http://oi65.tinypic.com/vidjo.jpg
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...2f&oe=5C0DD77A
Anbu
அன்பு 1953
உடையலங்கார கலைஞராக பணிபுரிந்து வந்த நடேசன் அவர்கள் சொந்தமாக படமெடுக்கும் முயற்சியில் இறங்கி துவக்கிய கம்பெனி நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ். இந்த நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கி 1953ல் வெளியான படம் தான் அன்பு. தமிழ்நாடெங்கும் ஜூலை 24, 1953 அன்று வெளியாகி வெற்றி நடை போடும் சமயத்தில் சென்னையில் மட்டும் இரண்டு வாரங்கள் தள்ளி ஆகஸ்ட் 7 அன்று வெளியானது.
நடேசனின் கதைக்கு விந்தன் வசனம் எழுத, ஜி.ஆர். நாதன் ஒளிப்பதிவு செய்து, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி பத்மினி, லலிதா, டி.ஆர்.ராஜகுமாரி, ருஷ்யேந்திரமணி, டி.எஸ்.பாலையா, துரைசாமி, பத்மா, கே.ஏ.தங்கவேலு, ஃப்ரெண்ட் ராமசாமி, மற்றும் பலர் நடித்த படம். பாடல்களை கவி கா.மு.ஷெரீஃப், பாபநாசம் சிவன், சுரதா, தண்டபாணி,. நாஞ்சில் ராஜப்பா, கம்பதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர். நடன அமைப்பை பி.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் ஹீராலால் மேற்கொண்டனர். படத்தொகுப்பு எஸ்.ஏ.முருகேசன், திரைக்கதை விந்தன், கலை எஃப். நாகூர். யாரடி நீ மோகினி பாடலால் பின்னாளில் பெரிதும் அறியப்பட்ட ரீடா அவர்கள் இப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகம் இப்படத்தின் சிறப்பம்சம். நடிகர் திலகத்தின் ஸ்டைலான நடிப்பில் இன்றும் காலங்களைக் கடந்து பசுமையாக விளங்குகிறது ஒத்தெல்லோ நாடகம். டெஸ்டிமோனாவாக நாட்டியப் பேரொளி பத்மினியின் அழகான தோற்றம் கண்ணைக் கவரும் ரம்மியம்.
படம் இந்த காலகட்டத்தில் சற்று விறுவிறுப்பு குறைவுதான். என்றாலும் நடிகர் திலகத்தின் ஆரம்ப கால இளமையான ஸ்டைலான தோற்றம், நடிப்பு, ஏ.எம்.ராஜாவின் குரலில் இனிமையான பாடல்கள், பத்மினி மற்றும் டி.ஆர்.ராஜகுமாரியின் நடிப்பு போன்ற பல சிறப்பம்சங்களுக்காக இப்படத்தைப் பார்க்க வேண்டும். சிவாஜி ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் அன்பு.