பெங்களுருவில் இருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பதக்கம் அணிவித்து மரியாதை செய்தல்
http://i67.tinypic.com/29vo1z7.jpg
Printable View
பெங்களுருவில் இருந்து வந்திருந்த சிறுவர்களுக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பதக்கம் அணிவித்து மரியாதை செய்தல்
http://i67.tinypic.com/29vo1z7.jpg
மதுரை பேராசிரியை திருமதி ராஜேஸ்வரி பேசும்போது
http://i68.tinypic.com/ok2368.jpg
திருவாளர்கள் ;பாண்டியராஜ் .லோகநாதன், எம்.ஏ.முத்து, பல்லடம் ரங்கசாமி (எம்.ஜி.ஆர். தோற்றத்தில் )
http://i63.tinypic.com/2ujt9qd.jpg
திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.
பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!
ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.
#எம்ஜிஆர்சொன்னதைசெய்தார்; #சொல்லாததையும்செய்தார்..
#இவற்றைவிடமுக்கியமாக...
#செய்ததைசொல்லமாட்டார்!!!.............. Thanks wa.,
கோவை பி.எஸ்.என்.எல்.ஊழியர் (எம்.ஜி.ஆர். பக்தர் ) கல்தூண் ராமச்சந்திரன்
விழாவில் பேசியபோது
http://i67.tinypic.com/ngvhu8.jpg
http://i64.tinypic.com/25jwkra.jpg
ஸ்டண்ட் நடிகர் திரு.ஷாகுல் ஹமீர் (உழைக்கும் கரங்கள் படத்தில் மான்கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்காக சில காட்சிகளில் டூப்பாக நடித்தவர் )
பேசும்போது
http://i68.tinypic.com/2ywbbc5.jpg
http://i66.tinypic.com/2cnbkmw.jpg
http://i66.tinypic.com/5nkpef.jpg
http://i63.tinypic.com/2u3y7ev.jpg
அன்று வந்ததும் அதே நிலா பாடலுக்கு நடன குழுவினர் ஆடிய காட்சி .
திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.துரை கருணா , திரு.லோகநாதன்
http://i63.tinypic.com/xf874o.jpg
திரு.எம்.ஏ.முத்து, திருமதி பானு வேதா, திரு.பாண்டியராஜ்
http://i68.tinypic.com/6z58wj.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் விழாவில் கலந்து கொண்ட பல்லடம் ரங்கசாமி, கோவை தியாகராஜன் ஆகியோருக்கு திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i66.tinypic.com/2l9h508.jpg
http://i64.tinypic.com/2v9t8py.jpg
கோவை மாவட்ட .எம்.ஜி.ஆர். பக்தர்கள் நாமக்கல் எம்.ஜி.ஆருக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2u6hchf.jpg
நான் உங்கள் வீட்டு பிள்ளை பாடலுக்கு நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம்
http://i65.tinypic.com/211njgh.jpg
எங்கே போய்விடும் காலம் பாடலுக்கு நாமக்கல் எம்.ஜி.ஆர். நடனம்
http://i68.tinypic.com/2uo6sn9.jpg
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திரு.பாண்டியராஜ், திரு.சேகர்
http://i68.tinypic.com/2j0y0ki.jpg
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திரு.லோகநாதன்
http://i68.tinypic.com/nohswi.jpg
மூன்று எம்.ஜி.ஆர். வீரர்கள் -நாமக்கல் எம்.ஜி.ஆர். கோவை தியாகராஜன், பல்லடம் ரங்கசாமி
http://i67.tinypic.com/rk99g2.jpg
நாமக்கல் எம்.ஜி.ஆருடன் திருவாளர்கள்;பாண்டியராஜ், வெங்கடேச பெருமாள், லோகநாதன் .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை சார்பில்
பொன்னாடை அணிவித்து மரியாதை
http://i63.tinypic.com/qq4to9.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை சார்பில் திரு.கணபதிதாஸ் (கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் -விழா ஆலோசகர் ) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை
http://i63.tinypic.com/dywsxs.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் (விழா குழுவினருடன் ) திரு.வெங்கடேச பெருமாள், திரு.லோகநாதன், திரு.கணேசன் ,சென்னை.
http://i68.tinypic.com/191sue.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் (விழா குழுவினருடன் ) திரு.பாண்டியராஜ்,, திரு.கணேசன் , சென்னை, திரு.தமிழ் நேசன், மதுரை .
http://i64.tinypic.com/24qq2jo.jpg
12/4/19 வெள்ளி முதல் திண்டுக்கல் என்.வி.ஜி.பி.யில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகளில் பிரகாசிக்கிறது .
http://i65.tinypic.com/11lrfwk.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் .
