மக்கள்திலகம் காவியங்கள் கோவையில் வெற்றி முரசு கொட்டும் "தேடி வந்த மாப்பிள்ளை "- நிலவரத்தை திரு ரவிச்சந்திரன் திருப்பூர் அவர்கள் இங்கு பதிவிடுவதை விரும்பும் அன்பன்...
Printable View
மக்கள்திலகம் காவியங்கள் கோவையில் வெற்றி முரசு கொட்டும் "தேடி வந்த மாப்பிள்ளை "- நிலவரத்தை திரு ரவிச்சந்திரன் திருப்பூர் அவர்கள் இங்கு பதிவிடுவதை விரும்பும் அன்பன்...
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா .
1967 காவல்காரன் - திருவண்ணாமலை -பாலசுப்ரமணியம்
1967 விவசாயி - திருவண்ணாமலை -அன்பு
1968 - ரகசிய போலீஸ் -115 . வேலூர் - அப்சரா
1968 தேர்த்திருவிழா - பெங்களுர் - ஸ்ரீ
1968 குடியிருந்த கோயில் - வேலூர் - ராஜா
1968 கண்ணன் என் காதலன் - வேலூர் - தாஜ் .
1968 புதிய பூமி - திருவண்ணாமலை - அன்பு
1968 கணவன் - பெங்களுர் - ஸ்ரீ
1968 ஒளிவிளக்கு - வேலூர் - லக்ஷ்மி
1969 காதல் வாகனம் - வேலூர் - கிரவுன்
1969 அடிமைப்பெண் - சென்னை -நூர்ஜஹான்
1969 நம்நாடு - திருவண்ணாமலை - மீனாக்ஷி
1970 மாட்டுக்கார் வேலன் - சென்னை - கிருஷ்ணவேணி
1970 என் அண்ணன் - சென்னை - நூர்ஜஹான்
1970 தலைவன் - சென்னை - குளோப்
1970 தேடி வந்த மாப்பிள்ளை - சென்னை -நூர்ஜஹான்
1970 எங்கள் தங்கம் - சென்னை - நூர்ஜஹான்
தொடரும் ...
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா .
1971- குமரி கோட்டம் - சென்னை - குளோப்
1971- ரிக்ஷாக்காரன் - சென்னை - தேவி பாரடைஸ்
1971- நீரும் நெருப்பும் - சென்னை -தேவி பாரடைஸ்
1971- ஒரு தாய் மக்கள் - சென்னை - பிளாசா
1972 - சங்கே முழங்கு - சென்னை - கமலா
1972 - நல்ல நேரம் - சென்னை - ராம்
1972 - ராமன் தேடிய சீதை - வேலூர் - லக்ஷ்மி
1972 - நான் ஏன் பிறந்தேன் - வேலூர் - ராஜா
1972 - அன்னமிட்டகை - வேலூர் - தாஜ்
1972 - இதய வீணை - வேலூர் - தாஜ்
1973 - உலகம் சுற்றும் வாலிபன் - வேலூர் - லக்ஷ்மி
1973 - பட்டிக்காட்டு பொன்னையா - வேலூர் - தாஜ்
1974- நேற்று இன்று நாளை - வேலூர் - லக்ஷ்மி
1974- உரிமைக்குரல் - வேலூர் - தாஜ்
1974- சிரித்து வாழ வேண்டும் - வேலூர் - கிரவுன் .
தொடரும் ...
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா .
