http://i60.tinypic.com/28nn9i.jpg
Printable View
Monotony breakers!! enjoy!!!:-D
கோபியர் கொஞ்சும் கோபாலர் NT!!Quote:
A heptagonal array of songs from Uththama Puththiran Vs Thirisoolam Vs Deepam Vs Theiva Magan Vs Vasantha Maaligai Vs Iruvar Ullam Vs Ennaippol Oruvan!!!
ஒரு கதாநாயகர் ஒரே விதமான கோபியர் நடுவில் கோபாலன் என்ற கான்செப்டை எத்தனை விதமாக உருவகப் படுத்துகிறார் நடிப்புக் குழலூதும் நமக்கு
என்றுமே புதிய பறவையான கோபாலர்
https://www.youtube.com/watch?v=a63IlNFGip8
https://www.youtube.com/watch?v=qbCqgaC3ZfQ
https://www.youtube.com/watch?v=EbPy9iWkfGA
https://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0
https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE
https://www.youtube.com/watch?v=rtnw5VwPJak
https://www.youtube.com/watch?v=b0csx2ikKEQ
லுங்கி டான்ஸ்
நடிகர்திலகம் அப்போதே செய்த ஸ்டைல்டான்ஸ்
http://i1065.photobucket.com/albums/...psjbwrkvyq.jpg
http://i1065.photobucket.com/albums/...pswirbym1o.jpg
http://i1065.photobucket.com/albums/...psyilkwzsy.jpg
http://i1065.photobucket.com/albums/...pspzlhxzeu.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5eko4ny4.jpg
http://i1065.photobucket.com/albums/...pspsvgn4jt.jpg
ஆர்கேஎஸ்.
இந்த விவாதம் எதற்கு? தேவையில்லை, விட்டு விடுங்கள். நீங்கள் யாரை convince செய்ய போகிறீர்கள்? இப்போது எதனால் இந்த விவாதம் வந்தது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
அந்த நாள் ஞாபகம் தொடரில் நான் பட்டிக்காடா பட்டணமா சாதனை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மதுரையில் முதன் முதலாக 5 லட்சம் வசூல் செய்த படம் பட்டிக்காடா பட்டணமா என்று சொன்னேன். அது பொய்யில்லையே! அது போல் மதுரையில் முதன் முதலாக 5 லட்சம் வசூல் செய்த கலர் படம் வசந்த மாளிகை என்பதையும் சொன்னேன். அதுவும் உண்மைதானே! நாம் 72-ஐ பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அன்றைய நிலவரத்தை சொல்கிறோம். வேறு எந்த ஒப்பிடோ இல்லை எதிர் மறை விமர்சனமோ இல்லை. உடனே எதிர் வினையாக மூன்று நான்கு பதிவுகள். இதை தொடர்ந்து சகோதரர் செல்வகுமார் அவர்களின் பதிவு கடுங் கோவத்துடன் வருகிறது. அவர் என் பதிவை படித்தாரா என்றே தெரியவில்லை. [உணர்ச்சிவசப்பட்டதில் நான்கு அரங்குகளில் வெள்ளி விழா ஓடிய உ.சு.வாவை 6 அரங்குகள் என்றாக்கி விட்டார். மதுரையில் 250 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் 300 ஆகி விட்டது].
நாம் வசூல் பற்றி பேசினால் அது சீண்டுதல். அதே நேரத்தில் அவர்கள் ரசிகர் மன்ற நோட்டிஸ் போட்டுவிட்டு இது பார்வைக்குத்தான் விவாதத்திற்கு அல்ல என்பார்கள். இது நாம் ரெகுலராக பார்த்து வருவதுதானே!
நான் என்ன எழுதினாலும் [குறிப்பாக மதுரையைப் பற்றி] வினோத் சாரும், குமார் சாரும், நண்பர் கலைவேந்தனும் react பண்ணுவார்கள். காரணம் சிவாஜி சாதனை என்று எப்படி எழுதலாம்? அதனால்தான் சொல்கிறேன். விவாதம் வேண்டாம். வேண்டுமானால் ஒன்று செய்யலாம். இப்படி சொல்லி விடலாம்.
சிவாஜி கணேசன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. மிஞ்சிப் போனால் அவருக்கு 100 ரசிகர்கள் தேறுவார்கள். அவர்கள் ஏதோ அவ்வப்போது கத்திக் கொண்டிருப்பார்கள்.
இப்படி ஒரு statement கொடுத்து விட்டால் அவர்களும் சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். விஷயம் முடிந்தது.
முன்பு இருந்ததை விட நீங்கள் நிறைய mature ஆகியிருக்கிறீர்கள். யாருடனும் சண்டை போடாமல் பதிவிடுகிறீர்கள். மீண்டும் ஏன் அந்த பழைய நிலைக்கு போக நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நல்ல காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறீர்கள் அதை தொடருங்கள்.
