https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d1&oe=58DC27C7
Printable View
Thanks to 'Divya films' Chokkalingam FB
https://scontent-sit4-1.xx.fbcdn.net...fb&oe=58FA21B9
https://scontent-sit4-1.xx.fbcdn.net...3c&oe=58F3A57B
https://scontent-sit4-1.xx.fbcdn.net...33&oe=58DA81C8
https://scontent-sit4-1.xx.fbcdn.net...58&oe=58F66C78
https://scontent-sit4-1.xx.fbcdn.net...af&oe=58D74B03
https://scontent-sit4-1.xx.fbcdn.net...56&oe=5924ACF9
https://scontent-sit4-1.xx.fbcdn.net...5f&oe=58F6662F
https://scontent-sit4-1.xx.fbcdn.net...b0&oe=58F92007
https://scontent-sit4-1.xx.fbcdn.net...c8&oe=58DF558E
https://scontent-sit4-1.xx.fbcdn.net...b6&oe=58D8A519
ஜெயலலிதா மறைவுக்கு அனுதாபங்கள்.அவருடைய அறிவு,திறமை ,பன்மொழி திறன்,ஆளுமை திறன், இந்தியாவிலேயே வேறு அரசியல்வாதிக்கு இருந்ததில்லை.இருக்க போவதுமில்லை.ஆனால் அவரளவுக்கு அதை வீணடித்தவர்களும் இருந்ததில்லை. இருக்க போவதுமில்லை.தமிழ்நாட்டுக்கு அவர் இன்னும் செய்திருக்கலாம்.
எனது ரோல் மாடல் சோ அவர்களின் மறைவு என்னை பாதிப்புக்குள்ளாக்கியது . மிகவும் வேதனை பட்டேன் . 2005 வரை
என்னை கவர்ந்த பத்திரிகையாளர்,நகைச்சுவையாளர், தர்க்கவியலாளர்,நேர்மையாளர், தொலைநோக்கு சிந்தனையாளர் அவரே. 2005 க்கு பிறகு நான் மிக மிக வெறுத்த அறத்துக்கு புறம்பாக செயல்பட்டவரும் அவரே.
http://i812.photobucket.com/albums/z...psfab2f90c.jpg
வெளி வந்த நாள்: 27.12.1952
மூலக்கதை: என்.வி.பாபு
திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன்.
ஒளிப்பதிவு: மோஹன்ராவ்
தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ்
இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர்.
http://i812.photobucket.com/albums/z...ps9bc8a6fb.jpg
கதை:
ஆடியபாத முதலியார் (தங்கவேலு) ஒரு பணத்தாசை பிடித்த பேய். தன் மகன் உமாபதிக்கு (சிவாஜி கணேசன்) பக்கத்து ஊர் கந்தசாமி (பி.ஆர்.பந்துலு) வைத்தியரின் மகள் ஜீவாவை (பத்மினி) திருமணம் செய்து வைக்கிறார். சீர்செனத்தி தான் எதிர்பாரத்தபடி இல்லையென்று ஜீவாவை பிறந்த வீட்டிற்கே துரத்தியும் விடுகிறார். ஜீவாவை தன்னிடமிருந்து தந்தை பிரித்து விட்டதால் ஜீவா இல்லாமல் வாடுகிறான் உமாபதி.
இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் (டி.கே.ராமச்சந்திரன்) ஜீவா வாழாவெட்டியாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அவளுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுக்கிறான். ஆடியபாத முதலியார் தன் மகன் உமாபதிக்கு ஜமீன்தார் சாம்பசிவம் மகள் கோமதியை (வி.சுசீலா) இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயலுகிறார். இதற்கு தரகர் குருநாதம் பிள்ளை (வி.கே.ராமசாமி) உடந்தையாய் இருக்கிறார். ஆனால் கோமதியோ சுந்தரம் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) என்ற இளைஞனைக் காதலிக்கிறாள். ஜமீன்தாரோ இந்தக் காதலுக்கு உடன்படாமல் ஆடியபாதம் மகன் உமாபதிக்கே கோமதியை நிச்சயமும் செய்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உமாபதி, கோமதி திருமணப் பத்திரிக்கையை ஜீவாவின் அப்பா கந்தசாமிக்கு அனுப்பி வைக்கிறான்.
