையும் உயர் பண்பையும் தன்னடக்கத்தையுமே காட்டுகிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் திரு.ரவி சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்