என் பதிவிற்கு எதிர் வினையாற்றிய எவர் மீதும் எனக்கு கோவமில்லை. வயதில் என்னை விட அனைவரும் மூத்தவர்கள். அவர்கள் இலக்கில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களை குறை சொல்ல முடியாது.
நண்பர் ஆர்கேஎஸ் என் பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்டதால்தான் இதையும் எழுத நேர்ந்தது. இந்த விவாதம் இத்துடன் முடியட்டும். நண்பர்கள் யாரும் இதை முன்னெடுக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராமச்சந்திரன் சார்,
திருச்சியில் சின்ன துரையின் தியேட்டர்கள் படையெடுப்பையும் அங்கெல்லாம் வசூலை குவிப்பதையும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!. விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் பச்சை விளக்கும், ராஜ ராஜ சோழனும் மற்றும் பல படங்களும் வந்து திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தட்டும்!
அன்புடன்
முத்தையன் சார்,
ஒரு முத்தாரத்தில் பாடலின் ஒளி வடிவக் காட்சிகளுக்கு மிக்க நன்றி. நான் முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல நீங்கள் ஒரு திரையரங்க ஆபரேட்டராக இருப்பதால் ஒரு ரசிகனின் மனோநிலையில் காட்சியையும் அதன் ஆழ் பரிமாணங்களையும் உங்களால் உணர முடிகிறது. அதை அதே உணர்வு எதிரொலிக்கும் வண்ணம் இங்கே பதிவிட முடிகிறது.
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்திருப்பார். பார்ட்டி இருக்கிறது. என்னை குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லி மனைவியை கூட்டி வந்திருப்பார். சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார். அந்த ஸ்டில் உங்கள் பதிவில் இருக்கிறது. [அந்தப் போஸில்தான் மனிதன் என்ன handsome?] முதல் சரணத்தில் (அந்த மாலை இந்தப் பெண்ணின்) விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகம் அமர்ந்திருக்கும் சோபாவிற்கு பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். அவர் கையில் மதுக் கோப்பை இருக்கும். விஜயா பக்கத்தில் வருவதைப் பார்த்தவுடன் பாலாஜி சற்றே சங்கடமாக உணர்ந்து மதுக் கோப்பையை கால்களுக்கிடையே மறைத்துக் கொள்ள முயற்சி செய்வார். அவ்வளவு இயல்பாக இருக்கும். ராமண்ணா அழகாக எடுத்திருப்பார்.
அந்த சரணம் முடியும். திரும்பி பார்க்கும் விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியின் கைகளில் இருக்கும் கோப்பையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் நடிகர் திலகம் காட்டும் reactions!
முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.
நான் இப்போது இவ்வளவு விளக்கமாக சொன்னதை அந்த உணர்வுகளை உங்களது நான்கு ஸ்டில்ஸ் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விட்டீர்கள்!
வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் சார்!
அன்புடன்
Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)
சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.
larger than life பாத்திரங்களில் நடிக்க விசேஷ பயிற்சி, தேவையான உருவம், குரல், நடை பாவனை,உடைகள் பொருந்தும் உருவ அமைப்பு, கற்பனை , அதீத சக்தி இவையெல்லாம் தேவை என்றும் ,சராசரிகளால் அவை கனவு கூட காண முடியாத விஷயம் என்றும் பார்த்தோம்.
ஆனால் நான் அதிசயிக்கும் அம்சம் ,இந்த கஷ்டமான territory யில் அவர் அதிக எண்ணிக்கையில் நடித்த வித விதமான பாத்திரங்கள் , உலக அளவில் சாதனையாகவே கருத பட வேண்டும். Stella Adler ,Oscar wild ,Shakspere School இது தவிர நம் கூத்து-நாடக கலை மரபு, மற்ற மாநில வீரர்கள் என்று 20 இலிருந்து 80 வயது வரை கி.மு வில் socretes ,அலெக்சாண்டர்,ஜூலியஸ் சீசர் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு சரித்திர நாயகர்கள், வீரர்கள்,புலவர்கள் அடியார்கள்,கற்பனை வீர பாத்திரங்கள் என்று வேறுபட்ட பாத்திரங்கள், கால அளவுக்கு அப்பாற்பட்ட கடவுள் பாத்திரங்கள், கர்ணன்,பரதன் போன்ற புராண பாத்திரங்கள் என அத்தனையிலும் நடிப்பில் காட்டிய மிக துல்லிய வேறுபாடு ராமனந்த் சாகர் போன்றவர்களை இவர் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்ததில் வியப்பென்ன?
