THANKS LOGANATHAN SIR
SUPER ART DESIGN
http://i60.tinypic.com/3462m20.jpghttp://i62.tinypic.com/1z2369g.jpg
Printable View
THANKS LOGANATHAN SIR
SUPER ART DESIGN
http://i60.tinypic.com/3462m20.jpghttp://i62.tinypic.com/1z2369g.jpg
Courtesy - abdheen pages
குலோபகாவலி/ அலிபாவும் 40 திருடர்களும்/
பாக்தாத் திருடன்/ ராஜா தேசிங்கு என்கிற
இந்த நான்கு படங்களிலும்
இஸ்லாமியப் பெயர்களையும், அடையாளங்களையும் தாங்கி
பாத்திரத்தோடு அவர் ஒன்றி
நடித்திருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
அவர் தொப்பி அணியும் அழகே அலாதியாக இருக்கும்.
இஸ்லாத்தை மாசுபடுத்தாத வகையில்
கவனமும் செய்திருப்பார்..
குறிப்பாய் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது
குலோபகாவலி படத்தின் துவக்கம்
ஃபஜருக்கு (அதிகாலை நேரத் தொழுகை) பாங்கு சொல்வதாக இருக்கும்.
தமிழில் இப்படி ஃபஜரின் பாங்கோசையோடு துவங்கும்
இன்னொரு படம் பிற்காலத்தில் வந்திருக்கிறது. அது
மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’
மலையாளத்தில் கூட அப்படியோர் படம் பார்த்திருக்கிறேன்…
பெயர்தான் நினைவில் இல்லை.
சினிமாவில்,
எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த காலத்திலும்
அதற்குப் பிறகான காலத்திலும் பல நடிகர்கள்
இஸ்லாமிய வேடம் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு இஸ்லாமியப் பாத்திரங்களோடு
ஒன்றிப் போனார்கள் என சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். நடித்த அந்த நான்கு படங்களில்
ராஜா தேசிங்கு நீங்களாக
மற்ற மூன்றும்
வெற்றிப் பெற்ற ஆங்கில படங்களை தழுவியது.
ராஜா தேசிங்கு…
செஞ்சியை ஆண்ட ஓர் நவாபுவின்
அவரது மறைமுக மனைவிகளின்….
அவர்களது பிள்ளைகளின்…
வரலாற்றுச் சான்றுகளை ஒட்டிய திரைக்கதை!
அந்தத் திரைக்கதையின்
சரித்திரக் குறிப்புகள் பிழையெனச் சுட்டி
‘காயிதே மில்லத்’ அவர்களின் தலைமையில் இயங்கிய
‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்’ கட்சி
அன்றைக்கு எதிர்ப்பு காட்டிய செய்தியும் உண்டு.
1001 இரவுகள்
பெர்ஷிய மொழியின் செறிவு கொண்ட இலக்கியம்!
ஈரானுக்கு பெருமைச் சேர்த்த
இலக்கிய கலைவடிவங்களில் இதுவும் ஒன்று.
அந்த செறிவு கொண்ட கதைகள்
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் ஆனபோது
உலக இலக்கிய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அன்றைய ஹாலிவுட்
அதை காசாக்கத் திட்டமிட்டது.
1001 இரவுகள்
பல திரைப்படங்களாக வெளிவரவும் துவங்கியது.
உலக மக்களின், மேலான வரவேற்பால்
அப்படங்கள் அமோக வெற்றிப் பெற்றது.
தமிழ்ப் பட முதலாளிகள்
அந்த வெற்றியை… அந்தக் காசை…
தாங்களும் அடைய விரும்ப…
எம்.ஜி.ஆரை முன் நிறுத்தி
குலோபகாவலி
அலிபாவும் 40 திருடர்களும்
பாக்தாத் திருடன் என தயாரித்தார்கள்.
எப்பவும் எங்கேயும் முதலாளிகளின் குறி தப்புவதே இல்லை.
வெற்றியையும் காசையும் அள்ளினார்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிட்டியது என்னவோ
வெறும் புகழ் மட்டும்தான்.
கூடுதலாக…
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில்
நிறந்தர இடம்!
மேற்குறிப்பிட்ட நான்கு படங்கள் மட்டுமில்லாமல்
மகாதேவி(1957) ‘தாயத்து தாயத்து’ப் பாடலிலும்
சிரித்து வாழவேண்டும்(1974)
‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடலிலும்
இஸ்லாமிய வேடமிட்டு அவர் மின்னவே செய்தார்!
