evaru monagadu is vallavan oruvan remake only (or could be simulataneous production)
Printable View
evaru monagadu is vallavan oruvan remake only (or could be simulataneous production)
Thank you வாசு சார் for the Telugu version of my favourite song 'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்'.
Here is the original Hindi song from which the tune was adapted by Vedha for IRU VALLAVARGAL:
https://www.youtube.com/watch?v=vAD33F3s1VM
Mohamad Rafi and Suman Kalyanpur singing the composition of Shankar/Jaikishan for Biswajeet and
Saira Banu in the movie APRIL FOOL (1964)
நன்றி ராகதேவன் சார். பிஸ்வஜித் நம்ம ஊரின் அந்தக் கால நம்பியார் போல மொழு மொழு என்றிருப்பார். சுமன் கல்யாண்பூர் எனக்கு மிகவும் பிடித்தமான பாடகி.
ஜி!
நலமா? தாங்கள் மீண்டும் களம் கண்டிருப்பது களிப்பைத் தருகிறது. இப்பதான் எங்கள் பழைய ஜி.
'எவரு மொனகாடு' 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தின் ரீமேக் அல்லவா?
சுமன் கல்யாண்பூர் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல். 'BAAT EK RAAT KI' படப் பாடல். ஹேமந்த் குமார் உடன் பாடுவார். தேவ், வஹீதா நடிப்பில். வாவ்! என்ன ஒரு பாடல்!
Na Tum Hame.N Jaano,
Na Ham Tumhen Jaanen
Magar Lagataa Hai Kuchh Aisaa,
Meraa Hamadam Mil Gayaa
https://youtu.be/hGOkuBTtBu0
மது அண்ணா!
பிழைத்தேன்.:) எனக்கு எப்போ விஸ்வாவைப் பார்த்தாலும் அந்தக்கால மீசை இல்லாத 'வழுவழு நம்பியார்தான் ஞாபகத்துக்கே வரும். மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை படங்களில் அப்படியே பிஸ்வஜித் போலவே இருப்பார்.
https://i.ytimg.com/vi/HRyKGoZ_gvY/hqdefault.jpghttp://padamhosting.me/out.php/i1326...9h09m37s33.pnghttp://bharatdiscovery.org/w/images/...Chatterjee.jpg
nambiyarai vida innum azhaguppa .. biswajit
ராஜேஷ்...
பத்மப்ரியா கூட ஹேமமாலினி போல ஜாடையில் இருப்பார்.. இதில் அழகு பத்தியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. Just இவரைப் பார்க்கிறபோது அவர் நினைவு வரும். அம்புட்டுதேன்.
வாசு ஜி... ஒரு பாட்டு டவுட் கேட்டிருந்தேன்..ஹி ஹி.. நானே கண்டுபிடிச்சுட்டேன். சிரித்த முகம் படம்.. ஈஸ்வரியும் டி.எம்.எஸ்ஸும் கலக்கும் பாட்டு..
மச்சி வந்து மச்சானுக்கு வச்சா பாரு விருந்து...
நல்லாவே கண்டுக்கினேன் மதுண்ணா! எனக்கும் நல்லாத் தெரியும். உங்க மிடில் வரியைப் படிச்சதுமே தானாகவே பாட ஆரம்பிச்சுட்டேன். பல்லவி வரும் போது மக்கர் பண்ணுச்சு. ஏன்னா பல்லவி டியூன் வேற. நிறைய தடவை கேட்டிருக்கேன். செம குத்து அந்த வரிகளில்.! ஆனா இப்போ உங்க பதிவைப் பார்த்ததும் கிளியர் ஆயிடுத்து
மச்சி மச்சி என் மச்சிகளா
இந்த மாமன் மேல் ஆச வச்சீகளா
இந்தாங்க. இப்போ பாட்டையும் கேட்டுடலாம்.
http://www.inbaminge.com/t/s/Siritha%20Mugam/
மது அண்ணா!
'சிரித்த முகம்' என்றாலே 'சடார்'னு
'வா காதல் செய்து பார்ப்போம்' ஏ.எல்.ராகவன், ராட்சஸி பாட்டுதான் நினைவுக்கு வந்தது.
