-
இன்றைய தினம் அக்டோபர் 29. இந்த தேதி வரும் போது மட்டும் மனது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காரணம் அனைவரும் அறிந்ததே. இதை பற்றிய என் நினைவுகளை முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன். புதிய நண்பர்களுக்கு முதன் முறை படிக்கவும் நமது பழைய நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை வாசிக்கவும் இதோ அந்த பதிவு. அந்த பழைய பதிவில் ஒரு சிலவற்றை திருத்தி சிலவற்றை சேர்த்திருக்கின்றேன்.
இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.
இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்.
மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சென்னை மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி EV பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்].ஜூலியஸ் சீஸர் காட்சிக்கு பெரிய அலப்பறை. குறிப்பாக கத்திகுத்து வாங்கி இறக்கும் சீன். சொல்லாதே யாரும் கேட்டால் பாடல் காட்சிக்கு [அதிலும் சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் என்ற வரிகளுக்கு] அது போல குடித்து விட்டு வந்து மாடிப்படியில் உட்கார்ந்து கே.ஆர்.விஜயாவிடம் போதையில் பேசும் காட்சியும் பயங்கர கைதட்டலை பெற்ற காட்சிகளாகும்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.
அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பற்றி சொல்லும்போது மதுரையில் நடிகர் திலகம் நிகழ்த்திய ஒரு unique சாதனையின் ஆரம்ப புள்ளி எங்கிருந்தோ வந்தாள். மதுரை ஸ்ரீதேவியில் தொடர்ந்து 443 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே திரையிடப்பட சாதனையை பற்றி பேசியிருக்கிறோம். அது ஆரம்பித்த நாள் 1970 அக்டோபர் 29 அன்று. அன்று தொடங்கிய வெற்றி பயணம் தங்கைக்காக குலமா குணமா சவாலே சமாளி பாபு என்று தொடர்ந்து 1972 ஜனவரி 14 அன்று நிறைவு பெற்றது.
அன்புடன்
-
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுப்பதிவுக்கு மனமார்ந்த நன்றி ! "பாபு" அனுபவப்பதிவு தேன் !
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் முரளி சார்,
"சொர்க்கம்", "எங்கிருந்தோ வந்தாள்" நினைவலைகள் அக்காவியங்களைப் போலவே டாப் !
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அவள் யார்
[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
காவியத்தின் கதைச் சுருக்கம் : ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலிருந்து
http://i1110.photobucket.com/albums/...r/GEDC4902.jpg
http://i1110.photobucket.com/albums/...r/GEDC4903.jpg
[என்னிடம் உள்ள இக்காவியத்தின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தினுடைய பிரதியில் அட்டைமுகப்பும், அதன் உட்புறமும் விடுபட்டிருப்பதால் அவற்றை இங்கே பதிவிட இயலவில்லை. அவை கிடைத்தவுடன் அவசியம் பதிவு செய்கிறேன்.]
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அவள் யார்
[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4885-1.jpg
சிறப்பு நிழற்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4886-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அவள் யார்
[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்னகம் : 6.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4879-1.jpg
விமர்சனம் : ஆனந்த விகடன் : 22.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4880-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4881-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
பைலட் பிரேம்நாத்
[30.10.1978 - 30.10.2011] : 34வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4904-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
-
Mr Gopal
u are lucky(in meeting our God) and we feel proud of u.
Yes u r right, me too a fan of NT after watching Paasamalar at the age of 6 with my uncle, a hardcore NT fan, in Tirunelveli
But in front of Murali, Pammalar, Saratha madam,Vasudevan, Ragavendra, I am too small.
Their memory and recordkeeping are excellent.
-
அன்புள்ள முரளி சார்,
தங்களின் 'பாபு', 'சொர்க்கம்', 'எங்கிருந்தோ வந்தாள்' திரையரங்க அனுபவங்கள் முக்கனியாய் இனித்தன. இந்த இனிமையான அனுபவங்களை நாங்கள் அனுபவிக்கவே முன்போல அடிக்கடி நீங்கள் வர விரும்புகிறோம். இருப்பினும் தற்போதைய கூடுதல் வேலைப்பளுவுக்கிடையில் தங்களின் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி.
