http://i1170.photobucket.com/albums/...ps8ac8eeb3.jpg
Printable View
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ‘பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர்’ என்று புரட்சித் தலைவரைப் பற்றி சொல்லுவதற்கு முன் நீங்கள் பயன்படுத்தியுள்ள மற்றொரு வார்த்தை ‘தனக்கு உதவிகரமாக’ என்பது. இது சுயநல நோக்கம் என்றாகாதா? மேலும் அந்தக் கட்டுரையின் ஆரம்பமே இரண்டு பேர் ‘பரஸ்பர தேவைகளுக்காக’ என்று கூறியுள்ளீர்கள். மணியனுக்கு என்ன தேவையோ? எனக்கு தெரியாது. ஆனால், தலைவரை ‘தனது தேவைக்காக’ என்று குறிப்பிடுவது அவருக்கு பெருமை தரும் விஷயம் இல்லையே.
அதோடு, நான் குறிப்பிட்ட பத்தியிலேயே ஆரம்பத்தில் ‘முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால், அது தமக்கு ஒரு ‘அவமானமாகி’விடும் என்பதை உணர்ந்த அவர்’ (தலைவரைக் கூறுகிறீர்கள்) என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் இப்படி தவறான கருத்துக்களை விதைக்கிறீர்கள்? அதுவும் நிச்சயம் புரட்சித் தலைவர், ‘எனக்கு ரொம்ப அவமானமாகிவிடும் முரளி’ என்று உங்களிடம் கூற வாய்ப்பில்லாதபோது? இதெல்லாம் பாராட்டும் வார்த்தைகளா என்பதையும் திரியின் வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
நாராயணசாமி முதலியாரை, அவரது சட்ட அறிவை நாட்டுக்காக பயன்படுத்திக் கொள்வது பொதுநலம். ஆனால், தலைவரைப் பற்றி ‘தனக்கு உதவிகரமாக’ என்ற விளக்கத்துடன் நீங்கள் கூறுவது சுயநலம் என்ற தொனியில்.
உண்மையில், இதயம் பேசுகிறது பத்திரிகையில் அந்தக் கட்டுரையை நானும் படித்திருப்பதோடு அதன் பின்னணியையும் அறிவேன்(வோம்). அந்த கால கட்டத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் உடலமைப்பை பற்றியும் அவர் டூயட் பாடுவது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலளித்த திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ‘என்னை விட 14 வயது மூத்தவரான எம்.ஜி.ஆர்.(உண்மையில் 11 வயதுதான் மூத்தவர், அவர் தவறாக கூறினாரா? அல்லது நிருபர் தவறாக காதில் வாங்கிக் கொண்டாரா? அல்லது அச்சுப் பிழையா? என்று தெரியவில்லை) இளைஞராக நடித்தபோது யாரும் இப்படி கேட்கவில்லையே? என்று பதிலளித்திருந்தார். அதன் எதிர்வினையாகவே அந்த கட்டுரை வெளியானது. ‘எம்.ஜி.ஆர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். நீங்கள் அப்படி இல்லையே?’ என்று கூட அந்தக் கட்டுரையில் தாமரை மணாளன் கேட்டிருந்தார். பின்னர், சிவாஜி கணேசன் அவர்கள் ரசிகர்களால் மாநிலம் முழுவதும் இதயம் பேசுகிறது பத்திரிகை கொளுத்தப்பட்டது.
நான் மணியனுக்கோ, தாமரை மணாளனுக்கோ, இதயம் பேசுகிறது பத்திரிகைக்கோ வக்காலத்து வாங்கவில்லை. பின்னணி விவரங்களை சொன்னேன். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். சொல்வது என்றால் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கலாமே? நான் மேலே குறிப்பிட்ட பகுதிகளை ஏன் மறைக்கிறீர்கள்? நான் சொல்வது பொய் என்றால் மேற்படி கட்டுரையை பதிவிட்டு என் முகத்திரையை கிழிக்க தாராளமாக உங்களுக்கு உரிமை உண்டு.