'ராஜாத்தி கூந்தலுக்கு ரோஜாப்பூ வங்கி வந்து' பாடல் நினைவில் இருந்தாலும் பாலையா 20 வயது இளைஞன் மாதிரி 'வா காதல் செய்து பார்ப்போம்' என்று பாடி ஜோடியுடன் ட்விஸ்ட் ஆடுவது மட்டும் நினைவில் இருக்கிறது. பாண்டி அஜந்தா தியேட்டரில் ஓடிச் சென்று படம் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது.
ஈஸ்வரி 'அஹ்ஹோ' என்று நடுவில் அமர்க்களம் பண்ணி 'பாலையா' என்று கொஞ்சுவதும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடல் வரிகள் மனப்பாடம்.
சூப்பர் பாட்டு மதுஜி! மியூஸிக் அமர்க்களம்.
வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
வா காதல் செய்து பார்ப்போம்
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு
ஹா..ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு
அய்யய்யே அம்மம்மா
அறுபதான வயசு
ஆனாலும் என்னம்மா
ஆசைதானே பெரிசு
(வா காதல்)
தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!
வா! வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!
தா! தா! ஜோராகத் தா! நீ தருகின்ற சுகமென்ன!
வா வா நேராக வா! என் வயசுக்கு இது என்ன!
சேரன் சோழன் என்று மன்னர் யாவும் நீரய்யா!
('ஹ... யாரங்கே? என்று பாலையா மன்னர் தோரணை காட்டுவார்)
சேரும் ஆசை கொண்டேன்
நானும் உந்தன் பால் அய்யா:)(பாலையா)
மனதில் வந்தது ஷோக்கு
நாம் ஆடிடுவோம் இனி ஷேக்கு
(வா காதல்)
தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு
(ஒரு நாள் போதுமா' வுக்கு பொருத்தமாக வரி)
நீதான் தோதானவள் இந்த 'திருவருட்செல்வ'னுக்கு... ஹோ
தேன் தேன் நானே வந்தேன் உன் 'திருவிளையாடலு'க்கு
நீதான் தோதானவள் இந்த திருவருட்செல்வனுக்கு
ஆயர் பெண்கள் கொஞ்சும் காதல் கண்ணன் நீரய்யா!
ஆசை வள்ளி நெஞ்சில் ஆடும் கந்தன் பாலையா (சூப்பரு)
ஆஹா இனி என்ன நெக்ஸ்ட்டு?
நாம் ஆடிடிவோம் இனி ட்விஸ்ட்டு!
வா காதல் செய்து பார்ப்போம்
அஹ்ஹோ!
நம் கன்னம் ரெண்டும் சேர்ப்போம்
அஹ்ஹோ!
நாம் ஓடியாடும் அழகை
இந்த உலகம் பார்க்க வைப்போம்
'ஐயோ' என்று ஆட முடியாமல் பாலையா இறுதியில் அலறுவார்.
எனக்கு ராகவன், ஈஸ்வரி கலாய்ப்ப்புகளில் இதுவும் ரொம்பப் பிடிச்ச பாட்டு மதுண்ணா!
Shower Stars / Swimming Beauties/ Water Masters!
நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!
ஷவர் ஸ்டார் 4 ரவிச்சந்திரனின் குளியல் நெளியல் நடன கீத நளினங்கள்
Quote:
வெள்ளிவிழா நாயகன் கலர் கதாநாயகன் கலை நிலவு என்றெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்ப்பு பெற்ற ரவிச்சந்திரன் ராமண்ணாவின் இணைவில் பொழுதுபோக்கு மன்னனாகவும் மாறினார்! வித்தியாசமான நளினமான நடன அசைவுகள் அவரது தனி அடையாளமாக இன்றளவும் கலர்புல் பாடல் காட்சிகளில் ரசிக்கப் படுகின்றன நான் மூன்றெழுத்து அதே கண்கள் மீண்டும் வாழ்வேன் அவரது அந்தக்கால கலர் நாயகன் அந்தஸ்தை உயர்த்திய மிக சிறந்த பொழுது போக்குப் படங்கள் ! அவர் பங்களிப்பும் நீச்சல் குளியல் காட்சிகளில்..மதுர கான இசை நடனக் கோர்வையில்.....
