nicely articulated SP. :D
thanks :notworthy:
& enlightening discussions.
Printable View
nicely articulated SP. :D
thanks :notworthy:
& enlightening discussions.
I did not understand what u said prasad. :( Physical level? I assume the rishigaL need not have been born here in physical plane. They could have realised it with sukshma gnaana or whatever (after the cosmic creation) without being present in physical plane...and later when they brought down the knowledge in earth plane, they just had to recollect it now that it is inherent in them... (I lack the right knowledge here, and hence am not too confident on either the understanding or the term :) )Quote:
Originally Posted by anbu_kathir
:thumbsup: rightly said. :ty:Quote:
Realization itself remains 'really real', the physical world is the superposition which is unnecessary. As many have said, man is not a physical being having a spiritual experience, rather a spiritual being having a physical experience. Not that this has anything to do with viewing science inferiorly.
:ty: wonderful. I also happen enjoy and agree a lot with our pradeep's explanation and his sakthi foundation website. (few also goes beyond my head though )Quote:
this might not be very accurate. Vishnu (equivalent to Atman) remains asleep (although in 'aware' sleep or Yoga-nidra). Creation is not happening, it remains only as latent potential (as Brahma who has sunk back into the navel).
thankyou. :)
shankar,
thankyou :)
What I meant was was that such metaphysical explanations are metaphors. They might be just as valid as physical reality, but again, not more than physical reality either. "Aandaavan podigira kanakku" , " God works in mysterious ways", "siththan pOkku sivan pOkku", etc. appadinnu palabEr sollirukkaanga. As I wonder about it, I always think that the Gods are real, Creation is real, rishis, shruthi, etc. are real only so much (and just as much) as I, as a sentient being, am real.Quote:
Originally Posted by Shakthiprabha
If my identity with a self (a separate self) is lost (which I think is what realization is), so too all these metaphors and connotations will have sunk back into the original undivided whole, which is the only actual reality there is. The same thing happens with the myths and metaphysical explanations in any other religion (there are quite a large number of them).
This explanation of mine to myself sort of serves to keep me somewhat grounded, and not to be overtly attached to the 'superiority of the Hindu way' (it might very well be superior, but it serves a purpose for me and so I believe it :D).
Love and Light.
Thankyou :) lol I get what u say :D
:) :) thankyou.Quote:
If my identity with a self (a separate self) is lost (which I think is what realization is), so too all these metaphors and connotations will have sunk back into the original undivided whole, which is the only actual reality there is.
ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.
ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.
அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.
இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.
தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.
கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.
எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.
:ty: SP
"போன ஜன்மத்து பாவம் / கர்மா" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துபவர்கள் அறிவிலிகள். இவற்றில் நம்பிக்கைகள் உடையவர்ளாக நாம் இருக்கும் பட்சத்தில் நம்மை பத்தாம்பசலிகளாக பாவிக்கும் நிலைமையே பெரும்பாலும் இன்றைய விஞ்ஞான சமுதாயத்தின் மேதாவிலாசத்தில் மிளிர்கிறது. இவை ஒரு புறமிருக்க, அவரவர் கர்மவினையின் பேரிலே கூட பலருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை, இதில் முன்னோர்கள் செய்த பாவம் நம்மை தாக்கும் என்பதெல்லாம் ஆதாரமற்றவை என்று புறம் தள்ளிவிடுகிறார்கள்.
கர்மவினை என்பதன் பேரில் நம்பிக்கை வைத்தாலும் கூட அவனவன் செய்த கர்மவினை (நம்பினோருக்கு) அவனை மட்டுமல்லவா பாதிக்க வல்லது? இதில் முன்னோருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
கர்ம பலாபலன்களில் ஓரளவு நம்பிக்கை கொண்ட பலராலும் நம்பப்படும் விஷயம் ஒன்றுள்ளது. ஒருவன் வீட்டு உப்பைத் தின்றால் (உணவு உண்டால்) அவனுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான். முன்னோர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் உதிரம், உடல், மரபணுக்கள் அத்தனையும் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் உதிரத்தில், பங்கு கொடுத்திருக்கிறார்கள். (அல்லது நாம், நம் கர்மாவினால் அதில் பங்கு எடுத்துக்கொண்டோம்) அவர்கள் வளர்த்து விட்ட அன்னை தந்தை நமக்கு சோறூட்டுகிறார்கள். அவர்கள் அசையும் அசையா சொத்துக்களில் பங்கு கேட்கிறோம். அவற்றை ஆண்டு அனுபவிக்கிறோம். அதே போல் அவர்கள் சம்பாதித்த வினைகளிலும் நமக்கு பங்கு உண்டு.