காதல்வாகனம் படத்துக்கு மார்க் போட்டதற்காக திரு. எஸ்.வி பட்டபாடு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். தலைவரைப் பற்றி இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறாரே என்று எனக்கு நண்பர் திரு.கோபால் மீது வருத்தம் உண்டு. என்றாலும் தனி மனித வெறுப்போ, அவர் மீது கோபமோ கிடையாது. நான் புரிந்து கொண்ட வரையில் தனது குறைகளையும் பலவீனங்களையும் கூட வெளிப்படுத்த தயங்காத, எதையும் மறைக்கத் தெரியாத மனிதர் அவர். அதனால் சில சங்கடங்களிலும் சிக்கிக் கொள்பவர். அவர் ‘ராஜராஜ சோழனை’ விமர்சித்ததற்காக அவரைப் படுத்தாமல் கொஞ்சினீர்களா? என்று கேட்க விரும்புகிறேன். அந்தப் பதிவையே நீக்கச் சொன்னதுதானே உங்கள் ஜனநாயகம்?
நீங்கள் ஒரு மாடரேட்டர் என்பதையும் மறந்து, எனக்கு ‘திரு.சிவாஜி கணேசன் அவர்களை தாக்கும்படி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை வீசியிருப்பதன் மூலம் என் மீது நீங்கள் காட்டியுள்ள கோபத்தை விட நான் உங்கள் மீது குறைவான அளவு கோபமே காட்டியிருக்கிறேன் நண்பர் திரு. முரளி அவர்களே. இருந்தாலும் அந்தக் கோபம் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,
சித்ரா கிருஷ்ணசாமி விஷயமாக நீங்கள்தான் நண்பர் திரு.முரளி அவர்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என்பது நீங்கள் குறிப்பிடும் வரை எனக்குத் தெரியாது. சமீபத்தில் நான் உங்கள் திரியில் எழுத்து வன்மையும் விஷய ஞானமும் உள்ளவர்களில் உங்களுக்கு முக்கிய இடம் உண்டு என்று கூறியிருந்தேன். என் கணிப்பு சரிதான் என்று நிரூபித்துள்ளீர்கள்.
பெரியார் கொள்கைகளை பின்பற்றுவோர் எல்லாம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று கருதும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. உங்கள் கொள்கைகள் எதுவாக இருந்தால் எனக்கென்ன வந்தது? ஆனால், பெரியார் பற்றாளன் என்று கூறிக் கொண்டு சாதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். அது உங்களைப் போலவே நானும் மதிக்கும் அய்யா பெரியாருக்கு பெருமை சேர்க்காது.
திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி சிறிதும் கிடையாது. இதை எத்தனை முறை சொல்வது? திரு. முரளியும் இதே குற்றச்சாட்டை கூறுகிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இதை ஓராயிரம் முறை உரத்துக் கூவத் தயார். அவர்தான் கலைத் தெய்வம் என்று கூறினால்தான் அவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று அர்த்தம் என்றால்... நான் கேட்கிறேன், எங்கள் தலைவரை ஏழைகளின் ஏந்தல், பொன்மனச் செம்மல், எட்டாவது வள்ளல் என்று கூறினால்தான் உங்களுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று அர்த்தம் என்றால் நீங்கள் ஏற்பீர்களா? அல்லது அப்படி சொல்லத்தான் முன் வருவீர்களா?
சுவை மாறுபாடு சகஜமே. ‘மைசூர் பாகை வாயில் போட்டால் சலிக்கப்பட்ட மணலாய் அது உதிர்ந்து உமிழ் நீருடன் சேர்ந்து பாசந்தி பதத்தில் உள்ளே இறங்கும்போது.... அருமை’ என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.
அதே நேரம், ‘ஜீராவில் தோய்ந்த குலோப் ஜாமூனை பல்லில் படாமல் நடு நாக்கில் வைத்து மேலண்ணத்தால் மெதுவாய் நசுக்கி வழிந்து பரவும் ஜீராவுடன் இனிப்பு பஞ்சாய் தொண்டையில் இறங்கும்போது... ஆஹா’ என்று சொல்ல எனக்கும் உரிமை உண்டே.
என்னைப் பொருத்தவரை இரண்டும் இனிப்புகளே. என்ன.... உங்களுக்கு மைசூர் பாகு பிடித்திருக்கிறது. எனக்கு குலோப் ஜாமூன் பிடிக்கிறது. ஆனால், மைசூர் பாகுதான் சூப்பர். குலோப் ஜாமூனை மனிதன் சாப்பிடுவானா? எட்டிக்காயாய் கசக்கும் என்று நீங்கள் கூறும்போதுதான் பிரச்னையே. எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள் என்றுதான் கோருகிறோம்.
