-
தமிழ் நாட்டில் ஒரு திரைப் படத்திற்க்கான மிக உயர கட் அவுட் அமைக்கப்பட்டது நடிகர் திலகம் நடித்த வணங்கா முடி படத்திற் க்காகதான் வைக்கப்பட்டது.சென்னையில் பழம் பெரு ம் சித்ரா தியேட்டரில் தான் அது நடந்தது .சிவாஜிக்கான அந்த 80 அடி உயர கட் அவுட்டை உருவாக்கியவர் ஆர்ட்ஸ் மோகன்
இதில் வணங்கா முடி தான் முதலில் என்றும் மகாதேவி தான் முதலில் கட் அவுட் வைத்தது என்றும் ஒரு சர்ச்சை வந்ததுண்டு
வணங்காமுடி 12/4/1957ல் வந்தது
மகாதேவி 22/11/57ல் வந்தது
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ee&oe=5EBEBACC
Thanks Vijaya Raj Kumar
-
-
-
-
ஏழை மாணவர் இல்ல நிதிக்காக 2/2/75ல் சென்னை பல்கலை கழக மண்டபத்தில் சாம்ராட்அசோகன் நாடகம் ஓரங்க நாடகமாக முதன் முதலில் நடத்தப்பட்டது
ஆக்கு சிங்கப்பூர் நேசனல் ஸ்டேட்டியத்திலும் நடத்தப்பட்டது.
எம்ஜிஆர் முதல்வரான போது 1977ல் தமிழகத்தில் ஏற்ப்பட்ட புயல் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய சிவாஜி நாடகம் நடத்தி 1கோடியே 28லட்சம் ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...47&oe=5EBFFE8D
Thanks Vijaya Raj Kumar
-
தாய்
கதைச்சுருக்கம்
மேஜர் சுந்தராஜன் சூதாடி +குடிகாரர்.மனைவி வரலட்சுமி.கணவனின் குடிப்பழக்கம் எந்த மனைவிக்கு பிடிக்கும்? குடிப்பழக்கத்தை நிறுத்த கண்டிப்புடன் சத்தியம் வாங்குகிறார்.
அவர் அப்போது நிறைமாத கர்ப்பிணி.
மீண்டும்
சூதாட்டம் ஆடி,
பிரச்சினை ஆக,
போலீஸ் தேட,
மனைவி கண்டிக்க,
ஆத்திரம் மேஜருக்கு...
மனைவியை அடிக்க,
இறந்து விட்டதாக பயந்து,
சகோதரியிடம் அடைக்கலம் ஆகிறார்
மேஜர்.
சிங்கப்பூரில் ...
இறக்காத வரட்சுமி
இட்லி கடை நடத்தி
மகனையும், மகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்.
அவருக்கு ஆதரவு கொடுப்பவர் வி.கே.ராமசாமி.
மகனாக நடிகர்திலகம்.
மகளாக குமாரி பத்மினி.
தவறைக் கண்டால் தட்டிக்கேட்கும் சுபாவம், நேர்மையை எதிர்பார்ப்பதும், தாய்மையை போற்றுவதும் கொண்ட காரெக்டர் ஆனந்தன் (நடிகர்திலகம்) .
பொழுது போக்குக்காக தாயம் விளையாடும் பழக்கம் உண்டு.
சிங்கப்பூரில் இருந்து பெரும் பணக்காரராக மெட்ராஸ் வரும் மேஜர், தன் கடைசி காலத்தை நல்ல கிராமத்தில் கழிக்க விரும்பி வாடிப்பட்டி கிராமத்திற்கு வருகிறார்.ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் அவரிடம் தொடர்பு ஏற்படுகிறது ஆனந்தனுக்கு.ஆனந்தனின் நல்ல குணம் அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது.மேஜருக்கு ஒரு மருமகன். நம்பியார்.
ஆகாத குணங்களே அவரின் பழக்க வழக்கங்கள்.
