http://i58.tinypic.com/24grcrr.jpg
Printable View
புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்
http://i62.tinypic.com/2a5bwnt.jpg
மதுரை புதூர் விஜய் சினி பாரடைசில்
28/11/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா "
என ரசிகர்களை அழைத்தார். அதன் சுவரொட்டி நமது திரியில் பதிவிட அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார். அவர்கள்.
http://i62.tinypic.com/1zxw9c3.jpg
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (05/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது.
http://i62.tinypic.com/9qzbyd.jpg
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு, வணக்கங்கள். தாங்கள் வெளியிட்ட இந்தப் பதிவு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. தங்களுடைய கருத்து அல்ல என்பது தெளிவாகிறது. ஆனாலும் இதில் கீழ்க்காணும் வரிகளை என்னால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
[Bஅதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். [/B]
தங்களது கருத்தும் அதுவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். தயவு செய்து மக்கள் திலகத்தினைப் பற்றிய செய்திகளை பதிவிறக்கம் செய்யும் போது இது போன்ற தவறான கருத்துக்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்த்து நவரசத்தையும் கொட்டி உணர்ச்சியுடன் அவரது மாறுபட்ட நடிப்புத் திறனைப் பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்த நம் போன்றோருக்குத் தெரியும் அவர் எப்படிப்பட்ட மிக மிக மிக சிறந்த நடிகர் என்று. இது போன்ற துளிகூட உண்மையில்லாத கருத்தை அதன் பின்னால் வரும் பாராட்டுரைகளுக்காகக் கூட மன்னிக்க இயலாது. சேலத்தைச் சார்ந்த அருமை நண்பர் முத்தையன் அவர்கள் வெகு அற்புதமாக மக்கள் திலகத்தின் முகம் மாறுபட்ட பல்விதமான உணர்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்களைப் பதிவிட்டு மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்காதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் நடிகர் பேரரசரின் முகம் எவ்வளவு அழகாக எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுகிறது என்பதை விளக்கி மாபெரும் சேவை புரிந்திருக்கிறார். தயவு செய்து எங்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் , நெட்டில் கிடைக்கும் கட்டுரைகளை முழுமையாகப் படித்துவிட்டு பதிவேற்றுங்கள்என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோ ஒருவர் தான் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இக் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்பதற்காக அவரைப் பாராட்டுவது போல் எழுதிவிட்டு நடுவே நஞ்சைக் கக்கி இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எந்தத் திறமையிலும் எவருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் சளைத்தவர் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். He had no minus points, only plus points. All that he had in him is Good, All that he said is Good. All that he done is also Good.
இனிய நண்பர் திருஜெய்சங்கர்
இணையத்தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய சிறப்பு கட்டுரையில் தவறுகள் இருப்பது உண்மை .ஏற்று கொள்ள முடியாத சில வரிகளை எடிட் செய்யாமல் பதிவிட்டதின் காரணம் எந்த அளவிற்கு மக்கள் திலகம் அவர்களை திரை உலகினர் மற்றும் விமர்சகர்கள் தவறான கண்ணோட்டத்தில் அவரை விமர்சனம் செய்தார்கள் என்பதை இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ளவே பதிவிட்டேன்
நீங்கள் குறிப்பிட்டதை போல இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் பல்வேறு நடிப்பு முகபாவங்கள் ஒன்று போதுமே நம் மக்கள் திலகத்தின் நடிப்பின் வெளிப்பாடுகள் . கட்டுரையை முழுமையாக படித்த பின்னர்தான் பதிவிட்டேன் . உங்கள் மனதுபுண்பட்டதால் என்னுடைய பதிவை நீக்கி விட்டேன் . நன்றி .திரு ஜெய்சங்கர் .
இனிய நண்பர் லோகநாதன் சார்
மதுரை நகரில் வெளிவந்த மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை மற்றும் அன்பே வா போஸ்டர்ஸ் மற்றும் திரை
அரங்கு நிழற் படங்கள் அருமை .
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ் - ராக்கெட் வேகத்தில் செல்கிறது .