As per Newspaper ad, published by Pammalar, re-published by Ravikiran Surya in this page...
Theerpu ran 100 days in
Chennai - Shanti, Crown, Bhuvaneswari,
Madurai - Minipriya
Trichy - Maris Fort
Salem - Shanti
Kovai - Geethalaya
Nellai - Sivashakthi
Printable View
Rks தீர்ப்பு வந்து 32 வருடம் ஆகிறது.
Dear Senthil,
Wish You Many More Happy Returns
9, 3, 2 என்று வரிசை படுத்தி அலசினதில் nt யின் வீச்சு எவ்வளவு அழுத்தமாகவும் , ஆழமாகவும் இருந்தது என்பது தெரிய வந்திருக்கும் - அந்த படங்களின் வசூலையும் , வெற்றியின் ஓட்டத்தையும் தடுக்க முடியமால் அன்று துவண்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது -- பிறகு ஒரு படி முன்னே சென்று யாருமே செய்ய , விரும்பாத ஜோடி இல்லாத படங்களை அலசினோம் - அதிலேயும் NT யின் தனித்தன்மை , தன்னம்பிக்கை துல்லியமாக தெரிந்தது .துணிவே துணை என்று நடித்து வெற்றியை குவித்த படங்கள் ஏராளம் - அவருடைய துணிவைகண்டு உலகம் வியத்தது . இன்னும் ஒரு படி முன்னே சென்று , ஜோடி இருந்தும் டூயட் பண்ணாத படங்களை அலசினோம் - இலக்கிய காதலின் அருமை புரிந்தது - காதல் என்பது வெறும் கட்டி பிடிப்பது அல்ல , இரண்டு ஒருமித்த மனங்களை ஒரு எல்லைக்குள் கட்டி போடுவது என்பதை உணர்த்திய படங்கள் ஏராளம் - இருவரின் துடிப்பினிலே பிறக்கும் மழலையின் ஆனந்தத்தை விட ஒருவரின் துடிப்பினிலே கிடைக்கும் நடிப்பின் ஆனந்தத்தை நமக்கு எல்லாம் அள்ளி அள்ளி வழங்கினார் - ஜோடி இல்லாமலும் அவருடைய படங்களை ரசித்தோம்/ரசிக்கின்றோம் /ரசிப்போம் , டூயட் இல்லாமலும் அவரின் நடிப்பை அனுபவித்தோம் /அனுபவிக்கின்றோம் /அனுபவிப்போம் - இவர் படங்களில் கர்சீப் க்கும் குறைவான துணியை அணியும் பெண்கள் கதாநாயகிகளாக வருவதில்லை - மாறாக கர்சீபினால் கண்களை வருடும் உருக்கமான காட்சிகள் இருக்கும் - கனவில் தேவதைகள் ஹீரோ வை கட்டி பிடிக்கும் கட்சிகள் வராது - அந்த தேவதைகள் வானில் இருந்து இறங்கி அவர் படங்களை பார்க்கும் நிலைமை இருக்கும் - 100 பேர்களை சுண்டி விரலால் ஹீரோ அடித்து விரட்டும் காட்சிகள் இருக்காது - ஆனால் ஒரு சுண்டி விரல் மட்டுமே பேசி நடிக்கும் இயல்பான , கலப்படம் இல்லாத நடிப்பு இருக்கும் -
யாருமே செய்ய துணியாத , புழனின் உச்சியில் இருக்கும் போது செய்ய விரும்பாத , நெகடிவ் ரோல் க்கும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தவர் ஒருவர் உண்டு என்றால் அதுவும் நம் செவாலியர் தான் - அதைத்தான் இங்கே அலச இருக்கிறேன் - ஒரு புதிய கண்ணோட்டத்தில்
தொடரும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செந்தில் சிவராஜ் அவர்களே!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
பின்னலாடை தொழில் நகரமாம் திருப்பூரில் சென்ற 16.05.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக டைமண்ட் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது காலத்தால் அழியாத காதல் காவியம் வசந்த மாளிகை!
தகவலுக்கு நன்றி ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
பார்த்ததில் பிடித்தது -34
1977 ல் வெளிவந்த இளைய தலைமுறை படத்தை பற்றி தான் இந்த பதிவு .
