Quote:
மன்னன் அழகேசன் சந்தர்ப்பக் கோளாறு காரணமாக பல இடங்களில் பெண்மையின் குறைபாடுகளைக் காட்டும் பல நிகழ்ச்சிகளைக் காணுகிறான். இவைகளினால் பெண் வர்க்கத்தையே வெறுத்துத் துறவறம் பூண்டு விடுகிறான். ஆனாலும் அவன் வசிப்பது அரண்மனையில் தான்.
ஏறக்குறைய அல்லி ராணியைப் போல் ஆண் வாடையே கூடாதென்ற கருத்துடன் அரசாண்டு வருகிறாள் ராணி லலிதாங்கி. மாறுபட்ட இரு துருவங்களுக்கும் பாசமும் பிணைப்பும் ஏற்படுவது தானே இயற்கை. அதற்கேற்ப மன்னன் அழகேசனைப் பார்த்த அவள் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.
அவள் அவனை நெருங்க நெருங்க அவன் அவளை விட்டு விலகி விலகிப் போகிறான். அவனை அடைவதற்காக அவள் படாத பாடு படுகிறாள். பல சாகஸங்கள் செய்கிறாள். கடைசியில் இருவருக்கும் ஒரு போட்டி ஏற்படுகிறது. தனது ஆடல் பாடல்களினால் அழகேசனை மயக்கி மணந்து விடுகிறாள் ராணி லலிதாங்கி.