Really superb performance of Nadigar Thilagam in Devar Magan penned and produced by Kamal Haasan.
Printable View
Nadigar Thilagam films in TV channels this week
CHANNEL DATE TIME MOVIE
J MOVIES
28.06.2013 6 AM KALYANAM PANNIYUM BRAMACHARI
JAYA TV
29.06.2013 10 AM ANNAI ILLAM
28.06.2013 8.30 PM GNANA OLI
KALAIGNAR TV
27.06.2013 1.30 PM DEIVA PIRAVI (?)
MEGA 24
26.06.2013 6.30 PM THIYAGAM
27.06.2013 6.30 PM THEERPPU
28.06.2013 6.30 PM NEEDHIYIN NIZHAL
MEGA TV
27.06.2013 12 NOON VAZHKKAI
29.06.2013 12 NOON NALLATHORU KUTUMBAM
MURASU TV 29.06.2013 7.30 PM SANTHIPPU
RAJ TV
25.06.2013 1.30 PM NAN VAZHA VAIPEN
27.06.2013 1.30 PM RAJA RAJA SOZHAN
ZEE TV 25.06.2013 2 PM MARUMAGAL
கார்த்திக் சார், முரளி சார்,
மாஞ்சு மாஞ்சு எழுதி கொண்டிருக்கும் நடிப்பு பள்ளி திரியில் உங்கள் பங்களிப்பும் சேரலாமே?
எனக்கும் கொஞ்சம் கூடுதல் உத்வேகம் பிறக்கும். ரொம்ப மெனக்கெட வேண்டிய பணி .நம் தேர்ந்த ரசிகர்களே பாராமுகமாக இருப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமே. எழுதுவதிலிருந்து உங்கள் புரிதல், கூடுதல் பங்களிப்பு,ஆலோசனை இருந்தால் பாதையை எனக்கு தெளிவாக்குமே?
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5)
அன்பு' நிறைந்தவரின் அழகான ஆடைகள்.
நன்றி பம்மலார் சார்
http://www.freewebs.com/pammalar/Anbu1.jpg
இணையத்தில் இதுவரை வெளிவராத ஸ்டில்கள்
'அன்பு' திரைப்படத்திலும் அழகருக்கு ஆடைகளுக்கு குறைவில்லை. இந்தப் படத்திலும் நிறைய ஆடைகள். ஆடைகளின் மெருகு மேலும் கூடியிருப்பது புலனாகிறது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக நடிக்கப்பட்ட ஓரங்க நாடகக் காட்சி 'ஒதெல்லோ'. இந்த நாடகத்தில் தலைவர் 'ஒதெல்லோ'வாக அணிந்திருக்கும் ஆடை பின்னி எடுக்கிறது. அதற்காக அவருடைய மெனக்கெடலும், ஆடை வடிவமைப்பாளரின் பங்கும் போற்றுதலுக்குரியது
'பராசக்தி' யின் அறிமுகக் காட்சி 'அன்பி'லே தொடர்கிறது. அழகான striped நைட் டிரெஸ் உடன் கூடிய காலை வணக்கம்
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-45.jpg
இன்னிங் செய்யப்பட்ட மெல்லிய பெரிய கட்டங்களுடன் பரிமளிக்கும் chek ஷர்ட்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/16-3.jpg
அழகு மிளிரும் striped shirt.
http://images.bergdorfgoodman.com/ca...BGN1M2H_mx.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/15-4.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/12-5.jpg
இதுவும் check shirt தான். ஆனால் pant இன் வடிவமைப்பு அசத்துகிறது. சும்மா நச்சென்று காலேஜ் ஸ்டூடென்ட் போல தலைவர் அவ்வளவு இளமையாக ஜம்மென்று இருக்கிறார்
http://i1087.photobucket.com/albums/...%20-2/14-5.jpg
https://encrypted-tbn1.gstatic.com/i...HOL0SBu0_bwbZm
இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். தங்களையும் நடிகர் திலகத்தையும் பிரித்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் அவர் இருப்பார். அவர் இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் இருவரும் இருக்கும் இடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார் எங்களுடன் மெல்லிசை மன்னர். அவருக்கும் இன்று பிறந்த நாளாயிற்றே.
