http://i67.tinypic.com/1zpgy3c.jpg
Printable View
தமிழ் இந்து -23/7/2017
http://i66.tinypic.com/15ybkm.jpg
தினமலர்-வாரமலர்-23/7/2017
http://i66.tinypic.com/2cfbc07.jpg
http://i65.tinypic.com/r2w66f.jpg
மக்கள் குரல் -23/7/2017
http://i68.tinypic.com/2vmzzmd.jpg
http://i63.tinypic.com/5clzbk.jpg
தொழிலாளர்களின் தோழன்
------------------------------------------
உழைக்கும் தொழிலாளர்கள்
http://i64.tinypic.com/6thapi.jpg
http://i67.tinypic.com/2vai5cj.jpg
http://i66.tinypic.com/2ml6cj.jpg
சென்னை பாலாஜியில் 21/7/2017 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது
http://i68.tinypic.com/ofsqe.jpg
மதுரை மாநகரில் வேங்கையன் வெற்றி விஜயம். ஞாயிறு (23/7/2017) மாலை காட்சிகளில் மதுரை மினிப்பிரியா மற்றும் வெற்றி திரை அரங்குகள் நிறைவு.
ரசிகர்கள் /பக்தர்கள் உற்சாக வெள்ளத்தில் கொண்டாட்டம் .
புகைப்படங்கள் /தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/2ahfibb.jpg
சென்னை தேவி அரங்க வாயிலில் சென்ற வாரம் (16/7/2017) ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய பேனர் .
http://i65.tinypic.com/35bw6ex.jpg
தினமணி-16/7/2017
http://i68.tinypic.com/2rmv0nr.jpg
http://i66.tinypic.com/sl2lxe.jpg
http://i68.tinypic.com/n4f7cx.jpg
டிஜிட்டல் அடிமைப் பெண் படம் சவுண்ட் சரிிஇல்லை. புதிய இசை சேர்த்திருக்கிறார்கள் நன்றாய் இல்லை என்று மகாலிங்கம் மூப்பானார் ஐயா சொன்னார். அதை நானும் அப்படித்தான் உள்ளது. புதிய இசையை ஏன் சேர்க்க வேண்டும்? புரச்சித் தலைவர் சரி சொன்ன இசைய இவர்கள் ஏன் மாத்துகிறார்கள் என்று பதிவு போட்டிருந்தேன்.
அதை எடிட் செய்திருக்கிறார்கள். இதில் என்ன தப்பு/ புதிய இசை சேர்ப்பு நன்றாய் இல்லை. பெரும்பாலன ரசிகர்களின் கருத்து இப்படித்தான் இருக்கின்றது என்று சொல்வது தப்பா? புரச்சித் தலைவரையா குறை சொன்னே்ன். அவர் படத்து இசையை சில இடங்களில் மாற்றியது நன்றாய் இல்லை என்ற எழுதினேன். இதைக் கூட சொல்லக் கூடாதா?
வேண்டுமானால், நானும் மகாலிங்கம் மூப்பனார் ஐயாவும் சொ்ன்னதை மறுங்கள். சென்னையில் இசை ஒலி நன்றாக உள்ளது. கோயம்பத்தூரில் நன்றாக உள்ளது என்று சொல்லுங்கள். உங்களுக்ககுதான் பிடிக்கவில்லை எங்களுக்கு நன்றாய் உள்ளது என்று சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு நான் சொன்னதை அழிக்க வேண்டுமா?
ஒருத்தரடன் விவாதிக்கின்றோம் இல்லாவிட்டால் கருத்து பறிமாறிக்கிறோம் என்றால் நாம் பாயிண்ட் சரியாக இருந்தால் அதை நாம் நம்பினால் எதிராளி கருத்தை மறுக்க வேண்டும். இல்லை நாம் சொல்றது தப்பு எ்ன்று தெரிஞ்சால் எதிராளி சொல்றதை ஏத்துக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சொன்ன கருத்தை அழித்தால் நமக்கே நம் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.
டிஜிட்டல் அடிமைப் பெண் படம் பல இடங்களில் இசை சேர்ப்பு சரியில்லை என்பது நம் ரசிகர்கள் பல பேரின் கருத்து. இதில் புரட்சித் தலைவருக்கு எந்த குறையும் இல்லை. இப்போ டிஜிட்டல் செய்தவர்களைத்தான் சொல்றேன். இதை சொல்றதில் எந்த தவறும் இல்லை. படம் பிரிண்ட் நன்றாய் கண்ணாடி போல உள்ளது.
