http://i61.tinypic.com/2i20b6a.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.....
நடிகை ரத்னா.
http://i57.tinypic.com/34e3sbd.jpg
அரங்கத்தில் திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.
http://i60.tinypic.com/33v10ex.jpg
மேடைக்கு அழைக்கப்படுகிறார் அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி.
அருகில் திரு. பிரதீப் பாலு.
http://i58.tinypic.com/246w6zd.jpg
மேடையில் திருமதி ஏ.எல்.எஸ்.ஜெயந்தி , நடிகைகள் :பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி
http://i62.tinypic.com/213ex5d.jpg
மேடையில் மேக்கப் சுந்தரம் அவர்களின் மகன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மகன் ஜெயனன் , பி.வாசு மகன் சக்தி, நகைச்சுவை நடிகர் தங்கவேலு மகள், ஏ.எல்.எஸ். ஜெயந்தி ஆகியோர்.
http://i57.tinypic.com/2qmn9z7.jpg
http://i61.tinypic.com/iolto4.jpg
திரு.ஜெயனன் (ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மகன் ), திரு.சக்தி (இயக்குனர் திரு. பி.வாசு மகன் ), நகைச்சுவை நடிகர் திரு. தங்கவேலு மகள், ஏ. எல்.எஸ். ஜெயந்தி,
நடிகைகள் பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டி குடும்பத்தினர், திரு. எஸ். வி.ரங்காராவ் உறவினர் ஆகியோர்.
http://i62.tinypic.com/svh1k2.jpg
எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பணியாற்றிய, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
மற்றும் உடன் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின்
மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் மலர் வெளியிடப்பட்ட காட்சி.
http://i59.tinypic.com/2yv5rhl.jpg
சென்னை பாலாஜியில் தற்போது வெற்றி நடை போடுகிறது.தினசரி 3 காட்சிகள்.(காலை 11.30 பிற்பகல் 2.30 மாலை 6.30 )
நடிக மன்னன் /நடிக பேரரசர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , முத்திரை பதித்து , ரசிகர்களை பரவசப்படுத்திய "சிரித்து வாழ வேண்டும் "
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/20710td.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி...
நடிகை குட்டி பத்மினி பேசும்போது
http://i61.tinypic.com/257i1xg.jpg
http://i61.tinypic.com/b51lkp.jpg
திருமதி ஏ.எல்.எஸ்.ஜெயந்தி பேசும்போது
மேடையில் நடிகைகள் பி.சரோஜாதேவி, ரத்னா, குட்டி பத்மினி ,திரு.நாகிரெட்டி
உறவினர் , திரு.எஸ். வி.ரங்காராவ் உறவினர் , கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் ,திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ),திரு.ஆலங்குடி சோமு மகள் ஆகியோர்.
http://i59.tinypic.com/epk6zr.jpg
திரு. நாகி ரெட்டி உறவினர் பேசும்போது
http://i62.tinypic.com/t972me.jpg
திரு.சக்தி (திரு.பி.வாசு மகன் ) பேசும்போது
http://i61.tinypic.com/35a8wub.jpg
நடிகை ரத்னா பேசும்போது
http://i62.tinypic.com/2v9vl1f.jpg
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி பேசும்போது
http://i60.tinypic.com/5f5349.jpg
கடலூர் நியூ சினிமா அரங்க அதிபர் மகன் பேசும்போது
http://i60.tinypic.com/2zsza5k.jpg
http://i59.tinypic.com/1zgc6ea.jpg
அரங்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
http://i62.tinypic.com/23ux006.jpg
நகைச்சுவை நடிகர் தங்கவேலு மகள் பேசியபோது
http://i62.tinypic.com/33uu9t3.jpg
திரு.சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் ) பேசியபோது
http://i62.tinypic.com/jim69t.jpg
நடிகை ரத்னா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்ட காட்சி.
அருகில் நடிகை பி.சரோஜாதேவி, ஏ.எல்.எஸ். ஜெயந்தி.
திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது.
தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர் 27 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு……… எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
courtesy - thiru chandran - france- dinamalar comments portion
http://i160.photobucket.com/albums/t...psi1is1lqu.jpg
http://dinaethal.epapr.in/463749/Din...2015#page/14/1
For records/saving purposes only. Please do not read small letters.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=25UGtwjuLBc
1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார். 1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது. "ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது." "ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்." " ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது" "ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்." அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.
Courtesy - net
அன்பார்ந்த திரு.ரவி சார் அவர்களுக்கு,
தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும் சார். இன்றுதான் தங்கள் பதிவை பார்த்தேன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கு நன்றி. தங்களுக்கும் உகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். வரவேற்கத்தகுந்த கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.
கிழக்கிந்திய கம்பெனி என்ற வலை மூலம்தான் வெள்ளையர்கள் நமது நாட்டை அடிமைப்படுத்தினர். இப்போதும் அதேபோல பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மூலம் ஏகாதிபத்திய சக்திகள் நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன. நமது நாட்டில் கிடைக்கும் நமது பாரம்பரிய மருத்துவ பொருட்களான வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் கூட அறிவுசார் சொத்துரிமை (patent right) பெற வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம்.