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5) தொடர்கிறது....
ஆஹா! ஆஹா! என்ன ஒரு ஸ்டைல்! இந்த ஸ்டில்லை எடுத்து வேறு ஸ்டில்லை எடுக்கவே எனக்கு மனம் வரவில்லை. எனக்கு மிக மிக பிடித்த போஸ். White shirt வெளியே தெரிய black & black இல் அதத்தல் கோட் சூட்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/13-5.jpg
இதைக் காணும் போது 'என்ன என்ன இன்பமே'(மோ)ஏற்படவில்லை?
http://i1087.photobucket.com/albums/...%20-2/11-5.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/10-7.jpg
இந்த அம்சமான டிசைனை பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/9-7.jpg
'ஒதெல்லோ' கலக்கல் டிரஸ்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/8-8.jpg
சற்று குளோசப்பில்
http://i1087.photobucket.com/albums/...%20-2/7-13.jpg
இந்த சிம்பிளான ஜிப்பாவில் என்ன ஒரு classic look!
http://i1087.photobucket.com/albums/...%20-2/6-15.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/5-15.jpg
Full hand white shirt இல் கைகளைக் கட்டியபடி மெல்லிய சோகம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-44.jpg
எல்லோரையும் மயக்கிய மங்கை என்று நடிகர்திலகத்தால் புகழ பட்ட தங்கை என்ற pathbreaking சிவாஜி anti -sentiment படத்தை 1967 (கடலூர்),1971(சொரத்தூர் ஜோதி) யில் பார்த்த பிறகு மறுமுறை நேற்று பார்த்தேன்.
என்னை ஆச்சர்ய படுத்தியது .Hats off sivaji &Thirulokchandar . formatting &execution அருமை.
ஆனால் u tube இல் மசமசவென்று உள்ளது. நல்ல DVD எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை.பழைய இருவர் உள்ளம் நிலையிலே இன்று இப்படம்.
இப்படம் ஒரு மூன்று வெவ்வேறு புள்ளிகளில் நகரும். ஆனால் இணைப்பிலே ஒரு logic ,nerrative surprise என்ற ஒரு professional perfection கொண்ட திரைக்கதை.
சிவாஜி- அவர் துயர் மிகுந்த இளமை பருவம் -தங்கை- அவர் பிரச்சினை.
அழகான முக்கோண குறுக்கீடுகளாய் நல்லெண்ணம் கொண்ட குடும்ப காப்பாள டாக்டரம்மா கே.ஆர்.விஜயா ,தோழமையுடன் கூடிய சம நிலை well wisher காஞ்சனா, ஊசலாடும் சிவாஜி அருமையாய் வந்திருக்கும்.
சூதாட்டம், அது சார்ந்த சில குழப்பங்கள் ,திருப்பங்கள், நல்லெண்ண போலீஸ் பாலாஜி என்ற action ,பொழுதுபோக்கு சார்ந்த இன்னொரு track .
ஆனால் அனைத்தையும் வழி நடத்துவது protogonist சிவாஜியின் எண்ணங்கள்,தேவைகள், குழப்பமான ethics ஆகியவை.
நடிகர் திலகம் இந்த படத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்த வசீகர பாங்கு சொல்லி மாளாது.
restraint மிகுந்த extravert பாத்திரம். மிக துயரங்களுக்கு ஆட்பட்ட, சிறையில் ஆங்கிலம் உட்பட எல்லா அறிவும் பெற்றும், சமூக அங்கீகாரம் இன்றி வறுமையில் உழன்று சூதாடினாலும் போதுமென்ற மனமும், தேவைகளின் பாற்பட்டு சூதாட்ட பிடியில் சிக்கி அதுவே தொழில்,ஆசை, பொழுது போக்கு என்ற addiction நிலைக்கு தள்ள படுவது , எந்த வித inhibition இல்லாத தன் நிலையை புரிந்த தாழ்வு மனப்பான்மை இல்லாத extravert .