இதை நீக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். நண்பர்கள் அவர்களின் கருத்துக்களை சொல்லலாம்.
http://i63.tinypic.com/6xw2zd.jpg
Chandran Veerasamy
1 hr •
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?
- ' நான் நாகேஷ் ' என்ற நடிகர் நாகேஷ் எழுதிய
நூலிலிருந்து
நன்றி அண்ணன் சந்திரன் வீராச்சாமி முகநூல்
ஒரு பின்னூட்டம். நன்றி ரத்தினம்
Rathinam உதவும் குணம் ஒருவனுக்கு
கரு உருவாகும் போதே
உருவாகி விடுகிறது
LikeShow more reactions
• 30 mins
தினமலர்-24/7/2017
http://i65.tinypic.com/1264cn7.jpg
நவீன தொழில் நுட்பத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
ஆயிரத்தில் ஒருவன் - 2014
அடிமைப்பெண் - 2017
ஆயிரத்தில் ஒருவன் படம் மிகவும் சிறப்பான துல்லியமான ஒளி ஒலியுடன் டால்பி வடிவில் ரசிகர்களுக்கு விருந்தாக படம் அமைந்தது .
அடிமைப்பெண் - சினிமாஸ் ஸ்கோப் , 4k , டிஜிட்டல் வடிவில் மிகவும் பிரமாண்டமாக படம் ரசிகர்களுக்கு விருந்ததற்காக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் வந்துள்ளது .
எம்ஜிஆரின் கடுமையான உழைப்பை இந்த படத்தில் காண முடிகிறது . காட்சிக்கு காட்சி நம்மை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்து செல்ல வைக்கிற அளவிற்கு நவீன தொழில் நுட்ப காட்சிகள் உதவி இருக்கிறது . எம்ஜிஆரின் 52 வயது தோற்றம் 25 வயது வாலிபன் போல் உடல் கட்டுக்கோப்பாக இளமையாக எழிலான தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்த வைத்த திரு சொக்கலிங்கத்திற்கும் திரு நாகராஜனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . திரு நாகராஜனின் அடுத்த படைப்பான உலகம் சுற்றும் வாலிபனை வரவேற்க காத்திருக்கிறேன் .
நன்றி திரு கோபால் .கும்பகோணம்
முகநூல்
பொதிகை டிவி செய்திகள் .
--------------------------------------
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
நினைவு நாணயம் மத்திய அரசு சார்பாக வெளியாக உள்ளது .
தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் ஒளிபரப்பு .
----------------------------------------------------------------------------------------------------------------------
23/7/2017 ஜெயா மூவிஸ் - புதியபூமி இரவு 10 மணி
24/7/2017 ஜெயா மூவிஸ் - மகாதேவி -இரவு 10மணி
26/7/2017 - சன்லைப் -என் கடமை - இரவு 7 மணி
பொதிகை - குடியிருந்த கோயில் - இரவு 8.30 மணி
27/7/2017 - சன்லைப் - நீதிக்கு தலை வணங்கு - காலை 11 மணி
தினமலர் -26/7/2017
பெரம்பலூர் - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , அரசு பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10000 சதுரடியில் எம்.ஜி.ஆர். உருவப்படம் வரைந்து அசத்தினர் .
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 5ல் பெரம்பலூரில் நடக்கிறது .விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார் .
இதையொட்டி பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன .
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் , அரசு மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில்
எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை நேற்று வரைந்தனர் .
முன்னூறு கிலோ உப்பு, ,/0 கிலோ கலர் போடி, /0கிலோ கோலமாவு ,, 200 கிலோ சுண்ணாம்பு , ஆகியவற்றின் மூலம் 100 அடி நீளம் , மற்றும் 100அடி அகலத்தில் படத்தை வரைந்து முடித்து பாராட்டு பெற்றனர் .
தினமணி -27/7/2017
எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் -மத்திய அரசு வெளியீடு
----------------------------------------------------------------------------------------------------
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை "
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றிருந்தபோது , கடந்த 05/01/2017 அன்று மத்திய அரசுக்கு,தமிழக அரசின் சார்பில்
ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் .
எனது வேண்டுகோளை ஏற்று ,எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில்
அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக
மத்திய நிதி அமைச்சகம் கடந்த 17/7/2017 அன்று ஒப்புதல் கடிதம் எனக்கு அனுப்பி இருக்கிறது .
