மதுர கீதம் படத்திலிருந்து
கண்ணன் எங்கே.. சோக வடிவம்...
http://www.youtube.com/watch?v=UnAHakrZsKw
ஹிந்திப் பாடலின் மெட்டு ...
இதனுடைய ஒரிஜினல் ஹிந்தி பாடல்
கேல் கேல் மெய்ன் படத்திலிருந்து...
http://www.youtube.com/watch?v=KEv0m2r-uus
Printable View
மதுர கீதம் படத்திலிருந்து
கண்ணன் எங்கே.. சோக வடிவம்...
http://www.youtube.com/watch?v=UnAHakrZsKw
ஹிந்திப் பாடலின் மெட்டு ...
இதனுடைய ஒரிஜினல் ஹிந்தி பாடல்
கேல் கேல் மெய்ன் படத்திலிருந்து...
http://www.youtube.com/watch?v=KEv0m2r-uus
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 4)
இளையராஜாவின் ஆச்சர்யப்படுத்தும் முன்னேற்றமான வேகம் சற்றும் தரம் குறையாமல் மெருகேறியபடியே. முக்கியமாக நடுத்தர பட்ஜெட் படங்கள்.... அதுவும் கருப்பு வெள்ளை படங்களில் இளையராஜாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்தது. கிராமப்புற மெட்டுக்களை பல இசையமைப்பாளர்கள் பிரமதமாக நமக்கு அளித்திருந்தாலும் இளையராஜா அந்த விஷயத்தில் தனியாகத் தெரிய ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கிராமப்புற இசை மட்டுமல்லாது கிளாஸிக்களிலும் அவர் முத்திரை பதிக்க ஆரம்பித்தார்.
ராஜா இசையமைத்த அப்படிப்பட்ட படங்களில் ஒன்று அவரது இசைக்காகவே இன்றுவரை பேசப்படும் 'உறவாடும் நெஞ்சம்' என்ற ஒரு படம். சிவக்குமார், சந்திரகலா போன்ற நன்கு பரிச்சயமான நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் பற்றியோ, நடிப்பு பற்றியோ,கதை பற்றியோ பல பேருக்குத் தெரியாது. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தன.
1976-இல் வெளிவந்த 'உறவாடும் நெஞ்சம்' படத்தில் பாடல் என்ன என்று கேட்டால் பலருக்குத் தெரியாது. ஆனால் 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்' பாடலைப் பற்றிக் கேளுங்கள். 'ஓ... அருமையான பாடல் ஆயிற்றே... இந்தப் பாடல் 'உறவாடும் நெஞ்சம்' படத்திலா? என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். ஆக படத்தை விட பாடல்களே சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. இதுவும் தேவராஜ் மோகன் இயக்கம்தான்.
இந்தப் படத்தில் இருந்து ராஜாவின் அபூர்வப் பாடல் ஒன்று. 'அரரரே' என்று ஜானகி ஆரம்பிக்க 'டிக் டிக் டிக்' என்ற ஓசையுடன் அமர்க்களமாக ஆரம்பிக்கும் பாடல்.
நெனச்சதெல்லாம் நடக்கப் போற நேரத்துல வாடி
என் காதல் ராணி... நான்தானே தேனீ
என் காதல் ராணி... நான்தானே தேனீ
இதுதானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா... நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம் நடக்கப் போற நேரத்துல வாய்யா
என் காதல் ராஜா... நான்தானே ரோஜா
பாலாவும், ஜானகியும் பின்னி எடுத்த பாடல். பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள். ஜானகி 'வாய்யா... பக்கத்துல வாய்யா' என்னும் போது பின்னுவார். பாலா கேட்கவே வேண்டாம்... உற்சாகத் துள்ளல் துள்ளுவார். அதுவும் ஜானகி 'வாய்யா' என்றவுடன் ஒரு 'ஹய்யோ' போடுவாரே.... அமர்க்களம்.
பாடலைக் கேட்டாலே எழுந்து ஆடத் தோன்றும்.
http://www.youtube.com/watch?v=KLM5X...yer_detailpage
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -11
சரத்குமார் சூரியனுக்கு பின் பல படங்களில் தலையை காட்டினார். இருந்தாலும் பேர் சொல்லும் படி ஒன்றும் அமையவில்லை
அப்படி இருந்த சூழலில் சாமுண்டி வந்தது . 11’ம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தை நண்பர்களுடன் பார்த்தேன். இதில் என் கூட கனகா ரசிகர்கள் வேறு .. கஷ்டம்ம்..
தேவாவின் இசையில் பாடல்கள் நன்றாகவே பிரபலமடைந்தது
முத்து நகையே முழு நிலவே
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா
இரண்டும் நல்ல பிரபலமாயின
அதே போல் பாலாவின் குரலில் இந்த பாடலும் அருமையான ஒன்று
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொன்னு வெச்சுக்கம்மா (திரையில் தங்கையாக நடிகை மீரா)
https://www.youtube.com/watch?v=tCiE0_5ixb8
இலட்சிய நடிகரின் மறைவுக்கு என் அஞ்சலி
http://i1087.photobucket.com/albums/..._001571256.jpg
இலட்சிய நடிகர் மறைந்துவிட்டார். ஒரு பெரிய சோகம் என்னைக் கவ்விக் கொண்டது நிஜம். நடிகர் திலகத்துடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்டவராய் இருந்தாலும் நடிப்பு என்று வரும்போது திலகத்துடன் இணைந்து பல காவியங்கள் தந்து, தனித்தன்மையான சிறந்த நடிப்பு என்ற ஒத்துழைப்பை நல்கியவர்.
