http://i50.tinypic.com/2poa8au.jpg
Printable View
gumanan savadi poonthamalli chennai
http://i50.tinypic.com/6f1no0.jpg
பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டை என்ற இடத்தில ஒரு கடையில் பூ வாங்கிகொண்டிருக்கும்போது அந்த கடையில் தலைவரின் படம் இருப்பதை பார்த்தோம் . உடனே நான் என்னம்மா சாமி படம் பக்கத்தில் தலைவர் படம் வைத்து உள்ளீர்கள் என்றேன் அதற்கு அந்த தாய் உடனே அவர் எங்கள் கடவுள் என்றார்கள் காரணம் கேட்டேன் .அவர்கள் கூறிய அந்த சம்பவம் என்னை மிகவும் நெகிழ்ந்தது அந்த அம்மாவின் அப்பாவிற்கு உடல்நலம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருந்தபோது தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர் .மருத்துவர் அவருக்கு ADMISSION தர மறுத்து உள்ளார்கள் காரணம் மோசமான நிலையில் அவர் இருப்பதால் உடனே அந்த அம்மா இராமவரம் தோட்டத்திற்கு வந்து தலைவரை பார்த்து நிலைமை அனைத்தையும் கூறி கண்ணீர் வடித்தார்கலாம் உடனே தலைவர் அந்த மருத்துவமனைக்கு PONE செய்து அவருக்கு ADMISSION தந்து அவரை காப்பாற்ற முயற்சி எடுங்கள் என்று கூறி அவர்களுடன் தனது PA வையும் அனுப்பி வைத்தார்களாம் அதுமட்டுமில்லாது அந்த பெரியவர் குணமாகி வீடு திரும்பும் வரை ஒருவரை அனுப்பி கவனிக்க செய்தாரம் .அந்த சமயத்தில் தலைவர் CM ஆக உள்ளார் அவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் ஒரு CM தன்னுடைய மனித நேயத்தை எவ்வளவு அருமையாக செய்து உள்ளார் என்று நினைக்கும்போது அதுதான் மக்களதிலகம் என்பது நமக்கு தெளிவாகிறது
கடையிலிருந்து நாங்கள் வரும்போது அந்த அம்மா சொன்னது எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள் அவருடைய படத்தை எவ்வளவு பெரியதாக வைத்து உள்ளோம் என்று கூறிக்கொண்டே கண்கலங்கினார்கள்
http://i45.tinypic.com/1gszgp.jpg
Vellore Ramamurthy Sir thanks for updating images from Re-release of Olivilakku in Broadway and the function images from Thiruvannmalai.
Some informations about MGR movies that are dubbed in Hindi and Telugu.
Telugu movies 60
Hindi movies 9
link for Telugu dubbed movies.
http://mgrroop.blogspot.in/2012/02/t...gr-movies.html
link for Hindi dubbed movies.
http://www.mgrroop.blogspot.in/2013/...-in-hindi.html
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
chennai otteri lakshmi theator from sunday onwards MAKKALTHILAKATHIN ANBEVAA
http://i50.tinypic.com/2pycj2x.jpg
thanks URIMAIKKURAL B.S.RAJU
THANKYOU RAVICHANDRAN SIR
http://i45.tinypic.com/2lu2khu.jpg
பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா அவர்கள் இன்று சென்னையில் காலமானார். மக்கள் திலகத்துடன் நல்லவன் வாழ்வான், அரசிளங்குமரி மற்றும் இதயக்கனி ஆகிய படங்களில் நடித்தவர். உரிமைக்குரல் மாத இதழ் நடத்திய மக்கள் திலகத்தின் விழாக்களில் அவர் கலந்துகொண்டபோது அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் வேண்டிக்கொள்வோம்.
ஒரு விழாவில் எடுத்த புகைப்படம் ஒன்றை இங்கே பதிவிடுகிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------http://i47.tinypic.com/2db57ur.jpg
RAJASULOCHANA WITH VENNIRA AADAI NIRMALA
We MGR Fans pray for Actress Rajasulochana soul to rest in peace.
The above image is from the 50th Year celebration (Golden Jubilee) of Nadodi Mannan, held in Chennai on 16th August 2009.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
================================================== ================================================== =============
அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்கள் பதிவிட்ட இந்த செய்தி உள்ளத்தை உருக்கி, நெஞ்சை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
மற்றுமொரு தகவல் :
அவர் முதல்வராக இருந்த போது, உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நேரம் அது. :
அந்த சமயத்தில், சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. செயலாளர் உ. தங்கசாமி அவர்கள் இயற்கை எய்தினார். தமது உடல் நிலையை பொருட்படுத்தாமல், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நமது பொன் மனச் செம்மல் அவர்கள், மறைந்த தங்கசாமி அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, இறுதி ஊர்வலத்திலும் பங்கு கொண்டார். இது காண்போர் அனைவரையும், பொது மக்களையும் வியக்க வைத்தது.
மேலும் ஒரு சம்பவம் :
1983ம் ஆண்டு, சென்னை திருவொற்றியூர் நகர அனைத்திந்திய அண்ணா தி. மு. க. துணை செயலாளராய் விளங்கிய தனபதி அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றிந்த சமயம், சிங்கள கயவர்களால் அங்கே படுகொலை செய்யப்பட்ட்டார். தகவலறிந்த நம் புரட்சித் தலைவர் அவர்கள், அகால மரணமடைந்த தனபதி உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்து விட்டு அன்றிரவே தனபதி அவர்கள் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல், எந்த உதவிகள் வேண்டுமானாலும் தம்மை எப்போதும் அணுகலாம் என்றும் கூறி, மறு நாள் சவ அடக்கம் செய்வதற்கும் வந்திருந்து தேவையான உதவிகள் புரிந்தார்.
தனி மனித வாழ்க்கையில், நம் மனங்கவர்ந்த மக்கள் திலகம் எம் ஜி. ஆர் அவர்கள், திரைப்பட நடிகராக இருந்த போதும் இது போன்ற பல மனித நேயப் பணிகளாற்றியுள்ளார்.
அவை பற்றிய பெரும்பாலான செய்திகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.
================================================== ================================================== ==
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
*மக்கள்திலகம் அண்ணா திராவிட முனேற்ற கழகம் தோற்றுவித்ததும் முதல் உறுப்பினர் அடையாள அட்டை*
http://i46.tinypic.com/53a5ic.jpg
மிக்க நன்றி செல்வகுமார் சார் இன்னும் இதுபோல வெளிவராத சம்பவங்கள் விரைவில் பதிவிடுகிறேன்
http://i49.tinypic.com/jjb409.jpg
]மக்கள்திலகதுடன் நடித்த பழம்பெரும் நடிகை
ராஜா சுலோச்சனா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
http://youtu.be/_ikrsyY32Nw
மனிதநேயம் என்றால் எம்.ஜி.ஆர்.