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்களின் ஏகோபித்த தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கும் , அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் , தமிழக மக்களின் சார்பாகவும், விசுவாசமிக்க ஒன்றரை கோடி அ. தி.மு.க. தொண்டர்களின் சார்பாகவும் , எனது மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் ,கோடான கோடி நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
மதுரை திருநகர் கலைவாணியில் -இணைந்த 2 வது வாரம்
http://i64.tinypic.com/b5inex.jpg
சில சமயங்களில் படம் போட்டால் படத்துக்கு பதிலாய் டினி பிச்சர்ஸ் என்று வருகின்றது. ஏன்? ரொம்ப சிரமமாய் உள்ளது.
http://i66.tinypic.com/m7vn1h.jpg
//தில்லானா ஒரு மகா வியப்பு.
புத்தகக் கதைகள் திரைப்பட வடிவம் பெற்று, கணிசமாய் வென்ற வரலாறுகளும் உண்டு. ஆனால், தில்லானா போன்று திரையைப் புத்தகமாக்கி எக்காலத்திலும் இனிமைப் பக்கங்கள் படபடக்க விரியும் புதினம் வேறொன்று இல்லவே இல்லை.
அமரர் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் தமிழனின் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகிலுள்ளோர் உணர்ந்து கொள்ள தில்லானாவை சிபாரிசு செய்ததை இன்றளவும்
சொல்லிச் சொல்லி வியக்கின்றோம்.//
நன்றி ஆதவான் ரவீ அவர்கள்.
உண்மைதான். ரஸ்ய கலாாசார குழு சென்னைக்கு வந்தபோது அவர்களுக்கு தில்லான மோகனாம்பாள் படத்தை முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் போட்டுக் காட்டச் சொன்னார். ரஸ்யாக்காரர்களுக்கு தன் பெருமையை சொல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மற்றவர்கள் திறமையை தமிழ்நாட்டு கலாச்ாசார பெருமையை சொல்லும் தமிழ் படத்தை அவர் மறைக்கவும் இல்லை.
புரட்சித் தலைவரின் பொன்மனத்தை எல்லாரும் புரிஞ்சு கொண்டால் அது போதும் எங்களுக்கு. நன்றி.
கோவை ராயலில் இன்று முதல் மக்கள் திலகம் நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்" வெற்றிகரமாக நடைபெறுகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பான "அடிமை பெண் "
நெல்லை - கணேஷ் அரங்கில் 4 வது வாரமாக வெற்றிநடை போடுகிறது .
வரும் ஞாயிறு (30/7/2017) அன்று 25 வது நாளை முன்னிட்டு மாலை சிறப்பு காட்சி
நடைபெறும் .
மேலும் இன்று (28/7/2017) முதல் பாளையங்கோட்டை செந்தில்வேல் அரங்கில்
தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ்..குமார்.
http://i65.tinypic.com/mu7s42.jpg
1977 , அ தி மு க முதல் முறை ஆட்சியை பிடிக்கிறது .... அதன் தலைவர் மக்கள் திலகமோ , முதலமைச்சராக பொறுப்பேற்பதை சில நாட்கள் தள்ளி வைக்கின்றார் ...
ஏன் ? தனது படங்களுக்கான படப்பிடிப்பு, டப்பிங் வேலைகள் முடித்துக் கொடுக்கவே , பதவி பிரமாணம் எடுப்பதை தள்ளிப் போட்டார் ....
மீனவநண்பன் படத்துக்கு க்ளைமாக்ஸ் காட்சியில் படகில் மழையில் நனைந்து கொண்டே சண்டைக்காட்சியில் நடித்துக் கொடுத்தார். மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்திற்கான டப்பிங் வேலை முடிந்தது ... மக்கள் திலகம் மைக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார் . வாகினி டப்பிங் தியேட்டர் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் . வெளியே மிகப் பெரிய கூட்டம் ... நேரம் இரவு 11 மணி .... மறுநாள் காலையில் முதல்வராக பதவியேற்க வேண்டும்.
மக்கள் திலகம் பேசினார் : " இந்த மாலைகளும் வாழ்த்துக்களும் எனது திரை வாழ்கையின் முடிவுக்கா அல்லது ஆட்சியின் நாளைய துவக்கத்திற்கா ? இதுக்கு பதில் நானே சொல்றேன் ... இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தேன் , கிடைச்ச வாழ்கையை காப்பாத்துறதுக்காக அரசியலுக்கு வரலை , ஒரு சபதத்துல வந்தேன் ....