கதை :
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி அலைகிறார் , வறுமை குடும்பம் , வேலை கிடைக்காததால் சொந்த வீட்டில் கூட அவமானம் , சம்பத்தின் தாய் மட்டும் கனிவாக இருக்கிறார் . வேலை இல்லாமல் அலையும் பொது சகுந்தலாவை (வாணி ஸ்ரீ ) சந்திக்கிறார் , மோதலில் ஆரம்பிக்கும் சந்திப்பு காதலில் முடிகிறது , சகுந்தலாவின் தாய்மாமன் அரசியல்வாதி
(MRR வாசு) சகுந்தலாவை கல்யாணம் செய்ய அசைபடுகிறார் . சகுந்தலாவின் வீட்டில் மீனாக்ஷி ஆட்சி . கணவர் (VKR ) மனைவின் பேச்சுக்கு கட்டுபடுகிறார் (மனைவி MN ராஜம் )
இந்த வீட்டில் தான் சம்பத்தின் தந்தை வேலை பார்க்கிறார் . சிபார்சு கடிதம் தரும் வாசு தன் முறை பெண்ணை தான் சம்பத் காதலிக்கிறார் என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்து கடிதத்தை கிழித்து போடுகிறார்
dunken கம்பனில் வேலைக்கு அழைப்பு வர , சென்னைக்கு செல்லும் சம்பத் கோட் சூட் இல்லை என்ற காரணத்தினால் வேலை கிடைக்காமல் போக நண்பரின் (KS விஜயன் ) உதவியால் தான் படிச்ச காலேஜ் ல் வார்டனாக சேருகிறார் .
அங்கே வார்டனாக சேர 3 கட்டளைகள்
1. லீவ் போட கூடாது
2. 3 வருடம் வேலை பார்க்க வேண்டும்
3. வேளையில் இருக்கும் பொது திருமணம் செய்து கொள்ள கூடாது
அந்த காலேஜ் ல் பிரச்சனை செய்யும் கூடத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் , அவர் கூட்டாளி YGM , ஜூனியர் பாலையா , விஜயகுமார் , பிரேம் ஆனந்த் மற்றும் சிலர்
இதில்
YGM - தினமும் நைட் ஷோ பார்ப்பவர்
ஜூனியர் பாலையா - காதல்வயப்பட்டு படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பவர்
பிரேம் ஆனந்த் - kleptomania என்ற திருட்டு எண்ணம் கொண்டவர்
விஜயகுமார் - சண்டியர்
மற்றும் ஒரு நபர் - chain smoker
ஸ்ரீகாந்த் - அணைத்து கேட்ட பழக்கத்தின் மொத்த உருவம்
இவர்களின் பிரச்சனையை சம்பத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீகாந்த் மட்டும் திருந்த மறுக்கிறார்
இந்த கூடத்துக்கு இடையில் அப்பு என்ற மாணவன் மட்டும் நன்றாக படிக்கிறார் , ஏழை , தாய் , தந்தை கிடையாது . ஸ்ரீகாந்த் ராக்கிங் செய்வதால் இறந்து விடுகிறார் .
சம்பத்தின் காதலி சகுந்தலாவின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணியின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார் சகுந்தலா
தன் தங்கையின் காதலை ஏற்க மறுத்ததுக்கு பழி வாங்க காத்து கொண்டு இருக்கிறார் விஜயன் , விஜயன் , ஸ்ரீகாந்த் இருவரும் சேர்ந்து சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
முடிவில் விஜயன் சம்பத்துக்கு உதவ ஸ்ரீகாந்த் மேல் தரவகம் விழுந்து விடுகிறது
'திருமணம் செய்தவர்கள் வாரடன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, சம்பத் வேலையை விட்டு விலக முடிவு செய்ய, சம்பத்தின் முயற்சியால் மாணவர்கள் திருந்தி இருப்பதை அறிந்து சம்பத் வேளையில் தொடர கல்யாணம் செய்து கொண்டு பணியில் தொடரலாம் என்று சலுகை கொடுக்க தன் சேவையை மாணவர்களுக்கு செய்கிறார் சம்பத்
சுபம்
படத்தை பற்றி :
இந்த படத்தை தான் அடுத்து பார்த்து விட்டு எழுத போகிறேன் என்று வீட்டில் என் அம்மாவிடம் தெரிவத உடன் அவர் அந்த படமா என்று கேட்ட போதே இந்த படத்தின் impact எப்படி என்று மனதுக்குள் நினைத்து கொண்டே தான் அதாவது ஒரு வித நெகடிவ் attitude உடன் பார்த்தேன் . படம் மோசமா ?
கிடையாது , படம் bore அடித்ததா இல்லை , படம் slow டாகுமெண்டரி பீல் உள்ள படமா கதை தான் அப்படி ஆனால் way of presentation was very good .
படத்தின் minus என்று நான் கருதுவது :
விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷ் மலையாளம் நன்றாக பேசுகிறார் ஆனால் சிரிப்பு ?
