டியர் வாசுதேவன் சார்,
வாணி ராணி - 'சீதா அவுர் கீதா' என்று உங்களுடைய பதிவுகள் கலக்கல்.
சண்டைக்காட்சிகள் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
வாணி ராணி - 'சீதா அவுர் கீதா' என்று உங்களுடைய பதிவுகள் கலக்கல்.
சண்டைக்காட்சிகள் தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. நன்றி.
டியர் ராகவேந்திரன் சார்,
நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' தொடர் சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது. அனைவரது எண்ணங்களிலும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து அனைவரது பாராட்டையும் பெறும் என்பதில் துளியளவும் சந்தேகமே இல்லை. நடிப்பு கோட்பாடு கட்டுரை நடிகர் திலகத்தை தவிர்த்து யாரை வைத்து எழுத முடியும். அதுவும் அவரின் தீவிர ரசிகரால் எழுதப்படுவது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும்.
'இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?' என்பது நடிகர் திலகத்தை தமிழகம் பெற்றதற்கு மட்டுமல்ல தங்களையும் இத்திரி பெற்றதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
அன்புடன்.
இந்த திரியின் சிறப்பே, நடிகர் திலகத்தின் திரைப்படத்தின் கதையின் மூலம் என்ன, அது வேற்று மொழி திரைப்படமாயின் அது வெற்றிபடமா?, அதில் நடித்த நடிகர்களின் நடிப்பு எவ்வாறு இருந்தது?, மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு எப்படி? நடிகர் திலகத்தின் படம் பின்பு எந்த மொழியில் திரைப்படமாக்கப்பட்டது?, அதில் பங்கேற்றவர்களின் திறமை எப்படி? போன்ற விபரங்கள், ஒப்பீடுகள் - நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எவ்வளவு ஞானம் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை பறை சாற்றுகிறது. வாசுதேவன் சாரின் 'வாணி ராணி' அலசல் இதை மீண்டும் நிரூபிக்கிறது.
நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். 'முல்லை பூ பல்லக்கு' மிகவும் பிரபலமான நல்ல பாடல். இதில் nt அவர்கள் கௌரவ வேடத்தை விட சற்றே பெரிய வேடத்தில் நட்புக்காக நடித்திருப்பார். இந்த படமும் நன்றாக 100-நாட்கள் ஓடி வெற்றி கண்டது. 'கல்கி' இதழின் பாராட்டிற்கு மேல் வேறு என்ன நான் சொல்ல?
டியர் பம்மலார்,
சந்திப்பு, செவாலியெ விருது விழா செய்திகள் தொடர்ச்சி, மற்றும் 'வாணி ராணி' - பேசும்படம் இதழின் சிறப்புப் பக்கம் என்று தஙகளின் ஆவணப் பதிவுகள் அருமை. பாராட்டுக்கள்.
கலக்கிட்டீங்க பம்மலாரே!!!
உங்கள் மற்றும் ரசிக சகோதரர்களின் பங்களிப்பு தொடராத அத்தருணத்தில், எல்லோரையும் வேண்டிக்கொள்ள அவ்வாறு அவதாரம் எடுத்துக்கொள்ள வேண்டியாதாகியது. நானும் 'பலே பாண்டியா' மருது-வின் மதராஸ் பாஷையில் எனது விண்ணப்பத்தை எழுதி பதிவிடும் போது, சில குறைகளை கண்டு, அவைகளை தவிர்த்து பின்னர் பதிக்கலாம் என்றெண்ணி, விட்டுவிட்டேன். பின்னர் இத்திரியை கண்டதால் தேவை இல்லாமல் ஆகிப்போனது. இப்போது நீங்கள், நான் விட்டுவிட்ட அதே பாஷையில் பதில் அளிக்கின்றீர். என்ன இருந்தாலும் மதராஸ்வாசி ஆயிற்றே நீர் - உங்கள் மதராஸ் பாஷை... ஆஹா அற்புதம்!!!
பம்மலார் அவர்களும், வாசுதேவன் அவர்களும் 'வாணி ராணி' படம் பற்றிய பல்வேறு ஆவனங்களைப் பதித்துவரும் இவ்வேளையில், வசந்த மாளிகை வெள்ளிவிழாவில் இரு கதாநாயகிகளுக்குள் நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. (நான் பத்திரிகையில் படித்தது. அது குமுதமா அல்லது பொம்மையா என்பது நினைவில் இல்லை).
'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதற்காக அதன் இந்திப்பதிப்பான 'பிரேம்நகர்' படத்தில் நடித்து வந்த ராஜேஷ்கன்னா மற்றும் ஹேமாமாலினி வந்திருந்தனர்.
