அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்.
http://i57.tinypic.com/23ix8ox.jpg
Printable View
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழுவும் இணைந்து அமைத்த பேனர்.
http://i57.tinypic.com/23ix8ox.jpg
வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில்
நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.
இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.
நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''
டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.
இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.
ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.
படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.
நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.
கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.
படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.
சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.
படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.
ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.
இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.
இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் யூனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.
Courtesy malaimalar
நரசப்பன்: பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம்
சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம்
போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச
மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான்,
அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான்.
அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள்
புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன்
பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான்.
அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை
அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன்
இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க
முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க
தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக்
கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்!
கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது
நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’
என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம்.
இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே
மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச்
சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம்
தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி !
வசனம் : கவியரசு கண்ணதாசன்
Thanks to Mr. Chandran Veerasamy
இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம், SUPER
Please watch from 0:30 to 0:35
http://www.youtube.com/watch?v=1GPv8ITlNtA
please watch from 3:10 to 3:19
http://www.youtube.com/watch?v=cHuiq...BBF4CE&index=8
நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!
“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”
பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?
இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!
“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”
எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.
இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!
இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?
“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”
- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?
“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”
என்றும்,
“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”
என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.
நீதி சொல்லும் தேதி!
‘முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.
அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.
இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?
“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!
அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?
பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?
“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’
இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?
எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!
“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”
பாருங்களேன்!
தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.
என்கிறார் எம்.ஜி.ஆர்!
உலகியல் உண்மை இதுதானே!
இன்னும் நீதி சொல்வதென்ன?
“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”
‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’
நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?
“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”
‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?
எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’
வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!
யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?
இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!
courtesy -udhayakumar - net
பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .
"பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் "
கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது
"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."
எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் . சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....
"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .
"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."
டி.எம்.எஸ் குரல் உயர்த்தி "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...
"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."
என்று கவிஞர் வாலியை விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர் பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...
‘ஆயிரத்தில் ஒருவன்!’
ஹாலிவுட்டில் வெளிவந்த பென்ஹர் முதலான படங்களை அடியொற்றி மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன்! என்னதான் பின்னாளில் கேசங்கரின் இயக்கத்தில் எம்ஜியார், அடிமைப்பெண் என்று ஒரு படம் கொடுத்திருந்தாலும் எம்ஜியாரின் திரைப்பாதையில் உச்சத்தில் பறக்கிற கொடி ஆயிரத்தில் ஒருவன்தான். அந்தப் படத்திற்கு முன்பே கன்னடத்தில் ஒரு படமும் தமிழில் ஒர படமும் நடித்திருந்தாலும் பின்னாளில் தமிழகத்தின் முதல்வரான ஜெயலலிதா பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றதும் இந்தப் படத்தின் வாயிலாகத்தான். அவ்வகையில் தமிழகத்தின் இரண்டு பிற்கால அரசியல் ஆளுமைகளை உருவாக்க உதவிய படம் அது என்று சொன்னாலும் மிகையில்லை.
கடல் கொள்ளையர்கள், அடிமை வியாபாரம் என்பதாகவெல்லாம் ஆர்ப்பரிப்போடு வெளிவந்த படம் அது! ஒயிலான நாயகி, நேர்த்தியான விஸ்வநாதனின் இசை, கவித்துவமிக்க கண்ணதாசனின் பாடல்கள் என்று இந்தப்படம் சகல விதத்திலும் வெற்றிப்படமாக அமைந்த ஒன்று. அறுபதுகளில் மட்டமல்ல, தமிழ்த் திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படும் படம் இது. இதன்பிறகு பந்துலு கன்னடப்படங்களை நோக்கி நகர்ந்துவிட்ட வகையில் பிற்பாடு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இவரது படம் ‘நாடோடி’ மட்டும்தான்!
courtesy -net
மக்கள் திலகத்தின் திரை உலக பத்திரிகை வரலாற்றில் ஒரு புதுமை படைப்பு - வரலாற்று பெட்டகம் - இது வரை யாருமே செய்திராத புரட்சி - கண்ணுக்கும் , மனதிற்கும் விருந்து தரப்போகிற தரமான படைப்பு
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகள் நிறைந்த காவிய படைப்பு .
