pothumendra manamE pon seyum marunthu
போதும் என்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா? புகழா? பணமா? அந்தஸ்தா? இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும்? அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.
ஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்டுவிக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.
* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.
* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.
* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.
* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் "அங்கீகாரம்" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.
"போதும்" என்பது "எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. "போதும்" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.
ஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.
போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:
உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?
உணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்!! என்கிறார்.
அப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர்! ஆபுத்திரனுக்கு வராத சோதனையா? இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை "அன்னமயமாய்" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்க்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:
நானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.
அன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் ? பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.
"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை!
Re: pothumendra manamE pon seyum marunthu
Quote:
Originally Posted by Shakthiprabha
போதும் என்ற மனமே பொன் மனம்.
போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:
உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?
!
:ty:
:exactly:
pancha thanthira kathaigaL
அனுமனை இறையம்சமாக வழிபடும் பக்தர்கள் பலர். ஆலயங்களின் அருகாமையில் அல்லது ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பொழுது குரங்குகள் கண்ணில் பட்டாலும் அனுமன் அம்சம் என்று பயபக்தியோடு நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது நமக்கு இருக்கும் மனநிலையே இதற்கு காரணம். மற்ற காட்டுக் குரங்குகளுக்கோ அல்லது மற்ற நேரத்தில் தென்படும் குரங்குகளுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. கேள்வி இங்கே என்னவென்றால், அனுமனோ, வாலி, சுக்ரீவர் கூட்டதவர்களோ (சற்றே அறிவு முதிர்ச்சி எய்திய) குரங்குகளா? பரிணாம நிலையில் அறிவு முதிர்ச்சி எய்திய குரங்கு மனிதனுக்கு முதல் கட்ட நிலை.
இங்கு கூறப்படும் சுக்ரீவ வாலிகள் குரங்கினின வரிசைகளின் பரிணாம வளர்ச்சியை கடந்த நிலையில் இருப்பதைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சுக்ரீவன் வாலி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பராக்ரமமும், அறிவு முதிர்ச்சியும், சிந்தனையும் மனிதனுக்கு ஒப்பாக கருதக்கூடியது. பலவித சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் எனவும், அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அரண்மணைகளும் அற்புதமென வியக்கும் வண்ணம் அமைந்திருந்ததாக இதிஹாச வரலாறு எடுத்துரைக்கிறது. இவர்களை "வானரங்கள்" என்று கூறுவதே முறையாம். வானரங்களை பொதுவாக குரங்குகள் என்றே நாம் நினைத்தாலும், ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில், அந்த யுகத்தில் வானரர்களும் இத்துணை மெத்த அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றனர். சாதாரண குரங்குகள் என்று நினைத்து விடாமல், அவர்களை வானரங்கள் என்று விசேஷமாய் பிரித்துப் பார்ப்பதே தகும்.
மேலும் ஜாம்பவான் ஹனுமனின் பராக்ரமத்தை எடுத்துரைக்கையில் "ஹனுமனே நீ சாமான்யன் அல்ல, ராம லக்ஷ்மணர்களுக்கு சமமான தேஜஸைப் பெற்றவன்" என்கிறார். ஹனுமன் வாயு பகவானுக்கு அஞ்சனைக்கும் பிறந்தவர். ஹனுமன் புகழுரைக்கும் வாயு பகவான், "ஹனுமன் பெரிய வீரன், சிறந்த அறிவாளி, எனக்கு நிகரானவன்" என்று வாய்மொழிகிறார்.
ஹனுமனை வணங்கும் ஸ்லோகம்:
"அசாத்யம் சாதக ஸ்வாமின்
அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ"
"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?! ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.
