Krishnan,Quote:
Originally Posted by gkrishna
already our Raghavendar sir and saradha mam wrote about the movie 'தாய்' in the earlier pages of this part 6.
Printable View
Krishnan,Quote:
Originally Posted by gkrishna
already our Raghavendar sir and saradha mam wrote about the movie 'தாய்' in the earlier pages of this part 6.
சிவாஜிக்கு பெரிய ரசிகன் யார்?-கமல்ஹாஸன்
http://thatstamil.oneindia.in/movies...ni-sivaji.html
இன்னொருத்தரெல்லாம் பொறந்து வர முடியாது ..நடிகர் திலகம் தான் பொறந்து வரணும் 8-)Quote:
Originally Posted by NOV
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 3
கே: நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே? (உஷா செந்தில், கூந்தளிர்)
ப: தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள் கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு, நேரந்தவறாமை, திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு எண்ணம் தேவையல்ல.
(ஆதாரம் : கல்கண்டு, 24.8.1995)
அன்புடன்,
பம்மலார்.
பார்த்தால் பசி தீரும்
வேலுவை தேடி சென்னை வந்த பாலு, வேல் அண்ட் கோ வில் வேலை செய்யும் சக்ரபாணி(தங்கவேலு) வீட்டிற்கு குடியிருக்க வருகிறான். வீட்டில் குடியிருக்க இடம் குடுத்த சக்ரபாணி தனது கம்பனியிலேயே பாலுவிற்கும் வேலை தேடி தருவதாக சொல்கிறான். அவனது பேச்சை கேட்டு மறுநாள் அந்த கம்பனி செல்லும் பாலுவை வெளியில் இருக்க வைத்து, முதலாளியிடம் நண்பனுக்காக வேலை கேட்க போகிறான் சக்ரபாணி. சிபாரிசை அடியோடு வெறுக்கும் வேல் அண்ட் கோ வின் முதலாளி வேலு, ஆம் நமது பழைய நண்பன் வேலு தான், முதலில் மறுத்தாலும் பின்பு வேலை தேடுபவர் ஒரு எக்ஸ் சர்வீஸ்மான் என தெரிந்து தன்னை மறுநாள் வந்து பார்க்க சொல்லி அவசரமாக வெளியில் போகிறான். வேலு வெளியே போவதை பார்த்த பாலு, அவன் யார் என்று சக்ரபாணியிடம் தெரிந்து கொண்டு அவனது வீடு விலாசத்தை வாங்கி அவனை சந்திக்க செல்கிறான். போகும் வழியில் வீட்டிற்க்கு ஓடி போய் தங்கையிடம் வேலுவை கண்டாகி விட்டது, அவனை தான் காண போகிறேன் என்ற விஷயத்தை சொல்ல, மகிழ்ச்சி கடலில் மிதக்கிறாள் இந்திரா.
அவசர வேலையை முடித்து கொண்டு தனது பங்களாவிற்கு திரும்பும் வேலுவை வரவேற்கிறாள் அவனது மனைவி ஜானகியும் (சௌகார்), மைத்துனி சரோஜாவும்(சரோஜாதேவி). சரோஜா காலேஜில் படிக்கும் அழகிய இளம் பெண், ஆட்டத்திலும் பாட்டத்திலும் மிகுந்த ஆசை கொண்டவள் (பார்த்தால் பசி தீரும் பாடல்). மகன் குமாருடன் (கமல்) பேசி கொண்டிருக்கும் வேளையில் வாசலில் நுழையும் பாலுவை அடையாளம் கண்டு கொண்ட வேலு அவனை அப்படியே வாரி அனைத்து கொள்கிறான். வேலுவையும் அவனது குடும்பத்தையும் கண்ட