நடிகர் திலகமும் , விஜயகுமாரும் boxing போடும் காட்சி
இந்த இரண்டும் தான் minus
இந்த படத்தின் நடிகர்களின் பங்களிப்பை பற்றி எழுத போவது இல்லை , காரணம்
படத்தின் உண்மையான கதாநாயகன் கதை , திரைக்கதை , வசனம் எழுதிய மல்லியம் ராஜகோபால் , (சவாலே சமாளி ) மற்றும் compromise செய்யாமல் இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு
இந்த கதையை ,எப்படி தான் தான் இருக்கும் என்ற திரைகதையை ஒரு வித heroism கூட இல்லாமல் நடித்து கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் . அட மற்றவர்களை திருத்துவது கூட heroism தான் ரியல் ஹீரோ அதுவும் தான் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து அவர் பேசும் வசனங்கள் நச் , அதுவும் அவர் அன்று ஆளும் கட்சியை அதன் சில நடவடிக்கைகளை குறிப்பாக காலேஜ் ல் வந்து வாசு பேசும் வசனத்துக்கு ஸ்ரீனிவாசன் அரசியல்வாதி எப்போதும் வேலை பார்க்க விட மாட்டாங்க ? strike பத்தி பேசும் வசனமும் , தன் தந்தை இறந்து கூட தெரியாமல் இருந்து தன் தாய் சொல்லி தான் அந்த விஷயம் தெரிய வரும் போதும் , நடிகர் திலகம் உருகும் இடம், ராக்கிங் செய்ய படும் மாணவர் இறந்து போகும் காட்சியிலும் , அதுவும் அவர் கடிதத்தில் இருக்கும் வரிகளும் நம் கண்களில் கண்ணீர் குளம்
chain ஸ்மோகர் யை 50 பக்கங்கள் படித்து விட்டு 1 cigarette பிடி என்று சொல்லும் இடமும்
பாலைய்யாவின் காதலை சேர்த்து வைப்பதும்
- kleptomania உள்ள sabastain யை எல்லா பொருள்களிலும் சிலுவை உள்ளதாக நினைத்து கொள் திருடும் எண்ணம் வராது என்று சொல்லும் போதும்
விஜய்குமர்க்கு பீஸ் கட்டுவதும்
என்று மாணவர்களின் வளர்ச்சிக்கு என்று பல காட்சிகள்
பாடல்களில் :
யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' மூன்றும் நல்ல பாடல்கள் என்றாலும்
இளைய தலைமுறை... இனிய தலைமுறை' என்ற டைட்டில் பாடல் , கருத்து அதிகம்
ஒரே வரியில் :
கருத்து அதிகம் , கதை என்ற பாதையில் விலகாமல் செல்லும் படம் என்றும் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம்.
நடிப்பினால் பாசிடிவ் ஆன நெகடிவ் ரோல்(ஸ் ) - தொடருகின்றது
1. திரும்பிப்பார் -1953 ( 5வது படம்)
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த படம் - ஒரு காமுகனை இவ்வளவு அழுத்தமாக , அழகாக காட்ட முடியுமா ? - அவனை திட்டுவதற்கு பதிலாக , சீக்கிரமே திருந்த கூடாதா என்று ஏங்க வைத்த படம் - தோல்விகளை அவர் திரும்பி பார்க்காமல் உயர்வின் உச்சிக்கு எடுத்து சென்ற படம்
2. இல்லற ஜோதி -1954 ( 11வது படம்)
கட்டிய மனைவியின் அன்பை வெறுத்து வேறு ஒரு பெண்ணின் நட்பை நாடிய படம் - பெண்களின் வெறுப்பை பெறக்கூடிய படம் - கலங்கினாரா - நடிக்க அஞ்சினாரா ?? பார்த்தவர்களை கலங்க வைத்தார் தன் நடிப்பினால்
3. அந்த நாள் -1954 ( 12வது படம்)
தேச துரோகி - பணத்திற்காக பிறந்த நாட்டை விலை பேசும் வேடம் - தன திறமையை உலகம் புரிந்துகொள்ளவில்லையே என்ற கோபம் - அவருடன் சேர்ந்து நம்மையும் கோபப்பட வைத்தபடம் - பாடல் இல்லை - டூயட் இல்லை - ஏன் உயிரே இல்லை முதல் காட்சியில் இருந்து - முழுவதும் ப்ளாஷ் பாக்கில் - யாருமே நடிக்க முடியாத படம் - "அந்த நாள்" வாழ்வில் மறக்க முடியாததாகி விட்டது .