சில பேர் அதிகாரம் தன் கையிலே இருக்குறதே , பிறரை
அழிக்குறதுக்குன்னு நினைச்சாங்க , இல்லே , மத்தவங்களை கவுரவிக்கவும் , காப்பாத்துறதுக்கும் தான்னு , காட்டத் தான் இதிலே குதிச்சேன் , வெற்றியடைஞ்சிட்டேன் ...
என் சினிமா வாழ்க்கையில் மகாராஜனா , ஏன் ஒரு சக்கரவர்த்தியாக்கூட இருந்துட்டேன் . நாளைக்கு அடையப் போறது வெறும் மந்திரிப் பதவி தான் , ராஜாவை விட மந்திரி கீழே தான் .
இன்னைக்கு மைக்கை தொட்டும் , இந்த மண்ணை தொட்டும் , முத்தமிட்டது ஒரு இடைக்கால பிரிவுக்குதான் . மீண்டும் வருவேன் , இந்தப் படம் என் திருப்திப் படம் .
எனது முதல் படம் சதி லீலாவதி , அதில் நான் ஒரு காவல் அதிகாரியா வருவேன் , கடைசி படம் மன்னன் , மா மன்னன் , எப்படி என் பிரமோஷன் ? நாளைக்கு மந்திரியானாலும் எம் . ஜி . ஆர் . எம் . ஜி . ஆர் தான் . அதுக்கு நீங்க எல்லோரும் தந்த மகத்துவத்தை நான் மறக்க மாட்டேன் ... நன்றி வணக்கம் ....
இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து உடன் இருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர் பதிவு செய்திருக்கிறார். மக்கள் திலகத்தின் இந்த உணர்ச்சிமிகு, உணர்வுமிகு உரையானது எத்தகைய அனுபவப்பூர்வமான உண்மை கருத்துகளை பறைசாற்றி இருக்கிறது... சினிமா உலகில் நான் மகா ராஜனாக, ஏன், சக்கரவர்த்தியாக இருக்கிறேன்... நாளை அரசியலில் பதவி ஏற்பது கூட மந்திரிதான்... ராஜனுக்கு பிறகுதான் மந்திரி என என்ன மதியூகத்தோடு பேசியுள்ளார்.
என்ன ஒரு தன்னடக்கம்..
நன்றி முத்து செல்வரத்தினம் முகநூல்.
https://s27.postimg.org/irighoo83/IMG_3101.jpg
நடிகை கே.ஆர். விஜயா கூறுகிறார்.
ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேர்ம்.
அப்படி வந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்,
நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்றிர். நாங்கள் இந்தியாவிலிருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன். நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.
ஆச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார். சற்று குழப்பத்துடனேயே அவரைப் பற்றி தெளிவாக துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும் எங்க்ள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.
எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார்.
இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர். அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் ம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம். மேலும் தொடர்ந்தார்.
ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன. திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சீனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்,.
ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது. அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.
விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார். வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல.
இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே. இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன. கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை.
சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து.
நன்றி முத்து செல்வரத்தினம் முகநூல்.
http://i67.tinypic.com/2z8w7l2.jpg
45 ஆண்டுகள் முன்பு சென்னை நகரை குலுக்கி எடுத்த மகத்தான பேரணி மக்கள் திலகம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் லட்ச கணக்கான அதிமுக தொண்டர்கள்
ஒன்று சேர்ந்து ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்ற தினம் .
மக்கள் வெள்ளத்தில் மக்கள் திலகம் சென்ற ஊர்வலத்தின் படங்கள் அன்றைய நாட்களில் அரசியல்
நோக்கர்கள் -விமர்சகர்கள் சொன்ன கருத்து
''எம்ஜிஆர் என்ற புயல் மையம் கொண்டுள்ளது .மக்கள் சக்தி அவர் பக்கம் . விரைவில் அவருடைய
விஸ்வரூபம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் . ஒரு தனி மனிதரின் மக்கள் செல்வாக்கு உலகில் எம்ஜிஆருக்கு உள்ளது போல் எந்த ஒரு நடிகருக்கோ அரசியல்வாதிக்கோ கிடையாது .''
வடநாட்டு பத்திரிகைகள் - வெளிநாட்டு பத்திரிகைகள் - நிருபர்கள் எல்லோருமே அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து தங்களுடைய பத்திரிகைகளில் '' mass hero mgr '' என்று
கட்டுரை எழுதினார்கள் .
நன்றி பழனிவேல் ராமச்சந்திரன் முகநூல்
http://i66.tinypic.com/119cvut.jpg
புரட்சித் தலைவர் பேட்டி
கலைக்கும் அரசியலுக்கும்
என்ன சம்பந்தம்?
