Originally Posted by
KCSHEKAR
எல்லாவற்றிலும் விலக்கு என்பது உண்டு.
நடிப்புலகின் பிதாமகனாக நடிகர்திலகம் இருந்தாலும், நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வைக் கொண்ட அவரைப்பற்றி விவாதிக்கும்போது சிறிது அரசியல் கலக்கத்தான் செய்யும்.
அதுபோல பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும், அவரை ஒரு கட்சிக்குள் அடக்கிவிடக்கூடாது. இன்று அல்ல, நாளை அல்ல எக்காலத்திலும், காமராஜரின் அரசியல் என்பது பொதுவாழ்வில் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது. அதனை, அரசியல் என்றாலே சாக்கடை என்று வெறுதது ஒதுக்கும், ஒதுங்கும் இளைய தலைமுறையினரும், வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
வாழ்நாளெல்லாம் பெருந்தலைவரின் புகழ் பாடி மறைந்த நடிகர்திலகத்தின் திரியில் பெருந்தலைவரைப் பற்றி வந்த அவதூறை மறுப்பது அவசியமான ஒன்றாகும்.
சினிமாவை மட்டுமே விவாதிக்கவேண்டும் என்று விரும்புவது தவறல்ல. விவாதங்களில் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் படிக்கலாம், விவாதத்தில் பங்கேற்கலாம்.. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளவை பற்றி விவாதிக்கக்கூடாது என்பது முறையல்ல.