4. துளி விஷம் -1954 (16வது படம் ) - ஒரு துளி விஷத்தை தன் எழுத்தின் திறமையினால் அமுத கலசமாக்கிய வாசுவின் பதிவுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தை பற்றி எழுத எனக்கு திறமையும் இல்லை ,மனதில் துணிவும் இல்லை .
5. கூண்டுக்கிளி -1954 (17வது படம் )
தனக்கு பார்த்த பெண் தன் நண்பனின் மனைவியாகி விடுகிறாள் - அவளை அடைய விரும்புகிறான் - ஹீரோ வான ஒரு வில்லன்
6. கள்வனின் காதலி -1955 ( 25வது படம்) பெயருக்கு ஏத்தார் போல வேடம் - வெளிசிறையில் இருந்து தப்பித்து நம் மன சிறையில்- தங்கிவிட்ட படம்
7.நானே ராஜா -1956 ( 28வது படம்) : அருமையான நெகடிவ் வேடம் -ஆனால் அன்றே எல்லோர் மனதிலும் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்த படம்
8. பெண்ணின் பெருமை - 1956 (30வது படம்)
தம்பி கெட்டவன் - அண்ணன் வெகுளி - அண்ணி அவனை படிபடி யாக உலகத்தை புரிய வைக்கின்றாள் - தம்பியையும் திருத்துகின்றாள் - NT யும் GGம் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் - NT யின் நடிப்பினால் பெருமையும் , வெற்றியும் பெற்றது .
9.ரங்கூன் ராதா -1956 (34வது படம் )
கட்டிய மனைவியை பைத்தியம் என்ற பட்டத்தை சுமத்தி , அவளின் சகோதரியையே மணந்து கொண்டு அட்டகாசம் புரிந்த படம் - SSR , NT க்கு மகனாக நடித்த படம் - யாருமே ஏற்று கொள்ள முடியாத வில்லன் வேடம் - மனதில் நின்றது நடிப்பினால் .
10. பாக்கியவதி -1957 ( 43வது படம் )
அழகிய மனைவி , இருந்தும் அடுத்த வீட்டு மல்லிகையின் வாசம் அவனை தப்பான வழிக்கு இழுத்து சென்றது - தப்பானவன் - இருந்தாலும் அவனின் நடிப்பு எல்லோரையும் கட்டி போட்டது - அவன் பனியனை போல வந்த பனியன்களை போட்டு திரிந்த பாக்கியசாலிகள் அன்று எவ்வளவு பேர் ?!
11. உத்தம புத்திரன் -1958 ( 45வது படம்)
பார்த்திபனை கூட மறந்து விடலாம் - விக்கிரமனை எப்படி மறுக்க , மறக்க முடியும் ? "ஹ " என்று அலட்சியமாக சொல்லி 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் - அன்று ஸ்ரீதரின் வாழ்விலே ஒரு பொன்னாள் !
12. அன்னையின் ஆணை -1958 ( 49வது படம்)
நல்லவன் - தாயிடம் தகாத முறையில் நடந்தவனிடம் வில்லனாக மாறும் வேடம் - காதலியின் தந்தைதான் விரோதி அப்படி இருந்தும் தந்தை இருக்கும் இடம் சொல்லாமல் காதலியை மென்மையாக கையாண்ட படம்
13. தெய்வ பிறவி -1961 ( 61வது படம் ) - மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அவளை தகாத வார்த்தையினால் புண் படுத்தும் வேடம் - அருமையாக , பார்பவர்களுக்கு அதிருப்தி வராமல் நடித்திருப்பார் - NT ஒரு தெய்வ பிறவி என்று உலகத்திற்கு பறை சாற்றிய படம்
14. புனர் ஜென்மம் -1961 ( 68வது படம் )
ஹீரோ ஒரு குடிகாரன் சந்தர்ப்ப வசத்தினால் - குடியின் கொடுமையை விளக்கும் அருமையான படம்
15. நிச்சிய தாம்பூலம் - 1962 (76வது படம்)
காதலித்த பெண் , மனைவியாக வந்தபின் , சந்தேகமும் கூட வே வந்தால் ' படைத்தானே " என்றுதானே பாட வேண்டியிருக்கும்
16.ஆலய மணி - 1962 (83வது படம் )
நல்லவன் - கர்ணனை போல் அள்ளித்தரும் குணம் உடையவன் - இருந்தாலும் தோல்விகளை வெறுப்பவன் -பொது நலத்திலும் , சுயநலத்திற்கு அடிமையானவன் - சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் விஸ்வ ரூபம் எடுக்கும்போது அதன் வீச்சில் மாட்டிகொண்டவன் - split personality யை எவ்வளவு அழகாக இதுவரை எடுத்து சொன்னதில்லை , நடித்து காட்டியதும் இல்லை
