-
கருவின் கரு - பதிவு 60:):smile2:
" அம்பா "
பல கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் கடையில் கிடைக்காது அம்மாவின் அன்பு..
"கண்ணோடு இமை சேர்ந்த பந்தம் அம்மா நீ என்னோட சொந்தம்...
தாகம் தீராதே அம்மா உன் சொல்லில்...
வான் வரை பறந்தாலும் உன் காலடி என்கூடு
காலத்தால் அழியாதது என்றென்றும் நிலையானது
அது ஒன்று தான் "அம்மா உன்னோட அன்பு"-------
https://youtu.be/x7ElA695b08
-
" அம்பா " தொடருவாள்------
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
7
அடுத்த பாலாவின் பாடல் நம் எல்லோருடைய நெஞ்சிலும் பசுமையாய்ப் பதிந்த பாடல். அனைவரும் மனனம் செய்து வைத்திருக்கும் திருக்குறள் போல. 70 களின் பாடல்களில் மயங்கிய இப்போதைய 50 வயதைக் கடந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு காமதேனு. கற்பக விருட்சம்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? வயது, வரம்பு, காலம், இவற்றையெல்லாம் கடந்து நின்று காலம் வென்ற பாடல்.
ஒரு பாடகன் அதுவும் இளம் வயது வாலிபப் பாடகன்... அப்போதுதான் அறிமுகமாகி அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறான். தன் 'அல்வா'க் குரலால் அனைவரையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக. இப்பாடலில் அவன் பாடவே இல்லை. உடன் பாடும் பாடகியுடன் சேர்ந்து வெறும் ஹம்மிங் மட்டுமேதான் தருகிறான். அதுவும் பாடலின் ஆரம்பத்தில், பாடலின் இடையில் மட்டுமே. கொஞ்ச வினாடிகள்தான்.
பாடல் முழுவதையும் ஆக்கிரமித்து இசை சாம்ராஜ்யத்தின் அரசி இன்ப அராஜகம் புரியும் வேளையில், இந்தப் பாடகன் அதையும் மீறி, அந்த இன்பத்தை இன்னும் அதிகமாக்கி, நம் மனசுக்குள் நம்மையே அறியாமல் அவனாக நுழைந்து, ஒரு சாதாரண ஹம்மிங் மூலம் இனம் புரியா இனிய சித்ரவதைகள் செய்கிறானே! நாடி நரம்புகளில் புகுந்து தன் குரல் ஜாலத்தால் அணுக்கள் ஒவ்வொன்றையும் சிலிர்க்க வைக்கிறானே! இவனை என்ன செய்தால் தகும்?
இவன் ஹம்மிங் மட்டும்தான் 'ஆஹாஹா' வா?
இல்லை...இவன் வாழைத்தண்டு குரல் 'ஆஹாஹா'
இவன் வாயைத் திறந்தால் 'ஓஹோஹோ'
இவன் குரல் குழைவுக்கு இணை யாரும் 'ம்ஹூம்' இல்லவே இல்லை.
இந்தப் பாடலிலும் இவன் மேலே சொன்ன மூன்று வார்த்தைகளைத்தான் உச்சரிக்கிறான். அதிலேதான் எத்தனை வகை நெளிவு! எத்தனை வகை சுளிவு!. என்ன ஒரு ஏற்ற இறக்கங்கள்! என்ன ஒரு குரல் பாவங்கள்! மாய ஜாலங்கள்! வழுக்கி விலகும் வெண்ணையை விடவும் மென்மையான குரல்.
இன்னும் கொஞ்சம் அந்த ஹம்மிங்கை இந்தப் பாடகன் நீட்டிப்பு செய்ய மாட்டானா என்று ஏக்கப் பெருமூச்சு நமக்கு ஏற்படாமல் போகாது.
http://www.photofast.ca/files/products/7115.jpg
'நவக்கிரகம்' படத்தில் நயமான பாடல். பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து தயாரான 'மெல்லிசை மாமணி' வி.குமாரின் இசையமைப்பில் சுசீலாம்மா தனக்கே உரிய தனி முத்திரையுடன் சுகந்த தென்றலாய் சுகம் தர, பாலா அவருடன் இணைந்து அந்த தென்றலினூடே கலந்து வரும் சந்தன வாசமாய் மணக்க, நம் நெஞ்சமெல்லாம் எப்போது இப்பாடலைக் கேட்டாலும் கற்கண்டாய் இனிக்க,
எவரும் மறக்க முடியாத 'எவர்கிரீன்' பாடலாக
இந்த
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது'
பாடல் நம் எல்லோர் நெஞ்சையும் தொட்டு விட்டது.
.
அப்போதைய ஒரே ஒரு இளம் ஜோடியாய் பல திரைப்படங்களில் வலம் வந்த சிவக்குமாரும் ,லஷ்மியும் நடித்த இளமை கொஞ்சும் பாடல். காதலர்கள் கடற்கரையில் பாடும் காவிய கானம். லஷ்மியின் எளிமை, நாணம், சிவாவின் அழகு என்று பாடலுக்கு மேலும் மெருகு.
வி.குமார் என்ற ஹார்மோனியப் பெட்டி நாடக இசையமைப்பாளர் ஒருவர் நம் ஹார்மோன்களில் கலக்க காரணமாய் இருந்த பாடல். ஹார்ட்டின் அடித்தளம் வரை ஊடுருவிய பாடல்
ஹா...ஹாஹாஹா...