பதில்: கலையால் அரசியல் வளரும். அரசியல் கலையைக் காப்பாற்றும்.
கேள்வி : உழைத்தால் உயரலாம் என்கிறார்கள். நான் உழைத்தும் உயரவில்லையே, ஏன்?
பதில்: உயர்வது என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. அதற்கு ஒரு எல்லைக்கோடு இன்னும் வரையறுக்கப்படவில்லை.
கேள்வி: உங்கள் அன்னையிடமும் தந்தையிடமும் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள்?
பதில்: தினமும் படுக்கப்போகும் போது, அன்று காலை முதல் ஏதாவது அறியாத தவறுகள் செய்திருந்தால் மன்னித்து விடும்படியும், (மறுநாள்) காலை எழும்போது நேற்று செய்த தவறை மீண்டும், செய்யாமல் இருக்கும்படியும், நன்மைகள் ஏதாவது செய்திருந்தால், அதை தொடர்ந்து செய்ய வலிவு அளிக்கும்படியும் வேண்டிக்கொள்வேன்.
கேள்வி: நீங்கள் விரும்பவது எது? வெறுப்பது எது?
பதில்: ஒருவனுடைய கடைசி மூச்சு வரை தன் உழைப்பில் வாழ்வதை, நான் விரும்புகிறேன். இதிலிருந்து தெரியுமே ‘நான் எதை வெறுக்கிறேன்’ என்பதை.
கேள்வி: ஒருவன் பிறரைத் தாழ்த்துவதால் அவனுக்கு
ஏற்படும் பயன் யாது?
பதில்: யாரைத் தாழ்த்துவதாக நினைக்கிறானோ, அவரைவிட மிகக்
கீழான நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் நிலையை
அடைகிறேன்.
கேள்வி: திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் உங்கள் ஒத்துழைப்பு எப்படி?
பதில்: பட முதலாளிகள் எந்தப் பாகத்தில் என்னை நடிக்க வைத்தால்
அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என நினைக்கிறார்களோ, அந்தப் பாகத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கிறார்கள். அவ்வளவுதான்.
கேள்வி: தற்போதைய தமிழ்ப்படங்கள் பற்றி?
பதில்: தற்போது தமிழில் எடுக்கப்படும் படங்கள் மற்றைய மொழிப் படங்களைவிட எவ்வளவோ உயர்ந்தது என்பது எனது திடமான எண்ணம். சில அமெரிக்கப் படங்களில் திறமையைவிட சில தமிழ்ப்படங்களில் மேலாக இருக்கிறது எனது உறுதியான எண்ணம்.
கேள்வி: சினிமா துறையில் இருந்துக்கொண்டே நடிகர்கள் சமூகத் தொண்டில் ஈடுபட்டு அரசியலுக்கு வர முடியுமா?
பதில்: உதாரணமாக வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், தொழிலாளர்கள் முதலான பல தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அரசியலில் கலந்து கொண்டிருந்தும் தங்கள் தொழில்களைச் சரிவரச் செய்ய முடிகிறது என்றால் நடிகர்கள் மட்டும் ஏன் அரசியலில் பங்கு கொள்ள முடியாது? ஆனால், தீவிரமாக அரசியல்வாதிகளாக மாறி அரசியலில் ஈடுபட்டு பங்கு கொள்ள முடியுமா என்றால் அது அவரவர் சூழ்நிலையும் துணிவையும் பொறுத்தது என்றுதான் சொல்ல முடியும்.
கேள்வி: தங்கள் பிறப்பிடம் பற்றி?
பதில்: நான் இலங்கையில் பிறந்தவன், கண்டியில் பிறந்ததாகச்
சொல்லப்படுகிறது.
கேள்வி: இலங்கை மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது?
பதில் : இலங்கை மக்களுக்கு... குறிப்பாக தென்னகத்தவர்களுக்கு
எனது வேண்டுகோள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற முடிவை உணர்ந்து வாழ வேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ முடியும் என்பது எனது யோசனையும் வேண்டுகோளுமாகும்.
கேள்வி:ஆண்டவனிடம் நாம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கிறோமே... இது சரியா?
பதில்: ஆண்டவனை வேண்டுவதில் தவறில்லை. நம்முடைய குறைக்கு ஆண்டவன் மீது பாரத்தைப் போடுவதுதான் தவறு.
கேள்வி: சினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்?
பதில்: பாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும்
கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும் கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.