தன் மருமகன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானே என்று பதறி தன் மகள் ஜீவாவுடன் புறப்பட்டு கல்யாணத்தை தடுத்து நிறுத்த வருகிறார் கந்தசாமி. இதை எதிர்பார்த்த ஈஸ்வரன் தரகர் குருநாதம் பிள்ளையைத் துணைக்கு வைத்துக் கொண்டு தந்திரமாக ஜீவாவைக் கடத்தி, அவளிடமிருந்து அவள் தந்தையைப் பிரித்து, ஒரு மலை பங்களாவில் சிறை வைக்கிறான். அவளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல தொல்லைகள் கொடுக்கிறான்.
அதற்குள் கோமதிக்கும், உமாபதிக்கும் அவரவர்களின் தகப்பனார்கள் சொல்லை மீற இயலாத சூழ்நிலையில் கல்யாணம் வேறு நடந்து விடுகிறது. முதலிரவில் கோமதி உமாபதியிடம் இந்தக் கல்யாணத்தில் தனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையென்றும்,தான் சுந்தரம் என்ற வாலிபனைக் காதலித்ததையும், தன் தந்தை தனக்கு கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டார் என்றும் கூறி அழுகிறாள். இதைக் கேட்டு மனம் உடைந்து போன உமாபதி தனது இரண்டாவது கல்யாணமும் பொய்த்து விட்டதே என்று எண்ணி மனம் உடைந்து வீட்டை விட்டே வெளியேறி விடுகிறான். தற்கொலை முயற்சியும் செய்கிறான்.ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம் உமாபதியைக் காப்பாற்றி விடுகிறான். ஆனால் கோமதியின் காதலன் சுந்தரம்தான் தன்னைக் காப்பாற்றினான் என்று உமாபதிக்குத் தெரியாது.
உமாபதி தன் தவறை எண்ணி திரும்ப முதல் மனைவி ஜீவாவைத் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான்.
மலைப்பங்களாவில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தன் மகள் ஜீவாவைப் பற்றி ஏதும் அறியா நிலையில் துன்புறும் கந்தசாமியைத் தனியே அழைத்து வந்து அவளை தனக்குத் திருமணம் செய்து தருமாறு வற்புறுத்துகிறான் இரக்கமில்லாத இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன். கந்தசாமி அதற்கு மறுக்கவே அவரை சுட்டுக் கொள்கிறான் ஈஸ்வரன்.
ஈஸ்வரனோடு வரும் கான்ஸ்டபிள் ஆளவந்தார் ('கொட்டாபுளி' ஜெயராமன்) ஒரு காமெரா பைத்தியம் .ஈஸ்வரன் கந்தசாமியைக் கொலை செய்வதை தன்னுடைய காமெராவினால் தற்செயலாக எதிர்பாராத விதமாக போட்டோ எடுத்து விடுகிறான். துப்பாக்கி சத்தத்தில் பயந்து போய் காமெராவை அங்கேயே போட்டு விட்டு ஓடி விடுகிறான்.
ஜீவாவை தேடி வரும் உமாபதி அந்த வழியாகப் போகும் போது வழியில் தன் மாமா கந்தசாமி பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். அப்போது அங்கு வரும் சுந்தரம் உமாபதிதான் கந்தசாமியைக் கொன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்து உமாபதியை விவரமறியாமல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனிடமே ஒப்படைத்து விடுகிறான். விசாரணை நடைபெறுகிறது
உமாபதியைத் தேடி வரும் அவன் வீட்டு வேலையாட்கள் (என்.எஸ். கிருஷ்ணன்) அங்கே கிடக்கும் காமெராவை எடுத்துக் கொண்டு போய் பிலிமை எடுத்து டெவெலப் செய்து பார்க்கிறார்கள். அதில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கந்தசாமியைக் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது பதிவாகி இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு வேலையாட்கள் கோர்ட்டுக்கு ஓடி உமாபதி கொலை செய்யவில்லை என்று அந்த ஆதாரத்தைக் காண்பிக்க, உமாபதி குற்றவாளி அல்ல என்று கோர்ட் அவனை விடுதலை செய்கிறது.
