Gap filler song of GG from Aayiram Roopaai!
https://www.youtube.com/watch?v=Vz2d25xIDD0
Printable View
Gap filler song of GG from Aayiram Roopaai!
https://www.youtube.com/watch?v=Vz2d25xIDD0
A very rare song sequence in a club environment with GG boozing among club dancers!!
Movie : Snehidhi!
https://www.youtube.com/watch?v=a9IYbmBoHjs
But in contrast another melody from the same movie!
https://www.youtube.com/watch?v=laqLmgog44w
Side Seater (Tandem) Scooter Race season!! Initiated by GG!!
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbAQuote:
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருந்தால் காளையர் Side Seater ஸ்கூட்டர் ரேஸ் விடுவார்களோ ?!
ஜெமினி சாவித்திரி (ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்) Vs டி ஆர் ராமச்சந்திரன் சகுந்தலா (படிக்காத மேதை)
https://www.youtube.com/watch?v=yZ3Y2HCj2zs
... ஜோடி கிடைக்கலேன்னா.......நோ ப்ராப்ளம்!!
Dharmendra-Amitabh too contest later!!
https://www.youtube.com/watch?v=l_hlBHE3c-A
Sean Connery -Harrison Ford too join the contest!!
https://www.youtube.com/watch?v=jIRxsCHViPk
ராமு- 1966.
சில சமயம் என் மனம் ஏங்கும். முதன்மை ஸ்தான நடிகராக நடிப்பு சக்ரவர்த்தி நடிகர்திலகம் கொலுவிருந்த காலத்தில் ஒரு ஆரோக்யமான போட்டியாளராக ஜெமினி இரண்டாவது இடத்தில் இருந்திருந்தால், தமிழில் நிறைய தரமான படங்கள் இந்த நடிகர்களிடமிருந்து கிடைத்திருக்க பொன்னான வாய்ப்பிருந்தது .அரசியல் தன் தரத்தை தாழ்த்தி கொண்டதுமல்லாமல்,நம் தமிழ் படங்களின் தரத்தையுமல்லவா தாழ்த்தி விட்டது???
ஏ.வீ.எம் மிடமிருந்து ,ஜாவர்-திருலோகசந்தர்-விஸ்வநாதன் இணைவில் ஒரு தரமான படம் ராமு.(நல்ல வேளை ,முதலில் ஒரு சில்லறை வெள்ளிக் கிழமை நடிகரை வைத்து எடுப்பதாக இருந்து,ஜெமினி ஈடுபாடு காட்டியதால் தப்பித்தது).
ராஜா(சிப்பாய்)-சீதா-மகன் ராமு-நாய் மணி நல்ல மகிழ்ச்சியான குடும்பம். கொள்ளை காரன் (சங்கிலி)வீட்டை கொளுத்த சீதா பலியாக ,பார்த்த ராமு ஊமையாகிறான்.மகனை அழைத்து வீட்டை விட்டு கிளம்பும் ராஜா, பணக்கார அனாதை (சிப்பாய் குடும்பம்)லட்சுமியால் ஆதரவு காண,ராமு தன் தாயை அவளுருவில் காண, லட்சுமி ,ராஜாவால் ஈர்க்க பட,ராஜா தன வாழ்வில் விரக்தியோடு கழிக்கிறான். மருத்துவரால் தீராத நோய்,லட்சுமிக்கு ஆசை படும் நெறியற்ற முறை பையனால் ,லட்சுமி அதே தீ விபத்தில் சிக்க ,ராமு திரும்ப பேசும் திறன் கண்டு,ராஜா-லட்சுமி-ராமு-மணி இணைவுடன் சுபம்.
ஒரு தோல்வியுற்ற கிஷோர் குமாரின் ஹிந்தி படம் ,ஜாவர்- ஏ.சி.டி இணைவில் மெருகூட்ட பட்டு தாய் மார்கள்-தந்தைமார்கள் ஏ.பீ.சி அனைத்து சென்டர்ளையும் கவரும் படமானது.(இசை ரசிகர்களையும்தான்). பச்சை மரம் ஒன்று,நிலவே என்னிடம் (பாகேஸ்வரி ராகம்,ராமு ராகமானது ),முத்து சிப்பி, கண்ணன் வந்தான் (மோகன கல்யாணி) என்று இசை விருந்து.சீரான ஓட்டத்துடன் படம்.
புஷ்பலதா (அருமை), கே.ஆர்.விஜயா (20% மட்டும் செயற்கை.மற்றபடி ஓகே), மாஸ்டர் ராஜ்குமார் (என்னவொரு performance !!!!) என்று ஜெமினிக்கு தோதான கூட்டணி. திருலோகசந்தரின் பட்டாள விருப்பம்,ஜாவரின் நாய் விருப்பம் ,கொஞ்சம் கற்பகம்,ஏ.வீ.எம் மின் சூத்திரம் எல்லாம் கலந்து கட்டியாய் .