வீகேஆரின் மகள் சிவகாமியாக ஜெயலலிதா.
ஆனந்தனும் சிவகாமியும் அவர்களின் மனம் ஒத்த ஜோடிகள்.
நம்பியாருக்கு சிவகாமியை மணமுடிக்க ஆசை.மேஜர் தன் மனைவியை கொன்ற விஷயமறிந்து அதை வைத்தே மிரட்டி மேஜரை வைத்து சிவகாமியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
நிச்சயத்தின் போது சிவகாமி மேஜரிடம் தான் அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று சொல்ல, மேஜரும் உண்மையுணர்ந்து திரும்புகிறார்.
ஆனந்தன் அவரைப் பார்க்க வீட்டிற்கு செல்கிறார்.அப்போது தன்தாயின் போட்டோவை அவர் அறையில் பார்த்து அதிர்ச்சியடைய, மேஜரும் நடந்ததைச் சொல்லி ஆனந்தப்படுகிறார்.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வதே இக் கதையின் கரு.
நடிகர்திலகம்
சாதாரண கிராமத்துக் கதை.பிரமாண்டம் இல்லை.ஆயினும் அவர் போதுமே.
ஆரம்பமாகும் அறிமுக காட்சியில் தாயம் விளையாடுவது என்று சாதாரணமாக இருந்தாலும் காட்சி முடிவில் வயோதிகரை ஓட விட்டு தான் மட்டும் வண்டியில் செல்லும் மிராஸ்தார் உசிலைமணியிடம் மிரட்டி வாதம் செய்து வயோதிகரை வண்டியில் அமர்த்தி கூட்டி செல்ல வைப்பதில் நடிகர்திலகத்தின் நடிப்பு அச்சாணி.
தாய் வரலட்சுமி மகனின் முரட்டுத்தனத்தை கண்டித்து உம்மென்று இருப்பதும் அவரும் பதிலுக்கு அவ்வாறே இருப்பதும் அதன்பின் சாப்பிட மறுக்கும் தாயை சமாதானம் செய்வதும் போன்ற காட்சியும் ரசனைதான்.
முதலாளியாக வரும் செந்தாமரையின் பெண் மோகத்திற்கு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்த காட்சிகளில் நல்ல ருசிகரம்.
குடித்து விட்டு ஆடும் மக்களின் குணங்களை தாயிடம் சொல்லும் காட்சிகளிலும் இயல்பான வசன நடைகளுக்கு தன் நடிப்பின் மூலம் நம்மை நல்ல ரசனைக்கு கொண்டு செல்கிறார்.
தெரியாமல் குடித்து விட்டு சகுந்தலாவுடன் ஆடும் நடனத்தில், சகுந்தலாவின் வலது கையை மேல்தூக்கி இடது காலால் தரையை தட்டி ஒரு ஸ்டெப் போடும் நடன அசைவில் தூள் கிளப்புவார்.
MRR வாசுவுடன் செய்யும் சண்டைக்காட்சியில் சினிமாத்தனங்கள் இல்லாத சண்டை அசைவுகள் நேரிடையான சண்டையை பார்ப்பது போலிருக்கும்.நடிகர்திலகத்தின் அடி உண்மை சண்டையை பார்ப்பது போலிருக்கும்.
ஜெயலலிதாவுடனான ரொமான்ஸ் காட்சிகள் நல்ல காட்சிகளை விரும்புவர்கள் கூட ஏற்று அது ரசிக்கும்படி இருக்கும்.அவர் கொடுக்கும் லுக்குகள், அசைவுகள் வெகுவாக கவரும்.
நம்பியார் திலகத்தை வம்புக்கு இழுக்கும் முதல் காட்சியில், அவமரியாதை செய்யும் நம்பியாரை பதிலுக்கு அவமரியாதை செய்யும் காட்சிகளில் வெகு இயல்புத்தனம்.அது படமாக்கப்பட்டது அன்னை இல்லம் என தெரிந்த அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் வெகுசுவாராஸ்யத்தை கூட்டும்.