நேற்று பணிச் சுமை காரணமாக என்னால் விரிவாக பதில் அளிக்க முடியவில்லை. சால்ஜாப்பு பதில்கள் என்று கூறுகிறீர்கள்.
சிகரெட் விவகாரத்தில் அன்புமணி அவர்களின் முயற்சி பாராட்டக் கூடியதுதான். ஆனால், அவராலேயே வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லையே. புகையிலை மாபியாக்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தாரே. இதில் மாநில அரசோ ஒரு முதல்வரோ மட்டுமே எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் கடுமையான அணுகுமுறை தேவை.
மதுவிலக்கைப் பொருத்தவரை திமுக ஆட்சியில் முதல் முறையாக மதுவிலக்கு தளர்த்தப்பட்டபோது, மது விலக்கு பிரசாரக் குழு தொடங்கப்பட்டு அதன் தலைவராக புரட்சித் தலைவர் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆட்சியிலும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அதற்கு என்ன காரணம்? ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்து மாண்டார்கள். அதுவும் கிடைக்காமல் போதைக்கு அடிமையானோர் வார்னீஷ்களை குடித்து இறந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் கண் பார்வையும் பறிபோனது. இதைத் தவிர்க்கவே மது விலக்கை புரட்சித் தலைவர் தளர்த்தினார். மகன் தறுதலையாக இருந்தாலும் பரவாயில்லை. உயிரோடு இருந்தால் போதும் என்ற தாயின் பாச மனம் போன்ற புரட்சித் தலைவரின் பரிவு மனமே அதற்கு காரணம். அதற்காக பிள்ளை தறுதலையாக இருப்பதில் தாய்க்கு மகிழ்ச்சி என்று அர்த்தமல்ல. மிகவும் வேதனையோடு எடுக்கப்பட்ட முடிவு அது.
ஒரு மாதத்துக்கு முன் நீங்கள் ஒரு பதிவை போட்டிருந்தீர்கள். விபசாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அந்தப் பதிவு உடனே தூக்கப்பட்டது. உங்கள் கருத்தில் எனக்கு மாறுபாடு உண்டு. அதற்கு காரணங்கள் பல உண்டு. இங்கே விவரிக்க விரும்பவில்லை. விவாதப் பொருளும் அதுவல்ல. ஆனால், மனதை கட்டுப்படுத்த முடியாத மனிதன் தவறான வழிகளில் சென்று உயிர் குடிக்கும் நோய்களுக்கு ஆளாவதை விட அது மேல் என்ற உங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டேன். அதற்காக, கோபால் விபசாரத்தை ஊக்குவிக்கிறார் என்று நான் கூறினால் அது சரியாகுமா? அது போல புரட்சித் தலைவரின் நோக்கத்தை குறை கூறாதீர்கள்.
மேலும், அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் மது விலக்கு என்பது நெருப்பு வளையத்தின் நடுவே வைக்கப்பட்ட கற்பூரமாகவே இருக்கும். உத்தமர் காந்தியடிகள் பிறந்த குஜராத் மண்ணிலேயே மதுவிலக்கு பெயரளவுக்குத்தான் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் கிடைக்கும் மதுவும் கள்ளச்சாராயமும் அங்கே ஓடுகிறது என்பது நாளிதழ் படிப்போர் அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான கொள்கை தேவை. எனவே, நீங்கள் தலைவரை மட்டுமே குறை கூறி பலனில்லை.
அதெல்லாம் இருக்கட்டும்.... உங்கள் எழுத்துக்களை முழுமையாக படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். தலைவரை நீங்கள் தாக்குவதை தவிர்த்துப் பார்த்தால் உங்கள் எழுத்துக்களை ரசித்திருக்கிறேன். இன்று கூட உங்கள் திரியில் உங்கள் தொடருக்கு பிறகு உடனடியாக உங்கள் வார்த்தைகளின்படி ஒரு மக்குப் பதிவு. (நீங்கள்தான் சொல்கிறீ்ரகள். நான் சொல்லவில்லை) உங்கள் திறமையையும் அறிவையும் உழைப்பையும் காட்டில் நிலவாய், கடலில் மழையாய் ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆளே இல்லாத கடையில் எதற்காக இப்படி டீ ஆத்தி தள்ளுகிறீர்கள் என்று புரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை ''
11.11.1966
48 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று .