அதே முகம் அதே குணம் கண்டேன் ...பாடலில்
https://www.youtube.com/watch?v=XyjQACjiJoQ
உருப்படாத சில படங்களில் பாட்டுக்கள் அமைந்துவிடும் பாருங்கள். அந்த மாதிரி அருமையான பாடல்களினாலேயே பத்து பைசாவுக்குத் தேறாத படங்கள் கூட நம் நினைவுகளில் தங்கிப் போகின்றன.
http://i.ytimg.com/vi/vf5wo_0cPkE/hqdefault.jpg
அந்த மாதிரி ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடலைக் கேட்டாலே ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் நெஞ்சில் ஓடுவது தவிர்க்க முடியாததாகிறது. இத்தனைக்கும் நெஞ்சை உருக்கக்கூடிய சோகப் பாடலும் இல்லை. ஆனால் நெஞ்சாங்கூட்டை அடைக்கிறது. ஏதோ சொல்ல முடியாத உணர்வுகள் ரத்த நாளங்களில் பாய்கின்றன. இதற்கு சுசீலா அம்மாவின் குரலும் பெரும் காரணம். சரோஜாதேவி, ஜெமினி நடிப்பெல்லாம் இதற்கு காரணமாகாது. பாடலின் டியூன் குறிப்பாக பல்லவியின் 4 வரிகள் கேட்க கேட்க கண்களில் என்னையுமறியாமல் நீர்த் துளிக்கிறது காரண காரியமே இல்லாமல். என்னவென்றும் புரியாமல்.
'சோகம் பாடும் வீணை தன்னை
பால் போல சேலையிட்டு
பார்த்தாய் என் தெய்வமே'
என்று நாயகி நாயகனுக்கு புகழ்மாலை சூடும்போது நெஞ்சு நெகிழ்கிறது. ஒரு காலத்தில் 'தேடித் தேடிக் காத்திருந்து' அலைந்து திரிந்து கேட்ட பாடல்.
பாடல் துவங்குமுன் சரோஜாதேவி ஜெமினியிடம்,
'ஒரு பெண்ணை அடிமையாக்கக் கூடிய இவ்வளவு பலம் ஒரு ஆணுக்கு எங்கிருந்து வந்தது?'
என்று அணைத்து அழுதபடி வினவ,
பதிலுக்கு ஜெமினி,
'ஒரு ஆணைக் கோழையாக்கக் கூடிய இவ்வளவு சக்தி ஒரு பெண்ணுக்கு எப்படி வந்தது?'
என்று வெதும்ப,
அந்த ஆரம்பக் காட்சி பாடலுக்கு நல்ல பலம் சேர்க்கிறது. (ஆரூரான் இதையாவது ஒழுங்காகச் செய்தாரே!) நல்லவேளை. பாடல் விஜயகுமாரிக்கு போகவில்லை. சரோஜாதேவியிடம் போனதோ தப்பித்தோம். பிழைத்தோம். நன்றி ஆண்டவனே!:)
கேட்டுவிட்டு எழுதுங்கள். இவள் 'பெண் என்றால் பெண்'. பாடல் என்றால் இது பாடல்.
மனமுவந்த பாராட்டுக்கள் சுசீலா அம்மா!