17. இருவர் உள்ளம் - 1963 ( 86வது படம்)
பறவைகள் பலவிதம் என்று வாழ்ந்தவன் - நடத்தையினால் கெட்டவன் என்ற பழியை சுமந்தவன் - திருந்தும் போது - சட்டம் அவனை சிறைக்கு அழைக்கின்றது - கெட்டவன் திருந்த முடியாதா என்று உருக்கமாக அவன் கேட்க்கும் போது கலங்காத கண்கள் இல்லை
18. பார் மகளே பார் - 1963 ( 89வது படம்) - கண்டிப்பான தந்தை - அந்த கண்டிப்பு எல்லையை மீறும் போது வில்லனாக தென்படும் நடிப்பு
19. கல்யாணியின் கணவன் -1963 ( 92வது படம் )- காதலியை சந்தேகிக்கும் வில்லத்தனமான வேடம் - அருமையான காதலை ஆரபோடுகின்றது
20. நவராத்திரி -1964 (100வது படம்) - ஒன்பதில் இரண்டு வேடங்கள் - கொலை செய்தவன் ஒருவன் , காமுகன் ஒருவன்
21. திருடன் -1969 ( 133வது படம்) - வெறும் பெயரில் தான் திருடன் - திருடியதோ நம் எல்லோர் மனத்தையும்
22. இரு துருவம் -1971 ( 144வது படம்) - சந்தர்ப்ப வசத்தால் கொள்ளை கூட்டத்திற்கு தலைவனாகுகி றான் - தம்பியினால் மரணத்தை தழுவுகிறான் - தேறு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணை திருடிகொண்டும் போகும் அவரின் நடிப்பு -NT வானில் மின்னும் ஒரு துருவ நட்ச்சத்திரம் என்பதை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கும் .
23.வசந்த மாளிகை - 1972 ( 159வது படம்) - குடிக்கும் , கூத்துக்கும் அடிமையானவன் - திருத்த ஒருவரும் இல்லை - தாய் உண்டு - பாசம் இல்லை - அண்ணன் உண்டு - அறவனைக்கும் கரங்கள் இல்லை அங்கே - அண்ணி உண்டு - ஆதரிக்கும் வார்த்தைகள் இல்லை அங்கே - காதலி உண்டு - அதனால் போகும் உயிரை திரும்பவும் பெறுகிறான் - காதலை ஒரு கவிதையாக்கிய ஒரே படம் - அன்றும் , இன்றும் , என்றும் .
24. உனக்காக நான் - 1976 ( 181வது படம் ) - பணக்காரன் - கூடவே வரும் திமிர் - தன் நண்பன் ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை வெறுக்கிறான் - தெரிந்தே நெகடிவ் ரோல் யை எடுத்துகொண்டு சோபித்த படங்களில் இதுவும் ஒன்று
25 தீபம் -1977 ( 188வது படம்) - தன் காதலி தனக்கு கீழ் வேலை செய்யும் ஒருவனை காதலிக்கிறாள் என்று புரிந்துகொண்டு அவனை கொன்று விட நினைக்கும் வேடம் - அவன் தனது தம்பி என்று உணர்ந்துகொண்டபின் அவனுக்காக வாழும் பாத்திரம்
26. என்னைப்போல் ஒருவன் (1978) - 194வது படம் - இரு வேடம் - ஒருவன் மிகவும் நல்லவன் - அடுத்தவன் மதுக்கும் , மாதுவிற்கும் அடிமையானவன் - NT யை போல நடிக்க யார் இருக்கிறார்கள் உலகில் ??
27. கருடா சௌக்கியமா ? (1982) - 222வது படம் - சாதாரணமாக இருந்த ஒருவனை சந்தர்ப்பம் ஒரு DON க மாற்றி அமைத்தது
முற்றும்
ராகுல், கொஞ்சம் தாகத்தை அடக்கலாம் என்று சற்றே வெளியே செல்வதற்குள் - மழையாக பொழிந்து விட்டீர்கள் - என்ன வேகம் , !என்ன அலசல் ! நீங்கள் இளைய தலைமுறையை சேர்த்தவர் தான் என்பது எவ்வளவு உண்மை !!
தொடுருங்கள்
திரு.செந்தில் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
dear rahul,
ilaya thalaimurai reallly a good movie.
very good chemistry pair of NT and vanishree
unfortunately failed in the box office.