முன்னோர்களின் சாபம் நம்மை பாதிக்க வல்லது. முன்னோர்களுக்கு கொடுக்கபட்ட சாபமும் அவர்களின் காலத்தில் பலிதம் பெறவில்லையென்றால் நம்மை வந்தடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாபங்களோ வாழ்த்துக்களோ பலித்து விடுவதும் கூட "எவர் வாயினிலிருந்து அது புறப்படுகிறது" என்பதை பொருத்து அமையும். சாதாரண மனிதன் சொல்லும் பயனற்ற சொற்களுக்கு வலிமை அதிகம் இராது. சற்றே மேன்மையுடைவனோ, அல்லது சுத்தமான ஆன்மாவின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இன்னும் வலிமை அதிகம். இறைவனுக்கு ஒப்பானவர்களோ ரிஷிகளோ, தபஸ்விகளோ சொல்லும் சொற்களுக்கு அதிர்வுகளும் அடர்த்தியும் அதிகம்.
தபஸ்விகளோ, பரிசுத்தமானவர்களோ சொற்களை உதிர்த்துத் தான் சாபம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேன்மையானவர்கள் பலரும் மன்னிக்கும் மறக்கும் தன்மை படைத்தவர்கள். எனினும், அவர்கள் சற்றே மனவேதனை அடைந்தாலும் அவர்களின் எண்ண அலைகளுக்கு அதற்கு அதீத ஷக்தி உண்டு.
ரிஷிகளும் தபஸ்விகளும் சதா சாபம் கொடுப்பதே வேலையாக்கிக் கொண்டு கொந்தளிக்கும் மனதுடன் இருப்பவர்கள் அல்ல. பல நேரங்களிலும் பலரும் அமைதியும் ஷாந்தமும், மன்னிக்கும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சமீகரின் மன இயல்பு இதற்கு சிறந்த சான்று. பரிஷீத் மஹராஜாவின் ஆட்சி காலத்திலே கலியுகம் துவங்கியதாக பேசப்படுகிறது. பரிஷித், பன்றி வேட்டையாடி அதனை துரத்தியபடியே காட்டினுள் சமீகர் என்ற மஹரிஷியின் குடிலுக்குள் செல்கிறார். சமீகர் சிறந்த தபஸ்வி. அன்றைய தினம் அவர் மௌன விரதம் அனுஷ்த்திருந்தார். பேச்சு கொடுக்கும் தன்னிடம் பதிலுரைக்காதிருந்த மஹரிஷியின் மௌனத்தை அஹங்காரமாக தவறாக எண்ணி வெம்புகிறார் ராஜா. பல முறை பேசியும் முனிவரோ அமைதியாய் இருக்கவே, கோபம் மேலிட்ட பரிஷித், செத்த பாம்பு ஒன்றை சமீகரின் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதனை அரிந்த சமீகரின் மகன் கடும் கோபம் கொண்டு பாம்பினால் தீண்டபட்டு மன்னர் இறக்க வேண்டும் என்று சாபம் இட்டுவிடுகிறான்.
