http://i66.tinypic.com/r7q74m.jpg
ஒரு சமயம் சட்டக்கல்லூரி மாணவர் விடுதியின் மாணவர் மன்றம் சார்பாக கலை நிகழ்ச்சி விழா ஒன்று மாலை ஆறு மணி அளவில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுடிருந்தது.
அந்நிகழ்சியின் முக்கிய விருந்தினர் #எம்ஜியார் அவர்கள்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சட்டம் பயின்று வரும் வழக்கறிஞர் ஏ.கிருஷ்னன் உள்ளிட்ட மாணவர்கள்.
விழா நாள் மதியம் இரண்டு மணி..
கார் ஒன்று தேர் போன்று இவர்கள் விடுதியில் நிற்க...சடுதியில் இறங்குவது எம்.ஜி.ஆர்.
விடுதிக்கு வெளியே நின்ற மாணவர் குழுவோ திகைக்கிறது...
மாலை விழாவுக்கு இப்போதே வந்து விட்டாரே எம்.ஜி.ஆர். ஒரு வேளை அவரிடம் விழா நேரம் தவறாக கூறிவிட்டார்களோ?
இப்படி ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் தொழாத குறையாகவும்...
அழாத குறையாகவும்.....
விழா நாயகனை வரவேற்கிறார்கள். ர் காலில் விழாத குறையாக..
காரணம் மதிய நேரம் ஆதலால் விடுதியின் வார்டனும் இல்லை. ஒரு வழியாக அவரை ஒரு அறையில் தங்க வைக்க.
மக்கள் திலகமோ மாணவர்களிடம் சகஜமாக உரையாடத் தொடங்கி விடுகிறார்.
ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவர் தம் ஊர், பேர், படிப்பு என விசாரிக்கத் தொடங்குகிறார். சிறிது நேரம் கழிந்த நிலையில் எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
''நீங்கள் எல்லாம் சாப்பிட்டாச்சா?"
இல்லை என்பதை அவர்கள் தலைகள் தயக்கமாக சொல்ல...எம்.ஜி.ஆர். உடஉடனே அருகில் இருந்த ஹோட்டலில் தனக்கும் அங்கிருந்த மாணவர் அனைவருக்கும் உணவு தன் செலவில் தருவிக்கிறார்.
இப்படியாக மாலை வரை அந்த மாணவர்களுடன் அரட்டை அடித்து பொழுதைக் கழித்த வாத்தியார் அன்று மாலை விழாவுக்கு அங்கேயே தயாராகி புறப்படுகிறார்.
விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் அதிரடியாக அந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
"அடுத்த வருடத்திலிருந்து திருவள்ளுவரைப் பற்றிய தமிழிலான பேச்சுப் போட்டி நடத்தப் பட வேண்டும் என்றும், அதற்கான சுழற் கோப்பை பரிசும் முதல் மற்றும் இரண்டாவது பரிசுக்கு ஆகும் தொகை முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்."
"மாணவர்கள் சட்டம் படியுங்கள். ஆனால் படித்து முடித்த பிறகு ஃபீஸ் வாங்க கட்சிக்காரர்களை வட்டம் போடாதீர்கள்.
நியாயம் உள்ள வழக்கை ஏற்று நடத்த திட்டம் கொள்ளுங்கள். வசதி குறைவானவர்களை மட்டம் என்று நினைக்காதீர்கள்"
இப்படி வரிசையாகப் பேசி தன் வசீகரத்தை வீசி மொத்தத்தில் அவர்களை படிப்பில் தரமாக வாசி என்று தன் உரையை முடிக்கிறார்.
எம்ஜிஆர் கூடவே வந்த அவரது உதவியாளர்திருப்பதி சாமிக்கோ மாலையில் நடக்கும் கூட்டத்துக்கு மதியமே ஏன் வந்தார் எம்.ஜி.ஆர் என்ற நியாயமான ஐயம் எழ அதைக் கேட்டும் விடுகிறார்.
சதா என்னைச் சுற்றி என்னிடம் நன்மை அடைய நினைக்கும் கூட்டத்திலிருந்து சாதா நிலையில் இருக்கும் இந்த மாணவர்களுடன் பொழுதைக் கழிக்க விரும்பினேன்.
நான் இந்த பருவத்தைக் காணாமலேயே கழித்து விட்டேன். அதை இன்று இவர்களுடன் கழித்ததன் மூலம் என் ஆசையை தீர்த்துக் கொண்டேன். அவருடைய விளக்கத்தால்
திருப்பதி சாமி ஆகிறார் திருப்தி சாமியாக....
ஏன்? நாமும் தானே?
நன்றி ; வெங்கட்ராமன் தியாகு முகநூல்