நன்றி : எஸ். கிருபாகரன் (எம்.ஜி.ஆர். பேட்டிகள்)
நன்றி பழனிவேல் ராமச்சந்திரன் முகநூல்.
http://i68.tinypic.com/2rgn8k7.jpg
எம்ஜிஆரிடம் துணை மந்திரியாக பதவி வகித்த ஐசரி வேலன், 14:6:87ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலே மாரடைப்பால் இறந்து விடுகிறார்அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீடு ஜப்திக்கு வருகிறது
பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன் ஐசரி கணேஷ் மிகுந்த கஷ்ட நிலைக்கு ஆளாகிறார் இதிலிருந்து மீள ஒரே வழி எம்ஜிஆரை சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்
வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்
மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் "எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைப்படாமல் யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கிறதை எழுதிக் கொடுத்திட்டு போ என்கிறார்
இரண்டாவது நாள் ஜசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரத் தோட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்
உதவியாளர் மாணிக்கத்தை அழைத்த எம்ஜிஆர் அந்த பையை எடுத்திட்டு வா என்கிறார்
எம்ஜிஆர் ஐந்து விரலை காட்டி "இதிலே ஐந்து லட்ச ரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சு மிச்சம் இருக்கிற ஓரு லட்ச ரூபாயைக் கையில வச்சுகிட்டு ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணனும்" என்று வார்த்தையாலும் சைகையாலும் சொல்லி அந்த பணப்பையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை கண்ணால் பார்த்த ஐசரி கணேசிற்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது
உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேசை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர்.முதலில் ஜீப் நேராக புரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்கு செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தை கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேசிடம் தருகின்றனர்
பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடி கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்சியரிடம் கடனை திருப்பி அடைக்கின்றனர்
உடன் வந்த உதவியாளர்களே எல்லா கடன்களையும் செட்டில் செய்து விட்டு மீதமிருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள்.
எம்ஜிஆர் கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை வைத்து கன்ஸ்டிரக்சன் வேலையை தொடங்கி வெற்றி மேல் வெற்றி குவித்து இன்று பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராகி , வேல்ஸ் கல்லூரியையும் நிர்வகித்து வருகிறார் ஐசரி கணேஷ்....
நன்றி பழனிவேல் ராமச்சந்திரன் முகநூல்
http://i67.tinypic.com/2lsvgur.jpg
சில துளி எம்.ஜி.ஆர்!!
-----------------------------------
வளி என்னும் காற்று மண்டலத்தில் கலந்தும்--விண்
வெளி என்னும் பிரபஞ்சத்தில் பிணைந்திருப்பவரை
துளி என்று துகளாக்கி,, அவர் சிறப்புகளின் தொகுப்பை
களி!1 என்று உங்கள் மனதுக்குக் கொடுப்பதே என் எண்ணம்!!!
அன்று எம்.ஜி.ஆர் கொஞ்சம் கலக்கத்தோடும் கவலையோடும் இருக்கிறார்!!
வியட்னாம் வீடு சுந்தரம்,,அவரை அணுகி--
என்ன சேட்டா ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் எனக் கேட்க--
ஒண்ணுமில்லை,, கொஞ்சம் பண பற்றாக் குறை என்றும் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் வள்ளல்!!
ஒருவர் உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறார்
ரொக்க பணமும் ஒரே சமயம் கொடுப்பார்!!
சம்மதிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
பிறக்கிறது நான் ஏன் பிறந்தேன்!!
தங்கள் குடும்பத்திற்காக கவலைப்படாதவர்--
பொங்கல் சமயத்தில் ஆண்டு தோறும் கொடுப்பது போல் அந்த வருடம் கொடுப்பதற்கு பணம் இல்லையே என்று வருந்தி,,அதற்காகத் தன்னை வருத்தி,, நடித்து விருத்தி ஆக்கியது --அவரது கொடையை--அது தான்
நிறுத்தி வைத்திருக்கிறது இன்றும் அவர் நினைவுகளை!
என்பது தானே உண்மை???
அது ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு!!
கப்பலை நோக்கி வந்த ஓங்கிய அலையின் வேகத்தில்
தப்பலை--அந்தக் கப்பல்!!
கொண்டு சென்ற உணவுத் தட்டுக்களும் இலைகளும்
கடலில் விழுந்து விட--வெறும் சோறும்-பொரியலுமே
தப்பிக்கிறது?? உணவு வேளையில் இதை எப்படி
ஒப்பிக்கிறது எம்.ஜி.ஆரிடம்??