மதுரை டவுன் ஹால் ரோடு, காலேஜ் ஹவுசில், திருவள்ளுவர் அரங்கில் நேற்று
(14/4/19) தமிழ் புத்தாண்டு தினத்தன்று , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பெயரில் "நல்ல நேரம் " மாத இதழ் வெளியிடப்பட்டது .
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/6zlnyu.jpg
கர்ம வீரருக்கு பெரியார் அரணாக இருந்து வழிகாட்டினார். நேரு மத்தியில் இருந்து திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தினார். எதிரியாக இருந்தவர் அரசியலில் அறநெறி போற்றிய அருந்தமிழ்மகன் அறிஞர் பெருமகன் அண்ணா. ஏறத்தாழ கர்மவீரருக்கு நிகரான தூய்மை காத்த உத்தமர். குறுக்கு வழியில் முதுகில் குத்தும் காலை வாரும் எதிர்ப்பு அரசியல் அண்ணா அவர்களிடம் இல்லை. போதாக்குறைக்கு தேசத்தலைவராக இருந்து பிரதமர்களைத் தேர்வு செய்யும் பெரும்பதவி. அதனால் அனைத்து வளங்களும் கண்ணசைவில் கிடைக்கும். தமிழகத் திட்டங்களுக்குக் கேட்டுப் பெறுகின்ற இடத்தில் இல்லை. எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தார். இந்திரா போன்றோர் வளர்ச்சி பெறாமல் அரசியல் அரிச்சுவடு கற்றுக்கொண்டு அடங்கி இருந்த காலம். மாநிலத்தில் மத்தியில் ஒரே கட்சி ஆட்சி. எதிர்ப்புகள் இல்லை. மூறிஞர் ராஜாஜி கூட அப்போது பெரியஅளவில் எதிரி இல்லை. அண்ணா அவர்கள் கட்சியை சிறுகச் சிறுக வளர்த்து வந்த நிலை. பெரும்பாலும் காங்கிரசின் தூய்மையான விடுதலைப் போராளிகளே பதவியில் இருந்த நிலை. எதிராக இத்தனை கட்சிகள் கிடையாது. இன்னபிற காரணங்களால் நல்லாட்சி தந்தார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியதிலிருந்து நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடும் நிலை. திரைப்படங்களைக் கூட சுதந்திரமாக வெளியிட இயலாத நெருக்கடியில் கலைஞர் ஆட்சியிலிருந்த காலம். சினிமா விளம்பரம் கூட செய்ய இயலாத நிலையில் சோதனைகளில் வளர்த்தவர். எம்.பி. தேர்தலில் ஒரு தோல்விக்கே ஆட்சிக் கலைப்பு. அரிசியைக்கூட உண்ணாவிரதமிருந்து வாங்கும் நிலை. மத்தியில் இந்திரா அவர்கள் மாநிலத்தில் கலைஞர் எதிர்ப்பு. கொண்டு வரும் திட்டங்களை சீராக செயல்படுத்த மத்திய உதவி கிடைக்குமா என்ன? பல நூறு போராட்டங்கள் வேறு. நிதியில்லா நிலையிலும் ஏழை எளியோர்க்கு நலிவில்லா ஆட்சி. காமராஜ் அண்ணாச்சி காளைமாடு என்னாச்சு? பாழாய்ப்போன காங்கிரசே பருப்பு விலை என்னாச்சு? விழுந்து போன காங்கிரசே உளுந்து விலை என்னாச்சு? என்று பட்டினிச் சாவின் விளிம்பில் வயிறு காய்ந்து கொதித்த மக்கள். அப்படியொரு நிலை எம்ஜிஆர் ஆட்சியில் அத்தியாவசியப் பண்டங்கள் விலை உயர்வால் கேட்கப்பட்டதா? உணவுப்பஞ்சம் காங்கிரசு ஆட்சியில் இருந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததா? அரிசி போன்ற அவசியப் பொருள் இன்று இலவசம் எனில் கர்மவீரர் காரணமில்லை. எம்ஜிஆர் காரணம். அணைகள் கட்டினார். பள்ளிகள் கட்டினார். தொலை நோக்குத்திட்டங்கள் தந்தார். இல்லையெனச் சொல்லவில்லை. மத்திய அரசு ஆதரவில்லாமலா? எம்ஜிஆருக்கு இருந்த நெருக்கடிகள் அவருக்கு இருந்தனவா? ஏழைகளுக்கு பொற்காலம் என்பதால் 32 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்தும் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்வது எம்ஜிஆர். அரசியல் பிழைப்பிற்கு பதவிக்கு கர்மவீரரைச் சொல்லுங்கள். அடிமட்ட மக்கள் பசியின்றி பிழைத்ததற்கு எம்ஜிஆரைச் சொல்லுங்கள்.............. Thanks wa.,. .