http://1.bp.blogspot.com/-AyBv6n4pDT...28782098_n.jpg
தேடித் தேடிக் காத்திருந்தேன்
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
ஆதாரம் வேண்டி அடைந்தேன்
அய்யா உன் காலடியில்
(தேடித் தேடிக்)
மலருக்கெல்லாம் வாய் இருந்தால்
என் மன்னவன் புகழ் பாடும்
மலருக்கெல்லாம் வாய் இருந்தால்
என் மன்னவன் புகழ் பாடும்
மஞ்சளுடன் குங்குமமும்
உன் மடியில் விளையாடும்
ஆடும்
மேகம் போல ஆடையிட்டு
சோகம் பாடும் வீணை தன்னை
மேகம் போல ஆடையிட்டு
சோகம் பாடும் வீணை தன்னை
பால் போல சேலையிட்டு
பார்த்தாய் என் தெய்வமே
(தேடித் தேடிக்)
ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
ஓர் விழியால் முகம் பார்த்து நாயகி இசை பாட
பாட
வானமீன்கள் பூச்சொரிய
வந்த தென்றல் தாலாட்ட
வானமீன்கள் பூச்சொரிய
வந்த தென்றல் தாலாட்ட
ஆனந்தம் கோடி கண்டேன்
அய்யா உன் மடியினிலே
(தேடித் தேடிக்)
https://youtu.be/svXrrwwFwho
1959- TAMIL CINEMA ADVTS
http://i60.tinypic.com/izb05g.jpg
ராஜேஷ் ஜி,
பக்திப் பாடல்கள் வரிசையில் 'ஜகம் புகழும் புண்ணிய கதை' ஒலி-ஒளி காட்சிக்கு நன்றி. இந்த பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் திரைப் படப் பாடல் என்று நினைத்ததில்லை. அருமை. முடிந்தால் லவ-குசா திரைப் படம் பார்க்க வேண்டும். முயற்சிக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லுவது - 'இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை' - என்பது உண்மைதான். நன்றி. நன்றி. நன்றி.
வாசு ஜி...
காரியம் முழுவதும் வெற்றி .. ஆஹா காதல் கொண்டாள் குட்டி என்ற டி.எம்.எஸ் பாட்டும் சிரித்த முகம்தானே ?
வா காதல் செய்து பார்ப்போம் பாட்டைப் பாடிக்கொண்டேதான் மச்சி பாட்டைக் கண்டுபிடித்தேன்.. ஆஹா... இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. என் மனசுல தோன்றுவதை எல்லாம் நீங்க சொல்லிடுறீங்க...
அடுத்ததாக.. தேடித் தேடிக் காத்திருந்தேன் பல்லவியை எப்போது கேட்டாலும் அல்லது நினைத்தாலும் கூட ஏதோ ஒரு சோகம் கலந்த சுகம் தொண்டைக்குள் வந்து நிற்கும். நீங்களும் அதையே எழுதி இருப்பதைப் பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
ம்ம்ம்... இப்போ அடுத்த டவுட்டையும் வச்சிடறேன்.
நம்ம ராட்சசி பாடிய மரத்தை வச்சவன் தண்ணியை ஊத்துவான் தெரிஞ்சுக்க மாமா.. இதில் மறைஞ்சிருக்குற ரகசியத்தை நீ புரிஞ்சுக்க மாமா என்ற பாடல் பற்றிய விவரங்கள் ப்ளீஸ்..
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் சூப்பராகக் கலக்கி பட்டையைக் கிளப்பிக் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கொண்டாட்ட வேளையில் !
குயில் 1 :
நடிகர்திலகம் ஜெயில் பறவையாக.....கூண்டுக்கிளியாக!!
ஆரம்பம் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே ...Quote:
சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
அதிக அளவில் சிறை வாழ்க்கையை திரையில் அனுபவித்ததிலும் நடிகர்த்திலகத்திற்கே முதலிடம் !!
புதிய பறவை தவிர ஏகப்பட்ட படங்களில் நடிகர்திலகம் செய்யாத குற்றத்திற்குத்தான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !!
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
ஜெயில் 1 / குயில்1 பலே பாண்டியா!
ஆள் மாறாட்டத்தில் யாரை எங்கே வைப்பது என்பதில் சட்டத்தின் ஓட்டையால் நீதிதேவன் கோட்டை விட்டதால் நடிகர் திலகமும் கொஞ்ச காலம் சிறையில் குறட்டை விட நேரிடுகிறது !!