உள்ளே போகு முன் பட்டியலிட்டால் இது மிக தெளிவாகும்.
மனோகரா, தூக்கு தூக்கி,காவேரி, தெனாலி ராமன் ,நானே ராஜா,வணங்காமுடி,தங்கமலை ரகசியம்,ராணி லலிதாங்கி ,அம்பிகாபதி,சம்பூர்ண ராமாயணம்,உத்தம புத்திரன்,சாரங்க தாரா,காத்தவராயன்,தங்க பதுமை,
வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ பக்தி,மருத நாட்டு வீரன்,ஸ்ரீவள்ளி,சித்தூர் ராணி பத்மினி,கர்ணன்,மகாகவி காளிதாஸ்,கந்தன் கருணை ஹரிச்சந்திரா,ராஜ ராஜ சோழன்,தச்சோளி அம்பு,சந்திர குப்தா சாணக்யா, பக்த துக்காராம்,எமனுக்கு எமன்,ராஜரிஷி போன்ற முழு படங்களும் தோன்றும் பாத்திரங்களுடன் ஒரே படத்தில் பல்வேறு பாத்திரங்கள் திருவிளையாடல் (சிவன், புலவர், மீனவன், விறகு வெட்டி),சரஸ்வதி சபதம்(நாரதர்,புலவர்),திருவருட்செல்வர்(அரசன், சேக்கிழார்,சலவை தொழிலாளி,சுந்தரர்,அப்பர் ),திருமால் பெருமை (பெரியாழ்வார்,விஷ்ணு சித்தர்,தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,விபர நாராயணர்) என்றும் ,பல படங்களில் இடை செருகலான நாடக காட்சிகளிலும் தோன்றியுள்ளார். இல்லற ஜோதி (சலீம்),நான் பெற்ற செல்வம்(சிவன்,நக்கீரன்),ராஜா ராணி(சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் ),அன்னையின் ஆணை(சாம்ராட் அசோகன்)ரத்த திலகம் (ஒதெல்லோ ),ராமன் எத்தனை ராமனடி(வீர சிவாஜி),எங்கிருந்தோ வந்தாள் (துஷ்யந்த்),சொர்க்கம்(ஜூலியஸ் சீசர் )ராஜபார்ட் ரங்கதுரை (ஹாம்லெட்),அன்பை தேடி (புத்தர்),ரோஜாவின் ராஜா(சாம்ராட் அசோகன்) என்று விரியும்.
பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
நான் பல நாடகங்களை ,பலவித நடிகர்களின் நடிப்பை பார்த்து ஆய்ந்தவன் என்ற வகையில் உறுதியாக சொல்லுவேன், நடிகர்திலகத்தை மிஞ்ச இனி ஒருவன் பிறக்கவும் முடியாது.பிறந்ததும் இல்லை. ஒன்றிலிருந்து ஆயிரம் வரை நடிகர்திலகம் பெயரை எழுதி விட்டே, 1001 ஆக அடுத்து வரும் நடிகனை குறிப்பிடலாம்.
From today (14.06.2015) edition of daily thanthi epaper
http://www.dinathanthiepaper.in/1462...SB160205-M.jpg
ஒரு கலைஞன் ,அரசியலில் வென்று விட்டால் எவ்வளவு வரலாற்று திரிபுகள். கலைஞர் டீவீ நிகழ்ச்சியில் பிறைசூடன் காகித ஓடம் உவமையை முதலில் பிரயோகித்தவர் கலைஞர். பிறகே காகிதத்தில் கப்பல் செய்து என்று கண்ணதாசன் என்றார். (திரியில்
ஒருவர் இதே தவறை செய்ததாக ஞாபகம்)
அன்பு கரங்கள் படத்தில் காகிதத்தில் கப்பல் செய்து பாடலினை புனைந்தவர் வாலி. வந்த வருடம் 1965.
மறக்க முடியுமா படத்தில் கலைஞர் கைவண்ணத்தில் காகித ஓடம் வந்தது 1966 இல்.
என்னவோ போடா மாதவா...... சரித்திரம் சந்தி சிரிக்க போகிறது. பேராசிரியர்களும் புளுகி தள்ளும் கலி காலமாயிற்றே?
delete
தங்கப்பதக்கம்
தவறு செய்யும் மகனை கைது செய்து சிறைக்கு அனுப்பிய பின்னர்
ஆரம்பிக்கும் முதல் காட்சி...
எ.ஸ். பி .செளத்ரி வீட்டிற்குள் வருகிறார்.அவர் வருவதைப் பார்த்ததும் மனைவியும் மருமகளும் எழுந்து நிற்கின்றனர்.