பாலுவின் மனதில் பெரும் அதிர்ச்சி. வேலுவின் மேல் வெறுப்பு வளர்கிறது. மனைவியிடம் காப்பி கொண்டு வர சொல்லிவிட்டு பாலுவை தனது அறைக்கு அழைத்து செல்லும் வேலு, அவனிடம் மனம் திறந்து பேசுகிறான். தான் இந்திராவை காதலித்து மணமுடித்தது. உடனே அவளை பிரிந்தது, திரும்பி வந்து தேடிய போது அவளும் அவள் கிராமமும் அழிந்து மண்ணோடு மண் ஆகி போனதும், மனைவி இறந்த துயரம் தாங்காமல் திரும்பி சென்னை வந்ததும், தந்தையின் வருபுறுத்தலால் இதய நோயாளியான, அத்தை மகள் ஜானகியை மணம் புரிய நேரிட்டதையும் சொல்லி வருந்தினான் வேலு. வேலுவின் மேல் தவறில்லை என்று புரிந்து கொண்ட பாலு, மெதுவாக இந்திராவும் அவனது மகன் பாபுவும் தன்னுடன் தான் சக்ரபாணி வீட்டில் இருக்கிறார்கள் என்று கூற, வேலு பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆளாகிறான். அவர்களை பார்க்க துடிக்கும் வேலுவை, ஜானகியின் நோயை கூறி கட்டுபடுத்தும் பாலு, இதற்க்கு ஒரு வழி கண்டு பிடிப்பதாகவும் அது வரை இது யாருக்கும் தெரிய வேண்டாம் என சத்தியம் வாங்கி கொள்கிறான். சக்ரபாணி அழைத்து வந்த ஆள் பாலு தான் என்று மகிழும் வேலு, பாலுவின் கால் ஊனத்தை பார்த்து துடித்து போகிறான்.
கணவன் வரப்போகிறான் என்று எண்ணி தன்னை அலங்கரித்து கொள்ளும் இந்திரா (அன்று ஊமை பெண்ணல்லோ பாடல்) காலடி சப்தம் கேட்டு ஆசையுடன் ஓடி வர, அவளை வேதனை படுத்தும் செய்தியை தருகிறான் பாலு. தான் வேறு யாரையோ வேலு என்று எண்ணி ஏமாந்து அவளையும் ஏமாற்றி விட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்கும் அவனை தேற்றுகிறாள் அந்த பேதை.
Thanks Mr. karthik, Ragavendra sir, Pammalaar sir. ellam unga aasaeervaadham thaan
ராகவேந்தர் சார்,
1972-ஐ மறக்கவே கூடாது. ஆனால் நான் மறந்து விட்டேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி.
சுவாமிக்கு தகவல் திலகம் என்று ஏற்கனவே அளித்து விட்டேன் பட்டம்.
சிவன்,
நான் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த திரியில் உங்களின் பங்களிப்பு வந்து நிறைய நாட்களாயிற்றே என்று. அந்த குறை நீக்கி அமர்களமாக கதையை கூற ஆரம்பித்திருக்கிறீர்கள். படத்தைப் பற்றிய விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
சுவாமி,
ஒய்.ஜி.எம் நிகழ்ச்சி வர்ணனை நன்றாக இருக்கிறது.
சத்யா,
இந்த திரியில் உங்கள் முதல் பதிவே, அது ஓரிரு வரிகளே ஆனபோதும், முத்தாய்ப்பான பதிவாக அமைந்து விட்டது.
சதீஷ்,
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். தங்கச் சுரங்கம் சிந்தாமணியில் வெளியானபோது [1985 ஆகஸ்ட் 16 ] அதற்கு முதல் நாள்தான் முதல் மரியாதை குருவிலும் மதுவிலும் வெளியானது. ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் சிந்தாமணிக்குதான் வந்திருந்தார்கள்.