விரக்தியில் சக சிறைத்தோழர்களும் கைகோர்த்துக் கலக்கும் கருத்தாழமிக்க ஜெயில் குயிலிசை!!
https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14
ஜெயில் 2 / குயில் 1 சரசுவதி சபதம்
ஈகோ தலையெடுத்ததால் அல்லிராணி தன்னைப் புகழ்ந்து பாட மறுத்த புலவர் பெருமகனை ஜெயிலில் தள்ள இதற்க்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத நடிகர்திலகம் காவலர் தலைவர் நாகேஷும் கால் தடுமாறி ஆடும் வண்ணம் ஒரு குயிலிசைப் பாடலை புயலிசையாக வீசுகிறார் !
https://www.youtube.com/watch?v=j5Hf_toX9tg
Quote:
ஆனாலும் கதாநாயகர்களாயிற்றே தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று உணர்த்தி விடுதலை ஆகி விடுவார்கள்
மதுண்ணா!
தன்யனானேன். மகிழ்ச்சி.
அதேதான். நீங்கள் எடுத்த 'காரியம் முழுதும் வெற்றி'தான். உங்களோடு எனக்கும் சேர்த்து.
காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா... காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி
(இப்ப வரும் பாருங்க ஜாலி வரிங்க)
அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
(அப்போ இந்த ரெண்டு வரிகளும் ரொம்ப பாப்புலர் மதுண்ணா! இதையேத்தான் பாடிக் கொண்டிருப்பேன்.)
தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன
பட்டுப் பாவாடையும்
கட்டும் மேலாடையும்
தொட்டுத் தாலாட்டினால்
சிட்டு தானாடுமே
(அட ஜில்ஜில்)
கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா
மஞ்சள் நூல் வாங்குவேன்
கொஞ்சம் பொன் வாங்குவேன்
மஞ்சம் நான் வாங்குவேன்
நெஞ்சில் அவள் தூங்குவாள்:) (இன்னா ஒரு ஆசை!... கனவு!)
(ஜில்ஜில்)
பாடல் பாதிதான் ஞாபகத்தில் இருந்தது. எடு சி.டி பக்கெட்டை. தேடு. எப்படியோ ஒருவழியா சேமிப்புக் கிடங்கிலிருந்து தூசி தட்டி எடுத்துட்டேன். பாடல் வரிகளை விட மனசு வரல. அதான் பாட்டைக் கேட்டுகிட்டே டைப் அடிச்சுட்டேன்.:) ரேர் சாங் வேற. உபயோகப் படட்டுமே! உங்க பாணியிலயே ஒரு ஹி ஹி யும் போட்டுடறேன்.:)
'பாடகர் திலகம்' இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவாரே.
அப்புறம் மதுண்ணா!
ராட்சஸி கோஷ்டியுடன் 'அத்தைக்கு மீசை வச்சி' ஸ்டைலில் ஒரு பாடல் பாடுவாரே!
இந்தப் பக்கம் கட்டி வச்ச மாப்பிள்ளை வீடு
நொண்டி நொண்டி ஓடிவரும் மக்குப் பொண்ணப் பாரு
ஏண்டியம்மா ராஜாத்தி காலுக்கென்ன கூறு
ஹோ ஹோ ஹோ டட்டட்டா
நாத்தனாரைப் பாரடி
காலைக் கொஞ்சம் வாரடி
நாலு பக்கம் கூடடியோ
(இப்போ இங்கே ஒரு அமர்க்களம் நடக்குமே!.... ஈஸ்வரி இடைவிடாமல் முழங்குமே!)
அடி வாடி...பூக்காரி....ராஜாத்தி....என் கண்ணு....என் முத்து...ஒரு காலு.... நீ வாங்க வந்தியா?
இந்தப் பாட்டும் 'சிரித்த முகம்'தானே மது அண்ணா?
அடுத்தது
டி.எம்.எஸ். பாடும் இன்னொரு பாடல்
இதுவும் 'சிரித்த முகம்' படப் பாடல்தானே? இதுவும் கேட்க சூப்பராவே இருக்கும்.