மேஜருடன் சந்திக்கும் முதல் காட்சியில் அவரின் காட்டும் பவ்யமான நடிப்பு பேச்சு நடிப்பு எல்லாம் ஒரு சாதாரண காட்சியை மேம்படுத்துகின்றன.
அதைத் தொடர்ந்து வரும் கிளப் சண்டை அட்டகாசம் தான்.பயங்கர சுறுசுறுப்பு.சிறிது தவறினாலும் தன் மேல் விழும் அடி என்ற கோணங்களில் அவரின் மூவ்மெண்ட்கள் விழி விரிய வைக்கின்றன .மேடையில் இருந்து ஜன்னலுக்கு பின்பக்கமாக தாவும்அந்த குறிப்பிட்ட படு வேகமான ஷாட்டில் பிரமாதப்படுத்தியிருப்பார்.பத்துபட சண்டைக் காட்சியை அந்த ஒன்றில் பார்த்த நிறைவு நமக்கு. பாட்டில்ககளை எறிந்து அடிக்கும் அடிகளில் துல்லியம்.சமீபகால படம் ஒன்றின் பாட்டில் சண்டை காட்சிக்கும் இதுவே முன்னோடி.
திருட்டு பழி விழும் நிலையில், மேஜரிடம்,
"நான் என்னத்தையா பேசறது? இது உங்க
பங்களா, நானோ அன்னியன் , பணம் வேற கையிலே! என்னத்தையா பேசறது "
என்று பேசும் காட்சியில் கண்களில் அந்த உண்மையை காண்பித்து, வசனங்களில் வேறு வகையாக சொல்லி நடித்து சிலிர்ப்பூட்டுவார்.இந்த ஒரு காட்சி அமைப்பு வேறு படங்களில் அமைந்திருப்பதாக நினைவில்லை.
'பாத்தாலும் பாத்தேண்டி மதராச பட்டணத்தை '
பாடலில்,
'தெருவெங்கும் பிராந்திக்கடை தொறந்திருக்காங்க, என்ற வரிகளுக்கு
குடிகாரரர்களின் குணத்தை அந்த ஒரு ஸ்டெப்பில் காண்பிப்பாரே! அமர்க்களம் தான்.
இரண்டு முட்டிகளை இணைத்து கால்களை அகற்றி கைகளை தூக்கி ஆடும் நடன அசைவுகள் வித்தியாசமான கற்பனை .
கிராம பஞ்சாயத்து :
தலைமை வகிக்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம்,
நித்ய குடிகாரன் மது விலக்கு மாநாட்டுக்கு தலைமை வகிச்சானாம்,
பரம்பரை, பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு தெரிஞ்சவனெல்லாம் இன்னைக்கு விலாசமே இல்லாமே திரிஞ்சுகிட்டு இருக்கான்,
அரசியல் கலந்த இது போன்ற வசனங்கள் இந்த காட்சியில் நடிகர்திலகம் பேசுவார்.
விசிலடிப்போர்க்கு, கை தட்டுவோர்க்கு சரியான தீனி இந்த காட்சி.
அக்கால அரசியலை சாடியது இக்காலத்துக்கும் பொருந்துவது பொருத்தம்.
மேஜரை வரவேற்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் பாடலான
"நாடாள வந்தாரு "பாடல் காமராஜரின் பெருமைகளை ஒரே பாடலில் வடித்திருப்பது அருமை.காங்கிரஸ் கட்சி ஏன் இதை பயன்படுத்துவதில்லை?
"பாண்டிய நாட்டுச் சீமையிலே ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
அது பாலுக்காக அழவில்லை
படிப்புக்காக அழுததடி
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு மனதும் உடலும் துடித்ததடி
வளரும் பிள்ளை தற்குறியானால் வாழ்வது எப்படி என்றதடி "
என்ற வரிகளில் ஒரு சரித்திரத்தையே கண்முன் நிறுத்தும் பாடலாக அமைந்தது.