அந்தப் பாடல் காட்சிகளில்
மக்கத்து சால்வை அணிந்து
புகையும் ஊதுபத்தியை காதில் சொருகியபடி
ஃபக்கீர்களின் ‘தப்’போடும்,
அவர்களின் தாளம் பிசகாத கை லாவகத்தோடும்
இசைத்தபடி
சூஃபிகளை ஒத்த
தத்துவார்த்தங்களையும் பேசி வலம் வர
அவர் மின்னாமல் என்ன செய்வார்?
சிவகாமியின் சபதம் பற்றிய விகடன் தீபாவளி மலர் கட்டுரை மற்றும் படங்கள் மனதை கொள்ளை கொண்டன. இது மட்டும் திரை படம் ஆகி இருக்க கூடாதா என்று ஏக்கம் கொள்ள வைத்தது . பாராட்டுகள் நண்பரே
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!
தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.
பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.
‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.
எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.
படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர்.
பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.
தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.
அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.
தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.
கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 134. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன..
courtesy - nakkeeran
பக்ரீத் நினைவுகள்
நண்பர்களுக்கு, பக்ரீத் வாழ்த்துக்கள்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர் முஸ்லிம் வேடத்தில் நடித்த படங்களின் பட்டியலை திரு.எஸ்.வி.சார் பதிவிட்டிருந்தது மகிழ்ச்சி. அந்தப் படங்களைப் பற்றிய சில காட்சிகள் மனதில் மின்னலாய் தோன்றின.
*குலேபகாவலி படத்தில் காட்டுவாசிகளிடம் பிடிபட்டு அவர்கள் தலைவரை பலி கொடுப்பதற்காக, பலி பீடத்தில் தலையை வைத்து கத்தியை ஓங்கும்போது, பலி பீடத்தில் தலை இருக்கும் நிலையில், கண்களை இறுக மூடி, பல்லைக் கடித்து முகத்தை சுருக்கி ஒரு expression கொடுப்பார் பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே வெட்டப் போவதில்லை என்பது நமக்கும் தெரியும். தலைவருக்கும் தெரியும். இருந்தாலும் மரண பயத்தை வெளிப்படுத்தி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறாரே அதுதான் நுட்பமான நடிப்பு. இதில், தலைவர் கில்லாடி.
*ராஜா தேசிங்கு படத்தில் தம்பி தேசிங்கு (அதுவும் தலைவர்தான்) சண்டை போடும் அழகை பார்த்து அவரை கொல்ல மனமின்றி அவரை தாக்க எடுத்த ஈட்டியிலேயே சாய்ந்து கொண்டு தாவூத்கான் (இதுவும் தலைவர்தான்) ரசிக்கும் அழகு.
*பாக்தாத் திருடன் படத்தில் ‘சொக்குதே மனம், சுத்துதே ஜகம்’ பாடலில் குடிபோதையில் இருக்கும் நம்பியார் முன் வைஜெயந்தி மாலா பம்பரமாய் ஆட, சரோடு வாத்தியத்தை வாசித்துக் கொண்டே தலைவர் காட்டும் முகபாவங்கள்.
*சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் அப்துல் ரகுமானாக தலைவர் வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பு. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் நடிப்பு, சாயல் முஸ்லிம் பாத்திரத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஒரு கடமை தவறாத முஸ்லிமைப் போல நேர்த்தியாக தொழுகை செய்யும் அற்புதம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தலைவரை விட, அப்துல் ரகுமான் பாத்திரத்தில் சற்று குண்டாக தெரிவார். குரலை கரகரப்பாக்கி பேசியிருப்பார். லுங்கியை பின்னால் லேசாக தூக்கிப் பிடித்தபடி காலை அகட்டி வைத்து நடந்து அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார். (நடிகன்டா!)