ராமண்ணாவின் முதல் வண்ணப்படம் . பல புதுமைகள் நிறைந்த பொழுது போக்கு சித்திரம் .
1966ல் வந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படங்கள் .
அன்பே வா - முற்றிலும் மாறுபட்ட காதல் வரலாற்று காவியம் .
முகராசி - 12 நாட்களில் படமாக்கப்பட்டு 100 நாட்கள் ஓடிய படம் .
நான் ஆணையிட்டால் - சமூக சீர்திருத்த படம் .
நாடோடி - சாதி கொடுமையை எதிர்த்து வந்த படம் .
சந்திரோதயம் - பத்திரிகை அதர்மத்தை எதிர்த்து வந்த சமூக படம் .
தாலி பாக்கியம் - முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படம் .
பறக்கும் பாவை - சர்க்கஸ் மையாமாக கொண்டு வந்த சிறந்த படம்
தனிப்பிறவி - இனிய பாடல்களுடன் வந்த மக்கள் திலகத்தின் புதுமை படம் .
பெற்றால்தான் பிள்ளையா - நடிக பேரசரின் நவரச காவியம் .
இனி பறக்கும் பாவை ..........
ஏராளமான நட்சத்திர கூட்டங்களோடு மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் மக்கள் திலகத்தின்
சிறப்பான நடிப்பில் - புதுமையான சண்டைகாட்சிகள் - பாடல் காட்சிகள் - நடனங்கள் என்று காட்சிக்கு காட்சி
விறுவிறுப்புடன் வந்த பொழுது போக்கு படம்
எனக்கு பிடித்த சில காட்சிகள் - பாடல்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் விரும்பும் படங்களில் பறக்கும் பாவையும் ஒன்று .
http://youtu.be/fye8ENxzdJY?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
http://youtu.be/RtgXOOOxw5Q
கலைவேந்தன் சார்
இந்த டீ கடை - ஜோக்கிற்கும் உங்கள் கோபலரின் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை .ஜஸ்ட் ரிலாக்ஸ் .
http://youtu.be/eoCwwsA2_7w
திரு.கோபால்,
நானும் உங்களுடன் வாதாடி அலுத்து விட்டேன். நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்திருக்கிறேன். இதில் யார் பக்கம், யார் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பது படிப்பவர்களுக்கு புரியும். உங்களுக்கு தலைவர் மீது ஏன் இவ்வளவு குரோத உணர்ச்சி என்று தெரியவில்லை.
கடைசியாக ஒன்று கேட்கிறேன். சினிமாவையே விட்டு விடுவோம். அது வெறும் பொழுதுபோக்கு. (அதிலும் கூட தலைவர் நல்ல கருத்துக்களை கலையின் மூலம் சொன்னார் என்பது வேறு விஷயம்) ஆனால், இதையெல்லாம் தாண்டி தான் உழைத்து சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வழங்கியவர் பொன்மனச் செம்மல்.
தன் உழைப்பால் வாங்கிய சத்யா ஸ்டூடியோவில் தொழிலாளர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து லாபத்தில் அவர்களுக்கும் பங்களித்த உலகின் ஒரே முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி. ஆயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணியை தீர்த்தவர். அந்த வகையில் கூட உங்களுக்கு அவர் மீது soft corner இல்லையா? இதயமே இல்லாமல் ‘இல்லை’ என்பது உங்களது பதிலாக இருக்குமானால் அதற்கு மேல் நான் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. இனி தலைவர் தொடர்பாக உங்களுடன் விவாதத்திலும் ஈடுபடப் போவதும் இல்லை.
ஆமாம்... தலைவரைப் பார்த்து முதுமை, ஆபாசமாக நடித்தார் என்றெல்லாம் கூறுகிறீர்களே? எனக்கு ஒரு படமும் அதில் நடித்த நடிகரின் பெயரும் மறந்து போய் விட்டது. உங்களைக் கேட்டால் தெரியும் என்பதற்காக கேட்கிறேன்.
