http://i64.tinypic.com/2w3ox2b.jpg
http://i68.tinypic.com/do5lk0.jpg
Printable View
MAKKAL KURAL -25/9/18
http://i66.tinypic.com/34y91ys.jpg
மக்கள் திலகம் முதன்முயற்சியாக சொந்தப் படம் எடுக்கும் ஆசையில் தொடங்கப்பட்ட படம் தான் நாடோடி மன்னன்.ஏன் சொந்தப்படம் எடுக்க வேண்டும் எத்தனையோ படங்கள் அவருக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில்?.ஒழுங்காக அவைகளை முடித்துக்கொடுத்தாலே பணம் கொட்டாதா?.அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே?.கடுமையாக உழைத்துச் சேர்த்த அத்தனை பணத்தையும் முதலீடு செய்து அடுத்தவரிடம் கையேந்தி ஏன் இப்படி அல்லல் படவேண்டும்.அவரது நலம் விரும்பிகள் மட்டுமல்ல அவரது எதிரிகள் கூட இதைத் தான் கேட்டார்கள்.
மேகலாவில் பங்குதாரராக இருந்து நாம் என்ற படத்தை எடுத்து வெளியிட்ட பிறகு தான் தனியாக ஒரு பட நிறுவனம் நமக்காக வேண்டும் என நச்சரித்தது அண்ணன் சக்கரபாணி தான்.அண்ணனும் தம்பியும் இணைந்து எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் உருவானது.
முதன்முதலில் கலைஞர் வசனத்தில் விடிவெள்ளி என்ற தலைப்பில் ஒரு கதையும் உருவாக்கப்பட்டது.அந்த நேரத்தில் தான் கல்லக்குடி போராட்டம் துவங்கியது.கலைஞர் சிறை சென்றார்.ஆரம்பமே தடையில் முடிய எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் அப்படியே நின்று எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் ஜரூராக ஆரம்பிக்கப்பட்டது.மக்கள் திலகத்தின் கவனம் நாடக மன்றத்தின் மேல் திரும்பியது.
நல்ல கதைக்காக காத்திருந்ததை விட ஒரு பிரமாண்ட படத்தைத் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் பொருளாதாரத் தேவைக்காக காத்துக்கொண்டிருந்தது தான் சொந்தப் படம் தாமதமாகக் காரணம்.படம் தொடங்கியது முதல் அவருக்கு சோதனை தான்.
இப்போது தான் கொஞ்சம் புகழ் வரத் தொடங்கியிருக்கிறது.அதற்குள் சொந்தப் படமா?.இதுல டைரக்ஷன் வேறையா?.என்ற கேலியும் கிண்டலும் பல இடத்திலிருந்து வந்தது.லாட்டரி அடிக்கப்போகிறான்.பார்க்கத்தானே போகிறோம்.நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை மக்கள் திலகம் உணர்ந்துகொள்ள இந்தப் படம் அவருக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது.
எதைஎதையோ எடுக்கிறான்.திரும்பத் திரும்ப எடுக்கிறான்.மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.சீர்திருத்தாம் சீர்திருத்தம்.அங்கே போயிட்டு வரட்டும்(தணிக்கைக் குழு) அப்புறம் தெரியும்.அரசியலில் நுழைந்துவிட்டால் அவதூறுகளுக்குப் பஞ்சமிருக்காது.ஆனால் ஒரு படம் எடுப்பதற்கு இப்படி எதிர்ப்புகளா?.அவரது காதுபடவே பேசினார்கள்.அப்போது நான் இயேசுவின் வார்த்தைகளைத் தான் நினைத்துக்கொள்வேன் என்கிறார்.தான் செய்வது என்னவென்று தெரியாத அப்பாவிகள்.பேசிக்கொள்ளட்டும்.நானும் சிரித்தேன்.அவர்களும் சிரித்துக்கொண்டார்கள் என்கிறார்.
பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ அல்லது அப்பாவி என்று சிரித்தார்களோ தெரியாது படம் வெளியாகி பத்திரிகைகள் ஓஹோவென புகழ சிரித்த அனைவரும் அழுதார்கள் என்பது மட்டும் உண்மை.ஒரு துண்டு கூட வெட்டப்படாமல் எப்படி மொத்தப் படத்தையும் வெளியிட்டான் என்ற ஆச்சர்யம் ஒருபுறம் படம் பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடுவதும் மக்கள் பேராதரவு தருவதும் அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.