நம்மில் சிலருக்கு இறைவன் இருக்கின்றானா என்றே சந்தேகம் வருகின்றது. கண்ணுக்கு புலப்படாத வஸ்து என்பதால் நம்புவது சாத்தியமாவதில்லை. மேலும், நமக்கு சாதகமான காரியம் நடைபெறாவிட்டால், கோபம் கொண்டு இறைவனை சந்தேகிக்கிறோம். உலகில் நடைபெறும் பல அதர்மங்களும் கொடூரங்களும் இன்னல்களும் வக்ரங்களும் பல்கிவிட்ட நிலையில் சந்தேகம் இன்னும் வலுவடைகிறது. இறைவன் என்ற தத்துவமோ, அல்லது எதுவுமோ கூட, நம்பினாலேயொழிய நமக்கு கிட்டுவதில்லை. சந்தேகம் என்பது நம்மை சாதிக்க விடாது செய்யும் வியாதி. சந்தேகம் எவர் மீது விழுந்தாலும், நம் திறமை மீதே அமைந்துவிட்டாலும் கூட அதனால் பாதகமே அதிகம் விளைகிறது. நம்பத் தகுந்த விஷயங்களை நம்புவதால், சாதாரண நம்பிக்கை தாண்டிய, "பரிபூரணமாக" நம்பிக்கை வைப்பதால் அரிய விஷயங்களை கிடைக்கப் பெறலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பலவும், நாம் நம்ப மறுத்த ஒன்றை அவர்கள் நம்பியதால் நிகழ்ந்த வினோதங்கள்.
"சந்தேகம் கேட்டையே விளைவிக்கும்" என்ற கருத்தை வலியுறுத்த பீஷ்மரும் யுதிஷ்டிரரருக்கு சிறு கதையின் மூலம் படிப்பிக்கிறார்.
Quote:
காட்டில் ஒரு நரி, சிறந்த நற்குணங்களும், தர்ம சிந்தனையும், ஒப்பற்ற அறிவும் கூடியதாய் வாழ்ந்து வருகிறது. மற்ற மிருகங்களுக்கும் படிப்பினை போதிக்கிறது. "ஒருவனின் குணம் அவன் இருக்கும் இடத்தை பொருத்து அமைவதில்லை. அவனின் அறிவும் மனமுமே நிர்ணயிக்கிறது. ஒரு ஆசிரமத்தில் கொலை நிகழ்ந்துவிட்டதால், ஆசிரமம் புனிதம் என்பதால், கொலை பாபம் வந்து சேராது இருக்குமா?" என்றெல்லாம் வியாக்கியானம் செய்கிறது. இதனை கேட்ட புலி மிகவும் புகழ்ந்து நரிக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறது. நரி முதலில் மறுக்கிறது "ஸ்திரமற்ற ராஜாவின் புத்தி, பின்னாளில் சந்தேகத்தின் பேரில் மாறக்கூடும், எனக்கு பதவி வேண்டாம்" என்கிறது. புலியோ நரியை போல் அறிவாளியை கண்டதில்லை, சந்தேகத்துக்கு இடமின்றி நரி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்த நரி பதவி ஏற்கிறது.
நாளடைவில் மற்ற மிருகங்கள் நரியிடத்து பொறாமை கொண்டு அதன் பேரில் பொய்யாய் களங்கம் கற்பிக்கின்றனர். புலி அதனை நம்பி கோபம் கொள்கிறது. நரியோ, அமைதியாய், "உன் குணம் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று தெரியும்" என்று அமைதியாய் பதவியை விட்டு அகல்கிறது. புலி பின்னர் உண்மை உணர்ந்து தன் தவறை நொந்து மன்னிப்புக் கேட்டும், நரி மீண்டும் பதவி ஏற்க மறுத்து புலிக்கு நல்லாசி கூறி புத்திமதி வழங்கிவிட்டு, மற்ற மிருகங்களை விட்டு ஒதுங்கி தவ வாழ்கையை மேற்கொள்கிறது.
பஞ்சதந்திரக் கதையைப் போலவே இருக்கும் இக்கதையின் மூலம் பொறாமை என்னும் அழுக்கை களைவது சுலமபல்ல என்று புரிகிறது.
* கெட்ட நடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை.
அழுக்காறு என்று சொல்லப்படும் ஒழிக்கவேண்டிய ஆறு அடிப்படை குணங்களின் (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) வேறுபட்ட வெளிப்பாடே பொறாமை. பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நம் நட்பு கொள்ளும் நபருடன், "கடும்" விரோதம் வளர்ந்து விட்டால் அதை இனி தொடர்வது உசிதமா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கும் பீஷ்மர் பதில் அளிக்கிறார்.