பாபு திரைப்பட (சென்னை கிரௌன்) அனுபவங்களை எழுதும்போதே, தாங்கள் அது சம்மந்தமான மதுரை நிகழ்வுகளோடு வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். தாமதமாக வந்தாலும் தாராளமாக அள்ளித்தந்து விட்டீர்கள். மதுரை ஸ்ரீ தேவி தியேட்டர் தொடர் சாதனை பற்றி, 'நடிகர்திலகத்தின் சாதனைச்சிகரங்கள்' தொடரில் நீங்கள் எழுதியிருந்தது பசுமையாக பதிந்திருக்கிறது. அது தனித்திரியாக இருப்பதால், இப்போதும் அங்கே அடிக்கடி சென்று தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அங்கே நீங்கள் எழுதியிருக்கும் சாதனைகளின் ஆதார வடிவம்தான் இங்கே நமது பம்மலார் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கும் ஆவணக்களஞ்சியங்கள் எனும் ஆதாரத்தொகுப்புகள். வம்பும் வல்லடியும் பேசிக்கொண்டிருந்தவர்களை இப்போது காணோம். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சும்மாவே வெறும் கையாலேயே சாத்துவார்கள். போதாக்குறைக்கு இப்போது ஆதாரச்செப்பேடுகள் என்னும் உருட்டுக்கட்டைகளை வேறு பம்மலார் கொடுத்து விட்டார். அப்புறம் என்ன?.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள நடிகர்திலக ரசிகர்கள் ஒன்றாதல் கண்டே.
-
அன்புள்ள பம்மலார் சார்,
உண்மையில் நான் நினைத்தது வேறு, இங்கு நடந்துகொண்டிருப்பது வேறு. அக்டோபரில் நமது நடிகர்திலகத்தின் ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் பல வெற்றிப்படங்கள் உள்ளன. அவைகளுக்கு மத்தியில், 'அவள் யார்' போன்ற அவ்வளவு பிரபலமாகாத படங்கள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் விடுபடப்போகின்றன, மிஞ்சிப்போனால் ஏதாவது ஒன்றிரண்டு ஆவணங்கள் இடம்பெறலாம் என்று நினைத்திருந்தால்....
'எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து திக்குமுக்காடச் செய்பவர்தான் பம்மலார் ஆகிய நான், என்னை உங்களால் எல்லாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது' என்று கூறும் வண்ணம், 'அவள் யார்' படத்தின் ஆவணங்களை அள்ளித்தந்து அதிசயிக்க வைத்து விட்டீர்கள். அது மட்டுமல்ல, 'என்னைப்பொறுத்தவரை நடிகர்திலகத்தின் படங்கள் என்றால், அவை வெற்றிப்படமாக இருந்தாலும், சுமாரான படமாக இருந்தாலும் ஒரே நிலையில் வைத்தே எண்ணுவேன். சொல்லப்போனால் வெற்றிப்படங்களைவிட ஒரு படி மேலே போய் ஆவணங்களை அள்ளி வீசுவேன்' என்று நிரூபிக்கும் வண்ணம்....
அவள் யார் படத்தின் விளம்பரம் என்ன.....
பாட்டுப்புத்தகத்தில் வந்த கதைச்சுருக்கம் என்ன.....
பேசும் படம் அட்டைப்படம் என்ன......
அவ்விதழில் வந்த காவியக்காட்சிகளின் ஏராளமான பக்கங்கள் என்ன.....
அப்படத்தின் உருவாக்கம் பற்றி அதன் இயக்குனர் கே.ஜே.மகாதேவன் அவர்களின் அனுபவங்கள், கூடவே இடம்பெற்ற ஸ்டில்கள் என்ன....
அவள் யார் படத்துக்கான ஆனந்த விகடன் விமர்சனம் என்ன....
ஸ்..ஸ்..ஸ்ஸபா, பட்டியல் போடவே மூச்சு வாங்குகிறதே, இவற்றைச்சேகரிக்கவும் அவற்றை இங்கே பதிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். நினைக்கும்போதே மலைப்பு ஏற்படுகிறதே. ஏனென்றால் இவையனைத்து 53 ஆண்டுகளுக்கு முந்தைய ரெக்கார்டுகள். பேசும் படம் அலுவலகத்தில் இருப்பதே சந்தேகம்.
'பம்மலார் அளிக்கும் ஆதாரங்களுக்கு அவரைப்பாராட்டுவதென்றால், பாராட்டும் வேலையொன்றையே பார்க்க முடியும். அதற்கே நேரம் போதாது' என்று முரளி சார் சொல்லியிருந்தார். உண்மைதான். என்றாலும், சாதாரண சாப்பாடு போடுபவர்களுக்கே நன்றி தெரிவிக்கும் நமக்கு, பதினாறு வகை உணவு படைத்தவருக்கு, படைத்துக்கொண்டிருப்பவருக்கு நன்றியும் பாராட்டும் சொல்லாமல் இருக்க முடியுமா?.
'அவள் யார்' என்ற படம் பாகப்பிரிவினைக்கு முதல்நாள் வெளியான நடிகர்திலகத்தின் படம் என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்த பலருக்கு, அப்படம் இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்தது என்பதை உணர்த்தி, பாகப்பிரிவினை எனும் சுனாமியில் சிக்காமல் தனித்து வந்திருந்தால் நல்லதொரு வெற்றியைப்பெற்றிருக்க வேண்டிய தகுதியுடைய படம் என்பதை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு அளப்பரிய பாராட்டுக்களும் நன்றிகளும்.