புரட்சித் தலைவரின் மாறுபட்ட உடையலங்காரத்தில்
இடம் பெற்று
சாதனை வெற்றி பெற்ற
வேட்டைக்காரன் படத்தில்
இடம் பெற்ற
ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட
நிஜ பதிவு
உங்கள் பார்வைக்கு
நண்பர்களே
தமிழகத் திரையுலகில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் மறைந்திருக்கிறார்கள்.இவர்களுள் கொஞ்சம் வித்தியாசமானவர் மறைந்த தேவர் அவர்கள்.சாதாரண எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்.எளிய மக்களோடு பழகியவர்.எதார்த்தமான மனிதர்.கடுமையான உழைப்பாளி.வாழ்க்கை வெறுத்து தற்கொலைகாகுக் கூட முயன்றவர்.மருதமலை முருகன் மீது மாறாத பக்தி கொண்டவர்.மக்கள் திலகம் கூடவே தனது திரைப் பயணத்தைத் தொடங்கியவர்.அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பதில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர்.
அவரது பட பூஜையே வித்தியாசகமாக இருக்கும்.ஒவ்வொரு தடவையும் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதை மருதமலையானுக்கு முதலில் தெரியப்படுத்துவார்.அடுத்து வாஹினி நாகிரெட்டிக்கு.ஃப்ளோரை புக் பண்ண வேண்டுமே.மூன்றாவதாக மக்கள் திலகத்திற்கு.ஒரு அமாவாசை தினமாகப் பார்த்து பட பூஜைக்கான தேதியைக் குறிப்பார்.அதற்கு முன்பாக கோயில்களுக்கு ஒரு ரவுண்டு வருவார்.நேராக பழனி.தண்டாயுதபாணியகன் பாதங்களில் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் இருக்கும்.அவரைக் கொஞ்சம் குளிர்விக்க அபிஷேகமும் ஆராதனைகளும்.படம் நல்லா ஓடுனா உன்னோட பங்கு கரெக்டா வந்து சேரும்.உனக்கு ஏகப்பட்ட திருப்பணிகள் செய்ய வேண்டியிருக்கு கொஞ்சம் பார்த்துப் பண்ணப்பா..அப்படியே மலையிறங்கி இன்னொரு மலை ஏற வேண்டும்.
மருதமலை அடிவாரத்தில் ஐயாவின் கார் வந்தால் அங்குள்ள பூசாரி குஷியாவார்.அதே ஆராதனைகள் வேண்டுதல்கள்.நேராக சென்னை வடபழனி.கூடவே ஆரூர்தாஸ் இருப்பார்.கை விரல் மோதிரம் கழற்றப்பட்டு அபிஷேகத் தட்டில் போடப்படும்.ஆரூர்தாஸ் மோதிரமும் சேர்த்துத் தான்.சந்தனக் குழம்பில் குளித்து வரும் மோதிரங்களை பய பக்தியோடு அணிந்து கந்தன் காலடியில் கிடக்கும் கதை வசனங்கள் இவர் கைக்கு வர கண்ணில் ஒற்றியபடியே வாங்கி ஆரூரார் கையில் கொடுப்பார்.
