Thanks Murali. I will certainly try to contribute more in future
Printable View
Thanks Murali. I will certainly try to contribute more in future
Murali,
You are right, "Mudhal Mariyathai" released both in Guru and Madhu theatres and at Madhu, MM run for 88 housefull days and I have been there for couple of days to check the crowd and met many NT fans there.
Sivan, your skills matching with Saradha sister, I could see each scene of "Parthaal Pasi Therum" in your writings. PPT, one of NT movie's DVD I don't own. I will buy this movie soon.
Murali, just curious are you from South Gate area in Madurai and not sure whether I have met you in Sundays at NT's movies released theatre.
Pammallar, your writing is excellent, plesae keep make us happy by giving new NT's details.
Saradha sister, no writing from your side for some time.
I am looking for film review of following movie
1. Justice Gopinath (very average movie or...)
2. Naam Iruvar (NT's 250 movie)
3. Tharma Raja
4. Vetrikku Orugan
Cheers,
Sathish
NT - A tribute from Singapore
http://video.google.com/videoplay?do...33588006801092
Thanks Sivank for Parthal Pasi Theerum
It's a nice movie. NT's 75th. AVM-ACT-NT-Beemsingh-Arurdoss combo. The narration of the movie style was probably similar to old english movies
Oru B&W parkira feeling varathu. Marubadium parka thoondum padam.
Saroja Devi loves NT a handicapped soldier.
Songs are honey. Ithil varum oru padal Kodi asainthathum back ground reminds Puthiya Paravai Chitu kuruvi mutham koduthu. May be similar location.
பா.ப.தீ. = விமர்சனம் அற்புதம்
பார்த்தால் பசி தீரும் மட்டுமல்லாமல், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பல படங்களிலும் அண்டர்பிளே செய்திருப்பார். அவரது நடிப்பின் தன்மை எப்போதுமே இயக்குனரின் விருப்பத்துக்கும் தேவைக்கும் தகுந்த அளவே இருக்கும். நுணுக்கமான ரசனை உள்ளவர்கள் இதனை அறிவர். மற்றபடி மிகை நடிப்பு என்று சொல்பவர்களில் பலர் படத்தை முழுமையாகப் பார்க்காமல் தொலைக்காட்சியில் துண்டு காட்சியை பார்த்து கருத்து சொல்பவர்களாகவோ அல்லது படம் வெளி வந்த காலகட்டத்தின் திரைமொழியை கருத்தில் கொள்ளத் தவறியவராகவோ இருப்பார். தங்கள் அபிமான நடிக்ர் சிவாஜி போல பன்முகத் தன்மையுடய பாத்திரங்களில் நடிக்கும் திறனற்று இருப்பதை மறைக்க சிவாஜி நடிப்பு மிகை நடிப்பு என்று சொல்லும் ஒரு சிலர் உள்ளனர் - என் நண்பர்கள் ஒரு சிலர் கூட.Quote:
Originally Posted by sivank
டியர் சிவன்.K,
உங்களின் 'பார்த்தால் பசிதீரும்' பட ஆய்வுக்கட்டுரை மிக மிக அருமை. படத்தை இன்னொருமுறை பார்த்தது போலிருந்தது. கதை விளக்கமும், கடைசியில் கொடுத்த திறனாய்வும் மிக அருமையாக அமைந்திருந்தது.
சமீபத்தில் நமது நண்பர் மோகன் (ரங்கன்) நமது திரியில் சமீபகாலமாக திரைப்பட விமர்சனக்கட்டுரைகள் வருவதில்லையென்று குறைபட்டிருந்தார். அவரது குறையை மட்டுமல்ல, நம் அனைவரின் ஏக்கத்தையும் தீர்த்து விட்டீர்கள். தொடர்ந்து உங்களின் இதுபோன்ற அற்புத விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம்.
சின்ன டிப்ஸ்: மூன்று நான்கு பாகங்கள் வரக்கூடிய விமர்சனமானால், முதலில் நான்கு இடங்களை அடுத்தடுத்து ரிசர்வ் செய்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு இடமாக எடிட் செய்து பதித்தால், விமர்சனம் துண்டு துண்டாக நிற்காது. இடையிடையே மற்றவர்களின் பதிவுகள் வந்தாலும் இடையூறு இருக்காது. (என்னுடைய 'எங்கிருந்தோ வந்தாள்' விமர்சனம் இப்படி துண்டு துண்டாக அமைந்தபின் வந்த ஞானோதயம் இது :lol: ).
Thanks Saradha. I will certainly keep in mind what you suggested
Thanks Sankara, Mahesh, Goldstar, Bala
சிவன்,
படத்தின் திரைக்கதையை போலவே திறனாய்வையும் இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதியிருக்கலாமோ என்று ஒரு எண்ணம். காரணம் எழுதிய விதம் சுவராஸ்யம். அது மட்டுமல்ல நமக்கு எப்போதும் நடிகர் திலகத்தைப் பற்றி எவ்வளவு பேசினாலும் எவ்வளவு எழுதினாலும் போதாது அல்லவா. இது போல் மேலும் பல படங்களின் திறனாய்வுகள் உங்கள் தூரிகையிலிருந்து வெளிவரட்டும்.
மகேஷ்,
அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நடையில் ஒரு நல்ல flow இருக்கிறது. நீங்களும் படங்களைப் பற்றிய விமர்சனம் எழுதலாம்.
Sathish,
I don't belong to South Gate area. We lived in the heart of the town off Town hall road during my school and college days. The chances of we having met are very remote because during mid 80s, I had moved away from Madurai due to occupational reasons and later came back only in the late 90s.
அன்புடன்
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் இசை அருவி மற்றும் ஜெயா சானல்களில் பாடல்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அருவியில் தத்துவ சோகப் பாடல்கள் என்றால் ஜெயாவில் சந்தோஷ டுயட்கள். மொத்த படங்கள் கூட வேண்டாம். பாடல்களைப் பார்த்தாலே எவ்வளவு வெரைட்டி?
போனால் போகட்டும் போடா
பூமாலையில் ஒரு மல்லிகை
படைத்தானே படைத்தானே
நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
சட்டி சுட்டதடா
இதயம் இருக்கின்றதே
ஆறு மனமே ஆறு
உலகம் இதிலே அடங்குது.
பார்க்க பார்க்க கேட்க கேட்க என்றும் இனிப்பவை அன்றோ இவை!
டியர் முரளி,
நானும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகின்றன.
நெஞ்சை அள்ளும் நேரத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு துயர செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நமது இளைய திலகம் பிரபு தென்சென்னை மாவட்ட நிர்வாகியும் தீவிர சிவாஜி ரசிகருமான திரு தாமு எ தாமோதரன், 04.05.2010 அன்று திடீரென்று மாரடைப்பால் காலமானார். காலையில் பார்த்த சாரதி கோயிலில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டும் நடிகர் திலகத்தின் மண நாளையொட்டியும் அன்னதானம் வழங்கி, நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டு விட்டு மற்ற நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்வதற்காகவும் தொடர்புடைய மற்ற காரியங்களுக்காகவும் வீட்டுக்கு வந்திருந்திருந்தவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தியுள்ளார்.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, பிரபு ரசிகர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவர் நம்முடைய ஹப்பிற்கு தொடர்பில்லாதவர் என்றாலும் இங்கே அவருடைய நண்பர்கள் யாராவது இருக்கக் கூடும் என்பதால் தகவலுக்காக இங்கே தரப்பட்டிருக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
ராகவேந்திரன்