‘தொந்தி சரிய.. மயிரே வெளிர ...’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போல, ஒரு நடிகர் ஒரு நடிகையை தனது மூக்கு நசுங்க உடல் முழுவதும் முகம் புதைத்து புரட்டி எடுத்திருப்பார். அந்த பாடல் கூட ‘நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு.. காதல்..அம்மம்மா...’ என்று வரும். அந்த படம் மற்றும் நடிகரின் பெயர் என்ன?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பறக்கும் பாவையில் எனக்கு பிடித்த காட்சிகள் .
* அறிமுக காட்சியில் ஆணுடை அணித்து வரும் சரோஜாதேவி யை அடையாளம் கண்டு கொண்டு பின்னர்தன்னுடைய
வீட்டுக்கு அழைத்து வந்து கிண்டலடிக்கும் இடம் . பிறகு சரோஜாதேவி தப்பிக்க ஓடும்போது கையிற்றால் பிடி போட்டு இழுத்து பாடும் பாடல் ''பட்டு பாவாடை எங்கே ''- சூப்பர் பாடல் . மக்கள் திலகத்தின் சூப்பர் டான்ஸ்
** காஞ்சனா அறிமுக காட்சியில்எம்ஜிஆரை கண் கொட்டாமல் பார்க்கும் இடம்.
*** ஒரே இடத்தில நாகையா - சகுந்தலா - நம்பியார் - காஞ்சனா - எம்ஜிஆர் இடம் பெறும் காட்சி . பின்னர் நடராஜனுடன் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி .
**** சர்க்கஸ் காட்சிகளில் ராஜ சுலோச்சனா - அசோகன் - சந்திர பாபு - ராமதாஸ் - மனோகர் - மனோரமா - மாதவி தங்கவேலு அறிமுக காட்சிகள் .
காஞ்சனாவின் கனவு பாடல் - முத்தமோ மோகமா - கண்ணுக்கு விருந்து . மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடனம் அருமை .
நிலவென்னும் ஆடைகொண்டாளோ
உன்னைத்தானே ...
இரண்டு பாடல்கள் இனிமையான காட்சிகள் .
தன்னை தக்க வரும் புலியிடம் இருந்து எம்ஜிஆர் வெகு சாமர்த்தியமாக ஸ்டூலை வைத்தே விரட்டும் இடம் .
கூண்டில் இடம் பெற்ற கல்யாண நாள் பார்க்கலாமா பாடல் - புதுமை
வலையில் இடம் பெற்ற எம்ஜிஆர்-அசோகன் - மனோகர் சண்டை காட்சிகள்
நடராஜனோடு ஒ.ஏ.கே . தேவர் வீட்டில் இடம் பெற்ற சண்டை காட்சி .
ஓட்டலில் பாடும் புதுமையான ''சுகம் எதிலே '' பாடல் மற்றும் நடனம் .
பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் -
இனிமையான படம் . இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .
எம்ஜிஆரின் பிம்பம் இந்த படத்தில் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது .
NAMNADU
COIMBATORE
NAAZ THEATRE
FIRST 3 DAYS COLLECTION
Rs.48000/-.
INFORMATION FROM
MR.V.P.HARIDAS, COIMBATORE
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்
இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்
மக்கள் திலகம் தனது மாம்பலம் அலுவலகத்தில் :
http://i62.tinypic.com/30jk9jd.jpg
மாற்றுத்திரியில் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பரப்பும் செய்திகளை விட, நம் மக்கள் திலகத்தைப் பற்றிய அவதூறு செய்திகளையும், பொய்யான தகவல்களையும் பதிவிட்டு அற்ப சந்தோஷமடையும் சில அன்பர்களுக்கு தகுந்த பாடலை, தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, சகோதரரர் சைலேஷ் பாசு அவர்களே !
நம் புரட்சித்தலைவரை விஷ்ணுவாக பாவித்தும், கம்சன், இரணியன் மற்றும் இராவணன் ஆகியோரை குறிப்பிட்டு உதாரணமாக எழுதி இருந்தாலும், புராணக் கதையில் மகாவிஷ்ணு தன் பக்தர்களுக்கு எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்கு துன்புறுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டுவது சற்று நெருடலாக இருக்கிறது.