கிராமிய இசையையும், வெஸ்டர்ன் மியூசிக்கையும் கலந்து பிரமாதப்படுத்தியிருப்பார் இசை மன்னர்.ஆடல், பாடல் அற்புதத்தில் ஒரு உற்சாகத் துள்ளலான பாடல்.இது போன்ற பாடல்களில் இசை மன்னரை விட யாரும் சிறப்பு சேர்த்ததில்லை.
தங்கையின் காதல் தெரிந்து அது தெரியாதது போல் அவளை உசுப்பேற்றுவதும் போன்ற காட்சியில் நடிகர்திலகம் செய்யும் காமெடிகள் ரசனை.
தாயை பழிக்கும் மேஜரிடம் கொந்தளிக்கும் நடிகர்திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு
தாய் படத்தின் ஜீவன்.
தாய் -
நடிகர்திலகத்தின்
எதார்த்த,
உணர்ச்சி பூர்வமான,
ஜீவனுள்ள,
கண்ணியமான,
ரசனையான,
நடிப்பை தந்த படம்.
நிறைவு...
தாய் படத்தின் முழுப்படத்தை காண கீழே காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.
https://youtu.be/wEWs0TEIQLU
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...cd&oe=5EBE61F2
Thanks Senthilvel Sivaraj
-
-
நாளை (17/04/2020 ) - காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " கிரஹபிரவேசம் "
இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...22&oe=5EBC2A9E
-
-
-
-
-
-
'பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே! - அந்த பரமனையும் வாழ வைக்க சக்தி வந்தாளே! சக்தி வந்தாளே! -
பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே!'
இன்று 16/04/2020 காலை 11.00 A.M. மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" நல்லதொரு குடும்பம் "
குடும்ப படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...92&oe=5EBF390B
-
உலகிலேயே பெரிய சினிமா நிறுவனமான 20ம் செஞ்சுரி பாக்ஸ் என்ற பதக் கம்பெனி உலகம் முழுதும் விளக்க உரையுடன் தியேடரிலும் டெலிவிஷனிலும் வெளியிட வர்த்தக ரீதியாக உரிமை பெற்ற முதல் தமிழ் படம் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
1960ஆம் ஆண்டு கெய்ரோவில் ஒரே நாளில் 15தியேட்டர்களில் சிறப்பு காட்சியாக திரையிட்டு 15,650டாலர் வசூலிக்கப்பெற்று சாதனை படைத்தது சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e5&oe=5EBCCBB4
Thanks Vijaya Raj Kumar
-
"நான்(நாங்கள்) உன்னை ( அய்யனை ) அழைக்கவில்லை என் ( எங்கள் ) உயிரை அழைக்கிறேன்(றோம்)
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் (உங்கள்) எண்ணம்மறைவதில்லை
இன்று 17/04/2020 - மதியம் 01.30 மணிக்கு வசந்த் டிவி யில். -
நடிகர்திலகம் நடித்த மெகா ஹிட் படம் - "எங்கிருந்தோ வந்தாள்"
காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெயலலிதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...20&oe=5EBFD2CE
-
'சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை, சொல்லவா..கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்தகதை சொல்லவா..கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா.....'
இன்று 17/04/2020 - மதியம் 1.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக் காட்சியில்
நடிகர் திலகம் நடித்த - மகத்தான அண்ணன், தங்கை காவியம்
" பாசமலர் " - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a2&oe=5EC0158D
-
'வெற்றி வேல் வீர வேல்..சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்..ஞான சக்தி வேல்.'
