Originally Posted by saradhaa_sn
"தாய்"
பராசக்தியில் துவங்கிய நடிகர்திலகத்தின் 'கருப்பு-வெள்ளை' சகாப்தத்தின் கடைசி அத்தியாயம்.
1974-ல் சிவகாமியின் செல்வன், வாணி ராணி படங்களுக்கு மத்தியில் வெளியான, ஜனரஞ்சகமான படம். நடிகர்திலகத்தின் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் காட்சிகள் துண்டு துண்டாகவே நினைவிருக்கிறது. நம்பியாரும் நடித்திருந்ததாக நினைவு. டி. யோகானந்த இயக்கியிருந்தார்.
மெல்லிசை மன்னரின் இசையில், பெருந்தலைவர் புகழ்பாடும் 'நாடாள வந்தாரு' பாடலும், 'நான் பார்த்தாலும் பார்த்தேண்டி மதராஸு பட்டணத்தை' பாடலும் நினைவிருக்கிறது. இப்போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் காண்க்கிடைக்கவில்லை.
முரளி அவர்கள் (அல்லது யாராவது) 'தாய்' படத்துக்கு விரிவான விமர்சனம் எழுதலாமே...