இதற்கிடையில் தன் தவறை உணர்ந்த ஈஸ்வரன் கோர்ட்டிலிருந்து தப்பித்து மலைபங்களாவுக்குச் சென்று ஜீவாவிடம் மன்னிப்புக் கேட்டு அங்கேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுகிறான். இவ்வளவு பிரச்னைகளுக்கு தன் பணத்தாசைதான் காரணம் என்று ஆடியபாத முதலியார் திருந்துகிறார். ஜீவா உமாபதி ஜோடியும், கோமதி சுந்தரம் ஜோடியும் மறுபடியும் கூடி மகிழ்ச்சியோடு வாழத் துவங்குகிறார்கள்.
சுபம்.
http://i812.photobucket.com/albums/z...ps686b4ca6.jpg
நடிகர் திலகம் மற்றும் இதர கலைஞர்கள்
http://anonymouse.org/cgi-bin/anon-w...355/Panam1.jpg
நடிகர் திலகத்தின் இரண்டாவது படம். முதல் படம் போல அவ்வளவு ஸ்கோப் இல்லையென்றாலும் நடிப்பில் குறையில்லை. மனைவி ஜீவாவின் மேல் காதல், அன்பு கொள்ளும் போது இளமை ரசம் சொட்டுகிறது. தந்தையின் பேராசை குணத்தை அவ்வப்போது தட்டிக் கேட்கும் போது உள்ளுக்குள் இருக்கும் சிங்கம் எட்டிப் பார்க்கிறது. தந்தையா அல்லது தாரமா என்று அடிக்கடி குழம்பித் தவிக்கும் போது பரிதாப ஓட்டுக்களை அள்ளுவார். தந்தை தங்கவேலுவிடம் இறுதியில் பணம் என்ற பேயைப் பற்றி கொடுக்கும் விரிவுரை சீற்றம். தன் மனைவிக்கு நாம் தெரியாமல் துரோகம் இழைத்து விட்டோமோ என்று தனிமையில் துன்பப்படும் போது பண்பட்ட நடிப்பு.
பத்மினிக்கு வரதட்சணைக் கொடுமையால் சித்ரவதை அனுபவிக்கும் பாத்திரம். அழுது வடிய நிறைய சான்ஸ். இன்ஸ்பெக்டர் டி.கே.ராமச்சந்திரன் காம வெறியில் தன்னை நெருங்கும் போதெல்லாம் அங்கமெல்லாம் பதற நடிப்பது அருமை. அப்பாவின் பேச்சை தலையாட்டி பொம்மை போல கேட்டு தன் வாழ்வை வீணடித்த கையாலாகாத தன் கணவனின் குணத்தை இறுதியில் சாடுவது அருமை.
பணத்தாசை பிடித்த ஆடியபாதம் ரோலை தங்கவேலு அப்படியே நம் கண் முன்னே பிரதிபலித்து பார்ப்போர் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கிறார். (சின்ன வயசில் வயதான பாத்திரம்). இன்ஸ்பெக்டராக வரும் ராமச்சந்திரனும் வில்லன் வேலையை கன கச்சிதமாக செய்கிறார். அவர் கண்களாலேயே தன்னுடைய காம வெறியை உணர்த்தி பத்மினியை நெருங்கும் போதெலாம் பத்மினிக்கு மட்டுமல்ல...நமக்கும் 'திக் திக்' என்று இருக்கிறது.
மற்றும் வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கொட்டாப்புளி ஜெயராமன், பி.ஆர்.பந்துலு, வி.சுசீலா ஆகியோரும் சிறப்பாக தத்தம் பங்கைத் தந்திருக்கிறார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நகைச்சுவைக் காட்சிகளை செவ்வனே செய்து கலகலப்பூட்டுகிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் "எங்கே தேடுவேன்...பணத்தை எங்கே தேடுவேன்" ஜனரஞ்சகப் பாடல் படு பிரசித்தம். அருமையான, எந்நாளுக்கும் பொருந்தக் கூடிய கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல்.