Between 1977 to 1982 why NT has not chosen CVR/some new directors
After unakkaga naan(1976) CVR came into picture only in sangili/santhippu
if this ilaya thalaimurai handled by CVR, result could have been different
just for discussion sharing some thoughts
gk
ராகுல் ரவி வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி ப்பட்டம் பெற்றுவிட்டீர்கள்..எனக்குப் பொறாமையாக உள்ளது..:) இளைய தலைமுறை நான் பார்த்திராத படம்.. நன்றி ராகுல்
//இளைஞர் என்பதன் வயது வரம்பு என்ன? (நானும் அந்த அணியா என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை - அவ்வளவுதான்)// நானும் தெ கொ ஆ..
அப்புறம் கோபால் இந்த பாராட்டிக், வெட்டி ஒட்டிக், தவிர ஒரு கட்டுரை கொடுங்களேன் புச்சா..(சி.க வின் சி ஆசை)
We have to salute the efforts of Mr Ravi and Mr Rahul in taking this
prestigious thread to the new level. Please keep up the tempo.
Regards
மிக்க நன்றி
ரவி சார் ,கோபால் சார் , kc சேகர் சார் ,சின்ன கண்ணன் சார் , வாசுதேவன் சார்
நெல்லை சீமையில் ஓரிரு வாரங்களுக்கு முன் குணசேகரன் திரையரங்கில் காட்சி தந்து மக்கள் மனதில் ராஜாவாக முடி சூடினார் என்றால் நாளை 23.05.2014 வெள்ளி முதல் அந்த ராஜாவே வந்து ஆளப் போகிறார். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் நாளை முதல் தினசரி 4 காட்சிகளாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா விஜயம்.
நன்றி திரு ராமஜெயம் அவர்களே!
அன்புடன்
சின்னதாய் நடிகர் திலகத்துக்கு ஒரு அந்தாதி (பத்து வெண்பாக்கள்) எழுதிப் பார்த்தேன்..
***
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
*
என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
நடிகர் திலகம் நடிப்பு
*
நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
வடிக்கின்ற ஆற்றல் அறிவீர் – விடியாத
வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
மின்னலாம் ஆவார் அவர்..
*
அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
பக்குவமாய்ப் பெற்றவர் பார்..
*
பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
ஊரில் இவர்போலே யாருமிலை – நேரிலோ
மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
தன்னிறைவு பெற்றவர் தான்..
*
தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மை
புறந்தள்ளி விட்டவர் தாம்..
*
தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
கண்ணைக் கவர்ந்தவர் காண்..
*
காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..
*
தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
திண்ணமாய்ச் செய்தவர் தான்..
*
தான்தான் குழம்பெனில் தக்க ர்சமாக்க
வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
காட்டியவர் நம்மிடம் ஆம்..
*
ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
சிந்தை நிறைந்தவர் தான்
*
சமீபத்தில் குடும்பத்துடன் ஏற்காடு சென்றிருந்தேன். அங்கு அன்னலெட்சுமி என்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு அருந்தச் சென்றேன். அப்போது அந்த ஹோட்டல் ஹாலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட அனைத்து திரைக் கலைஞர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. பிரதானமாக நம் நடிகர்திலகத்தின் கர்ணன் திரைப்பட புகைப்படம் இடம்பெற்றிருந்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அதன் பின் அங்கு வந்திருந்த பலரும் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எனக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
http://i1234.photobucket.com/albums/...ps1d8879df.jpg
Ck - கண்ணதாசன் , வாலி , கல்யாண சுந்தரம் , வைரமுத்து இவர்கள் வரிசையில் நீங்கள் வருவீர்கள் என்பது அறிந்ததே - இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று -
முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்திதில் ஒரு பதிவு - இதற்கே ஒரு தனி சபாஷ் கொடுக்கலாம் :)
வெண்பாக்களில் தமிழை அதனின் விருப்பத்தில் விளையாட விட்டுருக்கிண்டீர்கள் - இவ்வளவு சுதந்திரம் தமிழுக்கு கொடுத்து வேலை வாங்கினவர்களை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை - தமிழை தமிழாக படிக்க வைத்ததற்கு இன்னும் ஒரு சபாஷ் .. :-D:)
அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை ! :(
Kcs - மகிழ்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு - பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது , அதன் அளவு பல மடங்கு அதிகரிக்கின்றது - பல தடவை வெளிநாட்டுக்கு செல்லும் போது , ஒரு நல்லா தமிழ் பேசுபவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன் - கிடைத்தவுடன் என்னவோ அந்த நாடே நமக்கு அடிமை என்ற எண்ணம் வந்துவிடும் - இப்படித்தான் நம் கர்ணனை எங்கு சந்தித்தாலும் நமக்கு ஏற்படும் உண்மையான உணர்வு - நன்றி உங்கள் மகிழ்ச்சியை இந்த திரியில் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி ரவி :) ஆமா புரியாம நானெங்கே எழுதினேன்.. :)
//அழுகை பாதி , சிரிப்பு பாதியாக இருந்தவர் , கவிகுயிலாக மாறிய காரணம் தான் புரியவில்லை !// ஆமா நீங்களும் ராகுலும் கேப் பே கொடுக்காம விளையாடிக்கிட்டிருக்கீங்க.. நானெந்து செய்யு :) அதான் எனக்கு (கொஞ்சம்) தெரிந்த படி எழுதிப் பார்த்தேன்..அதிலயும் கொஞ்சம் தப்பிருந்ததா (இலக்கணம்) நைஸா கரெக்டும் பண்ணிட்டேன் :)
கண்ணா! உங்கள் தமிழார்வத்தையும் கவிதை எழுதும் திறன் பற்றியும் மற்றவர்கள் புகழ்வதை படித்திருக்கிறேன். ஆனால் நேரிடையான வாசிப்பு அனுபவம் இல்லை. உங்கள் நடிகர் திலகம் அந்தாதி படிக்கும் போதுதான் தெரிகிறது. அந்த பாராட்டுகளுக்கெல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று. முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
நிறைய எழுதுங்கள்!
