Quote:
Originally Posted by irir123
In the overall context, IR himself is a problem for his music! look at the lyrics of 'ulagam ippo enge pogudhu' - full of sentimental as well as mystical rubbish - ex "pattiniyum, paamararum, Bharathathin selvamandro ?' - "hunger and poverty are India's wealth" - it is IR's gleeful endorsing of such lyrics makes me seriously rethink about his mind going kaput - with this kind of a mindset, i sincerely doubt if he himself would do anything to motivate himself for better projects - which will not happen if he sticks to his present circle of 'aamaam saami' jalras which is what he seems to like and be content with!
சரியா சொன்னிங்க irir123. இதே கருத்தைத்தான் நான் நேற்று இங்கு எழுதலாம்னு நினைத்து, பதிவேற்றம் செய்யும் நேரத்தில் வேண்டாமென்று அழித்து விட்டேன். ராஜாவின் எண்ணங்களைச் சொல்லும் பாடலாகவே "உலகம் இப்போ எங்கே போகுது" என்ற பாடலை மக்கள் அனைவரும் நினைக்கும்போது, முரண்பாடுகள்தான் மிச்சமாகிறது.
"பட்டினியும், பாரமரரும் பாரதத்தின் செல்வமன்றோ" என்ற வரிகளை கடக்கும் போது, ராஜா கோடிக்கணக்கில் பணத்தை மூகாம்பிகை கோயிலில் தானமாக கொட்டியதை என்னையும் அறியாமல் நினைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.
உலகமே கிராமமாக மாறிவருகிற சூழ்நிலையில் இன்னமும் மாறி வரும் மாற்றத்தை பற்றி விமர்சிப்பது சரியான பார்வையே அல்ல. இளைஞர்கள் ஏன் வெளிநாட்டிற்கு செல்ல ஆசைப்படுகிறார்கள்? ராஜாவைப் போல தானும் ஒரு மாளிகை கட்டணும், வசதிகளையும் பெருக்கணும் என்பதற்குத்தானே. அவருக்கு அந்த காலத்தில் பண்ணைபுரத்திலிருந்து சென்னை. இளைஞர்களுக்கு இப்போது தமிழ் நாட்டிலிருந்து மற்ற நாடுகள். மதுரையைத் தாண்டி சென்னைக்கு வரும்போது, நாம் சென்னையைத் தாண்டி விமானம், கப்பல் ஏறுவதில் என்னத் தவறு?
ஒருவேளை எனது பார்வை தவறா? இல்லை ராஜாவின் பார்வை தவறா?