ரிஷியின் மௌனத்தின் காரணத்தை தெரிந்து கொண்ட ராஜா, மிகவும் மனம் வருந்தி, தனக்கு இச்சாபம் சரியானதே என்று பலவாறு மனம் வெம்புகிறான். நல்ல குணம் நிரம்பப் பெற்ற அப்பேர்பட்ட மஹராஜாவும் கடும் கோபம் கொண்ட க்ஷண நேரத்தில் தவறிழைத்து விடுகிறான். முனிவரோ இவருக்கும் ஒருபடி மேல் அல்லவா! தபஸ்வி ஆயிற்றே! சமீகரோ தம் மகனை கூப்பிட்டு பலவாறு கடிந்து கொள்கிறார். ராஜா என்பவனின் இறப்பு பிரஜைகளை பாதிக்கும். பரிஷித்தைப் போல் மிகவும் நல்ல அரசனாக இருந்து விட்டால் அவன் இழப்பு பலருக்கும் ஈடுசெய்ய முடியாதது. தபஸ்வியாகப் பெற்றவர்கள் கோபத்தை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் தபஸ்வி என்று சொல்லிக்கொள்வதிலோ ரிஷி, ஞானி என்று சொல்லிக்கொள்வதிலோ ஒரு பயனும் இல்லை. மன்னிக்கும் குணம் அற்றவனும், முன் கோபம் கொள்பவனும் செய்யும் தபஸ் வீணாய் போவது கண்கூடு.
விஸ்வாமித்ரர் தம் கோபத்தால் பல முறை தபஸின் பலனை இழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராஜஸ குணம் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறை அவரின் அஹங்காரம் தலைதூக்கும் போதெல்லாம் சபித்து விடுகிறார். இதனால் அவர் பலவருடம் சேமித்து வைத்த ஷ்ரேயஸும் தபஸும் அதன் பலனும் வீணாய் போக, மீண்டும் கடும்தவம் இயற்றும்படி ஆகிறது. வலிமைக் கூடிய தபஸ்விகளின் சாபத்திற்கும் மன வருத்தத்திற்கும் மிக அதிக வீர்யம் உண்டு.
உயர்ந்த ஆன்மாக்களை பணிந்து அவர்களை மரியாதை செய்து தம் வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு அதன் அருமை பெருமை தெரியாத மனையாளோ மக்களோ வாய்த்தால் அவன் பாடு வருந்தற்குறியது. ராமானுஜரின் சரித்திரம் ஒரு பாடமாய் அமைகிறது. திருக்கச்சி நம்பி என்ற ஒருவரை தம் குருவாய் ஏற்க ராமானுஜரின் மனம் வெகுவாக விரும்பியது. அவரோ ராமானுஜருக்கென வேறு ஒரு குரு வாய்ப்பார் என்று சொல்லிவிடுகிறார். நம்பியின் அருளுக்காக ஏங்கும் ராமானுஜர், அவரை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து, அவர் உண்ட மீதத்தை உண்டு அதன் பலனைப் பெற எண்ணுகிறார். ராமானுஜர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் நம்பி வீடு வந்து உணவும் உண்டு வேறு காரியமாக விடைபெற்று சென்று விடுகிறார். வீட்டில் ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இலையை தீண்டத் தகாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையுடன் கழியை கொண்டு தள்ளிவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய ராமானுஜர் மனைவிக்கு அறிவு புகட்டி இனிமேலும் அப்படி செய்யல் ஆகாது என்று கேட்டுக் கொள்கிறாள். குரங்கு புத்தி மனதை அவ்வளவு எளிதில் அறிவுரையின் பேரில் மாற்ற முடியுமா? அவரவர்கள் உதிரத்தில் இருக்கும் அஹங்காரமும், குணநலனும் தொடர்ந்து வந்தபாடாகவே இருக்கும். மனதை அடக்க சாமான்யன் வாழ்கை வாழும் ஒருவனுக்கு சாத்தியம் அல்ல. மீண்டும் ஒரு முறை ஏழை விஷ்ணு பக்தனை உணவு இல்லை என்று விரட்டியடிக்கிறாள். மறுபடியும் ராமானுஜர் புத்தி கூறி இப்படி செய்யாதே என்று வேண்டிக்கொள்கிறார். அதன் பின் பெரியநம்பி என்பவரை தம் குருவாக ஏற்கிறார். அவரும் அவர் பத்தினியுமாய் இராமானுஜர் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பெரிதும் உடன்படாவிட்டாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வந்த ராமானுஜரின் மனைவிக்கு, சிறு சம்பவம் கூட எரியும் கொள்ளியை மேலும் சீண்டி சண்டையில் முடித்து விடும்படி வாய்க்கிறது. பெரியநம்பியின் மனைவி சண்டையை வலுக்காமல் பதிலேதும் கூறாமல் இருக்கிறாள். பெரியநம்பியும் அவர் மனைவியும் மௌனமாய் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். காரணம் அறிந்த ராமானுஜரின் மனம் மிகவும் பாடுபடுகிறது. அவர் மனைவியை ஏதோ ஒரு காரணம் சொல்லியோ சொல்லாமலோ பிறந்தகம் அனுப்பிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்று சன்யாசம் ஏற்கிறார். "கூறாமல் சன்னியாசம் கொள்" என்பது இது தான் போலும். ஒத்த கருத்துள்ள தம்பதியாக இராவிட்டால், இருவரின் குறிக்கோளும் வெவ்வேறாக இருந்தால், குணநலன் பொருந்தாமல் இருந்தால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதே நல்லது.