செந்தமிழ் பேசும் அரை அல்லது முழு பைத்தியம் (பந்துலு formula சபாஷ் மீனா,பலே பாண்டியா )ஜாவரால் இந்த படத்தில் (எஸ்.வீ.சுப்பையா)தொடர பட்டு ,கோபு வரை வந்து கரை கண்டது .(உத்தரவின்றி உள்ளே வா) என்ன ஒரு தமிழ் பற்று நம் படங்களில்!!!!!நமது கதாநாயகர்கள் மொழி மாற்ற படங்களில் ஓடத்தில் வேற்றூர் போவார்கள்.
இனி நம் நாயகன் ஜெமினி. அவருக்கு அல்வா மாதிரி ஒரு பாத்திரம். கூடவே கொஞ்சம் காரம். அதையும் சமாளிப்பார்.காதல்,பாசம்,கடமை,சோகம்,விரக்தி,நம்பிக் கை,வீரம் என்று எல்லாவற்றையும் கலந்த அற்புத கூட்டாஞ்சோறு.விடுவாரா நடிப்பு செல்வம்?
முதல் காட்சியின் பொங்கலோ பொங்கல் சொல்ல சொல்லி மனைவியை சீண்டுவதில் இருந்து ,அப்பா வந்ததால் தூங்க மறுக்கும் மகனை வைத்து மனைவியை கொஞ்சல், மனைவி இழந்து மகனும் ஊமையான சோகத்தின் இறுக்கம்,தன் சுகம் நாடா விரக்தி (சுமைதாங்கி சாயல்), முதலில் கே.ஆர்.வியின் இணக்கத்தை நிராகரித்து,விரக்தியை வெளியிட்டாலும்,முத்து சிப்பி பாட்டில் கொண்டாட்டத்தில் இணைய மறுத்தாலும் 50 % மாற்றம் காட்டுவது .
சிகர காட்சி. மருத்துவரால் ராமுவுக்கு பேச்சு வரும் வாய்ப்பு குறைவு என்றுணர்ந்து ,நம்பிக்கையின்மையின் உச்சத்தில் பற்றற்ற விரக்தி கலந்த வெறுப்பை அவர் உணர்த்தும் விதம்.ஜெமினி மட்டுமே பண்ண முடியும் என்ற ரக காட்சி.முதலில் சாப்பிட கேட்கும் தோரணை, பணத்தை தொலைத்த சாக்கில் தன் வேதனையை கோபமாக்கி மகனிடம் காட்டிய பிறகு ,தன்னிரக்கத்துடன் மகனுடன் மன்றாடும் உருக்கம்,விரக்தியுணர்வு தொற்றி சாக விழையும் மகனை பார்த்து பதைப்பு ,தவிப்பு,இருவரும் சாகலாம் என்ற வாழ்க்கையின் விளிம்பு தவிப்பு,கண்ணன் வந்தான் பாடலில் வரும் அரை நம்பிக்கை என்று அத களம்.
விட்டாரா.... அன்று action hero என்ற போர்வையில் ,தன் stunt நண்பரின் படங்களை நம்பி காலத்தை ஓட்டிய ஒரு நடிகருக்கு சவால் விடுவது போல.ஜெமினி இந்த படத்தில் புது பரிமாணம் காட்டுவார். அசோகனி டம் சவால் விட்டு சண்டை காட்சி, வரும் சண்டையை விடாத பிடிவாதம்,தன் மனைவியை எரித்த சங்கிலியுடன் மோதும் மூர்க்கம், இறுதி காட்சி சிலம்பு சண்டை என்று ஜெமினி தன்னாலும் action hero வாக சுலபமாக (யார்தான் முடியாது) சோபிக்க முடியும் என்று காட்டி படத்தையும் ஜெயிக்க வைத்து,தானும் ஜெயித்தார்.
கோபால்
http://www.pksongpk.com/movieimages/Ramu%201966.jpg
நல்ல அலசல். சுருக்... நறுக்.
எங்கே அற்புதமான அந்த சிலம்பு சண்டைக் காட்சியை குறிப்பிடாமல் விட்டு விடுவீர்களோ காணோமே என்று வேக வேகமாகப் படித்தேன். நல்ல வேலையாக பதிவின் இறுதியில் எழுதி பால் வார்த்து விட்டீர்கள். அது இல்லையென்றால் பதிவு நிறைவு பெறாது. படமும்தான். என்ன ஒரு கோலோச்சல்!:)
சிவாஜி செந்தில் சார் இன்று தூங்கினாற் போல்தான். ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பார்.
