1961.....
மக்கள் திலகத்தின் மாபெரும் இரண்டு படங்கள்
1. திருடாதே
2. தாய் சொல்லி தட்டாதே .
1958 நாடோடி மன்னன் இமாலய வெற்றிக்கு பின்னர் 1961
மார்ச் மாதம் வந்த திருடாதே - சமூக படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலில் சரித்திரம் படைத்தது .
அதே ஆண்டு தீபாவளி அன்று வந்த தேவர் பிலிம்ஸ்
தாய் சொல்லை தட்டாதே படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று , மக்கள் திலகத்தின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவி மக்கள் மனங்களில் திலகமானார் .
பல சக நடிகர்களின் வெற்றி படங்களுக்கு நடுவே மக்கள்திலகத்தின் வெற்றி விநியோகஸ்தர்கள் மத்தியில் வசூல் சக்கரவர்த்தி என்ற மகுடம் சூட்டப்பட்டது .
இருந்தாலும் மக்கள் திலகத்தின் நடிப்பையும் - படத்தினையும் பல பத்திரிகைகள் தரம் தாழ்த்தி விமர்சனங்கள் எழுதினார்கள்
சிலர் அவரின் சாதனைகளை இருட்டடிப்பு செய்தார்கள்
இருந்தாலும் எல்லா எதிர்ப்புகளை மீறி நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக வாழ்ந்தார் . வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
தொடரும் ...1962 சாதனைகள்