என்ன ஒரு execution ,style ,perfection . திரைக் கதையின் மூன்று புள்ளிகளிலும் பாத்திரத்தை நூல் கோர்க்கும் துல்லியத்துடன் கையாண்டிருப்பார்.
கே.ஆர்.விஜயா, காஞ்சனா ,பாலாஜி,மேஜர் அனைவருமே நல்ல துணை பாத்திரங்கள்.
எம்.எஸ்.வீ. இசை முதல் பாடல் தவிர மற்ற ஐந்தும் அருமை.(கேட்டவரெல்லாம் , தண்ணீரிலே,சுகம், இனியது, நினைத்தேன் உன்னை) பாடல்களின் lead scenes (ஏற்கெனெவே எழுதி விட்டேன்) .
எனக்கு மிக மிக பிடித்த காட்சிகள் .
மேஜர்-கே.ஆர்.விஜயாவுடன் காரில் பயணிக்கும் ,இனியது பாட்டுக்கு முந்திய காட்சி.
மழையில் நனைந்து காஞ்சனா வீட்டிற்கு செல்லும் காட்சி.
பிரிண்ட் மச மச வென்று இருந்ததால் கேமரா ,எடிட்டிங் பற்றி விமரிசிப்பது கஷ்டம்.
சிவாஜியின் குறிப்பிட வேண்டிய படங்களில் ஒன்று தங்கை. என் பாலாஜி வரிசை- ராஜா,தீபம்,தங்கை, தியாகம், நீதி.
வாசு சார் ,நெஞ்சங்கள் பார்த்தேன். புது வகை கதை கரு.(அசலூரிலிருந்து)மேஜர் சுவாரஸ்யத்தை கூட்டாமல் குட்டி சுவர் ஆக்கி விட்டார். ஆனால் நடிகர்திலகம் படு casual .அந்த காலகட்டத்தில் Energy level தேவை படாத distressed பாத்திரங்களில் அவர் நன்றாகவே சோபித்தார் .இதுவும் அந்த ரகமே.
கோ,
ரொம்ப ரொம்ப. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே மாட்டார். வில்லன்களிடமிருந்து குழந்தை மீனாவைக் காப்பாற்றும் காட்சிகளைக் கூட நிதானமாக அதே சமயம் வேகமான திக் திக் ஆக்ஷன்கள் செய்யாமல் புத்திசாலித்தனமாக அதிகம் பேசாமல் வெகு ஈஸியாகச் செய்வார். அப்போது அவ்வளவாக கவனிக்கவில்லை. எனக்கு இப்போது பார்க்கும் போது அவரை ரொம்ப ரொம்ப வித்தியாசமாய் ரசிக்கச் செய்தது. something in it. ஆய்வில் எழுதுகிறேன்.
ஆங்...மறந்து விட்டேனே! நேற்றே நாம் போனில் தங்கையைப் பற்றி நிறைய பேசி விட்டதால்.... ஓகே.
சிவாஜியின் ரசிகர்கள் மட்டுமல்ல நண்பரே, அனைத்து தமிழக மக்களும், - கலை, அதன் நுணுக்கம், உயர்வு, அருமை பெருமை தெரிந்தவர்களும், காலத்தின் சுவடுகளாக இப்படியும் ஒரு கலைஞன் அந்நாளிலேயே எப்படி திறமை வெளிப்படுத்தியிருந்தான் என வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் இதற்கு உடன் படவேண்டும்.
இன்றைய தலைமுறையின் பின்னரும் பல நூறு வருடங்களும் மேலும், இம்மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமும் சான்றும் விட்டுச் செல்வது நம் கடமை, அல்ல நம் பெருமையும் கூட.
தமிழ்நாடும் இந்தியப்பெருநாடும் இம்மேதைக்கு உரிய மரியாதை தரவில்லை. குறைந்தபட்சம் அவரின் சரித்திர சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.