குடும்பப் பெண்களின் கடமைகள் என்ன என்பதை 'குடும்பத்தின் விளக்கு' பாடல் அருமையாக விளக்குகிறது. (இப்போதைய இளம் பெண்கள் இப்பாடலின் கருத்துக்களின்படி அவர்களை நடக்கச் சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள்)
பராசக்திக்குப் பிறகு கருணாநிதி சிவாஜி கூட்டணி இதிலும் தொடர்ந்தது. வசனங்கள் மிகக் கூர்மை. ஆனால் பராசக்தி பட்டை கிளப்பியதில் பாதி அளவு கூட இல்லை என்பதும் உண்மை. கதை அப்படி.
என்.எஸ்.கிருஷ்ணனும், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் திரு ஏ.எல்.சீனிவாசனும் சேர்ந்து தயாரித்த படம் இது. என்.எஸ்.கிருஷ்ணனே இப்படத்தை இயக்கியும் இருந்தார். அப்போதே சமூகத்தில் நிலவிய வரதட்சணைக் கொடுமைகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தோலுரித்துக் காட்டியிருந்தார் அவர். இந்தப் படமும் ஓரளவிற்கு நன்றாகவே ஓடியது. அதே போல 'திருமணம் செய்து கொண்டாலும் தன் காதலனோடுதான் சேருவேன் உன்னுடன் இணைய மாட்டேன்' என்று சொல்லும் புரட்சிப் பெண்ணாக கோமதி பாத்திரத்தை வடிவமைத்து இருந்தார் கிருஷ்ணன்.
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த முதல் படம் இது என்பார்கள். அதில் ஒரு சிறு சர்ச்சை உண்டு. எம்ஜியார் அவர்கள் நடித்த 'ஜெனோவா' படம்தான் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த முதல் படம் என்பாரும் உண்டு.
'பராசக்தி' புரட்சிக் கருத்துக்களில் கொடி நாட்டிய படம். ஆனால் 'பணம்' சீர்திருத்தக் கருத்துக்களோடு சீர்வரிசைக் கொடுமைகளை சாடுகிறது.
சிறப்பு தகவல்கள்.
1. சிவாஜி பத்மினி இணைந்த முதல் படம் இது.
2. சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன் இணைந்த முதல் படம் இது.
3. கலைஞர் கருணாநிதி சிவாஜிக்கு வசனம் எழுதிய இரண்டாவது படம்.
4. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த முதல் படம்.
5. சிவாஜியை வைத்து என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய ஒரே படம்.
6. என்.எஸ். கிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழக புகழைப் பரப்பும் வகையில் 'தினா முனா கனா' என்ற பாடலைப் பாட, அதற்கு அப்போதைய சென்சார் போர்டு தடை விதிக்க, அதை மிக சாமர்த்தியமாக 'திருக்குறள் முன்னணி கழகம்' என மாற்றி விட்டார்கள். (என்ன ஒரு சாமர்த்தியம்)
சரி! நம் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?
'பணம்' எனக்கு நிறைய பணம் கொடுத்தது.
சிறிது இடைவெளிக்குப் பின் வரும் 'கோபக்காரர்' கோபால் அவர்களே வருக! வருக! (ஐஸ்!)
வாசு சார்
அமர்க்களம்.
பணம் படத்தின் தகவலாகட்டும், ராஜா தெய்வமகன் மறு வெளியீட்டு நிழற்படங்களாகட்டும். அசத்தல்.
நன்றி
வாசு,
உனது எழுத்து திறனால் பல விஷயங்கள் பரிமளிக்கின்றன. ஆனால் ஒன்று. Word Smithy என படும் வார்த்தை விளையாட்டுக்களால் தூக்கி பிடிக்க பட்டாலும் பல சராசரி படங்களை தூக்கி நிறுத்துவதால் பலனில்லை.
நான் வெற்றி பெற்ற ,புகழ் பெற்ற படங்களை மட்டும் குறிக்கவில்லை.
சிறந்த படங்கள் ,மற்றும் நடிப்பின் சிறப்பில் மின்னும் படங்கள். இன்னும் இளைய தலைமுறைக்கு சுவாரஸ்யம்,அதிசயம் ஏற்படுத்தும் படங்கள்.
உதாரணம்- அந்தநாள், ராஜாராணி,காத்தவராயன்,எல்லாம் உனக்காக, குலமகள் ராதை ,செல்வம் இன்னும் பல.