புராண வேடங்களை நான் ஏற்க மாட்டேன் என்ற உண்மையான இலட்சியத்தைக் கடைப்பிடித்து நிஜமான லட்சிய நடிகராகத் திகழ்ந்தவர். நடிகர் திலகத்திற்குப் பிறகு தமிழை அருமையாக உச்சரித்தவர். நடிப்பில் பல சாதனைகளை நிகழ்த்தியவரும்கூட.
என்னைக் கேட்டால் அவருடைய உச்சம் 'கை கொடுத்த தெய்வ'த்தில் தான் என்பேன். அண்ணன் தங்கையாய் பழகும் நடிகர் திலகத்தையும், எஸ்.எஸ்.ஆரின் மனைவி கே.ஆர்.விஜயாவையும் இணைத்து ஊர் கேவலமாக முடிச்சுப் போட்டுப் பேசி கதை கட்டும். கயிறு திரிக்கும். ஒரு கட்டத்தில் அது அதிகமாகிவிட, நடிகர் திலகம் மனம் நொந்து, 'இனி அங்கிருந்தால் நண்பனுக்கு மிகுந்த அவமானம் ஏற்படும்' என்று கையில் பையுடன் வீட்டை விட்டு கிளம்புவார். எஸ்.எஸ்.ஆர் தடுத்து காரணம் கேட்பார். அதற்கு நடிகர் திலகம் ஊராரின் கேலிப் பேச்சுக்களையும், விஜயாவைத் தன்னுடன் மற்றவர்கள் சம்பந்தப்படுத்திப் பேசுவதையும் சொல்லி தாங்கமாட்டாமல் குமுறுவார். எஸ்.எஸ்.ஆர் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்ப்பார். நடிகர் திலகம் கேட்க மாட்டார். 'வீட்டை விட்டுக் கிளம்புகிறேன்' என்று பிடிவாதமாகவே இருப்பார். இறுதியில் எஸ்.எஸ்.ஆர் 'ஆல்ரைட்...போடா' என்று கடுப்பாகச் சொல்லி விடுவார். கே.ஆர்.விஜயாவும் நடிகர் திலகத்தை போக வேண்டாம் என்று தடுப்பார்.
"அவனைத் தடுக்காதே போகட்டும் விடு" என்று விஜயாவிடம் எஸ்.எஸ்.ஆர். கூறுவார்.
"இந்த உலகத்தைக் கண்டு பயப்படறேன்னு சொல்றாரு... அந்த உலகத்துக்குள்ளேயா அவரைத் தனியா அனுப்புறீங்க?"
அப்படின்னு விஜயா எஸ்.எஸ்.ஆரிடம் கதறுவார்.
அதற்கு எஸ்.எஸ்.ஆர்,
"அவன் பொய் சொல்றான் ராதா பொய் சொல்றான்...(குரல் மாடுலேஷன் அற்புதமாக இருக்கும்) நான் பயந்த நேரத்துலலாம் எனக்கு தைரியம் சொன்னவன் அவன். இந்த உலகத்தைக் கண்டு அவன் பயப்படல...தனக்குத் தானே அவன் பயப்பட ஆரம்பிச்சுட்டான்... (நடிகர் திலகம் அதிர்ச்சியில் உறைந்து தன்னையறியாமல் 'ஆங்' என்பாரே பார்க்கலாம்) இந்த வீட்ல இருந்தா ஊரார் சொன்னா மாதிரி எங்க உண்மையிலேயே தப்பு பண்ணிடுவோம்கிற பயம் அவன் மனசுக்குள்ள வந்துடிச்சி...அதனால்தான் போறேன்னு சொல்றான்" என்று வேண்டுமென்றே நடிகர் திலகத்தைத் தடுத்து நிறுத்த ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்.
இதைக் கேட்டதும் நடிகர் திலகம் படுகோபமுற்று, எஸ்.எஸ்.ஆரின் மேல் பாய்ந்து, அவர் கன்னத்தில் 'அறை அறை' என்று அறைந்து விடுவார். நடிகர் திலகத்தில் கைவிரல்கள் எஸ்.எஸ்.ஆரின் கன்னத்தில் பதிந்திருக்கும்.
"என்னடா சொன்னே?!
யாரடா சொன்னே?!
யாரப் பக்கத்துல வச்சுக்கிட்டுடா சொன்னே?!"
என்று எஸ்.எஸ்.ஆரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு ஆங்காரமாக நிற்பார் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/..._001557221.jpg
அதற்கு எஸ்.எஸ்.ஆர் கொஞ்சமும் பதறாமல் நிதானமாக, ஆணித்தரமாக
"யேய் ...நீ போறேன்னு சொன்னா அதைத்தாண்டா சொல்லுவேன்" என்று தீர்க்கமாக நடிகர் திலகத்தைப் பார்த்து சொல்லுவார்.