இன்று 17/04/2020 இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த "கந்தன் கருணை"
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, ஜெமினி, சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3d&oe=5EBEE1B6
-
தமிழகத்தில் இரண்டு பிரபலமான வர்கள்சந்தித்தால்தங்களால்ஏதாவதுகாரியம்ஆகவேண்டும்என ்றசுயநலத்தோடுதான்சந்திப்பார்கள்ஆனால்நம்தலைவரைசந்தி க்கும்போதுமட்டுதான்உண்மையான அன்போடும் பாசத்தோடும் இருப்பார் கள்அதற்குநம்தலைவரின் கள்ளங்கபடமில்லாத அந்தமனசுதான்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f8&oe=5EBFFBCEhttps://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5EC11230
Thanks Thilak Ganesan
-
-
திண்டுக்கல் மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் ஏழைகளுக்கு கொரானோநிதியாக அரிசி பருப்பு காய். கறிகள் வழங்கபட்டது சிவாஜி A. திருப்பதி R. வெங்கிடு1. மாரியப்பன் N.ரத்னம் A. பாண்டியன் ஆகியோர் வழங்கினர்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e3&oe=5EC098F8
-
-
-
-
-
'வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில் -ஆழக் கடலும் சோலை யாக ஆசை இருந்தால் நீந்தி வா'
இன்று 18/04/2020 காலை 10.00 a.m. மணிக்கு கலைஞர் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் மூன்று வேடங்களில் நடித்த. !!!
"பலே பாண்டியா" படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், தேவிகா, எம்.ஆர்.ராதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...28&oe=5EC1AC0F
-
-
-
'கடவுள் என் வாழ்வில் கடன்காரன். கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்..
ஏழைகள் வாழ்வில் விளையாடும்...
இறைவன் நீ கூட குடிகாரன்...'
இன்று 18/04/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் மதியம் 1.30 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" நீதி " சிறந்த படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெயலலிதா, சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...98&oe=5EBEB52D
-
இன்று 18/04/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவியில் இரவு 8.00 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" ஜஸ்டிஸ் கோபிநாத் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், ரஜினி, கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...92&oe=5EC104B9
-
#ஒரே_ஒரு_அட்வைஸ் ஒரு நடிகனின் வாழ்வை மாற்றிய கதை!
️86 ஆம் ஆண்டு காலகட்டம் #ராஜமரியாதை திரைப்படத்திற்காக #கொடைக்கானலில் 15 நாட்கள் படப்பிடிப்பு கார்த்திக் ஜீவிதா ஜனகராஜ் செந்தில் எனஒரு நடிகர் பட்டாளமே கொடைக்கானலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்தது இவர்களோடு #நடிகர்திலகமும் தங்கியிருந்தார்.
படப்பிடிப்பின் கடைசி நாள் காட்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து பரிமாறிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சூழலில் நடிகர் கார்த்திக்கை தனியாக அழைத்த நடிகர் திலகம், "அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு தொடர்ந்து #பிளேபாய் கேரக்டராகவே செய்கிறாய் இதுபோன்ற வேடங்களை நீ தவிர்த்துவிட்டு கிராமத்து கேரக்டர்களாக நடித்து உன்னுடைய இமேஜை மாற்றிக்கொள் அதுதான் உனக்கு கைகொடுக்கும் என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் கிராமத்து வேடங்களை ஏற்று நடி"... என்று அறிவுரை செய்தார்.
அதன் பிறகு கார்த்திக்கின் தந்தை முத்துராமனுக்கு தனக்கும் உள்ள நட்பினை குறித்து அந்த நாளில் அவர்களுக்கு இருக்கும் நடந்த பல சுவாரசியமான தகவலை கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றனர்....
நாட்கள் கடந்தன அதன் பிறகு தொடர்ந்து பிளேபாய் கேரக்டர்களாகவே
கார்த்திக்கு வந்தன. நடிகர்திலகத்தின் அட்வைஸின்படி
அதுபோன்ற படங்களை தவிர்த்தார்.