மென்று முழுங்கி ஒருவாறு விளக்குகிறார்கள்-அந்த
வென்று காட்டிய வேந்தரிடம்!!
ஒரு கணம் யோசித்த எம்.ஜி.ஆர்--ண்டு வாழ்க படத்திலும்,,உழைக்கும் கரங்கள் படத்திலும் அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கி மகிழ்கிறார் வள்ளல்!!
அவர் தான்--டி.கே கலா!!
எல்லாவற்றையும் சாய்க்கிறது---
பொல்லாவற்றை சாய்த்த எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வு!!
கோவைத் தம்பி!!
தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசி மட்டுமல்ல தொண்டரும் கூட!!
அவர் தயாரிக்கும் எல்லா படங்களின்--ப்ரீவ்யூ--காட்சிகள்,,எம்.ஜி.ஆர் பார்த்த பிறகே --
திரையிடப்படும் என்று வரையிடப்படும் நிலை!!
தேவி--ஸ்ரீ தேவி திரையரங்கில்--கோவைத் தம்பியின்
ஆயிரம் பூக்கள் மலரட்டும் பட ப்ரீவ்யூ காட்சி!!
எம்.ஜி.ஆர் வருகையை எதிர்பார்த்து ஒட்டு மொத்த
யூனிட்டும் காத்திருக்கிறது யூனிட்டியாக!!
கே.எஸ் ரவி குமார்!!
இன்றைய பிரபல இயக்குனர் அந்தப் படத்தில்
உதவி இயக்குனர்!!
முதல்வர் எம்.ஜி.ஆர் வரும்போது அவருக்கு
மாலை அணிவிக்க ஒரு பிரிவும்
சால்வை போற்ற ஒரு பிரிவும் என ---
ராணுவக் கட்டுக் கோப்பில் குழு காத்திருக்கிறது!!--அதில்-
எடிட்டர்கள்--ஸ்ரீனிவாசன்--கிருஷ்ணா--இதில் ஸ்ரீனிவாசன் எதிர்க் கட்சியை சேர்ந்தவர் மட்டுமல்லாது எம்.ஜி.ஆரைக் கட்டோடு வெறுப்பவரும் கூட??
என்னக் கூத்து இது?? என்று எட்டியே நிற்கிறார்-மனம்
எட்டியாய் கசந்த நிலையில்???
முதல்வரின்--கலையுலகப் புதல்வரின் கார்
படகு போல் வந்து நிற்க--அதிலிருந்து
குடகு போல் இறங்குகிறார் எம்.ஜி.ஆர்!!
அவ்வளவு தான்!! --வரவேற்பு மரபுகளை மீறி----
நெடு மரமாக விழுகிறார் எம்.ஜி.ஆரின் காலில் ஒருவர்?
அவர்??
எதிர்க் கட்சியைச் சேர்ந்த--இது காறும் எம்.ஜி.ஆரை வெறுத்த---எடிட்டர் ஸ்ரீனிவாசன்????
மெய்யாய் விளக்குகிறார்--தம் மெய் நடுங்க??
ஒளியாய் அவரது தோற்றம் கண்ட என் மனம்
தரம் அதை அவர் முகத்தில் கண்டு
வரம் அதை என் வாழ்வில் பெற்றதை உணர்ந்து
மரம் என வீழ்ந்தேன் அவர் தாளில் என்னை மறந்து???
ஏய்க்காமல்--காய்க்காமல் சாய்க்காமல்
எதிரியையும் தன் காலில் விழ வைத்த---
எம்.ஜி.ஆரைப் போல் இனி யார் இங்கு தோன்ற முடியும்?? என்ற --கே.எஸ் ரவிக்குமாரின் பிரமிப்பு தானே நமக்கும் உண்டாகிறது?????
நாலு சம்பவங்கள்--இன்றளவும் அவர் நம்மிடையே
வாழும் சம்பவங்கள்!! சரி தானே தோழர்களே????
LikeShow more reactions
Share
56 56
4 shares
23 Comments
Comments
Muniyandi சத்தியதாயின் தவப்புதல்வர்
LikeShow more reactions
•
2
• Yesterday at 12:50am
Manage
Muniyandi மனித குலத்திற்க்கே வழிகாட்டி புரட்சித் தலைவர் அருமை - நன்றி
LikeShow more reactions
•
2
• Yesterday at 12:51am
Manage
Surendrababu Parthasarathy ஏமாற்றிவிட்டீர்களே
வாசக அன்பர்களை!
