Originally Posted by
mr_karthik
பம்மலார் அவர்களும், வாசுதேவன் அவர்களும் 'வாணி ராணி' படம் பற்றிய பல்வேறு ஆவனங்களைப் பதித்துவரும் இவ்வேளையில், வசந்த மாளிகை வெள்ளிவிழாவில் இரு கதாநாயகிகளுக்குள் நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது. (நான் பத்திரிகையில் படித்தது. அது குமுதமா அல்லது பொம்மையா என்பது நினைவில் இல்லை).
'வசந்த மாளிகை' வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதற்காக அதன் இந்திப்பதிப்பான 'பிரேம்நகர்' படத்தில் நடித்து வந்த ராஜேஷ்கன்னா மற்றும் ஹேமாமாலினி வந்திருந்தனர்.
அப்போது, ஏற்கெனவே வசந்தமாளிகையில் நடித்தவரும் அப்போது வாணிராணி படத்தில் நடித்து வந்தவருமான வாணிஸ்ரீயும், ஏற்கெனவே சீதா அவுர் கீதாவில் நடித்தவரும், அப்போது பிரேம்நகர் படத்தில் நடித்து வந்தவருமான ஹேமாமாலினியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வாணிஸ்ரீ கேட்டாராம் "அந்த சீலிங் ஃபேன் காட்சியில் எப்படி நடித்தீர்கள்?. நான் நடித்தபோது என் வெயிட் தாங்காமல் மூன்று முறை சீலிங்ஃபேன்களின் இறக்கை வளைந்து கீழே விழுந்து விட்டேன். நல்லவேளையாக முன்னெச்சரிக்கையாக கீழே நிறைய ஸ்பாஞ்ச் போட்டு வைத்திருந்ததால் அடிபடாமல் தப்பினேன். நீங்க நடித்தபோது அப்படி ஏதும் நிகழ்ந்ததா?" என்று கேட்க...
அதற்கு ஹேமாமாலினி "எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்காக நல்ல கனமானதும் அகலமானதுமான ஒரு ஃபேனையே ஷூட்டிங்குக்காகவே தயார் செய்து விட்டார்கள். அதனால் நான் கீழே விழும் நிலை ஏற்படவில்லை. ஏன், இங்குள்ள தயாரிப்பாளரோ அல்லது டைரக்டரோ முன்பே இதுபற்றிக்கேட்டிருக்கலாமே" என்று கூலாக பதில் சொன்னாராம்.