1975- நினைத்ததை முடிப்பவன் - வேலூர் - லக்ஷ்மி
1975 நாளை நமதே - வேலூர் - கிருஷ்ணா
1975 இதயக்கனி - வேலூர் - கிருஷ்ணா
1975 பல்லாண்டு வாழ்க - சென்னை - தேவிபாரடைஸ்
1976 நீதிக்கு தலை வணங்கு - பெங்களுர் - கபாலி
1976 உழைக்கும் கரங்கள் - பெங்களுர் -சங்கீத்
1976 ஊருக்கு உழைப்பவன் - சென்னை பைலட்
1977 நவரத்தினம் - சென்னை - ராம்
1977 இன்று போல் என்றும் வாழ்க - சென்னை - தேவி பாரடைஸ்
1977 மீனவ நண்பன் - சென்னை -தேவி பாரடைஸ்
1978 மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - பெங்களுர் - ஸ்ரீபாலாஜி
MAKKAL THILAGATHIN MALARUM NINAIVUGAL - 1981
http://i64.tinypic.com/2rz6omg.jpg
MAKKAL THILAGATHIN MALARUM NINAIVUGAL - 1985
http://i65.tinypic.com/jim91e.jpg
MAKKAL THILAGATHIN MALARUM NINAIVUGAL - 1986
http://i68.tinypic.com/k9vxnq.jpg
குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில், நம் மக்கள் திலகம் அவர்கள் குழந்தைகளுடன் தோன்றும் சில காட்சிகள் :
http://i64.tinypic.com/1zlby9d.jpg
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா .1
http://i65.tinypic.com/ftplvo.jpg
http://i63.tinypic.com/noeqtw.jpg
http://i65.tinypic.com/t0qovr.jpg
மக்கள் திலகத்தின் காவல்காரன் - முதல் நாள் திருவண்ணாமலை ஸ்ரீ பாலசுப்ரமணியம் திரை அரங்கில் பார்த்த அந்த இனிய நாளை [ 7.9.1967 ] மறக்க முடியாது .மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு , இனிய பாடல்கள் , சண்டை காட்சிகள் பார்த்து மகிழ்ந்து , மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக மாறினேன் . பல முறை இந்த படத்தை பார்த்த பின்னர்தான் காவல்காரனில் மக்கள் திலகத்தின் பல் வேறு சாதனைகளை அறிய முடிந்தது .மறக்க முடியாத காவியம் ..
நான் கண்ட மக்கள் திலகத்தின் படங்களின் முதல் நாள் மக்கள் வெள்ளத்தின் திருவிழா .2
1.11.1967
திருவண்ணமலை - அன்பு
http://i66.tinypic.com/208b8m1.jpg
http://i64.tinypic.com/5wdlvq.jpg
மக்கள் திலகத்தின் காவல்காரனை தொடர்ந்து தீபாவளி அன்று வெளியான விவசாயி - அன்பு திரை அரங்கில் நான் கண்டு ரசித்த படம் . மக்கள் திலகத்தின் இளமையான தோற்றம் , புதுமையான சண்டை காட்சிகள் , இனிய பாடல்கள் என்று ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த காவியம் .
http://i67.tinypic.com/33msh1u.jpg
நமது திரி அன்பர் திரு. ஜெய் சங்கர் அவர்கள் முன்னர் பதிவிட்ட பதிவு
இன்று (14-11-15) காலை பொதிகை தொலைக்காட்சியில், நடிகை லதாவின் பேட்டி ஒலிபரப்பாயிற்று. மக்கள் திலகத்துடன் அவர் இணைந்து நடித்த காவியங்களின் படக் காட்சிகள் பற்றி விவரித்து அவரின் பெருமைகளையும், திரைத்துறையில் சகல நுணுக்கங்களையும் தெரிந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக. "சிரித்து வாழ வேண்டும்" காவியத்தில் இடம் பெற்ற, லாரி ஏற்றி குழந்தைகள் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் பொழுது, அவரை நம் பொன்மனச்ம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தர தரவென்று இழுத்து வந்து காண்பிக்கும் காட்சி ஒரே டேக்கில் ஒகே ஆனது என்று நடிகை லதா அவர்கள் கூறிய பொழுது அந்த காட்சியை ஒளி பரப்பினர்.
