http://i65.tinypic.com/116ncie.jpg
http://i63.tinypic.com/2196iz7.jpg
http://i66.tinypic.com/2gws877.jpg
Printable View
https://i.postimg.cc/5tVGWS81/597db5...8b1e9b5d8f.jpg
Coimbatore Delite theatre
புரட்சித் தலைவரின்
புகழ் பாடும் பக்தர்களே
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே
நெஞ்சமுண்டு
நேர்மையுண்டு
ஒடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
வாழும் காலத்தில்
நல்லவனாக
ஒழுக்கமுள்ள
நல்ல பண்பாளராய்
மனிதநேயம் மிக்கவராய்
வாழ்ந்தால்
உலகம் உள்ளவரை
புகழ் நிலைத்திருக்கும்
மக்கள் மனதில்
என்பதற்க்கு
சமகால சரித்திர
சாதனை
அவதார நாயகன்
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்
ஒழுக்கத்துக்கு ஒரு நடிகர்
எம்.ஜி. ஆருக்கு இருக்கிற எதிர்ப்பு, இந்த நாட்டில் இன்று வேறு எந்த நடிகருக்குக்மில்லை. எம். ஜி. ஆரை இன்று பல படாதிபதிகள் எதிர்க்கிறார்கள். பல நடிகர்கள் எதிர்க்கிறார்கள். பல ஸ்டுடியோ ஓனர்கள் எதிர்க்கிறார்கள். பல டிஸ்டிரிபியூட்டர்கள் எதிர்க்கிறார்கள். பல கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். பல பத்திரிகை ஆசிரியர் எதிர்க்கிறார்கள். இவ்வளவு எதிர்ப்புக்களையும் எம். ஜி. ஆர். தாங்கி கொண்டிருப்பதர்கு இரண்டே இரண்டு காரணங்களே உள்ளன.
ஒன்று ஒழுக்கம், மற்றொன்று மகத்தான மக்கள் சக்தி.
ஒழுக்கம்
எம். ஜி. ஆரை போன்று ஒழுக்கமுள்ள ஒரு நாயக நடிகன் இன்று நாட்டில் இல்லை, ஒழுக்கமுள்ள நடிகர்கள் (நாயக நடிகர்கள் என்று குறிப்பிட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) சிலர் இருந்தாலும், ஒழுக்கத்தில் தலை சிறந்த நடிகர் யார் என்றால் அது எம். ஜி. ஆர். தான்.
எம். ஜி. ஆர். புகை பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. புகையிலை போடுவதில்லை. காப்பி, டீ குடிப்பதில்லை.
தண்ணீர் கொடுத்தால் தூக்கித் தான் சாப்பிடுவார். காரி உமிழ்வதில்லை. நகத்தை கடிக்க மாட்டார்.
இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனாலும் சரி, பட் ஆனாலும் சரி. இவரைப் பொறுத்த அளவில் இவர்
ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருவார்.
மக்கள் சக்தி.
மதிப்பிற்குரிய மக்கள் சக்தியை எம். ஜி. ஆர். பெற்ற அளவுக்கு இன்னும் வேறு எந்த நடிகரும் பெற வில்லை. அதனால் தான் இவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் எம். ஜி. ஆருக்கென்று ஒரு குறிப்பிட்ட கலக்க்ஷென் இருப்பதற்கு இந்த மக்கள் சக்திதான் காரணம். இன்றுள்ள எம். ஜி. ஆர். பிரியர்கள் ஒவ்வொருவரும் எம். ஜி. ஆருக்கு 1 ரூபா மணியார்டர் செய்தால் எம். ஜி. ஆர். கோடீஸ்வரர் ஆகி விடுவார்.
தமிழ்வாணன் சொல்ல மறந்தது : ஒரு மனிதன் வேகமாக வளர்ந்து வரும் போது, அவரது
வளர்ச்சியில் பொறாமை கொண்டு அவருக்கு பல் வேறு முனைகளிலிருந்தும், திசைகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் எதிர்ப்புக்கள் வருவது சகஜம் தான. இருந்தாலும் அத்தனை சோதனைகளையும், எதிர்ப்புக்களையும் வென்று சாதனைகளை
படைத்தவர் எம். ஜி. ஆர். ஒருவரே !
நேர்மையாக
ஒழுக்கமாக
நல்லவனாக வாழுங்கள்
நாம் நேசிக்கும்
நம் தலைவருக்கு செலுத்தும்
நன்றி நன்றி இதுவே... Thanks Friends...
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்..தமிழனா ?
" மானங்கெட்ட மலையாளியே வெளியே போ " என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார்.
அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும்.
இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...). Thanks Friends...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (23/9/18) மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன. அது பற்றிய சுவரொட்டி, மற்றும் விளம்பரம்
நண்பர்களின் பார்வைக்கு
http://i65.tinypic.com/wwfzw2.jpg
மக்கள் குரல் -23/9/18
http://i63.tinypic.com/dxg5f8.jpg
http://i66.tinypic.com/5ma89e.jpg