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ஜன்ஜீர் படத்தின் தழுவலே சிரித்து வாழ வேண்டும். ஜஸ்டினுடன் பாத்ரூம் சண்டைக் காட்சியில் வேகமாக ஓடி சுவற்றில் காலைப் பதித்து பந்து போல எழும்பி ஜஸ்டின் மீது மோதி விழச் செய்வார். (இந்த சண்டைக் காட்சியை நேரம் கிடைக்கும்போது விரிவாக அலசலாம். இந்த உத்தியை பின்னர், பல படங்களில் விஜயகாந்த் பயன்படுத்தி இருப்பார்)
VIDEO COURTESY- VINOD SIR
http://youtu.be/itKYMs58pHE?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
இந்த சண்டைக்கு முன் எலக்ட்ரிகல் ஷேவர் மூலம் தலைவர் ஷேவ் செய்து கொண்டிருப்பார். நவீன கண்டுபிடிப்புகளை புதுமையை தலைவர் தனது படங்களில் காட்டுவார். 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் படங்களில் முதல் முதலில் எலக்ட்ரிகல் ஷேவரை அறிமுகப்படுத்தியது தலைவர்தான். நீதிக்கு தலைவணங்கு படத்திலும் எலக்ட்ரிகல் ஷேவரை பயன்படுத்தும் காட்சி வரும். மேலும், கடைசி சண்டை காட்சியில் ஒரு புதுமையாக ஸ்லோ மோஷனில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆடுவது கடமையின் நினைவாக’ பாடலில் எந்தப் படத்திலும் இல்லாத புதுமையாக ஒரு பாடல் காட்சியில் ஒரு நடிகருக்கு இரண்டு பாடகர்கள் பாடியிருப்பதும் இதில்தான். டிஎம்எஸ் பாடலை பாடியிருந்தாலும், முஸ்லிம் குரல் effect-க்காக ‘மண்ணுக்குள் மறைவாக என்ன விதை போட்டாலும், போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ... கண்ணை மறைத்தென்ன காரியத்தை செய்தாலும் காலக் கணக்கனவன் சாட்சி வைக்க மாட்டானோ?’ வரிகளை பாடகர் ஷேக் முகமது பாடியிருப்பார். அபூர்வ ராகங்கள் படத்தில் ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடலை பாடியது இவர்தான்.
தலைவர் mass நடிகராகவே முன்னிறுத்தப்பட்டதால் அவரது class நடிப்பு பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்கிறேன். கவனிக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. அப்படி ஓரளவு கவனிக்கப்பட்டதற்கே அவரது இயற்கையான நடிப்பின் நுட்பத்தையும் திறமையையும் பாராட்டி அவருக்கு, இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்ததென்றால், பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால்... திரு. லோகநாதன் சார் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் உள்ளபடி, நடிக்கத் தெரியாது என்று கேலி பேசப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜான் வெயினுக்கு மற்றவர்கள் வாயை அடைக்கும் வகையில் ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல, தலைவருக்கும் கிடைத்திருக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எம். ஜி. ஆரின் இதயவீணை, பல்லாண்டு வாழ்க, சிரித்து வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களுக்கு அவரோடு வேலை செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் எம். ஜி. ஆர். சிறைச்சாலைக்குள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியை என்னை எடுக்கும் படி சுபா சுந்தரம் சொல்ல நான் கேமராவை எடுத்து கோணம் பார்த்தேன்.
இப்போ மாதிரி சைபர் சாட் கேமராக்கள் அப்போ கிடையாது. அதனால் போட்டோ எப்படி வர வேண்டுமோ அதற்கேற்ப மாதிரி நடிகர்கள் ஆக்ஷன் கொடுக்க வேண்டும். அதனால் நான் எம். ஜி. ஆரிடம் 'சார் கொஞ்சம் சாப்பாட்டு தட்டை மேலே தூக்கி சாப்பிடுவது போல கையை வையுங்கள்' என்றேன். உடனே பக்கத்தில் இருந்த எம். ஜி. ஆரின் உதவியாளர்கள் ஓடி வந்து என் கையைத் தட்டி விட்டு, 'நீ என்ன சொல்றே...? அவரு எப்படி இருக்காரோ அப்படியே எடு' என்றார்கள். உடனே எம். ஜி. ஆர் அவர்களிடம், 'நீங்க சும்மா இருங்க அவர் வேலையை சரியா செய்ய இடம் கொடுங்க. காட்சி தத்துரூபமா வரணும்ணு தம்பி நினைக்கிறான்' என்று கரகரத்த குரலில் சொன்னதும் நான் புல்லரித்து நின்றேன்.
புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவி அவர்கள் பேட்டியில் இருந்து
இனிய நண்பர் கிருஷ்ணா சார்
சிவகாமியின் சபதம் - திரைப்படம் வந்திருந்தால் இன்னொரு சரித்திர சகாப்தம் படைத்த படமாக வந்து இருக்கும் .