அன்புடன்
சேகர் சார்,
ஏற்காடு போஃட்டோ ஒரு சுவையான செய்தியை வெளிப்படுத்துகிறது. அதாவது நமது கண்ணுக்கு தென்படாமல் எத்தனையோ சிகர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதைதான் சொல்கிறேன். நன்றி!
ரவி,
நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி எழுதும்போது அதற்கு பிடிக்கும் டைட்டில் இருக்கிறதே அதுதான் கூடுதல் சுவாரஸ்யம். லேட்டஸ்ட் உதாரணம் ஜோடிகள் இல்லையடி பாப்பா! வாழ்த்துகள்!
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.
இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.
இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.
(தொடரும்)
அன்புடன்
முரளி சார்..மிக்க நன்றி..
அன்பின் சந்திர சேகர் சார் நன்றி
//ஒண்ணு கூடிட்டாய்ங்கைய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க // கோ..பா..ல்.. என்னப்பூ இப்படிச் சொல்றீங்க.. நாங்க எங்கிட்டு இருந்தாலும் ஒத்துமையாத் தான் இருப்போம்ல..:)//திருவள்ளுவர் பஸ்ஸில் போகும்போது மதுரை பஸ் ஸ்டாண்டு வழியாக போனவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்// அட ஆமாம்..இப்பத் தான் புரியுது நீங்க எப்படி நல்லா எழுதறீங்கன்னு.. :)
சின்னகண்ணன் சார் ,
தமிழில் நன்றாக கவிநயத்துடன் எழுதி உள்ளீர்கள் , இப்படியும் எழுதலாமோ ? நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்
டியர் kc சேகர் சார்,
கர்ணன் படத்துடன் உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி
முரளி சார்
எங்களையும் மதுரைக்கு அழைத்து சென்று விடுகிரிர்கள் உங்கள் எழுத்தின் மூலமாக
நீங்கள் திரையில் பார்த்த அத்தனை படங்களை பற்றியும் எழுத வேண்டும் , குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை (உதரணமாக திரிசூலம் , தில்லானா , சிவந்த மண் இன்னும் பல )
பார்த்ததில் பிடித்தது -35
சென்ற பதிவில் கருத்து அதிகம் உள்ள படத்தை பற்றி எழுதியாதை தொடர்ந்து இந்த பதிவில் 1975 ல் வெளி வந்த action adventure படமான வைர நெஞ்சம் படத்தை பற்றி தான் இந்த தடவை அலசி உள்ளேன்
கதை :
ஒரு வங்கியின் உரிமையாளர் வங்கியில் ஊழல் செய்து விட்டு , அதை சரி கட்ட முடியமால் தற்கொலை செய்து கொள்ளுகிறார் , அவர் இறந்த பிறகு அவர் மகன் முத்துராமன் அவர் தந்தையின் பதவியில் அமர , அவருக்கு அவர் தந்தை எழுதிய கடைசி கடிதம் கிடைகிறது , அதில் தான் செய்த ஊழல் பற்றி அவர் எழுதி குறிபிடுகிறார் , இன்னும் சில நாட்களில் ஆடிட்டிங் செய்ய இருப்பதால் , முத்துராமன் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார் , அந்த நேரத்தில் முத்துராமனை அணுகிறது ஒரு கொள்ளை கும்பல் . அதாவது கொள்ளை நடந்தால் தவறு மறைந்து விடும் என்பது அந்த கொள்ளை கும்பலின் தலைவரின் ஆசை வார்த்தை , அதற்க்கு உடன் படுகிறார் முத்துராமன்
கொள்ளை நடந்து விடுகிறது , ஆனால் அதை பார்த்து விடுகிறார் முத்துராமனின் தங்கை பத்மப்ரியா .