இத்தருணத்தில், பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1972 கால கட்டத்தில், நம் புரட்சித்தலைவரை கட்சியை விட்டு நீக்கி, பின்பு அவருடன் சமாதானம் பேச அன்றைய ஆளும் கட்சியினர் முற்பட்டிருந்த வேளையில், தனது கட்சி தொண்டர்களும், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் மறைதிரு. முசிறிப்புத்தன் அவர்களும் தாக்கப்பட்டனர். இதனை அறிந்த, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் எந்த சமரச பேச்சுக்கும் இனி இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அதுதான் புரட்சித்தலவைரின் மாண்பு ! கலியுகத்தில் மக்களை காப்பாற்ற வந்த மகான் என்பதால்தான், அவர் " கலியுக கடவுள் " என்று அவர் அழைக்கப்படுகிறார்.
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல் காட்சியமைப்பு இப்படி இருக்கலாமா?
by KalaivendhanQuote:
Quote:
ஆமாம்... தலைவரைப் பார்த்து முதுமை, ஆபாசமாக நடித்தார் என்றெல்லாம் கூறுகிறீர்களே? எனக்கு ஒரு படமும் அதில் நடித்த நடிகரின் பெயரும் மறந்து போய் விட்டது. உங்களைக் கேட்டால் தெரியும் என்பதற்காக கேட்கிறேன்.
‘தொந்தி சரிய.. மயிரே வெளிர ...’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போல, ஒரு நடிகர் ஒரு நடிகையை தனது மூக்கு நசுங்க உடல் முழுவதும் முகம் புதைத்து புரட்டி எடுத்திருப்பார். அந்த பாடல் கூட ‘நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு.. காதல்..அம்மம்மா...’ என்று வரும். அந்த படம் மற்றும் நடிகரின் பெயர் என்ன?
தமிழ் திரைப்படங்களில் காதல் காட்சியமைப்புக்கள் வரையறை மீறும்போது நடிப்பது திரையுலக மூவேந்தர்களே என்றாலும் மனம் கசப்படைவது தவிர்க்க இயலாது
குடும்பத்துடன் அமர்ந்து நாம் திரைப்படங்களை ரசிக்கும்போது வியாபாரநோக்கில் காமம்கலந்த கவர்ச்சிப்பூச்சில் வெளிவந்த இந்தவகை 'காதல்' நோதலே!
மென்மையான இதமான இனிமையான காதல் காட்சியமைப்புக்களில் காதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஜெமினிகணேசனும்கூட காலம்கடந்த வேளையில் குறத்திமகன் திரைப்படத்தில் ஒரு சிறிய திருஷ்டிப்பொட்டு வைத்தவர்தான்!
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY
https://www.youtube.com/watch?v=MBepNZJjK-4
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=vylKWIFujkI
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
https://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=L6CwgtFCJVo
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0
Better not to continue such bitter matters as it may shatter the cult images of our icons, augmenting only hatred among us!
எம்ஜிஆருக்கும் ,சிவகுமாருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு...
இருவருமே பிஞ்சுப் பருவ பிள்ளை வயதிலேயே , தந்தையை இழந்தவர்கள்....
எம் ஜி ஆருடன் தன் முதல் சந்திப்பு பற்றி சிவகுமார்....
“முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார்.”
“அப்படிப்பட்ட ஆள் வந்து துப்பாக்கியால் சுடப்பட்டு , பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது , நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர். எம்.வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார்.
எம்.ஜி.ஆர்.அருகில் சென்று “அண்ணே ..சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல..” அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? ...அம்மா செளக்கியமா..?” அப்படின்னு விசாரித்தார்.
அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார்.
அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.”
# சிவகுமார் சொன்ன இந்த செய்தியைப் படித்ததும் எனக்கு ஏனோ இப்படி தோன்றியது...
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!!!"
மற்றவர்கள் ஒத்துக்கொண்டால்தான் நம் மக்கள் திலகம் மகான் ஆவார் என்றில்லை. அவர் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்தில் தெய்வமாகிவிட்டார்.