MGR அவர்கள் சாதத்தையும்,...See More
LikeShow more reactions
•
6
• 22 hrs • Edited
Manage
Maha Eswari மனிதர் குல மாணிக்கம்
LikeShow more reactions
•
2
• 20 hrs
Manage
Murugan
LikeShow more reactions
•
1
• 19 hrs
Manage
Murugan பிறர்
வாழாவதற்கே
பிறவியெடுத்த...See More
LikeShow more reactions
•
3
• 19 hrs
Manage
Narayananbala What a humidity of our loving ones. Good morning bro
LikeShow more reactions
•
2
• 19 hrs
Manage
Jvs Jvs ராஜகுருவின் தலைவரைப்பற்றிய சொல் நயம் என் நெஞ்சை தொடுகிறது
ரோஜா இதழின் நிறத்தை தோற்க்கடித்த தங்கத்தலைவன்
எதிரியையும் தன் வசப்படுத்தும்...See More
LikeShow more reactions
•
4
• 18 hrs
Manage
Keshav Kumar அண்ணனின் திண்ணம்.... மற்றவர்க்கு உதவி செய்து..... தன் பெயருக்கும் முத்திரை வைத்து.. தாமரை இலையில் தண்ணீர் ததும்புவது போல..... மனம் வைத்து பாசமதை தந்து..... தன் தர்மத்தை அள்ளி கொடுத்த தரமே தரம்.
LikeShow more reactions
•
2
• 18 hrs
Manage
Arumugam Palli அது ஒரு தெயவீக ஒளி அழகு
உண்மை எவராலும் மறுக்க முடியாதது
LikeShow more reactions
•
2
• 18 hrs
Manage
அசோக்குமார் நம்பியார்
LikeShow more reactions
• 18 hrs
Manage
Tirupur Ravichandran நாடு போற்றிய
நன்மகனைப்பற்றி
நான்கு சம்பவங்களை...See More
LikeShow more reactions
•
3
• 18 hrs • Edited
Manage
s
•
2
• 18 hrs
Manage
Gopala Krishnan தலைவர் சொன்னது போல் கதம்பம் ஆக்காமல் நிகழ்வுகளை தனித்தனியாக பதிவிட்டால் விருந்தாக இருந்திருக்கும்.
LikeShow more reactions
•
1
• 17 hrs • Edited
Manage
Sskm Kmarimuthu replied • 1 Reply
Sskm Kmarimuthu அருமை அருமை குருஜி 4 வித பாவனைகள்*அழகு-சாமார்த்தியம்-கருணை-வள்ளல்-கம்பீரம்=4-"நடந்தால் அதுவும் இராஜநடை"
LikeShow more reactions
•
3
• 17 hrs
Manage
Kumara Vel அவர் என்றும் நம்முடன் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்.....
LikeShow more reactions
•
2
• 17 hrs
Manage
Sekar Sekar சரிதான்
LikeShow more reactions
• 16 hrs
Manage
Paul Jeeva அருமையான புதிய பதிவு.நன்றி.
LikeShow more reactions
• 15 hrs
Manage
Bala Kodi எனக்கொரு வியப்பு என்னவெனில் நாம் அனைவரும் இத்தனை போற்றிப்புகழும் நம் தலைவனை,அந்த மகானை,ஞானவானை,தூற்றிப்பேச சிலருக்கு மனம் வந்தது ஏன் என்பதுதான்.கதம்பசோறு போல கதம்பமான பதிவு.அண்ணாவுக்கு நன்றி.
LikeShow more reactions
•
3
• 15 hrs
Manage
Ragothaman Annamalai replied • 1 Reply
Aman Khan What a humidity of our loving ones. Good afternoon brother
Venkataraman Thiyagu
You are great messager man , I Like him.Keep it up .Congratulations to brother.
LikeShow more reactions
•
2
• 10 hrs
Manage
சென் றாயப் பெருமாள் மிக சிறப்பு
LikeShow more reactions
• 10 hrs
Manage
Selvaraj M G R அருமையான பதிவு..
LikeShow more reactions
•
1
• 10 hrs
Manage
Subramanian Mani What a film of Naan En Piranthan.I think one film our MGR THIRKADARSI had a role starting with family All songs are evergreen & super musical composition by Shankar Ganesh
LikeShow more reactions
•
1
• 9 hrs
Manage
நன்றி வெங்கட்ராமன் தியாகு முகநூல்
http://i68.tinypic.com/2zr3h4h.jpg
படம் நன்றி தினமலர் இணையதளம்