ம்ஹூஹூம்... ம்ஹூஹூம்
ஹா..ஹா..ஹாஹா
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
ஆஹாஹா! ஓஹோஹோ! ம்ஹூஹூம்! லல்லல்லா!
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்துத் தெறித்த போது என்னை நனைத்தது
ஆஹாஹா! ஓஹோஹோ!
ஓஹோஹோ! ஆஹாஹா!
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும்போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
https://youtu.be/TJt9u51RkKs
-
வாழ்க்கையே வெறுத்துப் போகும் தருணங்கள் ... சிக சாரின் பட்டியலில் மேலும் ஒன்று.
நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...
-
அபூர்வ கானங்கள்
படம் இளைய பிறவிகள்
இசை சங்கர் கணேஷ்
குரல்கள் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்
https://www.youtube.com/watch?v=I9u4wadBuQU
-
அபூர்வ கானங்கள்
வாசு சார்
உங்களுக்கு நல்ல வேலை .... இந்தப் பாட்டைப் பற்றி எழுதி பட்டையைக் கிளப்பப் போகிறீர்கள்..
படம் - கண்ணாமூச்சி
குரல் - எஸ்.பி.பாலா
இசை -மெல்லிசை மாமணி வி.குமார்
https://www.youtube.com/watch?v=2LDlONlyDMQ
-
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
வாஸ்ஸூ, இன்னாங்க காலங்காலீல மனுஷன் வேலைபாக்கத்தாவலை..
//மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது//
என்னா பாட்டு..அது துளித்துளியாய் - அப்படின்னு அந்த அம்மா பாடறது காதுல தேன் , காஜ்ல் அகர்வால் சாரி டைப்போ காஜர் அல்வா (முந்திரி அல்வா) பாய்ச்சறா மாதிரி இருக்கும்.. அதுவும் சில் ப்ளாக் அண்ட் ஒய்ட் படங்கள்ல லஷ்மியோட அழகு நன்னாயிட்டே இருக்கும்.. சமயத்துல காம்பஸ எடுத்து நடுமூக்கில குத்தினா வட்டம் வரையலாம் அப்படி முகமும் வட்டமா இருக்கும்!
சூப்பர் பாட்டு நைஸ் ரைட்டிங்க்.. நன்றி
*
//நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...// :) நன்றி ராகவேந்தர் சார்..
*
தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே...
இலங்கைப் பிரச்னை அது இதெல்லாம் ஒழுங்காக் கையாளலைன்னு படம் வந்த புதுசுல என்னமெல்லாமோ மணிரத்னத்தைப் பேசினாங்க..ஆனா அதெல்லாம் எடுத்துக்கவே படாது..படமென்ன
ஒரு வளர்ப்புத் தாய்க்கும் அவள் வளர்க்கும் மகளுக்கும் உள்ள உறவைப் பற்றியது
பெத்தாத் தான் புள்ளீங்களா..
அதுவும் தன்னை ப் பெற்ற தாய் வேண்டாம் என விலக அவளிடமிருந்து விலகி வரும் சிறுமி வந்து- பார்த்திபன் மகள்- மெல்ல்லிய பச்சக் சிம்ரன் கன்னத்தில் கொடுக்க சிம்ரன் கண்ணோரம் மெல்லிய நீர்.. பார்ப்பவருக்கும் தான்..
கொஞ்சம் மிக நெகிழவைத்த படம்.. நன்றி ரவி..
-
அபூர்வ கானங்கள்
இதை கானம் என்று சொல்லலாமோ.. ஒரு வார்த்தை கூட இல்லாமல் ஒரு பாட்டு.. வெறும் ஹம்மிங் மட்டுமே...
இதயம் பார்க்கிறது... படத்தில் யாதோங் கீ பாராத் படப் பாடலின் மெட்டை வெறும் ஹம்மிங் மட்டும் பாட வைத்திருக்கிறார்கள்..
https://www.youtube.com/watch?v=cepigF1zGeA
பெண் குரல் சசிரேகா..
ஆண் குரல்... மலேசியா வாசு வின் குரலாய்த் தெரிகிறது. தவறுதலாக எம்.எஸ்.வி. என்று போட்டிருக்கிறார்கள்.
-
அபூர்வ கானங்கள்
படம் - அழைத்தால் வருவேன்
பாடல் - சொந்தங்கள் திரும்பத் திரும்ப அழைக்கும்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
https://www.youtube.com/watch?v=wUxGO6puYAM
-
வாசு,
பாலாவின் பழைய பாடல்கள் சுகமான சுனாமியாக எங்களைத் தாக்கி இன்ப அதிர்வலைகளை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டிருக்கிறது. சுவையான உணவும் அதிகமாக அதிகமாக திகட்டும். இந்த சுனாமி எங்களை தாக்கித் தாக்கி இன்னும் இன்னும் என்று ஏங்க வைக்கிறது.
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' - உங்களுக்கு கொடுத்த இன்பத்தை எங்களுக்கும் கொண்டுவந்துவிட்டது. உண்மைதான் இந்த பாடல் எப்போது கேட்டாலும் நெஞ்சில் இனிக்கும் கற்கண்டுதான். பழைய பாலா பாடலில் மறக்காமல் இணைத்ததற்கு நன்றி.