Quote:
ஒரு ராஜாவின் அரண்மணையில் விசேஷ ஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்து வருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன் பிறக்கிறான். குருவிக்கும் குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம் குருவியும் அவர்கள் பெற்றோரைப் போலவே நட்பு பாராட்டி விளையாடி வருகின்றனர். ஒரு சமயம், அவசர புத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தை நெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும் கோபம் கொண்ட குருவி, இளவரசனின் இரு கண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில் ராஜா கோபம் கொண்டு வெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்து விடுகிறார். குருவி வேறு இடம் பறந்து செல்ல எத்தனிக்கிறது. ராஜாவோ இரு சாராரும் மறந்து, மன்னித்து விடுவொம், அதனால் இங்கேயே தங்கிவிடு என்று கூறுகிறார். அதனை மறுத்து குருவி, "கடும் விரோதம் வளர்ந்த இடத்தில், இருப்பது உசிதம் அல்ல. சில தீங்குகள் எளிதில் மன்னிக்கப்படுவதும் இல்லை. அதன் பாதிப்பு அடங்குவதும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தால் மனக் கசப்பும் வருத்தமும் மேலிடும், அத்தகைய உறவில் சுமூகம் இருப்பதில்லை. எனவே என்னை போகவிடு" என்று சொல்லி பறந்து விட்டது.
விரோதத்தை மன்னித்து விடுவதே உசிதம் என்றாலும் கூட எப்படிப்பட்ட விரோதம் என்பதை ஆராய்ந்து உறவின் பலமோ முறிவோ ஏற்படுகிறது.
Re: pancha thanthira kathaigaL
Quote:
Originally Posted by Shakthiprabha
அனுமனை இறையம்சமாக.
வழமைபோல :ty:
அனுமான் - சிவனின் அவதாரம் என வட இந்தியர்களும் - மகாபாரதமும் கூறுகின்றனவே :roll: :confused2:
Re: pancha thanthira kathaigaL
Quote:
Originally Posted by aanaa
Quote:
Originally Posted by Shakthiprabha
அனுமனை இறையம்சமாக.
வழமைபோல :ty:
அனுமான் - சிவனின் அவதாரம் என வட இந்தியர்களும் - மகாபாரதமும் கூறுகின்றனவே :roll: :confused2:
ஆமாம் ஆனா, சிவனின் அவதாரமாகவே அஞ்சனைக்கு பிறந்ததாக சொல்லப்படுகிறாது. ( வாயுபுத்ரன் என்று நாம் நம்புவதையும் கூட வேறு அர்த்தம் கொண்டு விளக்குகின்றனர். ) இராவண வதத்திற்கு துணை போக அச்சமயம் இறைவனின் பல அம்சங்களும் மண்ணில் தோன்றியனவாம். ஆதி-சேஷன் இலக்குவனாகவும் சிவன் ஹனுமனாகவும் அவதரித்ததாக கூறிகின்றனர்.
http://www.mypurohith.com/Rituals/Hanuman_Pooja1.asp
Shri Hanumaanji is known to be the incarnation of Lord Shiva. It is believed that when Lord Vishnu took birth, in the form of Ram to vanish, the greatest demon king Ravan, the other Gods also born in monkey and bear races to help him. God Sheshnag and Lord Shiva incarnated as Lakshman and Hanuman respectively.
Vanar-Raj kesari was the father of Shri Hanumanji, and his mother’s name was Anjana alias Anjani. Kesari was a Vanar-king, as such he is called Vanar-Raj. He had no child, hence his wife Anjana, observed self-mortification to have a child, she menaced herself, worshipping Lord Shiva to be booned for a son. Lord Shiva fulfilled her desire and He himself took birth in the form of her son Shri Hanuman. The God of winds, Pawan Dev also blessed Anjana to have a great son unparalleled in strength and wisdom. Hence the son of Anjana is also called Pawan-Putra and Vayu-Putra.
___________
The story of the birth of Hanuman goes thus: Vrihaspati had an attendant called Punjikasthala, who was cursed to assume the form of a female monkey — a curse that could only be nullified if she would give birth to an incarnation of Lord Shiva. Reborn as Anjana, she performed intense austerities to please Shiva, who finally granted her the boon that would cure her of the curse.
When Agni, the god of fire, gave Dasharath, the king of Ayodhya, a bowl of sacred dessert to share among his wives so they may have divine children, an eagle snatched a part of the pudding and dropped it where Anjana was meditating, and Pavana, the god of wind delivered the drop to her outstretched hands. After she took the divine dessert, she gave birth to Hanuman. Thus Lord Shiva incarnated as a monkey, and was born as Hanuman to Anjana, by the blessings of Pavana, who thus became Hanuman's godfather.
http://hinduism.about.com/od/lordhanuman/a/hanuman.htm