அன்புடன்
பார்த்தால் பசி தீரும்
மறுநாள் வேளையில் சேரும் பாலுவிற்கு பெரும் அதிர்ச்சி. குமாஸ்தாவின் இடத்தில் அமரும் அவனை தன்னுடைய பார்ட்னராக ஆக்கி மகிழ்கிறான் வேலு. பாலுவின் குணத்திலும் கம்பீரத்திலும் மயங்கி அவனிடம் தன மனதை பறி கொடுக்கும் சரோஜா அவனை தன் கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு அழைக்கிறாள். நாட்டியம் ( இசை மட்டும் தான் பாடல் இல்லை) முடிந்த பின் பாலுவை அவன் வீட்டில் விடும் வேலு அங்கு ஒரு சிறுவன் பாலுவை அப்பா என்று அழைப்பதையும், வீட்டு வாசலில் நிற்கும் இந்திரா அவனை ஏறெடுத்து பாராததையும் எண்ணி புழுங்குகிறான். மறுநாள் ஆபிசில் வேலுவின் கோவத்தை கண்டு பாலு, இந்திராவின் கதையை கூறுகிறான். கண்ணிழந்து அகதியாய் டில்லியில் தன்னால் காப்பாற்ற பட்ட இந்திரா தன் தங்கையை போல் என்றும், அவளது வாழ்விற்காக தான் எதையும் தியாகம் செய்ய தயார் என்பதையும் விளக்குகிறான். ஏற்கனவே பாலுவிடம் பெரும் கடமைப்பட்ட வேலு இதை கேட்டு அவன் மேல் இன்னும் அன்பை சொரிகிறான். இந்திராவை பார்க்க துடிக்கும் வேலுவை பாலுதான் அவ்வப்போது கட்டு படுத்தி வைக்கிறான்.
நாளாக நாளாக பாலுவின் மேல் சரோஜாவிற்கு காதல் பெருகுகிறது(யாருக்கு மாப்பிள்ளை யாரோ பாடல்). இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கும் வேலுவின் காரில் ஒரு நாள் இந்திரா வந்து விழ, அதை தாங்காமல் இரவில் அவளை காண வரும் வேலுவை மீண்டும் அவனது வீட்டில் கொண்டு விடும் பாலுவை சற்று சந்தேக கண்ணோடு பார்க்கிறாள் ஜானகி. தனக்கு திருமணமாகவில்லை என்று சொல்லும் பாலு தன் வீட்டில் ஒரு குருட்டு பெண்ணையும் ஒரு சிறுவனையும் வைத்து இருப்பது அவளுக்கு ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறது. மனைவிக்கு தெரியாமல் தனது சொத்தில் பாதியை பாலுவின் பெயரில் எழுதி, அதை இந்திராவிற்கும் பாபுவிற்கும் கொடுக்குமாறு கொடுக்க, பெரும் தயக்கத்திற்கு பிறகு ஏற்று கொள்கிறான் பாலு. தன் மகன் குமார் படிக்கும் பள்ளியிலேயே பாபுவையும் சேர்க்க செய்கிறான் வேலு.
சரோஜாவின் பால் காதல் பாலுவின் மனத்திலும் படர்கிறது (கொடி அசைந்ததால் காற்று வந்ததா பாடல்). பள்ளி நண்பனான பாபுவை தன் வீட்டிற்கு கூட்டி வரும் குமார், தன் தாயிடம் பாலுவின் மகன் என அறிமுகம் செய்ய ஜானகியின் மனதில் ஐயம் வேர் விட்டு வளர்கிறது. குடும்பத்தோடு சினிமா பீச் செல்ல தயாராகும் வேலு பாபு மரத்தில் இருந்து விழுந்து காயப்பட்ட செய்தி கேட்டு ஓடுவது ஜானகியின் மனதில் கோவத்தையும் பாலுவின் பால் வெறுப்பையும் அதிகரித்தது. அமைதியாக சென்ற தன் வாழ்வு பாலுவின் வரவால் சீரழிந்தது என்று அவனிடம் வெறுப்பை பொழிகிறாள். காயப்பட்ட பாபுவை கையில் ஏந்தி வாழ்வின் நிலைமையை எண்ணி பாடுகிறான் (பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடல்).
