Originally Posted by
kaliaperumal vinayagam
இன்றும் திரையுலகை ஆளும் தர்மதேவன்
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான் கராத்தே திரைப்படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் அறிமுக காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நாளை நமதே திரைப்படங்களின் சுவரொட்டிகளை திரும்ப திரும்ப காண்பிப்பார்கள். மேலும் நாயகன் குத்து சண்டை போட்டியிடும்போது நடுவராக வரும் சூரி, ப்ரூஸ்லீ, எம்ஜிஆர் சண்டை போட்ட இடத்தில் இவனும் சண்டை போடுகிறான் என்பார். சமீபத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில், இதய தெய்வத்தின் தாக்கம் பெரிதும் காணப்படுவது, இவர் இல்லாமல் அன்றும், இன்றும், என்றும் திரைப்படங்கள் வெளிவராது என்பதையே காட்டுகிறது
இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்தும் புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் இன்றைக்கு 13வது நாளாக வெற்றிகரமாக ஓடுவது உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் என்பதை நிரூபிக்கிறது. மேலும் என்றைக்கும் வசூல் சக்ரவர்த்தி எம்ஜிஆர் என்பதை உணர்த்துகிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்