அடுத்த காட்சியில் நடிகர் திலகம் கடத்தல்காரனாக அறிமுகம் ஆகிறார் , பிறகு தான் தெரிய வருகிறது , அவர்
கடத்தல்காரன் இல்லை , நடந்த பேங்க் கொள்ளையை கண்டு பிடிக்க வந்து இருக்கும் துப்பறியும் அதிகாரி என்று , முத்துராமன் அதிர்ச்சி அடைகிறார் , தன்னை இயக்கம் , ஆட்டி படைக்கும் கொள்ளை கும்பல் தலைவனிடம் இந்த விஷயத்தை சொல்ல , நடிகர் திலகத்தை கொள்ள முத்துராமனை பணிகிறார் , முத்துராமன் நடிகர் திலகத்தை கொன்றாரா? அந்த கொள்ளை கும்பலின் தலைவன் யார் ?
இந்த கேள்விகளுக்கு பரபரப்பாக விடை சொல்லும் படம் தான் இந்த
வைர நெஞ்சம்.
பாத்திரங்களின் பங்களிப்பு :
நடிகர் திலகம் :
திருடானாக அறிமுகம் ஆகி பின்பு துப்பறியும் அதிகாரி என்று தெரிய வரும் பொது இப்போது பார்த்தாலும் விறுவிறுப்பு , இவர் பாத்திரம் travel பண்ணும் விதத்தில் தான் இந்த படத்தின் மர்ம முடிச்சு அவிழ்க்க படுகிறது
படம் ஆரம்பித்து அரை மணி நேரம் பிறகு தான் நாயகனின் அறிமுகம் , புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கைவனம் , வேலை கோட் போட்டு கொண்டு அவர் நடந்து வரும் பொது மிக அழகான, மிக இளைமையான நாயகனாக தெரிகிறார் , அதற்க்கு அப்புறம் வழியில் நடக்கும் சண்டை , பெட்டிக்கு டபுள் டோர் என்று james bond முத்திரை அதிகம்
தன்னை தான் தன் நண்பரின் தங்கை சந்தேகிறார் என்பதை அறிந்து கொண்டும் அதற்கு அதிகமாக அலட்டி கொள்ளாமல் அவர் வேலையை பார்ப்பது கூல் attitude .
தன்னை அதிகமாக சந்தேகித்து டைரக்ட் ஆக கேள்விகளை கேட்கும் பொது அவர் உண்மையை கொட்டும் இடம் படத்தின் ட்விஸ்ட் , நடிகர் திலகத்தின் ஸ்டாம்ப்
பல james bond படத்தில் ஒரு emotional bonding என்பது இருக்காது , ஆனால் நடிகர் திலகம் காதல் காட்சிகளில் கலக்கி இருப்பார் , அதற்க்கு அவர் தோற்றமும் ஈடு கொடுக்கும்
முத்துராமன் :
செகண்ட் ஹீரோ - நடிகர் திலகத்தின் பல படங்களில் இந்த படத்தில் இவர் பாத்திரம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் அப்பாவின் தவறுக்காக இவர் தப்பு செய்ய போக , இவர் மாட்டி கொள்ளுகிறார் . தன் நண்பர் துப்பறியும் அதிகாரி என்பதை அறிந்து அவர் முகத்தில் பல reactions , தன் நண்பரை கொலை செய்ய அவர் நிர்பந்திக்க படும் பொது , அவர் அதை செய்வதும் ,பிறகு குற்ற உணர்ச்சியால் துடிப்பதும் நன்றாக செய்து இருப்பார்
பத்மப்ரியா :
ஒரு James Bond படத்தில் நாயகிக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ இந்த படத்திலும் அதே அளவு தான் , காதல் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் , நடிகர் திலகத்தை அவர் சந்தேக்கும் காட்சிகள் , முதலில் மோதல் , பிறகு காதல் என்று வழக்கம் போலே காட்சிகள் . இவர் நாயகனுக்கு உதவும் காட்சிகளில் கதையின் நாயகியாகவும் செயல் படுகிறார்
வில்லனாக பாலாஜி :
இவர் பாத்திரத்துக்கு அதிகம் வலு சேர்த்து இருக்கலாம் படத்தின் வெற்றி விச்சு அதிகம் ஆகி இருக்கும்