சரோஜாவின் காதலை அறிந்த ஜானகி அதை எதிர்க்கிறாள். வீட்டிற்கு வரும் பாலுவை வார்த்தைகளால் எரித்து கொட்டும் ஜானகி அவன் வரவால் தான் அவள் குடும்ப அமைதி ஒழிந்தது என்று சாடுகிறாள். மனம் கலங்கி செல்கிறான் பாலு ( உள்ளம் என்பது ஆமை பாடல்). பாலுவிற்கு பரிந்து வரும் சரோஜாவிடம், தனது ஐயத்தை சொல்கிறாள் ஜானகி. அக்காவின் வார்த்தையை கேட்டு பாலுவின் வீட்டிற்கு செல்லும் சரோஜா அங்கே பாபு பாலுவை அப்பா என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டு, பாலுவின் மேல் வெறுப்படைந்து வீடு திரும்புகிறாள். அவள் பின்னாலே உயிலை எடுத்து கொண்டு செல்கிறான் பாலு. நடந்ததை பாபுவின் மூலம் அறிந்த இந்திராவும் அங்கு செல்கிறாள். உயிலை அவர்களிடம் கொடுத்து விட்டு ஊரை விட்டு விலகி போக முடிவெடுக்கும் பாலு அங்கு வரும் இந்திராவை கண்டு திகைக்கிறான். தன் முன் யார் இருக்கிறார்கள் என்று அறியாத இந்திரா அவர்களிடம் தன் கதையை கூறுகிறாள். புனிதமான உறவை களங்க படுத்த வேண்டாம் என்று கெஞ்சும் இந்திராவை பார்க்க முடியாமல் தன்னை வெளி படுத்தி கொள்கிறான் வேலு. கதை கேட்ட உடனே உண்மை புரிந்து கொண்ட ஜானகி, இதயவலியால் அவதிபடுகிறாள். தான் இறப்பது திண்ணம் என்று உணர்ந்த ஜானகி, தன் மரணத்துக்கு பிறகு தன் கண்களை இந்திராவிற்கு பொருத்துமாறு கூறி அவர்களை இணைத்து மறைகிறாள்.
பார்த்தால் பசி தீரும்- ஒரு அலசல்
நட்புக்காக வாழும் ஒரு சிறந்த மனிதனின் கதை இது. நடிகர்திலகம் ஒரு மிகை நடிகர் என்று கூறுவோர் முகத்தில் கரியை பூசும் மிதமான ஆழமான நடிப்பு. பாடி லாங்க்வேஜ் என்றால் என்னவென்று இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து புரிந்து கொள்ளலாம். படத்தை ஓவர் டாமினேட் செய்யாமல் ஜெமினிக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து இருப்பார். விமான ஓட்டிகளில் தலைமை விமானி ஜெமினி, ந.தி. துணை விமானி தான். அந்த ஓவராலும் (போர் விமானி சீருடை) அந்த பழங்காலத்து தொப்பியும் அவருக்கு மிக பாந்தமாக இருக்கும். அந்த கம்பீர நடை, பின்பு கால் ஊனமுற்று விந்தியபடி நடக்கும் நடை அழகு, அது அவரால் மட்டும் தான் முடியும்.
குற்றவாளி கூண்டில் ஏறி, நேதாஜியின் புகழ் பாடும் நேரத்தில் பெருமிதம், ஜெமினியை தமிழ்நாட்டு காதல் மன்னா என்று அழைக்கும்போது ஏளனம், காயம் பட்ட கமலை கையில் வைத்து பாடும் போது ஆற்றாமை, சாவித்திரிக்கு நம்பிக்கை கொடுத்து பின் அதை நிறைவேற்றமுடியாமல் போகும் போது ஏற்படும் தவிப்பு, குடும்பத்தோடு வாழும் ஜெமினியை பார்க்கும் போதும் ஏற்படும் கோபம், திருட்டுத்தனமாக வரும் ஜெமினியை வீட்டில் கொண்டு விட்டு அவருக்கு புத்திமதி சொல்லும்போது கட்டும் முதிர்ச்சி, நடையில் கம்பீரம், கண்களில் கருணை என்று அனைத்தையும் கண்களாலேயே காட்டி இருப்பார்.
வேலுவாக ஜெமினி, அவர் நடித்த படங்களில் மிக சிறந்த ஒன்றாக இதை கருதலாம். காதல் காட்சிகளிலும், பின்பு இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் இடங்களிலும் வெளுத்து வாங்கி இருப்பார்.