அப்போது, ஏற்கெனவே வசந்தமாளிகையில் நடித்தவரும் அப்போது வாணிராணி படத்தில் நடித்து வந்தவருமான வாணிஸ்ரீயும், ஏற்கெனவே சீதா அவுர் கீதாவில் நடித்தவரும், அப்போது பிரேம்நகர் படத்தில் நடித்து வந்தவருமான ஹேமாமாலினியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வாணிஸ்ரீ கேட்டாராம் "அந்த சீலிங் ஃபேன் காட்சியில் எப்படி நடித்தீர்கள்?. நான் நடித்தபோது என் வெயிட் தாங்காமல் மூன்று முறை சீலிங்ஃபேன்களின் இறக்கை வளைந்து கீழே விழுந்து விட்டேன். நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக கீழே நிறைய ஸ்பாஞ்ச் போட்டு வைத்திருந்ததால் அடிபடாமல் தப்பினேன். நீங்க நடித்தபோது அப்படி ஏதும் நிகழ்ந்ததா?" என்று கேட்க...
அதற்கு ஹேமாமாலினி "எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்காக நல்ல கனமானதும் அகலமானதுமான ஒரு ஃபேனையே ஷூட்டிங்குக்காகவே தயார் செய்து விட்டார்கள். அதனால் நான் கீழே விழும் நிலை ஏற்படவில்லை. ஏன், இங்குள்ள தயாரிப்பாளரோ அல்லது டைரக்டரோ முன்பே இதுபற்றிக்கேட்டிருக்கலாமே" என்று கூலாக பதில் சொன்னாராம்.
டியர் கல்நாயக்,
தங்களுடைய பாராட்டுரை உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியினையும் அச்சத்தினையும் ஒரு சேர தருகிறது. தங்களுடைய அன்புரையும் பாராட்டுரையும் மேலும் ஊக்கமும் தெம்பும் தருகின்றன. அதே நேரத்தில் அதனைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சமும் உருவாகிறது. ஆனால் அந்த அச்சமே ஒரு வகையில் உந்து சக்தியாகவும் மாறி எண்ணத்தில் வலு சேர்க்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் கார்த்திக்,
தாங்கள் கூறியது போல் வாணி ராணி மின் விசிறி காட்சி மிகப் பிரசித்தம். குறிப்பாக ஹிந்தி திரைப்படத்தின் விளம்பரங்களில் கூட அந்தக் காட்சி இடம் பெற்றது பசுமையாக நினைவில் உள்ளது.
தொடர்ந்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
இன்று வந்த தகவலின் படி, திருவிளையாடல் திருக்காவியம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிகிறது. இன்று மாலை அப்படத்தின் சில காட்சிகள் சோதனையாக திரையிடப் பட்டதாகவும் தொழில் நுட்பம் மிக அற்புதமாக கையாளப் பட்டுள்ளதாகவும் தகவல். அதுவும் குறிப்பாக ஒலியமைப்பு மிகத் துல்லியமாக அமைந்துள்ளதென சொல்கிறார்கள். ஒளியமைப்புகள் ஜெர்மனியிலும் ஒலியமைப்பு லண்டனிலும் நவீனப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல். மேலும் சில காட்சிகள் கிராபிக்ஸ் அட்டகாசமாக செய்துள்ளார்கள் எனவும் கூறப் படுகிறது.
சுருங்கச் சொல்லின், கர்ணனை விட இன்னும் சிறப்பாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். சரியான முறையில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு promote செய்தால், கர்ணனை விட மேலும் அதிக அளவில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
ஆவலுடன் காத்திருப்போம்.
அன்பு கார்த்திக் சார்,
தொடர் மழையாக தாங்கள் அளித்து வரும் பாராட்டுக்களுக்கும், ஊக்கத்திற்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளை தொகுத்தளிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாளைய அவா. ரசனை சிகரமான தாங்கள் உள்ளம் மகிழ்ந்து பாராட்டியுள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல நேரங்களில் உங்கள் ரசனையை கண்டு நான் வியந்து போய் இருக்கிறேன். என்ன இது நம் மனதில் உள்ளதை எல்லாம் (சொல்ல முடிந்தவற்றையும் சரி... சொல்ல முடியாதவற்றையும் சரி) இவர் கண்ணாடி போல் பிரதிபலித்து விடுகிறாரே என்று மலைப்பாகக் கூட தோன்றும். பொதுவாகவே நம் ரசிகர்களுக்கு நம் தலைவரைப் பற்றிய பொதுவான சில கண்ணோட்டங்கள் ஒத்துப் போகும். உதாரணமாக அவர் பட்டையை கிளப்பிய காவியங்களில் அவரது முக பாவங்கள், ஸ்டைல், நடை உடை பாவனை என்று ரசனை என்பது எல்லோரும் சிலாகிக்கும் அளவிற்கு ஒற்றுமை இருக்கும்.