ஆனால் பணம்,அன்பு போன்ற படங்கள் படுத்தல்.
அன்பளிப்பு.- 1969.-01/01/1969- Happy New Year Friends.
வரும் புத்தாண்டில் 47 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.
முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.
பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.
ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.
நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)
பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.
விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.
படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)
எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.
நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?
வாசு,
ஒரு திருத்தம்.. ஜெனோவா விஸ்வநாதன் இசையமைத்த முதல் படம்.(தனியாக). பணம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர் இணைந்து இசையமைத்த முதல் படம்.
ஆதிராம்,
உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. பொய்யிலே பிறந்து ,பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே மறைந்து , சரித்திரத்தை இஷ்டப்படி திரிப்போர் மத்தியில் ,நம்மால் ஏற்கவே முடியாத, விரும்பவும் விரும்பாத ஒருவரை சம்பந்த படுத்தி, சிறிதே உண்மைக்கு மாறான செய்தி வந்தாலும் , உண்மையை சொல்லும் பண்பு, இறுதிமூச்சு வரை நேர்மையை கடைபிடித்த கலை தெய்வத்தின் ரசிகர்களின் உயரிய மாண்பின் சிறந்த எடுத்துக்காட்டு. நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.
என் வரிசையில் மூன்றாவது சிறந்த இணை (வாணிஸ்ரீ,பத்மினி அடுத்து) என்று மதிப்பிட பட்டாலும் ,தேவிகா அண்ணி ஸ்பெஷல் தான் போலும். 1965 இல் வந்த அனைத்து நடிகர்திலகம் படங்களிலும் இடம் பிடித்துள்ளாரே?
பழனி, அன்புக்கரங்கள்,சாந்தி, திருவிளையாடல்,நீலவானம் என்று?
இதை போல ஜெயலலிதா நடிகர்திலகத்தின் அடுத்த நிலையில் இருந்த மாற்று முகாம் நடிகருடன் 1968இல்,1969 இல் செய்ததாக ஞாபகம்.1968இல் எட்டு படங்கள். 1969 இல் இரண்டு. (சொந்த படம் வந்தால் ஒன்றோ இரண்டோ படங்கள்தான் அந்த வருடம் வரும் படி திட்டமாயிற்றே,1958,1969,1973 மூன்று முறையும் )
நடிகர்திலகம், அஞ்சல் பெட்டி 520 இல் கோடு போட்ட மேலங்கியில் எவ்வளோ அழகு,இளமை,ஜொலிப்பு, உற்சாகம்.
திராவிட மன்மதனப்பா?
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4c&oe=58F369A0
( சிவாஜி பேரவை முகநூல்)
Wishing Everyone And Their Families A Very
Happy,
Healthy,
Wealthy And
Prosperous New Year 2017!
Regards
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
செந்தில்வேல்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...b3&oe=58E26E32அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இவ்வாண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்
சவால்களை சமாளித்த 'மாணிக்க'மாய் ஒளி விட அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/...01755209_2.jpg
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 158 – சுதாங்கன்.
ஆறுமுகன் ஆனால் என்ன? ஆயிரம் முகம் படைத்தவன் ஆனால் என்ன ? இந்த சூரனை வெல்ல எவனும் பிறக்கவுமில்லை! இனி பிறக்கப் போவதுமில்லை!
`உன்னை வெல்லவோ, கொல்லவோ குமரன் தேவையில்லை. நானே என் சொல்லினால் குத்திவிடுவேன். ஆனால் அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என மன்னித்தேன் போ!’
`நீயா? என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும் ?’
`என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் உன் குடலை! அனுப்புவேன் சுடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உம்மைத் தொடலை!’
இப்போது சூரபத்மனின் மைந்தன் எழுந்திருப்பான். இந்த வேடத்தை நடிகர் பாலாஜி செய்திருப்பார்.
`வீரபாகு, எங்கு வந்திருக்கிறாய்? எங்கிருந்து எதிர்வாதம் செய்கிறாய் என்பது தெரிகிறதா உனக்கு, அதை நினைவில் வைத்து பேசு!’