"மறுபடியும் சொல்றா பார்க்கலாம்" வேகத்துடன் நடிகர் திலகம்.
"உண்மையிலேயே தப்பு பண்ணிடுவோமோன்னு பயந்துதான்டா நீ போற" மீண்டும் எஸ்.எஸ்.ஆர் அதே ஸ்டேன்டர்டான நிலையில்.
மறுபடி புயல் மாதிரி வேகம் கொண்டு ,எஸ்.எஸ்.ஆரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, நடிகர்திலகம் அவர் கழுத்தை நெருக்கிப் பிடித்து,
"சொல்லலேன்னு சொல்றா"..
எஸ்.எஸ்.ஆர் பதறவே பதறாமல்,
"போகலைன்னு சொல்றா"
நடிகர் திலகம் சிம்மமாக எஸ்.எஸ்.ஆரின் கழுத்தைக் கடிக்கப் போவார்.
"குரல்வளையைக் கடிச்சு ரத்தத்த உறிஞ்சுபுடுவேன்...சொல்லலேன்னு சொல்றா"
எஸ்.எஸ்.ஆர்,
"யேய்... நீ போனா அப்படித்தாண்டா சொல்லுவேன்... போகலைன்னு சொல்றா"
என்ன ஒரு காட்சி! என்ன ஒரு நடிப்பு! இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் முன் நிற்க இந்த இலட்சிய நடிகரை விட்டால் வேறு யார்?
நடிகர் திலகத்தை அறவே மறந்து விடுவோம். இலட்சிய நடிகரின் திறமையை இந்தக் காட்சியில் என்னவென்று சொல்வது? நண்பனின் மேல் கொண்ட நம்பிக்கையை அவனையே உணரச் செய்யும் சாமர்த்தியம், அசையாத சங்கர் சிமெண்ட் உறுதி, கொஞ்சமும் தளராத மனம், எங்கு அடித்தால் நண்பன் வீழ்வான் என்று அந்த இடம் பார்த்து அடிக்கும் சமயோசிதபுத்தி, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அமைதிவழிப் போராட்டம் நடத்தி நண்பனை நிறுத்தும் பாங்கு, நண்பனின் முரட்டு அடிகளையும் தாங்கிக் கொண்டு "போகலைன்னு சொல்றா"என்று இறுதிவரை உறுதியாக நின்று காரியத்தை சாதிப்பது என்று நடிப்பில் சாதித்துக் காட்டுவாரே! நடிகர் திலகம் பொங்கி கோபப்பட்டு குமுறும் போதெல்லாம் அவரைத் தன் சிறு கண்களால் தீர்க்கமாகப் பார்த்துப் பேசும் தோரணை, 'நண்பன் கிளம்பத் தயாராகி விட்டான்... இனி அவனைத் தடுக்க பிரம்மாஸ்திரத்தை எடுக்க வேண்டியதுதான்' என்று முடிவு செய்து, அப்படியே எடுத்து, ஒரே அஸ்திரத்திலேயே அவனை வீழ்த்தி இலட்சியத்தை நிறைவேற்றிய லட்சிய நடிகன் இன்று நம்மிடத்தில் இல்லையே!
அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மறைந்திருக்கலாம். அவரின் எண்ணற்ற படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்துடன் அவர் நடித்த, அவருடன் பாத்திரமாக வாழ்ந்த கதாபாத்திரங்களை நாம் மறக்க முடியுமா?
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!
ராஜேஷ்ஜி!
அருமையான வயலின் இசையுடன் தொடங்கும்
'ராகா நின்னது பாவா நன்னது
தாளா நின்னது நாட்யா நன்னது
மனவே யமுனா
மணியே கோகுலா
நானே முரளி
நீனே கோபாலா'
அம்ர்க்களமோ அமர்க்களம். பத்து முறைகளுக்கு மேல் கேட்டுவிட்டேன். நிஜமாகவே இசையரசி கொன்னுட்டாங்க ஜி. அதுவும் அந்த 'து' உச்சரிப்பு ரகளையான ரகளை. தேங்க்ஸ் ஜி.
'மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொன்னு வெச்சுக்கம்மா'
ரொம்பப் பிடித்தம் எனக்கு.
சின்னக் கண்ணன் சார்,
'வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்' அச்சா பாடல். ரொம்பப் பிடிக்கும். பதித்ததற்கு நன்றி. வரிகளுக்கும் சேர்த்துத்தான். வீடியோ நாங்களே தேடிக்கவா?:) எந்த ஊர் நியாயம் இது?:)
சரி போனா போகுது. இந்தாங்க.:)
https://www.youtube.com/watch?v=yJ8rGdEUeOo&feature=player_detailpage
ராஜேஷ்ஜி!
எங்க வீட்டு தீபாவளி ...பலகாரங்கள். நாக்கு ஊறுது ஜி. பார்சல் ப்ளீஸ்.