Quote:
மாறுபட்ட காதல் இசை!
சென்னையில் நடந்து முடிந்த `காதல் அன்பிலக்ட்' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இந்தியாவின் முன்னணி திரைஇசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு ஐம்பதாண்டுகால தமிழ் சினிமாவின் காதல் பாடல்களை ஒரே மேடையில் பாடினர்.
இந்த இசை நிகழ்ச்சியில் இளம் பாடகர்களான ஸ்ருதி ஹாசன், பிளாசே, `ஜேய் ஹோ புகழ்' விஜய் பிரகாஷ், சுனிதா சாரதி, ஹரிச்சரண் மற்றும் நேகா பசின் ஆகியோர் கலந்து கொண்டு பாடினர்.
சென்னை ரசிகர்கள் இதுவரை கண்டிராத ஒரு நிகழ்ச்சியாகவே இது அமைந்திருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கு பிரத்யேகமாக புல்லாங்குழல் இசைக்கும் நரேன்ஐயர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பல பிரபல பாடல்களை புல்லாங்குழலில் இசைத்தார்.
பாஸ் கிட்டார் வாசிப்பதில் புகழ்பெற்ற கெய்த் பீட்டர்ஸ், கிட்டார் கலைஞர் பிரதீப், டிரம்ஸ் புகழ் வசந்த், ஆல்வின், விக்ரம், டிரம்பெட் தாமஸ் டி.ஜே.கேல் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.