பின்பு கிராமத்து கதாபாத்திரங்களாக #பாண்டிநாட்டுதங்கம்
#பெரியவீட்டுபண்ணக்காரன்
#வருஷம்16 #கிழக்குவாசல்
#தெய்வவாக்கு #நாடோடிபாட்டுக்காரன் #நாடோடிதென்றல்
#சோலைக்குயில்
#சின்னஜமீன்
#பொன்னுமனி
என கிராமத்து கதாபாத்திரங்களாக
பட்டையை கிளப்பி மிகப்பெரும் நடிகராக திகழ்ந்தார் கார்த்திக்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு #ராணிவாரஇதழில் நேர்காணலின்போது
இந்த தகவலை கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் கார்த்திக்.
இப்போது சொல்லுங்கள்
#ஒரேஒருஅட்வைஸ் ஒரு நடிகரின் வாழ்வையே மாற்றிக்காட்டினார் அல்லவா!
#நடிகர்திலகம் என்றால் சும்மாவா! #சகாப்தமல்லவா! அன்புடன் #லேகாஸ்ரீ
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...66&oe=5EBF91E3https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ce&oe=5EC1AEB7
Thanks லேகாஸ்ரீ
-
-
-
-
-
கடந்த ஜூலை மாதம் இந்தப் பதிவை கண்டேன் இப்போது நீதி ....ரசித்துக்கொண்டிருப்பதால்மீண்டும் இந்தப் பதிவை.. பதிவிடுகிறேன்இன்று ஆண்டவன்கட்டளை என்று அமர்ந்தபோது...இல்லை..இல்லை..இன்று இதுதான் நீதி என ஆண்டவனின்கட்டளை இருந்தது சரி தேன் குடத்தில் ஒவ்வொருதுளியும் தித்திப்புத்தானே...
இந்தப்படத்தில் அப்பா ஒரேஒரு நீலநிற உடையில் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருக்கிறார் சிறுகோடுபோன்ற மீசை அடிக்கடி ஆனந்பைலட்டையும் நினைவூட்டியது( எந்தப்படம்முந்தியது என்ற அறிவெல்லாம் எனக்குக்கிடையாது ஆனாலும் அப்துல்ரஸாக் கோபிக்கப்போறான்..ஏன்அக்கா நான்தானே ஆண்டுரீதியாக படங்களைப்பட்டியலிட்டேனே..குறிச்சுவைக்கல்லியா எனக்கேட்பது தெரிகிறதுவயசாயிடிச்சுப்பா அக்காவ மன்னிச்சிடு)
தேறிக்கழுத நான்போற ஸ்பீடுக்கு எந்தப்பயல் என்னப்புடிக்கமுடியும்...இன்று என்மண்டையைக்குழப்பிய வார்த்தையே இதுதான்...ஆமாம் அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதிலும்கூட இந்தமாதிரி சவாலான பாத்திரங்களை ஏற்றே வந்திருக்கிறார் அந்தச்சின்னப்பையனிடம் சாப்பிடுப்பா எனக்கெஞ்சும்போதிலும் சரி..என்னமன்னிச்சிடுப்பா எனக்கேட்டு ஏறக்குறைய அவன்கால்களில் விழுந்ததோரணையிலும் சரி அவரை அவரது நடிப்புத்தொழிலுக்கு அவர்கொடுத்த ஸ்பீடை யாராலும் இன்றுவரை முந்துறது என்ன நூறுஅடி தள்ளிக்கூட பின்னால ஓடிவரமுடியவில்லையே . ..