`புரிகிறது! நான் இருப்பது வீரமகேந்திரபுரி! உங்களுக்கு ஏன் இந்த கோபவெறி? அமரர்களைக் கொண்டு போய் ஐயன் பாதத்தில் சேர்ப்பதே நல்ல நெறி! இல்லையேல் உங்கள் நாட்டையே பொசுக்கிவிடும் கந்தனின் தீப்பொறி!
`அற்பனே! உயிரோடு இருக்க வேண்டுமானால் முதலில் மறுமொழி பேசாமல் நீ ஓடிவிடு!’
`ஓடப்போவது நானல்ல! நன்மையை நாடப்போவது நீயுமல்ல ! முடிவாக முருகன் தூதனுப்பிய விவரத்தை சொல்கிறேன் கேள்! அடைத்து வைத்து கொடுமை செய்யும் அமரர்களை விடுதலை செய்து, ஆறுமுகன் பாதத்திலே விழுந்து ஆறுதல் அடை! இல்லை இந்த நாட்டுக்கு நீ தலைவனில்லை! இனி உனக்கு தலைமுறையுமில்லை! உன் தலையும் இல்லை!’
`மதிகெட்டவனே! என் பலமறியாது பிதற்றுகிறாய்! ஒருவனாக வந்திருப்பதனால் நீ உயிர் தப்பினாய்! போய் உன் தலைவனிடம் சொல்! இந்த ஊருக்குள் வந்து போருக்கு வந்தது தவறு என்று உன் முருகனை என் காலில் விழச்சொல்! வேண்டுமென்றால் யாருக்கும் தெரியாமல் மன்னிப்பு அளிக்கிறேன்.
`சூரனே! என்னே உனது தலைகனம்! வேண்டாம் இந்த அற்ப குணம்! நன்மையை நாடுவதே நல்ல இனம்! இதுவே தருணம்! ஐயன் பாதத்தை அடைந்துவிடு சரணம்! இல்லையேல் நாளை நிச்சயம் உனக்கு மரணம்! மரணம்! மரணம்!’
‘சரணமும், மரணமும் சூரனுக்கில்லை! என்று உன் சரவணனுக்குத்தான் என்று சொல் போ!’
‘அறிவில் நல்லவனாகி, நியாயத்தை நஞ்சாக்கி, நீதியை காற்றில் பறக்கவிட்ட சூரனே! நீயும் உன் பரம்பரையும் வேலவனின் வேலுக்கு இரை! அதுதான் முறை! இதுவே என் முடிவுரை! வருகிறேன்!’
`என்ன சொன்னாய்?’ இப்போது சூரபத்மன் தன் உடைவாளை உருவுவான்!
சற்று தள்ளி இருந்த வீரபாகு, இப்போது சூரபத்மனின் அருகில் வருவான், `கொல்லு! தூதாக வந்த என்னை கொல்வது உனக்கு பாவம்! அதை விட தூதாக வந்த நான், உன்னை கொல்வது எனக்கு பாவம்! களத்திலே சந்திப்போம்! வரட்டுமா?’
‘சிறுவனே! செத்து மடியாமல் வந்த வழியே சென்றுவிடு!’
வீரபாகு கர்ஜனையோடு ஒரு மந்தகாச சிரிப்பு சிரித்தபடி, அங்கே சூரன் சபையிலேயே விஸ்வரூபம் எடுப்பான்! ` சூரபத்மா! என்னை சிறுவன் என்று அழைத்தாய்! இப்போது என் கண்களுக்கு நீதான் சிறுவனாக தென்படுகிறாய்! சிறுமதி படைத்தவனே! கட்டை அவிழ்த்துவிட்டு உன்னை கந்தன் பேயென்று முடிவு கட்டி! ஆடி ஆடி நீ உச்சக்கட்டத்திற்கு வந்ததும் அடக்கிவிடுவான், நீயும் அடங்கிவிடுவாய்! ஒடுக்கிய பின் ஓய்ந்துவிடும். அதற்குப்பின் காலம் மாறும், தர்மம் அன்று வெல்லும் இது என் கந்தன் வேலின் மீது ஆணை! இது நான் சொல்லும். வார்த்தை என்று எண்ண வேண்டாம், கரையற்ற தெய்வத்தின் வார்த்தை! இதை சாதித்து காட்டப்போகிறாள் அன்னை பராசக்திதேவி!’ சொல்லிவிட்டு மறைந்து விடுவான் வீரபாகு!