ஏமாற்றம்தான் .உங்களின் ரசனைக்கு என்னுடைய பாராட்டுக்கள் . ஸ்டில் ரவி பற்றிய கட்டுரை அருமை .
திருப்பூர் குமரன்: 04 OCTOBER 1904 (It is better late than never. Please forgive me for posting this two days later)
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.
தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.
'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.
அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். திருப்பூரில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியில் இரக்கமற்ற போலீசாரின் தாக்குதலில் மரண அடி வாங்கி உயிருக்குப் போராடியபோதும், கையில் பிடித்திருந்த கொடியைக் கீழே விழாமல், 'பாரதமாதாகி ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழங்கி உயிர்விட்ட தியாகி தான் இந்தத் திருப்பூர் குமரன். உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அப்போது அவனுக்கு வயது வெறும் 28. ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த குமரன் தன் குடும்பத்தினரை பரிதவிக்கவிட்டுவிட்டு நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்தார்.
அந்தத் தியாகியைப் போல எத்தனையோ வீரர்களின் ரத்தம், சதை, எலும்பு இவற்றை விலையாகக் கொடுத்துப் பெற்றதுதான் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:
(தமிழன் இதயம்)
மனமுவந்து உயிர் கொடுத்த
மானமுள்ள வீரர்கள்மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த
கொடியை என்றும் தாங்குவோம்.
நேற்றைய முன்தினம் தான் சென்னிமலை குமரன் என்றழைக்கப்படும் கொடிகாத்த குமரனின் பிறந்த நாள். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.
அப்பேர்பட்ட குமரனின் குடும்பத்தையும் வாழ வைத்தவர் நம் புரட்சித்தலைவர் தான். ஆமாம். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் அவரைத் தேடிச்சென்று எல்லா உதவிகளையும் செய்தவர் நம் புரட்சித்தலைவர் தான். அதனால் தான், தான் உயிர் வாழ்ந்த காலம் (1998) வரை பொன்மனச்செம்மலை தான் பெறாத பிள்ளையாகவே போற்றி வந்தார் ராமாயி அம்மாள். “எங்க வீட்டுப்பிள்ளை” என்று நாம் எல்லோரும் அழைப்பது போல் அவரும் அழைத்தார் என்பதை விட வேறு பெருமை புரட்ச்சித்தலைவரின் பக்தர்களான நமக்கு வேண்டுமா? திருப்பூர் கிருஷ்ண்னின் இந்த உரையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும். தலைவரின் மனம் பொன் மனம் என்பlது அனைவருக்கும் புரியும். என் மனம் பொன் மனம் என்பதைக்காணலாம் என அவரால் மட்டுமே ஆணித்தரமாக கூற இயலும் வேறு எந்தக்கொம்பனாலும் அவர் அருகில் கூட நிற்க இயலாது..
http://www.youtube.com/watch?v=UfNhuaNuVng
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்
மக்கள் திலகத்தின் முஸ்லீம் வேடத்தை பற்றியும் , சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சி பற்றியும் விவரித்திருக்கும் விதம் மிகவும் அருமை .நீங்கள் குறிப்பிட்ட mass & class இரண்டிலும் மக்கள் திலகத்தின்
ஆளுமைகள் நிறைந்திருந்தது .திரை உலக பத்திரிகைகள் அவருடைய படங்களை எந்த அளவிற்கு கடுமையாக
தாக்கி எழுத முடியுமோ அந்த அளவிற்கு எழுதி விமர்சனம் செய்தார்கள் .எம்ஜிஆர் நடிப்பை கிண்டல் கேலி செய்து
மகிழ்ந்தார்கள் . மக்கள் திலகத்தின் ரசிகர்களும் மக்களும் அந்த விமர்சனங்களை ஒரு பொருட்டாக கருதாமல்
எம்ஜிஆரின் பெரும்பான்மையான படங்களுக்கு பேராதரவு தந்து எம்ஜிஆரை ''மக்கள் திலகம்'' என்ற நிலைக்கு உயர்த்தினார்கள் .
பின்னாளில் எம்ஜிஆர் படங்களை கிண்டல் செய்தவர்கள் எம்ஜிஆரின் படங்களை பாராட்டி ,எம்ஜிஆர் திரை உலக சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார்கள் .மக்கள் வழங்கிய ''எங்க வீட்டு பிள்ளை '' - இந்த பட்டத்திற்கு ஈடு இணை
இந்த உலகில் வேறு உண்டா ?