மற்றவரின் கண்களுக்குக் கொலைகாரனாகவும் கைதியாகவும் தெரிந்த ராஜா பொன்னம்மாவுக்குமட்டும் இப்பதான் இந்த ஊருக்கே ஒரு ஆம்பிள வந்ததாகத் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் ...இது ரொம்பவே ஸ்பீட். ..மத்தவங்கமாதிரியா நீ என் மம்மதனாச்சே எனப் பொன்னம்மா சொல்லும்போது...பொன்னம்மாவிற்கு அந்த ராஜாமீது ஒரு இது...ஆரம்பமாகியே இருந்தது ஆனால் ராஜாவுக்கு அப்படி இல்லை.எனவே .அடிப்பாவி பச்சையாகவே சொல்லுறியே எனக்கேட்க்கும்போது முகமத்தில் தோன்றும் பாவம் ..அந்த ஸ்பீடை எந்தக்கொம்பனும் நினைத்துப்பார்க்க முடியாது ..ஆனால் மோஹினிப்பிசாசு மீது ஓரளவிற்கு காதல் ஆரம்பத்திலே அரும்பியதால் ஓடுதுபார் நல்ல..படம் பாடலின் போது வாயைநெளித்துக்கைகளை இடுப்பில் வைத்துநையாண்டிபண்ணும் தோரணையிலேயே புரிந்து கொள்ளமுடிகிறது .ஒருகைதி அதிலும் இரண்டு வருடங்களுக்குப்பின் அவர்பாட்டை அவர்பார்த்துவிட்டுப்போய்விடுவார் எனும்கதையமைப்பில் பயாஸ்கோப் ராதாவுக்கு நிச்சயமாக ஒரு கனவுப்பாட்டு வந்திருக்கணுமே....அந்தச்சேட்டையெல்லாம் எங்க அப்பாடஸ்பீடான நடிப்பு.....நடை அழகு...ஸ்ரைஸ் இவற்றுக்கு முன்னால நிற்கமுடியுமா . ....நல்லவேளை தேவையில்லாத கனவில் ரெக்கை கட்டிப்பறக்கும் கண்றாவி எல்லாம் எங்க அப்பாட ஸ்பீடுக்கு முன்னால பஞ்சாப்பறந்து விடும்
மாப்பிள்ளையைக்கடத்திவந்த ராஜாவை ஊரார் எதிர்க்கும் போது பொன்னம்மாவின் வார்த்தை யாராவது ராஜாமேலகையவச்சீங்க ...அப்புறம்பொம்பளகையால அடிவாங்கய....கேவலமாகிடும் .இதே வார்த்தைகளை அந்த இயமனிடம் 21 -7-2001 அன்று நாமெல்லாம்கேட்காமல் விட்டுட்டோமே ....என்றுகூட எண்ணிப்பார்த்தேன் ...புதுமைப்பித்தனின் காலனும்கிழவியும் எனும்கதையில் வரும் ஒரு கிழவி...பலகிளவிகளைக்கேட்டிருக்கலாமே என ஒரு பச்சைப்பைத்தியக்கார எண்ணமும் தோன்றியது அதேவேளை மாப்பிள்ளையின் அப்பாவிடம் கைதிராஜா சொல்லும் ஒருவார்த்தையையே இதற்குப்பதிலாகவும் ஏற்றுக்கொண்டேன்" எங்க சாபம் உங்கள ஒன்னும்பண்ணாது"
ஆனாலும் கடவுளும்கந்தசாமியும்மாதிரி கைதிராஜாவும்கடவுளோடு மோதும் ஸ்பீட் இருக்கே அது இந்த சினிமா உலகவரலாற்றிலே எவனாலும் நெருங்கமுடியாத ஸ்பீட் யோவ் நான் ராமுவமட்டுந்தாய்யா கொலசெஞ்சேன் ஆனா...நீ அவங்க ஒவ்வொருத்தரையுமே கொலசெய்யுறியே.....