சாவித்திரி பற்றி கூறவே வேண்டாம். குதூகலமான இந்த்ரோமாகவும், கண்ணிழந்த இந்திராவாகவும் நடிப்பை பிழிந்து தள்ளி இருப்பார். பாசமலர், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி போன்ற படங்களை போல் இப்படத்திலும் ந. தி. க்கு இணையாக நடித்து இருப்பார்.
சௌகார் ஜானகிக்கு டைலர் மேட் பாத்திரம் இது. வெகு பொசசிவான மனைவி பாத்திரம் அவருக்கு. இப்பாத்திரத்தை அவரை விட வேறு யாராலும் சிறப்பாக செய்து இருக்க முடியாது.
சரோஜாதேவிக்கு இப்படத்தில் அதிக வாய்ப்பில்லை. கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்து முடித்துள்ளார்.
கமலுக்கு இரண்டாவது படம், இரட்டை வேடம். லாப்படி பேசும் பாபுவிற்கு குமாரை விட வாய்ப்புகள் அதிகம். அதிகம் வராவிட்டாலும் படம் முழுதும் வியாபித்து நிற்பது அவரது நடிப்பு திறமையை அன்றே வெளிப்படுத்தியது. தங்கவேலுவுடன் காமெடி சீன்களிலும் வெளுத்து வாங்கி இருப்பார் அவர்.
தங்கவேலு, சரோஜா, c .k .சரஸ்வதி காமெடிக்காக வரும் ஊறுகாய்கள். இதில் சி.கே .சரஸ்வதி மிகவும் அடக்கி வாசித்து இருப்பார். உருளும் கண்கள் இதில் இருக்காது. மருமகளிடம் சதா சண்டையிடும் ஒரு நல்ல மனம் கொண்ட மாமியாராக வருவார்.
ஏவீஎம் வெளியீட்டில் வந்த படம் இது. நடிகர்கள் என்று பார்த்தால் 10 பேருக்கு மேல் கிடையாது. படத்தையே 10 காட்சிகளாக பிரித்து விடலாம். படத்தில் வில்லனே கிடையாது. பீம்சிங்கின் படங்களில் தவறாமல் வரும் எம்.ஆர். ராதா இதில் கிடையாது. ஏ.சி. திருலோகசந்தர் கதையில் ஆருர்தாஸ் வசனம் கோடையில் சாப்பிடும் தயிர்சாதமும் மாவடுவும் போல. மெல்லிசை மன்னர்களின் இசையில் மொத்தம் ஏழு பாடல்கள். பின்னணி பாடியவரோ மூன்றே பேர் தான். டி.எம்.எஸ். சுசீலா, ஏ.எல்.ராகவன்.
இந்த மொத்த பதார்த்தங்களை ஒரு தேர்ந்த சமையல்காரர் போல் சுவையாக சமைத்திருப்பார் பீம்பாய்.
கவியரசர் இப்படத்தில் தனது கற்பனை குதிரையை தட்டி விட்டு இருப்பார். மெல்லிசை மன்னர்களும் அவரது ரசனைக்கேற்ப மெட்டமைத்து இருப்பார்கள். கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா ஒன்றே போதுமே அந்த அதீதமான கற்பனை வெள்ளத்தை நாம் பாராட்ட. காட்சிக்கு தகுந்தாற்போல் பாடல்கள் இப்படத்தில் வருவது ஒரு சிறந்த விஷயம். பிள்ளைக்கு தந்தை ஒருவன் பாடலின் வேதனை நம்மை உருக்கும். கணவனை எண்ணி இந்திரா பாடும் அன்று ஊமை பெண்ணல்லோ நம்மை அப்படியே அழ வைக்கும். தமிழ் வாத்தியார் ஜெமினியின் அன்று ஊமை பெண்ணல்லோ நம்மை ஆட வைக்கும். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அமுதம் இப்பாடல்களும் அதன் இசையும்.
கணேசரின் அருளால் என்னால் இயன்ற வரை எழுதி விட்டேன். பிழை இருந்தால் பொருத்தருள்வீராக.
வாய்ப்புக்கு நன்றி