உண்மைக்கும் உழைப்பிற்கும் நியாயத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த வெற்றி.இந்த வெற்றி தனிப்பட்ட எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வெற்றியல்ல.கலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.லட்சக்கணக்காக செலவளித்து படம் எடுப்பது அந்த முதலாளிக்கு எவ்வளவு ரிஸ்க் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தப் படத்திற்காக தனது மொத்த வாழ்க்கையை அடமானம் வைத்து எடுத்த இந்தப் படம் ஒரு வேளை தோல்வியைத் தழுவியிருந்தால் எம்.ஜி.ஆர்.என்ற பெயரையே துடைத்தெறியக் காத்துக்கொண்டிருந்த எதிரிகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு.அப்படி எதுவும் நடக்காமல் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் பெற்ற பல விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் லாபம் அடைத்திருக்கலாம்.அதை விட அந்த நாடோடியின் ஆசை நிறைவேறியதே அது தான் முக்கியம்.மக்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் படம் வெற்றிபெற்றிருக்காது.மக்களின் பூரண ஆசி அவருக்கு இருந்த காரணத்தால் நினைத்தது நடந்தது.இது அவருக்கான வெற்றியல்ல.மக்களுக்கான வெற்றி.மக்களுக்காக வாழ்ந்த அந்த மகா கலைஞனின் திரை வாழ்க்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி... Thanks Friends...
கலைவானில் என்றும் நிலைத்து நின்று ஒளி தரும் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளி விளக்கு இத்திரைப்பட
த்திற்கு பொன்விழா. 1968ஆம் ஆண்டில் புரட்சித்தலைவரின் 8 காவியங்கள் வெளிவந்தது. அவ்வாண்டில் தலைவரின் திரைப்படங்கள் பல சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்துள்ளது.1. சென்னையில் ரகசியபோலிஸ் 115. ஒளி விளக்கு இரண்டு படங்களும் தலா ஐந்து அரங்கில் வெளி வந்து சாதனை. 2. ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு மூன்று படங்களும் சென்னையில் 3 மாதத்தில் மட்டும் பெற்ற வசூல் கிட்டத்தட்ட. அன்றைய நிலவரப்படி 30.லட்சத்தை பெற்று தந்தது.தமிழ் திரையில் தலைவரே இந்த சாதனையை முதலில் படைத்துள்ளார். 3.முன்று வண்ணப்படங்களும் 11 அரங்கில் 50 நாட்களை கடந்துள்ளது.4.1968ல் குடியிருந்த கோயில் படமே நகரில் இரண்டு அரங்கில் 100.காட்சிகள் அரங்கு நிறைந்துள்ளது. 5. நகரில் குடியிருந்த கோயில் திரைப்படம் வெவ்வேறான அரங்கில் சாதனை (.குளோப் கிருஷ்ணா புவனேஸ்வரி) 100 நாள் ஒடி வண்ணப்படத்தில் சாதனையாகும்.6. 1968 ல் அதிக அரங்கில்100 நாள் ஒடிய திரைப்படம் குடியிருந்த கோயில் ( 8 ஊரில் பத்து தியேட்டரில் 100.நாள்) 7. தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மதுரையில் முதலில் 100 காட்சி அரங்கு நிறைந்து அதிக நாள் (147 நாள்) ஒடியது.அடுத்து குடியிருந்த கோயில் 133 நாள் ஓடியது.நகரில் ரகசியபோலிஸ் 115 கண்ணன் என் காதலன் இரண்டு படங்களும் 92 நாளை கடந்தது. 8 படங்களும் 50 நாட்களை கடந்து ஓடியது. 8. திருச்சி நகரில் முதன் முதலில் தலைவரின் மூன்று வண்ணப்படங்களும் 100 நாள் ஓடி சாதனை.9. சேலத்தில் 100நாள் ஓடிய ஓரே வண்ணப்படம் ரகசிய போலிஸ் 115. மட்டுமே.10.1968 ல் அதிக அரங்கில் 50.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு குடியிருந்த கோயில். ஆகும். 11. வெளிநாடான இலங்கையில் இரண்டு அரங்கில் 150.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு மட்டுமே. 12. தமிழகத்தில் ABC. மூன்று சென்டர்களிலும் அதிக நாள் அதிக வசூல் அதிக தியேட்டர் சாதனை மக்கள்திலகத்திற்கு மட்டுமே! இன்னும் பல சாதனைகள் உள்ளது. நன்றி! உரிமைக்குரல் ஆசிரியர்... Thanks Friends...