வீரபாகுவான சிவாஜிக்கும், சூரபத்மனான அசோகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தின்போது தியேட்டரில் விசில் பறக்கும், கரகோஷம் கொட்டகையை அதிரச் செய்யும்!
இந்த காட்சிக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்த ரசிகர்கள் உண்டு!
பிறகு போர் நடக்கும்! போரில் முருகன் வெல்வான்! அமரர்களை விடுவித்ததற்கு பரிசாக இந்திரன் மகளான தெய்வயானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார்கள்.
அங்கேதான் ஏ.பி.நாகராஜன் சிவாஜி மூலமாக ஒரு பெண் வீட்டார் செய்ய வேண்டிய சீதனங்களை வரிசைப்படுத்தி அசத்தியிருப்பார்! போர் முடிந்தது! ‘அமரர்களை விடுவித்த ஆறுமுகப் பெருமான் வாழ்க’ என்று கோஷமிட்டு முருகனின் தலையில் கீரிடத்தை சூட்டுவான் வீரபாகு!
`சூரனை வதைத்து, அசுரர்களை அழித்து, இழந்த இந்திரப்பதவியை மீட்டுத் தந்த பெருமை எமது முருகவேலுக்கே உரியது! அமர உலகத் தலைவனே! வந்த வேலை தீர்ந்தது! இனி எந்த வேளையும் கந்தவேலையே நினைந்து வழிபடுங்கள்! நன்றி மறவாதீர்கள்!’
இப்போது இந்திரன் சொல்வான், `வினை தீர்த்த வேலவனை பாராட்ட வார்த்தைகளே இல்லை!’
இப்போது இந்திராணி ` ஆமாம்! தேவர் குலப்பெண்கள் அனைவரும் ஆறுமுகப் பெருமானுக்கு கடன்பட்டிருக்கிறோம்’ என்பாள்.
`நல்லது!’ என்றபடி வீரபாகு சிறிது தூரம் நடந்தபின் சற்று நின்று, `ஜெயந்தா! உங்களிடம் சொன்னபடி நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால் எங்களிடம் சொன்னபடி நீங்கள் நடந்து கொள்ளவில்லையே!’
`என்ன! வீரபாகு?’
`சொன்னது நினைவில்லையோ? அசுரர் சிறையிலே அடைபட்டுக்கிடந்த போது, அமரர் வாழ்வை மீட்டுத்தந்தால் ஆறுமுகனுக்கு பரிசு ஒன்று அளிப்பதாக சொன்னீர்களே? அது…….!’
`நன்றாக நினைவிருக்கிறது. நாங்களும் காத்திருக்கிறோம்!’
` பிறகு பெண்ணைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே?’
இப்போது இந்திராணி பேசுவாள் `வீரபாகு, உரிமையோடு பெண்ணைக் கொடுக்க ஒவ்வொரு கனமும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உறவுமுறையில் பிள்ளையைப் பெற்றவர்கள், பெண் வீடு தேடிவந்து திருமண பேச்சை நடத்துவதுதானே முறை!
`ஓ! அதுவும் அப்படியோ?’
மேல் நோக்கி கைகூப்பியபடி வீரபாகு, ` இறைவா’ என்பான்!
சிவனும் பார்வதியும் அங்கே தோன்றுவார்கள்.
`இந்திராணி கூறியது உண்மைதான் வீரபாகு! சடங்கு, சம்பிரதாயத்தை உருவாக்கிய நாமே அதை மறப்பதும் சரியல்ல! அதன்படி நடக்காமல் இருப்பதும் முறையல்ல! தேவி! திருமணப் பேச்சை நீயே தொடங்கலாம்’ – இப்படி சொல்வார் சிவபெருமானாக நடிக்கும் ஜெமினி கணேசன்! பார்வதியான சாவித்திரி துவங்குவார், `இந்திராணி! தேவேந்திரா! உங்கள் மகள் தெய்வயானையை, எங்கள் முருகனுக்கு பெண் கொடுக்க சம்மதம்தானே?’
(தொடரும்)