சகோதரி சாரதா,
பாராட்டுக்கு நன்றி !
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே இளம் வயதில், வயோதிகக் கதாபாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று அப்பாத்திரங்களாகவே அப்படங்களில் வாழ்ந்து காட்டியவர், நமது தைரியத்திலகம்.
தனது 27வது வயதில், ஒரு பொறுப்புமிக்க நடுத்தரவகுப்புக் குடும்பத்தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார்.
தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம்(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும்புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார் என்றால் "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்' என்ற பாடல்காட்சியிலும் [பின்னணிக்குரல் : கண்டசாலா], அதனைத் தொடர்ந்து வரும் காட்சியிலும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதப்படுத்தியிருப்பார்.
தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம்(1957)" திரைக்காவியத்தில், கதைப்படி, ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். பின்னர் இறுதியில் இழந்தவற்றை அவர் திரும்பப் பெறுவார் என்பது வேறு விஷயம் !
தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960)"யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தையாக [அதாவது பல முன்னணி நடிக-நடிகையருக்கு மாமனார்-அப்பா], தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
உலக சினிமாவின் முதன்மை தைரிய நட்சத்திரம் நமது நடிகர் திலகம் !
அன்புடன்,
பம்மலார்.