என்றும் கலையுலகை வாழ வைக்கும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும், தயாரித்து இயக்கிய திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் குடும்பத்திற்கு பணத்தை, லாபத்தை அள்ளி கொடுத்த, கொடுக்கும் "தேடி வந்த மாப்பிள்ளை" நாளை முதல் தினசரி 4 காட்சிகளில் மதுரை- சென்ட்ரல் அரங்கில் காட்சி தர வருகிறார்...
எங்க வீட்டு பிள்ளை!
-------------------------------------
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்!
பொது நிதியிலே
புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் !
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மாணிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்த வில்லை மனம் வருந்த வில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!
கவிஞர் வாலி!
மக்கள் திலகம் இந்த பாடல் காட்சியில் நடிக்கவில்லை இது அவருடைய உணர்வு
மக்கள் மீது பாசம்
திமுக மீது பற்று
அண்ணா மீது பக்தி
இதன் வெளிப்பாடுதான் இந்த பாடல்!
இக் காட்சியில் பம்பரம் போல் சுழல்வார் கட்டுக்குள் இருக்க மாட்டார் இது அவருடைய உண்மையான உணர்வின் வெளிப்பாடு!
இனிமை கம்பீரக்குரல் திகட்டாத பாடல்!
Thanks Friends...
மக்கள் திலகம்
எம் ஜி ஆர் அவர்களின் அமானுஷ்ய சக்தி!
----------------------------------
கட்சி ஆரம்பித்த நேரம் இடம் தங்கசாலை அருகில் உள்ள ஆணைக்கார கோணான் தெரு நான்கு முனைத் தெரு !
மக்கள் திலகத்தின் கூட்டம் மிக எளிமையான மேடை காணும் இடமெல்லாம் கடலாய் தலைகள் அக் கூட்டத்தில் அடியெனும் இருந்தேன் மக்கள் இன்னல்களை கவலை தோண்றிய முகத்துடன் பேசினார் முடிக்கும் தருவாயில் மக்கள் அனைவரும் உலகம் சுற்றும் வாலிபன் எப்பொழது வரும் என கோரஸாக குரல்! உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் வரும் ( உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எடிட்டிங் வேலை களை எங்கெல்லாம் மறைந்து மறைத்து செய்தார் அந்த படத்தை கொளுத்த அரசாங்கமே கடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது அந்த படத்தை எடிட் செய்ததற்கே மக்கள் திலகத்திற்கு மிகப் பெரிய சாதனையாளர் பட்டியலில் சேர்க்கலாம் )
காட்டாற்று வெள்ளம் போல் கூட்டம் மக்கள் திலகம் மைக்கை பிடித்து ஆண்கள் எல்லோரும் அப்படியே அமருங்கள் பெண்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்றார் ஒரு ஆடவரும் அசையவில்லை கட்டுண்டு இருந்தனர் பெண்கள் வெளியேறுவதை இடுப்பில் கையை வைத்தவாறு நான்கு பக்கமும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தார் பெண்கள் அனைவரும் கடந்த பிறகு ஆண்களையலாம் என்றார் இது நிச்சயம் ஒரு உலக அதிசயம் அத்தனை கூட்டமும் அவர் கூறியதன் பொருட்டு சிறிதும் சல சலப்பின்றி கலைந்தது இன்று நினைத்தாலும் என் மேனி சிலிர்க்கிறது!
இதை மக்கள் திலகத்தின் ஆமாணுஷ்ய சக்தி என்பதை தவிர வேறென்ன சொல்வது!
குறிப்பு: நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என் பதிவில் பொய்யிருக்காது பொய்யான பதிவு மிக மிக கேவலமானது என்று கருதுபவன் நான் நன்றி!
ஹயாத்! ... Thanks Friends...
இன்று முதல் (28/9/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர்/ நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/zurs5t.jpg
தகவல் உதவி மதுரை பக்தர் திரு. எஸ். குமார் .
இன்று முதல் (28/9/18) கோவை ராயல் திரையில் புரட்சி தலைவர் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " மீண்டும் வெற்றி விஜயம் .
http://i65.tinypic.com/2v9vkwn.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி. ராஜா .
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 31 வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i66.tinypic.com/1ph5py.jpg
தகவல் உதவி : பெங்களூரு பக்தர் திரு. கா. நா. பழனி .