ஜெமினியில் அற்புத கலவைகளில் 'ராமு' முதலிடம். 'சக்கரம்' கூட சென்டிமென்ட்டில் விழாமல் விறுவிறு ஆக்ஷனில் சுற்றும்.
இயல்பான சோக முகம் அவருக்கு இறைவன் தந்த வரபிரசாதம். காதலை நாயகிகளுடன் மென்மையாக உண்டாக்கும் பாணியில் அவர் கைதேர்ந்தவர் என்றால் அதே வேளையில் காதல் மறுப்பிலும் 'காதல் மன்னன்' மன்னர்தான். மனிதர் திரும்பவே மாட்டார். விரக்தியின் விளிம்பென்றால் ஓரே பிடிதான்.
ஆனால் பாசிட்டிவாக ஒரு நெகடிவ் பாயிண்ட் பொதுவாக இவரிடம் உண்டு. விரக்தியின் விளிம்பில் இவர் வசனம் பேசும் போது நமக்கு பாதி வார்த்தைகளே காதில் விழும். மீதி வார்த்தைகளே அவரே விழுங்கி விடுவார். பாதகமில்லை. அதுவும் சோகத்தை மேலும் பார்வையாளர்களிடம் திணிக்கும் தந்திரமாகக் கூட இருக்கலாம். :)
நான் அவனில்லை, கற்பகம் கலக்கலுக்குப் பிறகு ராமுவை தொட்டு எங்களை ராமு போலவே பேசா ஊமையாய் ஆகி விட்டீர்கள். கொஞ்சம் கடினத்தை குறைத்தால் தேவலை. எனக்கு, செந்திலுக்கு, இன்னும் ஒரு சிலருக்கு தேவாமிர்தம். மற்றவர்களுக்கு பஞ்சாமிர்தம். புரிகிறதா?:)
இல்லை எங்களுக்காக ஒன்று. எளிமைக்காக ஒன்று என்று ரெண்டு வேஷம் கட்டு. :)
நீங்கள் எந்த வேஷத்திலும் ஜமாய்ப்பீர்கள் என்று தெரியும். அதுவும் இப்போது நான் கொடுத்திருப்பது கள்ளவேஷம்.:)
கோ, செந்தில் சார்,
இதோ நம் மனம் கவர்ந்த 'ராமு' நிழற்படங்களாக.
http://padamhosting.me/out.php/i5787...h26m35s172.pnghttp://padamhosting.me/out.php/i5787...0h26m51s79.png
http://padamhosting.me/out.php/i5788...h26m57s140.pnghttp://padamhosting.me/out.php/i5788...h27m06s233.png
http://padamhosting.me/out.php/i5788...h27m20s117.pnghttp://padamhosting.me/out.php/i5788...0h28m05s53.png
68 ல் வந்த இதே 'ராமு' தெலுங்கு
என்.டி .ஆர் ஜெமினியிடம் அருகில் வர முடியாது. ஆனால் ஜமுனா இயல்பு 100 சதவீதம்.
https://i.ytimg.com/vi/JarduQNjW8M/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/BkmYNEik3j4/maxresdefault.jpg
இன்னும் சில நிழற்படங்கள். 'ராமு' படத்திலிருந்து
http://padamhosting.me/out.php/i84955_ramu7.pnghttp://padamhosting.me/out.php/i84952_ramu10.png
http://padamhosting.me/out.php/i84960_Ramu2.pnghttp://padamhosting.me/out.php/i84959_ramu3.png
http://padamhosting.me/out.php/i84958_ramu4.pnghttp://padamhosting.me/out.php/i84956_ramu6.png
http://padamhosting.me/out.php/i84954_ramu8.pnghttp://padamhosting.me/out.php/i84953_ramu9.png
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர்கள் வாசு சார் மற்றும் கோபால் சார்
என்னதான் திரியின் பக்கங்களை அதிகரிக்கும் முயற்சியில் துணுக்குக் கான்செப்ட்களை நான் தூவிக்கொண்டிருந்தாலும் உங்களைப் போல எழுத்துச் சித்தர்கள் புரியும் மாயமே தனிதான்!! ராமு அலசல் இத்திரியின் மாறாத கல்வெட்டுப் பதிவுப் பெருமை!! நடிகர்திலகம் அவர்தம் ரசிகர்கள் மூலம் என்றுமே தனது புரிதலுள்ள நண்பரான காதல் மன்னரைக் கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே கட்டியம் !
நன்றி மிக்க வணக்கங்களுடன் செந்தில்
Both NT and GG are expert horse riders with originality and dare devilry risk bearing in such scenes!
https://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw