http://oi65.tinypic.com/6jhmvo.jpg
Printable View
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...cd&oe=5BD97E51
Sundar Rajan
ஊழலறியா உத்தமனின் உன்னத இதயங்களே,
நாடு போற்றும் நடிகர்திலகத்தை
என்றும், எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் பலரில், திரு.கமல்ஹாசன் அவர்கள் முக்கியமானவர் மட்டு...மல்ல முதன்மையானவர் என்பதை நிரூபித்து வருகிறார்.
நடிகர்திலகத்தின் நினைவுநாளான 21.07.2018 அன்று சனிக்கிழமை விஜய் டிவியில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசும் போது,
இன்று ஒரு முக்கியமான நாள், ஆம், நடிகர்திலகத்தின் நினைவு நாள், இன்றைய இளம் நடிகர்கள்,நடிகர்திலகத்தின் புகழை என்றும் காக்க வேண்டும்... செய்வார்கள் என நம்புகிறேன்.
இதை இந்த மேடையில் சொல்வதில் பெருமையடைகிறேன் என கூறினார்.
உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில்,
நமது நடிகர்திலகத்தின் நினைவுநாளை நினைவு கூர்ந்த கமல் அவர்களுக்கும்,
விஜய் டிவி நிறுவனத்திற்கும்,
பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கும்
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான
சிவாஜி ரசிகர்கள் சார்பிலும்,
நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மற்றும் நடுநிலையாளர்களே,
ஊடக வியாபாரிகளே
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள்
1952 பராசக்தி வெளிவந்த நாள் முதல் திமுகவின் பிரச்சரா பீரங்கியாக இருந்துள்ளார், திமுகவின் பணம் காய்க்கும் மரமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.
... அதன்பின் 1961 முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் முக்கிய தலைவராக திகழ்ந்தாலும், தன்னை தொண்டன் என்று சொல்லி, அதில் பெருமையும் கொண்டவர்.
பிறகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, தமிழகத்தின் ஜனதாதள தலைவராக இருந்துள்ளார்.
நண்பர்களே,
இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருந்தாலும், தனக்காக ஒரு மருத்துவக் கல்லுாரியோ, இன்ஜீனியரிங் கல்லுாரியோ, பெட்ரோல் பங்கோ, கேஸ் கம்பெனியோ, மத்திய, மாநில அரசுகளின் காண்ட்ராட்களோ எடுத்தது கிடையாது.
அரசியலை வைத்து வியாபாரம் செய்பவர்கள் மத்தியில், நேர்மையான அரசியலுக்காக தன் பணத்தை செலவு செய்த ஒரே தலைவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
சிவாஜியின் அரசியலைப் பற்றி விவாதம் செய்யும் ஊடகங்களே, தொலைக்காட்சிகளே,
அரசியலில் சிவாஜி அவர்களின் நேர்மை பற்றி விவாதம் செய்ய தயாரா?
அப்படி செய்தீர்களானால், அனைவரும் தோற்று விடுவார்கள். அது தான் சிவாஜி.
இந்த நினைவுநாளில் அவரைப் போற்றி அவர் வழி நடப்போம்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...25&oe=5BD5DE43
courtesy f b