எந்தன் பேரு கோமாளி
நான் எல்லோருக்கும் ஏமாளி
ஏனோ வந்தேன் பூமியில் நானும்
இறைவனிடத்தில் வாதாடி
நல்லது நடக்குது தள்ளாடி
கெட்டது போகுது முன்னாடி
நல்லது கெட்டது தெரியா உலகில்
நானும் வந்தேன் ஆத்தாடி
நானும் வந்தேன் ஆத்தாடி
(எந்தன் பேரு)
அவன் புத்தியில் படைத்தது மண்ணு
போதையில் படைத்தது பொண்ணு:)
பொண்ணு... பொண்ணு... பொண்ணு
மத்தியில் கிடந்து மயங்கட்டும் என்று
மனிதர்க்கு வைத்தது கண்ணு:)
மனிதர்க்கு வைத்தது கண்ணு
ஆத்தாடி
(எந்தன் பேரு)
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
அறிவிருக்குது எனக்கு
அழகிருக்குது ஒனக்கு
இரண்டும் உள்ள பிள்ளை பிறக்கும்
திருமணமானால் நமக்கு
திருமணமானால் நமக்கு
(எந்தன் பேரு)
சிங்கப்பூர் சீமானின் 'எம் பேரு ஜோக்கர்' பாட்டு உடனே நினைவுக்கு வருது.
இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது மது அண்ணா! நிறைய பேருக்குத் தெரியாத அற்புதமான பாடல்களையெல்லாம் எடுக்க வச்சுட்டீங்க. தேங்க்ஸோ தேங்க்ஸ் உங்களுக்கு. அப்புறம் இன்னொரு வேலை கொடுத்து இருக்கீங்க. அதை வேற பார்க்கணும். அதை நெனச்சாலே 'டக்'குன்னு 'தாய்' படத்தின் 'சின்னக் குட்டி அழகைப் பார்த்து சிரிச்சுக்க மாமா...கொஞ்சம் சிங்காரமா உன் மனச விரிச்சுக்க மாமா' உள்ளே ஓடுது. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாமயா போயிடுவான்?:)
வாசு ஜி...
எந்தன் பேரு கோமாளி நினைவிருக்கு.. அதே படம்.. ஆனா அந்த ராட்சசி பாட்டு நினைவுக்கு வரலியே !...
வயசாயிடுச்சு... முதலில் என் மூளையைக் கொஞ்சம் தூசி தட்டணும்.. யோசிப்போம்...
மதுண்ணா!
இப்போ கேட்டுட்டு அப்புறம் நினைவுக்கு வருதான்னு சொல்லுங்க.
http://www.mediafire.com/download/qt...atti+Vacha.mp3
நீங்க காய்ஞ்ச கட்டை நான் ஈரமான கற்பூரம்னு வச்சுப்போம் வாசுஜி.. ( கவனிக்க.. நான் வாழைன்னு சொல்லலைந்.. சந்தனக் கட்டைனு சொல்றே )
ஜில் ஜில் மேனி பாட்டை முழுசா பாடிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதே ஸ்டைலில் வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்திலிருந்து
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை..
கல்யாணமான கன்னிப் பெண்ணே பொன்னம்மா
நீ காட்டுக் குட்டி நான் ஒரு காடு வெட்டி
நீ பாட்டி வேஷம் போட்ட போதும் காதல் உண்டம்மா
அப்படின்னு டி.எம்.எஸ் பாடும் பாட்டு நினைவுக்கு வந்தது.
அதையும் ரசிப்போமே
https://www.youtube.com/watch?v=xh2a6RF1AyU
நிச்சயமாக. அதை மறக்க முடியுமா? போட்ட புள்ளியை நெஞ்சிலிருந்து அகற்ற முடியாதே. ஆனந்தமாக ரசித்துவிட்டு இதையும் ரசிப்போம். அதே போல இன்னொரு பாட்டு. அதே ஜெய். உஷாவுக்கு பதிலாக உப்பிய விஜயா.:) ஆனால் பிளாக் அண்ட் ஒயிட்.
பொன்னா? இல்லை பூவா?
கண்ணா? இல்லை மீனா?
பொட்டு வச்சக் கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்துப் பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தந்த பசி தீராது சும்மா
https://youtu.be/da6eOvL9VwQ