அவர்களைப் பார்த்து "சாப்பிட்டாச்சா" என்று கேட்கிறார்.அதற்கு அவர்கள்
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னாஒரு நாளைக்கு உசுரா போயிடும் என்று சொல்லிவிட்டு அமைதியாக நிற்கின்றனர். பின்னர் சௌத்ரீ உரத்து சப்தமிட்டதும் பயந்து சாப்பிட அமர்கின்றனர்.
அவர்களுக்கு சௌத்ரீ பரிமாறிவிட்டு பின்நியாயதர்மங்களையும்,கடமையையும் எடுத்து சொல்கிறார்.
இது ஒருசாதாரமான காட்சி அமைப்புதான்.
ஆனால் திரையில் நாம் கண்டது ஒரு வரலாறு.
இப்போது இந்த காட்சியைநம் திரி நண்பர்கள் அவர்களுக்கே
உரிய வர்ணணைகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.இதன்மூலம் பலவிதமான விமர்சனங்களை விதவிதமாக படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.
இது ஒரு காட்சி
பல கண்ணோட்டம்என்ற வகையில்
வித்தியாசமாய் அமையும்.
ஒவ்வொரு வாரமும் எவராவது ஒருவர் ஒரு காட்சியை சொல்லி அதற்கு பலர் அவரவர்பாணியில் விமர்சனம் செய்யலாம்.
திரிக்கு பலமே திலகரசிக நண்பர்களின் எழுத்தாற்றல் தான்.இந்த திரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 1 30000 த்தை தாண்டிவிட்டது.மற்ற திரிகளை விட இது மிகவும் அதிகம்என்றாலும் முந்தைய
திரிகளை விட இது மிகவும் குறைவு
டியர் செந்தில்வேல்
தங்களுடைய சிந்தனையில் நடிகர் திலகம் பல்வேறு காட்சிப் பரிமாணங்களில் அற்புதமாய் மிளிர்கிறார் என்றால், அதையும் தாண்டி வித்தியாசமான கோணங்களில் எழுத்துப் பரிமாணங்களிலும் மிளிர வைக்கும் அற்புதமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நிச்சயமாக காட்சி ஒன்று கண்ணோட்டம் பல என்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் சிலர் தங்களுடைய வலுக்கட்டாயமான விமர்சனத்தை திணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
இருந்தாலும் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான நல்ல யுத்தி என்கிற வகையில் இதனை முழுமனதோடு வரவேற்கிறேன்.
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் சென்ற மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு நிறைவு விழாவின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
நிழற்படங்களுக்கு நன்றி திருவொற்றியூர் திரு கிருஷ்ணன் மற்றும் திரு மஸ்தான், அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகி.
http://i1146.photobucket.com/albums/...ps1gf9uxh2.jpg
http://i1146.photobucket.com/albums/...psssrqblq4.jpg
http://i1146.photobucket.com/albums/...psvjjvh1q2.jpg
http://i1146.photobucket.com/albums/...ps724npgbl.jpg
http://i1146.photobucket.com/albums/...psafkrkgtz.jpg
http://i1146.photobucket.com/albums/...pssjy2lbx9.jpg
http://i1146.photobucket.com/albums/...psogrij51t.jpg
http://i1146.photobucket.com/albums/...pskdrxsfng.jpg
இன்று காக்கா முட்டை என்ற அற்புதமான படம் பார்த்தேன் .அதில் வரும் ஒரு குடிகார பாத்திரம் நடிகர் திலகத்தின் மராட்டிய சிவாஜி ஓரங்க நாடகத்தின் வசனத்தை சொல்லிக் கொண்டிருக்கும் காட்சி வரும் .. இயக்குநர் மணிகண்டன் நிச்சயம் நடிகர் திலகத்தின் ரசிகராக இருக்க வேண்டும்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...24&oe=56327853
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...430c7844a57df5
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...ed809a705e7ba2
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...65&oe=55EB4728
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...23&oe=5633FA01
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...d434b063911816
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...03&oe=56315EB2
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...3f&oe=55FA1445
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...0d&oe=5634ECCC
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...62&oe=55EC0A2A
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Shaukeen ஹிந்திப் படத்தின் தமிழாக்கமாகத் தயாரிக்கப்பட்ட வயசு அப்படி ஸ்டில் மிகவும் அபூர்வமானது. சுந்தரராஜன் சார், தங்களுக்கு மிக்க நன்றி. அநேகமாக யாருமே பார்த்திராத ஸ்டில். இந்தப் படம் முழுமை அடைந்து வெளிவந்திருந்தால், நடிகர் திலகத்தின் நகைச்சுவை இழையோடும் சோக பாத்திரமாக மற்றோர் பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும்.