திரையில் தன்னிகரில்லா நடிகராகி, அரசியலில் எவரும் அடைய முடியா புகழடைந்து, அனைத்திற்கும் மேலாய் மனித நேயத்தால் மனிதப் புனிதராகி, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் மங்காத தீபமாய் ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். அவர் புகழை பொறுக்கமுடியாத ஒரு சிலரின் வெற்றுக்கூச்சல் இது என்பது நமக்கல்ல...இந்த திரியைக் கண்ணுறும் அனைவருக்கும் வெளிச்சமாய் தெரியும்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளிவிளக்கை, எவருடனும் ஒப்பிட்டு, அவர் தனித்தன்மை அறியாதவர்களிடம் வாதிட்டு அதை இந்த திரியில் பதிவிட்டு, அதனால், ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு தேவைப்படும் நேரத்தை குறைத்துக்கொள்வதில் யாருக்கு என்ன லாபம். அவர்களுக்கு நீங்கள் என்னதான் அறிவுறுத்தினாலும், ஆதாரங்கள் காட்டினாலும், திரும்பவும் அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பல காலம் பார்த்தாகிவிட்டது. எனவே தாங்கள் பதிவிடும் மிகச் சிறந்த பதிவுகள் விழலுக்கு இறைத்த நீராகின்றன. நம் திரியின் மாண்பு குறையாமல் இருக்க வேண்டுமானால், மாற்று திரியில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு இங்கே பதில் சொல்லி நம் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
நம் தலைவரின் புகழ் பொங்குதமிழ் போல பெருகிக்கொண்டே இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றை நாம் ஆராய்ந்தாலே நமக்கு ஆயுள் போதாது. அப்படியிருக்க எதற்கு இந்த வீண் வாதங்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.
எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.
நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.
courtesy - net
V.V.correct historical fact [for persons who have belief in religion].
In my personal opinion who is responsible is one chief [intentionally misspelt] personality. We should always see the core issue every other problems will disappear on its own.
I leave it to your assumption!
வேலூர் records79
http://i58.tinypic.com/iyhg85.jpg
வேலூர் records80
http://i60.tinypic.com/29g0w8k.jpg
வேலூர் records81
http://i59.tinypic.com/14t4fwn.jpg
வேலூர் records82
http://i58.tinypic.com/11lidxc.jpg
வேலூர் records83
http://i60.tinypic.com/23lyyyg.jpg
வேலூர் records84
http://i62.tinypic.com/23sc7c2.jpg
நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி. திரு.மணியனைப் பற்றியோ திரு.தாமரை மணாளனைப் பற்றியோ நீங்கள் விமர்சிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை. அந்தக் கட்டுரையில் தேவையில்லாமல் தலைவரைப் பற்றி அதுவும் பெயர் குறிப்பிட்டு விமர்சித்திருந்ததால் நான் விளக்கம் அளிக்க வேண்டி வந்தது.
நான் எழுத்துக்களை (அது யார் எழுதியதாக இருந்தாலும்) ரசிப்பவன். அதிலிருந்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா? என்று பார்க்கும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மிகச் சாமானியன். மற்றபடி, யாரையும் பெயர் குறிப்பிட்டு நான் எழுதாதபோது (நீங்களே கூறியுள்ளபடி) இன்னாரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று அர்த்தம் கற்பித்து கூறும் அளவுக்கு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வார்த்தைகளை தேடும் வழக்கம் எனக்கில்லை.
தலைவரின் திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது சிறப்பு, மேதைமை,புகழ், பெருமை, சாதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், திரியை படிக்கும் உலகத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதே என் நோக்கம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
வேலூர் பறக்கும் பாவை - நோட்டீஸ் - விளம்பரங்கள் சூப்பர் ,இது வரை பார்க்காதது .நன்றி .
கோவை - நாஸ் நம்நாடு மூன்று நாட்கள் வசூல் நிலவரம் - சாதனை ரவிச்சந்திரன் சார் .
12.11.1976
ஊருக்கு உழைப்பவன்-
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.
மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.
உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.
தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.
இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.
இதயத்தை வருடும் இன்பகானங்கள்...
1. இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி!
தலைவா கொஞ்சம் பொறுத்திரு
வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!
2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.
3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
எழுதிய ரதிவர்மன் எங்கே?
இலக்கிய காவியம் இங்கே-அதை
எழுதிய பாவலன் எங்கே?
4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்