ஆனால் சில விஷயங்களில் அதையும் தாண்டிய ரசனைகள், அவரைப் பற்றிய விருப்பு வெறுப்புகள், இது இப்படி இருந்திருக்கலாம்... இப்படி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று அவரது விஷயங்களிலும், அவர் சார்ந்த அல்லது சாராத பல விஷயங்களிலும் தங்கள் கருத்துக்கள் அப்படியே என் கருத்துக்களுடன் ஒத்துப் போவதை நினைக்கையில் ஆச்சர்யமாக இருக்கும். உதாரணத்திற்கு உங்களுடைய இன்றைய பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிவந்த மண்ணில் தேங்காயுடன் தான் தலைவர் மோத வேண்டுமா? தேங்காய் சீனிவாசன் ஒரு சீரியஸான வில்லனா? அவ்வளவு எதிர்பார்ப்புகளுக்குள்ளான ஒரு படத்திற்கு ஒரு காமெடி நடிகருடன் சண்டைக்காட்சி, அதுவும் படத்தின் முதல் சண்டைக்காட்சி. எப்படி விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டியது? அவ்வளவு பெரிய இயக்குனருக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமே! அது போல பலூன் சண்டைக்காட்சி... தலைவரின் உழைப்பு வீணாக்கப் பட்டிருக்கும். பார்த்துப் பார்த்து படத்தை இழை இழையாக செதுக்கி முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விடுவார்கள். அது ஒரு ஆக்ஷன் ஓரியண்டட் படம். சண்டைக்காட்சிகளுக்கு மிக முக்கியத்துவம் உள்ள படம். அதில் போய் சொதப்புவார்கள். ஆனால் நீங்கள் கூறியுள்ளது போல அந்த ஜெயில் சண்டைக்காட்சியில் தலைவர் தூள் பரத்தி விடுவார் என்பது பெரிய ஆறுதல். அவர் எல்லாவற்றிக்கும் ரெடி... ஆனால் மற்றவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கு அவர் தலைதான் உருளும். சிவந்த மண்ணிற்காக டோட்டல் டீமும் செலுத்திய உழைப்பு அபாரத்திலும் அபாரம். ஆனால் இது போன்ற விஷயங்களில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சிவந்த மண் இன்னும் பல உச்சங்களைத் தொட்டிருக்கும் என்பது திண்ணம். இது போன்ற பல கருத்துக்களில் நம் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. எங்க மாமாவில் கூட நான் பலமுறை 'என்னங்க' பாடலில் (ஜெயலிதா அவர்களின் மேக்கப் மற்றும் டிரஸ்} நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்துக்களை அப்படியே மனதில் நினைத்தது தான்.
இன்னுமொரு உதாரணம். 'பாவை பாவைதான்' பாடல். அதைப்பற்றிய தங்கள் கருத்து அப்படியே என் மனதின் பிரதிபலிப்பு. கலைச்செல்வியின் உழைப்பு இப்பாடலில் அசாத்தியமானது. பாடலின் நடுவே வரும் ட்யூன்களில் அவர் தன்னுடன் நடனமாடும் அந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஈடு கொடுத்து அந்த மாஸ்டர் செய்யும் செய்கைகளை அப்படியே மாறாமல் அலட்சியமாக நெற்றியில் கைகளை வைத்து, எதையோ தேடுவது போல் தேடும் பாவனை காண்பித்து, பின் கிணற்றில் தண்ணீர் இறைக்க ராட்டினம் வழியே கயிறை இரு கைகளாலும் இழுப்பது போன்றதொரு மூவ்மெண்ட்டும், அதற்குப் பின் வாழைப்பழத்தை உரித்து அதை மேல் நோக்கித் தட்டி விடுவது போன்ற போன்ற மூவ்மென்ட்டும் அருமையாகச் செய்து காண்பிப்பார். மெல்லிசை மன்னர் வேறு இந்த இடத்தில் அதகளப் படுத்துவார். இந்தப் பாடல் என்றால் எனக்கு அப்படி உயிர். உங்களுக்குப் பிடித்தது போன்றே தலைவர் ஜெயலலிதா ஜோடி என்னையும் வெகுவாகக் கவர்ந்த ஜோடி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எழுத முடியாத விஷயங்களை துணிச்சலாக தாங்கள் பதியும் போது "அப்பாடா! நாம் நினைத்தோம்... இவர் எழுதி விட்டார்... என்று ஒரு திருப்தி உண்டாகும்.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் என்னுடைய பல எண்ணங்கள் அப்படியே தங்களுடன் ஒத்துப் போவதை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொள்ளத்தான். இரண்டு எண்ணங்கள் ஒன்றாக இருக்கும் போது (நடிகர் திலகத்தைப் பொறுத்த மட்டில்) அந்த சந்தோஷப் பரிமாற்றங்களுக்கு ஈடு இணை உண்டோ நடிகர் திலகத்தைத் தவிர.