இதுபோன்ற சூழ்நிலையில் நாட்டுப்பற்றையும் சுதந்திர உணர்வையும் ஊட்டும் கட்டபொம்மன் போன்ற படங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும்.
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக இருந்து, பின்னர் மதுரையில் நாயக்க வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியாரால் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட தென்தமிழகத்தில், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கெட்டி பொம்மு நாயக்கரின் (வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வழங்கப்படுபவர், பாண்டிய வம்சத்தை சேர்ந்தவரல்ல) வீர வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினாலும் சீனாவால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, நாம் ஒன்றாக இருந்தால்தான் நமக்குள் கேட்டுப் பெறலாம் என்று கூறி, நாட்டு நலனை மனதில் கொண்டு அந்தக் கோரிக்கையை கைவிட்டார் பேரறிஞர் அண்ணா. அப்போது யுத்த நிதியாக ரூ.75 ஆயிரத்தை தனிப்பட்ட முறையில் அளித்தார் புரட்சித் தலைவர்.(அப்போது ஒரு சவரன் ரூ.100க்கும் கீழே. இதற்கு நன்றி தெரிவித்து ஆசியஜோதி பண்டித நேரு எழுதிய கடிதம் புரட்சித் தலைவர் நினைவு இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது) தேசபக்தியை வலியுறுத்தும் கட்டபொம்மன் படம் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும், ஏழைகளும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 1984ம் ஆண்டில் இப்படம் மறுவெளியீடு கண்டபோது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் வரிவிலக்கு அளித்தார். இந்தப் படம் இன்றைய இளம் தலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முன்பை விட அதற்கான அவசியமும் அதிகம்.
ஒரு பொருளின் மதிப்பு தெரிய வேண்டுமானால், அதன் பின்னால் உள்ள உழைப்பு, சிரமங்கள், அதன் விலை ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். எப்படியெல்லாம் நாட்டுக்காக உழைத்து கஷ்டப்பட்டு,உயிரை விலையாக தியாகம் செய்து சுதந்திரத்தை வாங்கினார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியாததால் அதன் மதிப்பும் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் செல்போனில் தலையை நுழைத்துக் கொண்டு பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் அற்ப காட்சிகளையும் ஜோக்குகளையும் ரசிக்கும் இளைஞர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது.
தமிழகத்துக்கு ரஷ்ய கலாசார குழுவினர் வந்தபோது, புரட்சித் தலைவர் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, நாடோடி மன்னன் திரைப்படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டலாம் என்று அதிகாரிகள் சொன்னபோது, அதை மறுத்து நமது கலையை, கலாசாரத்தை விளக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர்களுக்கு காட்டச் சொன்ன பெருந்தகையாளர் புரட்சித் தலைவர். அவர் இன்றைக்கு இருந்தால் அவர்தான் முதல்வர். 1984-ம் ஆண்டில் கொடுக்கப்பட்டதைப் போல இப்போதும் கட்டபொம்மன் படத்துக்கு நிச்சயம் வரிவிலக்கு அளித்திருப்பார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சில பதிவுகளை இட்டதால் சிறிய உரிமையில் எழுதுவதாக கூறியுள்ளீர்கள். உங்களுக்கு தாராளமாக கருத்துக்களை சொல்ல பெரிய உரிமையே உண்டு சார். அடிக்கடி இதுபோல வந்து அரிய,ஆக்கபூர்வமான, அற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைவர் ஆசியால் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதத்துக்கு மன்னிக்கவும் திரு.ரவிச்சந்திரன் சார்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது நான் ஆறாவது படிக்கும் போது நெல்லை லட்சுமி திரையரங்கில் 7,11,74 அன்று உரிமைக்குரல் படம் வெளியானது படம் பார்க்க என் மாமாவிடம் காசு கேட்பேன் ஒவ்வொரு ஞாயிறும் தண்ணீர் எடுப்பது கடைக்குப் போவது போன்று வீட்டிற்கு தேவையான காரியங்களை என் மாமா சொல்படி செய்து முடிப்பேன் ஆனால் மேட்னி கிளம்பும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி சினிமாவிற்கு அனுப்ப மாட்டார் டவுன் வரை என்னை தனியாக அனுப்ப அவருக்கு பயம் எனக்கோ எம்ஜிஆர் என்றால் உயிர். உடன் படிக்கும் நண்பர்கள் படம் பார்த்து விட்டு சிலாகித்து பேசும் போது அழுகையாக வரும் அடுத்த வாரமும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வேன் மதியம் காசு கேட்டால் அடுத்த வாரம் அனுப்புவதாக சொல்வார் இப்படி ஒரு வாரம் ரெண்டு வாரமல்ல முப்பத்திரண்டு வாரங்கள் ஏமாற்றப் பட்டேன் நெல்லையில் 32 வாரங்கள் ஓடியது 33வது வாரம் படத்தை எடுத்து விட்டார்கள் என்று தெரிந்த போது நான் அழுத அழுகைக்கு அளவேயில்லை நான் நெல்லை சென்ட்ரலில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்த கதையை நாளை சொல்கிறேன்
mgr fan childhood memories shared in fb
Best wishes for the day [ 22/3/2015] Ravichandran Sir.
wish u happy birthday tirupur ravichandran sir
Dhina Ithazh 23/3/15
http://i62.tinypic.com/wcn23c.jpg