உயர்ந்த எண்ணம் - லட்சிய பயணம் - பிரமாண்ட படைப்பு
ஒளிவிளக்கு நாயகருக்கு உயர்ந்த மனிதனின் காணிக்கை
விரைவில் விரிவான தகவல்கள் ........ தொடரும் .
http://www.youtube.com/watch?v=lPfUcBCYews
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
அரிய நிழற் படம் . மிகவும் அருமையாக உள்ளது .அநேகமாக 1962ல் எடுத்த படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் . நன்றி திரு பிரதீப் பாலு சார் .
1973- ARTICLE FROM ''PESUM PADAM '' CINE MONTHLY MAGAZINE
http://i58.tinypic.com/28a2ihk.jpghttp://i58.tinypic.com/2zg4t2r.jpg
v.v.good scene from 6:00 to 10:10 and 11:00 to 13:00
http://www.youtube.com/watch?v=W8qkDVCPxKI
மக்கள்திலகம் திரியில் மீண்டும் என்னுடைய நண்பர்களுடன் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றி விழாவோடு இணைவதில் பெருமை அடைகிறேன்
http://i60.tinypic.com/8y9gz5.jpg
நான் கண்ட அந்த வெற்றி விழா காட்சிகள் என் வாழ் நாளில் நான் இதுவரை தமிழகத்தில் கண்டதில்லை.
எங்கு பார்த்தாலும் நம் மன்னவனின் பதாகைகள் அவர்றவர்கள் வைத்த பேனர்களுக்கு வண்ண வண்ண பூமாலைகளும்,தனித்தனி அபிசேகங்கள்.
மக்கள் வெள்ளத்தில் தலைவனின் படப்பெட்டி ஊர்வளம்.
எங்குகானினும் உற்சாகத்தில் மக்கள் கூட்டம்.
ஒருபக்கம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அனைத்து டிக்கட்டுகளும் முன்பதிவிலேயே விற்றதனால்
மக்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்ததும்
பிளாக் டிக்கெட் வாங்க முண்டியடித்ததும் ,
திரையங்கு உள்ளே சென்றதும்
உள்ளே ஏற்கனவே HOUSEFULL ஆகி நிற்கக்கூட இடமில்லாமல்
தலைவன் திரையில் தோன்றியதும் ,
பல்வேறு வகையான பூக்களையும் சில்லறை காசுகளையும்
தலைவனின் மீது தூவி தலைவனின் இரத்தத்தின் ரத்தங்கள்
எழுப்பிய அந்த ஒலி கீதங்கள் நிச்சயமாக
நம் தானை தலைவனின் காதுகளில் இன்னும் கூட ரீங்காரம் இட்டு கொண்டு இருக்கும் வாழ்க என்றுமே நம் மன்னவனின் புகழ் வளர்க நம் இரத்தத்தின் ரத்தங்கள் தொண்டு
ஆயிரத்தில் ஒருவனின் 101வது நாள் வெற்றி விழா
மிக சீறும் சிறப்புமாக நடைபெற தன்னலம் கருதாமல்
இரவு பகல் பாராமல் உழைத்த
அணைத்து மக்கள்திலகத்தின் மன்றங்களுக்கும்
மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும்
மற்றும் கர்நாடகத்தில் இருந்து வந்த மன்றகளுக்கும் ,
அதேபோல உரிமைக்குரல் மாத இதழின் ஈடு இணையில்லா அற்பனிப்பிற்கும்.
மக்கள்திலகத்தின் தீவிற பக்தன்
வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி இன் வாழ்த்துக்கள் பல கோடி
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i57.tinypic.com/2cmqfkg.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/2aermef.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/r8h550.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i62.tinypic.com/2196pi1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/14mum80.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/wcbdif.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/v3n136.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/71pldl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i60.tinypic.com/2mrunh1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/10y30p0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/2emidcw.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/ofo5qt.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i62.tinypic.com/15j3is.jpg
http://i60.tinypic.com/2iicv0k.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i62.tinypic.com/xfwaj5.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i59.tinypic.com/11bqa83.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i58.tinypic.com/a1tges.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/dfu51d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i61.tinypic.com/5mk26x.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
http://i57.tinypic.com/ogxts4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்