மனிதர்களும் தேவர்களும் ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து வாழ்கையை வாழ்வது இயற்கை அமைத்த நியதி. யக்ஞங்கள் மூலம் தேவர்களை மனிதன் திருப்தி செய்வதும், அவர்கள் சுபீக்ஷம், மழை மூலமாக பூமியை குளிர்வித்து மனிதனை திருப்தி செய்வதும் பொருந்தும். இது செய்யாத போது தேவர்களின் சாபம் பூமியைப் பீடித்து இயற்கை வளம் அற்றுப் போகிறது. இப்படியெல்லாம் செய்தும் கூட தொடர்ந்து தர்மம் தோற்றும் அதர்மம் தழைத்திருக்கும்படியும் நேரிட்டால் பூமியின் அதர்மத்தின் பாரம் தாங்காது அழிவு ஏற்படுகிறது. அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் அவதரிக்கிறான் என்பது ஹிந்து மதம் அல்லாது வேறு பல மதங்களின் நம்பிக்கையும் கூட. 'அதர்மம் அழித்து தர்மத்தை காக்க நான் யுகம் தோறும் தோன்றுவேன்' என்று இறைவன் கூறுகிறான். சில அவதாரங்களுக்கு வேறு பல காரணமும் உண்டு. விஷ்ணுவை பிருகு முனிவர் சபித்து விடுகிறார். சாபம் மனிதனை மட்டும் பீடிக்கும் விஷயம் அல்ல. சாபம் என்றால் "கோபத்தில் உதிர்த்த சொல்". எவர் வாயிலிருந்து புறப்படுகிறது என்பதைப் பொருத்து சாபத்தின் மகத்துவம் மாறுபடும். பெரிய முனிவரின் சாபம், பிரபஞ்சத்தில் பலரும் உணரும்படியான பெரிய சக்தியாகி, இராம அவதாரமாக உருவெடுத்தது. தேவாசுர போரின் போது அசுரர்களுக்கு பிருகு மஹரிஷியின் மனைவி தம் தபஸின் பலனால் ஷக்தி வழங்குகிறாள். அதனால் கோபமுற்ற விஷ்ணு அவளை சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடுகிறார். இதனால் துணுகுற்ற பிருகு மஹரிஷி, பூமியில் பிறந்து மனைவியின் பிரிவால் அவதியுறுமாறு கோபத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறார். பெரிய மஹரிஷியின் சாபதிற்கும் கட்டுப்பட்டு அதர்மம் அழித்து தர்மம் தழைக்கவுமாய் இராமாவதாரம் தோன்றியது.
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
Quote:
Originally Posted by Shakthiprabha
No. I compile and write related messages in some acceptable heading. It was spoken in bits n pieces over a period of one week or more :)Quote:
Originally Posted by leosimha
I supp stories of raamanujar and parikshith was discussed sometime around feb end on diffdrent days :)