உன்ன ஆத்தங்கரையிலயும் குளத்தங்கரையிலயும் ஏன் வச்சிருக்காங்கதெரியுமா. நீ வரங்குடுக்கல்லன்னா அப்புடியே ஒன்னத் தூக்கிப்போடுறதுக்குத்தான்
என்கிட்ட இருந்து லாறியப்பறிச்சே லைசன்ஸைப் பறிச்சே பூவாவையும் பறிச்சிக்கிட்டே. ஆனா இதமட்டும் ஒன்னால பறிச்சுக்கவே முடியாது.....ஒனக்கு இருக்கிற பவர விட இதுக்குப்பவர் ஜாஸ்த்திய்யா.....இப்படியெல்லாம் பேசிநடிக்க யார் முன்வருவார்...குடிக்கிறமாதிரி நடிக்கக்கூடாது.புகைக்கூடாது என்றெல்லாம் பம்மாத்துக்காட்டாமல் கடவுளிடமே வாதம்பண்ணும் கைதி ராஜா தன் நடிப்பு வண்டியை ஓட்டும்ஸ்பீடுக்கு யாரால அவரைப் பிடிக்கமுடிந்தது
எதிரொலி படத்தில் அப்பா இறுதிக்காட்சியில் ஜட்ஜ் இருக்கையில் இருப்பார் அப்போ நாகேஷ் அவர்கள் ஒருவசனம் சொல்லுவார் அட வக்கீல் என்னா வக்கீலாகவே ஆயிடுறான் ஜட்ஜ்ன்னா ஜட்ஜ்ஜ்கவே ஆயிடுறான் எல்லாமே பொருந்துது .....
தன் ஈடு இணையற்ற நடிப்பால்
நம்மைச்சிந்திக்கவைத்தார்
நம்மைச்சகரிக்க வைத்தார்
நம்மை அழவைத்தார்
நமது பழம்பெருமைகளை நம்கண்முன் காணவைத்தார்
நமது குடும்ப உறவுகளைப்பேண வைத்தார்
பாரதவிலாஸில் இந்தியமக்களை இணையவைத்தார்
இலங்கை இளம்கூயிலோடு இசைபாடி இணையவைத்தார்
உலகநாட்டுமக்களை அவரது ரசிகப்பிள்ளைகளாக ஒன்றிணைத்தார்
கண்ணால்காணாத எத்தனையோ உறவுகளை மனதால்க்கூடப்பிரியமுடியாத பந்தத்துள் இணையவைத்தார்
சகோதரபாசத்தை இன்றுவரை எம்மிடையே பேணவைத்தார் ..ஒருதாய்வயிற்றில்பிறக்காதநம்மையெல்லாம் எங்கெங்குபிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்....வந்ததெல்லாம்சொந்தமாச்சு ..இந்தக்குழுவிலே..என இணையவைத்தார் பந்துபோல ஆடப்பாசவலைகளைத்தந்தார்
மன்னனாக...சக்கரவத்தியாக...எல்லாவற்றுக்கும்மேல ாக நாம்விரும்பும் உறவில் அவரைக்கொண்டாடிமகிழ இன்றுவரை வைத்துவிட்டு வானில் இருந்து பூமழை பொழிந்து நம்மை வாழ்த்துகிறார்....இத்தகைய உறவுகளை வளர்த்துப்பேணவைக்கும் அவரது ஸ்பீடை யார் தாண்டமுடியும் ......அவரது இடத்தை யார்நெருங்கமுடியும்.....
மொத்தத்தில் கடவுள் நம்வாழ்வில் கடன்காரனே தான் நம்மிடமிருந்து வாங்கிய அந்தமாபெரும் இமயத்திற்கு இணையாக எதையும் நம்அனைவருக்கும் ஒன்றாகத்தரவில்லை என்றபடியால்
Thanks Nalini Sritharan
-
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் 18/4/2020 இன்று மாநில தலைவர் திரு, k.சந்திரசேகரன், அவர்கள், மாவட்ட காங், தலைவர் திரு, M.S.திரவியம் அவர்கள், ஆலோசனைப்படி, திரு நங்கைகளுக்கு பேரவையின் பொது செயலர், திரு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மற்றும் 3வது சர்கிள் காங்,தலைவர் திரு, D.k.மூர்த்தி அவர்கள் முன்னிலையில் ,E.சங்கு ராஜன், AB.குபேரன், M.ஹரிராஜ், S.விஜியகுமார்,ES.ஜெகன், V.துளசி ஆகியோர் கலந்து கொண்டு, திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கினர்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...ed&oe=5EBEFB19
-
-
-