Originally Posted by
vasudevan31355
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தாங்கள் இல்லாமல் அருமைப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வந்து மீண்டும் புதுப் பொலிவு தர உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பதிவானாலும் உடனே அந்தப் பதிவிற்கு முழுமனதுடன் பாராட்டும் உயர்ந்த குணம் தங்களுக்கு. அதே போல தவறான பதிவுகளையும் மனம் நோகாத படி நாசூக்காக கோடிட்டுக் காட்டும் குரு போன்றவர் தாங்கள் எனக்கு. ஒரு விசுவாசமிக்க மாணவனாக குருவான தங்களை எப்போதும் வணங்குகிறேன். ஆவலுடன் தங்கள் பதிவுகளைக் காண வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
அன்பு கார்த்திக் சார்,
என்னைப் பொறுத்தவரை நீங்கள் நக்கீரர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாங்கள் அஞ்சாமல் குற்றம் குற்றமே என்று சூளுரைக்கும் பாணியே தனி. நீங்களும் திரியில் பங்கு பெற்று சில மாதங்கள் ஆயிற்று. எங்களுக்கு பல யுகங்கள் ஆனாற்போன்று இருக்கிறது. தங்கள் முதல் நாள் திரையரங்கு அனுபவ பதிவுகளைக் காணாமல் கவலையுறுகிறது நெஞ்சு. தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் மறக்க முடியாதவை. தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்கள் பாடல் ஆய்வுகள் என்னவாயிற்று? தாங்கள் இல்லாமல் பாடல் ஆய்வுப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வாருங்கள். இன்பப் பாடல்களின் ஆய்வுப் பதிவை அள்ளித் தாருங்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டும் குணத்திற்கும் மிக்க நன்றி!
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
டியர் ஞானகுருசுவாமி சார்,
தங்கள் குடும்பத்தின் புதிய வரவான அந்த தெய்வக் குழந்தைக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
மற்றும் திரியின் அனைத்து நண்பர்களே!
திரு plum சார், திரு.P.R சார், திரு கோல்ட் ஸ்டார் சதீஷ் சார், அன்பு ஹரீஷ் சார், திரு. சங்கரா சார், dear grouchcho sir, அன்பு குமரேசன் பிரபு சார், அன்பிற்கினிய பாலா சார், திரு.ராதாகிருஷ்ணன் சார் , திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார், திரு.ரங்கன் சார், புதிய வரவுகளான சிவாஜி தாசன் சார், திரு subras சார், இளம் சிங்கமான ராகுல் சார், படைப்பாளி பாலா சார், திரு மோகனராம் சார், திரு சகலா சார், திரு கரிகாலன் சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன உயிரினும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாசம் கலந்த நன்றிகளைத் தெரிவித்து, தாங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.