என் தங்கச்சி சினேகா - பிய்த்து உதறும் பிரசாந்த்
அந்த காலத்து டபரா செட்டாகட்டும், இந்த காலத்து கப் அண் சாசர் ஆகட்டும்... தனித்தனியாக பிரித்து வைத்தால் அழகு அம்பேல்தான். அதிலும் ஜோடியை மாற்றினால் எப்படியிருக்கும்? ஐயே....
ஆனால் அப்படியெல்லாம் யோசிக்க வேண்டாம். முதல் படத்தில் பிரசாந்துடன் ஜோடி போட்ட சினேகா, காலம் உருட்டிய உருட்டலில் அவருக்கே தங்கையாக நடிக்கிறாராம். இடையில் யார் யாருடனோ ஜோடியாக நடித்தவருக்கு மீண்டும் பிரசாந்துடன் டூயட் பாடுகிற யோகம் அமையவேயில்லை. ஒருநாள் திடீரென்று கலைஞரின் 'பொன்னர் சங்கர்' படத்தில் நடிக்க சினேகாவை அழைத்தாராம் படத்தின் இயக்குனரும், பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன்.
ஆவலாக வந்த சினேகாவுக்கு நாவலாக ஒரு கேரக்டர் சொன்னார் மம்பட்டியான், பிரசாந்துக்கு தங்கை என்று. ஆனாலும் கதையும், அதில் இவருக்கு இருக்கிற முக்கியத்துவமும் சினேகாவை கரைத்துவிட, ஆன் தி ஸ்பாட்டிலேயே அட்வான்சை வாங்கிக் கொண்டாராம்.
இது ஒருபுறம் இருக்கட்டும். உலக அழகி ஐஸ்வர்யாராயோடு ஜோடி சேர்ந்தபோதுகூட இத்தனை பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை அந்தப்படம். பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை நாற்பது கோடி செலவில் எடுத்துக் கொண்டிருக்கிறார் தியாகராஜன். அரண்மனை செட், ஆள் அம்பு படைகள் என்று சரித்திர சம்பவங்களுக்கே துட்டு தண்ணீராக செலவாகிறதாம்.
இறைக்கிறதே அள்ளுறதுக்குதானே சார்?
http://www.tamilcinema.com/CINENEWS/...il/070410a.asp