தம் எங்கு சென்றாலும், நம் புரட்சித்தலைவர் அவர்கள் மேல் .மக்களுக்கு ஒரு CRAZE இருப்பதை உணர்வதாகவும், தனக்கு அவரால் பெரும் பெயரும் புகழும் இன்றும் கிடைத்து வருகிறது என்று பெருமிதத்துடன் நடிகை லதா கூறியது, அவர் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மேல் , நன்றியுணர்ச்சியுடன், மாறாத அன்புடன் இருப்பது புலனாகிறது.
http://i63.tinypic.com/20ksshz.jpg
நடிகை லதா அவர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நினைவு கூர்ந்து இனிய நினைவுகளை நேயர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.
தமிழக முதல்வராய், திராவிட இயக்கத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் 90 வது பிறந்த நாளினையொட்டி அவரது இல்லம் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து மலை அணிவித்து மரியாதை செய்த நம் புரட்சித்தலைவர் அவர்களின் மாண்பினையும், பெருந்தன்மையையும் என்னென்று சொல்வது ?
அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி !
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் ''.
இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின் ''தாயின் மடியில்''
ஊருக்கு உழைப்பவன் - வெளியாகி 39 ஆண்டுகள் நிறைவு ஆனது
வெளியான தேதி : 12/11/1976.
அருமையான தலைப்பு.
பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்தன
1.இதுதான் முதல் ராத்திரி . 2. இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்
3.அழகெனும் ஓவியம் எங்கே . 4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் .
1975ல் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனதால் , மத்திய அரசின் உத்தரவின்படி
வன்முறை காட்சிகள் கூடாது என்கிற வகையில் சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன .மும்பை ஸ்டன்ட் நடிகர் ஷெட்டியுடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மோதும் காட்சிகள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தன. காட்சிகள் வெட்டப்பட்டதால் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சண்டை காட்சிகள் நகைச்சுவையாக எடுக்கப்பட்டதால்
ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் .
முதல் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமை ததும்ப நடித்து இருந்தார்.
இரண்டாவது பாடலில் குழந்தையை தாலாட்டி தூங்க வைக்கும் பாட்டில் நெகிழ வைத்தார்.
மூன்றாவது பாடலில் நிர்மலாவுடன் இளமை துள்ளலோடு காதல் கனிரசத்தை பொழிந்தார்.
நான்காவது பாடலில் தன குழந்தையின் பிறந்த நாள் பாடலில் உணர்சிகரமாகவும் தன் சோக நடிப்பினை மிக அழுத்தமாகவும் , முக பாவங்களில் மாற்றங்களை காண்பித்து ரசிகர்களை உருக வைத்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாகவும், தொழில் அதிபராகவும்
இரு வேடங்களில் அற்புதமாக நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
இரு மனைவிகளிடையே மாட்டிக் கொண்டு தவிப்பது, அதிலிருந்து மீள்வது
வில்லன்களை ஹெலிகாப்டரில் துரத்துவது உள்பட பல சாகச வேலைகள் செய்து நடித்தது நன்றாக இருந்தது.
நகைச்சுவையில் தேங்காய் ஸ்ரீநிவாசன் கலகலப்பு ஏற்படுத்தினார்.
பல கட்டங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உறுதுணையாக
இருந்து கலக்கலாக நடித்தார்.
இந்த பட வெளியீட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் புரட்சி தலைவர் எம்;ஜி.ஆர். அவர்கள் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய 4 அரங்குகளுக்கும் விஜயம் செய்து , முதல் நாளில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
நான் முதல் நாளன்று மூலக்கடை ஓடியன்மணி அரங்கில் காலை காட்சி
பார்த்து ரசித்தேன் . பின்பு மகாராணி, அபிராமி அரங்குகளில் பார்த்து மகிழ்ந்தேன் .
அபிராமியில் 49 நாட்களும், மகாரானியில் 63 நாட்களும் ஓடிய சுமாரான வெற்றிப்படம் .
ஆர். லோகநாதன்.