நேராக அது வாஹினியின் ஆறாவது ஃப்ளோரில் இருக்கும் திருமுகம் கைகளுக்கு வரும்.பூஜைக்கு படக் குழு ரெடியாகும்.மருதமலை ஆண்டவனின் மிகப் பெரிய படம் நடுநாயகமாக இருக்க மடித்துக் கட்டிய வேட்டி வெற்று மார்பில் சந்தனப் பூச்சு நெற்றி நிறைய பட்டை திருநீரு வாய் மணக்கும் தாம்பூலச் சாறு வெற்றிலை சீவல் நிறைந்த உதடுகள் வழியாக வாங்க முருகா!. வாங்க முருகா!... வருவோரை வரவேற்றுக் கொண்டே கண்கள் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்கும்.முக்கியமான ஆளுமை இன்னும் காணோமே. எம்.ஜி.ஆர்.வந்த பிறகு தான் அந்த ஆஜானுபாகு நார்மலாகும்.
இரண்டு பெரிய மாலைகள் தயாராக இருக்கும்.ஒன்று மக்கள் திலகத்திற்கு மற்றொன்று ஸ்டுடியோ முதலாளி நாகிரெட்டிக்கு.அவர் தான் கேமிரா ஸ்விட்சை ஆன் செய்வார்.ஷாட் ரெடி!.. சீன் ஃபைவ் டேக் ஒன்!..உதவியாளர் குரல் கொடுக்க கேமிரா ஓடும் விர்ர்ர் சப்தத்தையும் மீறி வெற்றி!.. வெற்றி!...நான் வெற்றி பெற்றுட்டேன். மக்கள் திலகம் அம்மாவை நோக்கியோ அல்லது காதலியை நோக்கியோ ஓடுவார்.சில நேரங்களில் நாயகி இதே டயலாக்கைச் சொல்லி எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு என நாயகனை நோக்கி ஓடுவார்.வசனக் காட்சிகள் முடிந்ததும் நேராக டூயட் தான்.அன்றும் அப்படித் தான் அந்தப் படத்திற்கும் ஆனது.ஆனால் நாயகி தான் அங்கு நடந்து கூத்துக்களைப் பயந்தே போனார்.
அதே வாஹினி.படம் வேட்டைக்காரன்.பதற்றத்தோடு தேவர்.நாயகன் எம்.ஜி.ஆரை இன்னும் காணோம்.நல்ல நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்கிறது.சாவித்திரிக்கு இந்து யூனிட் புதிது.அது வரை அவர் பார்த்த படப்பிடிப்பு வேறு.இந்த அட்மாஸ்பியர் அவருக்குப் புதிது.இதென்ன படப்பிடிப்பா இல்லை போர்க்களமா? . ஏற்கனவே ஒப்புக்கொண்ட தெலுங்குப் படத்தைக் கூட கேன்சல் செய்து விட்டு வந்திருக்கிறார்.காரணம் சுளையாக ஒன்றரை லட்சத்தைகட்டுக் கட்டாக வெற்றிலை பழத்தோடு வைத்து தந்திருக்கிறார்.அடுத்த படமும் நீங்க தான் செய்யணும் என்ற கோரிக்கை வேறு.எப்படி முழுப் படத்தையும் முடிக்கப் போகிறோம் என்ற கவலையோடு அறையை விட்டு கொஞ்சம் ஆசுவாசமாக வெளியே வந்தார்.எதிரே ஆரூர்தாஸ்.
என்ன அண்ணி வெளியே வந்துட்டே என்றார் ஆரூரார்.சாவித்திரியை அவர் அப்படித் தான் அழைப்பார்.எப்படி இங்க சமாளிக்கிறீங்க?. சந்தைக் கடை மாதிரி இருக்கு.ஒரு பக்கம் ரெண்டு சிறுத்தை வேறு உறுமிக்கிட்டு இருக்கு.அதையும் மீறி இவரு காட்டுக் கத்தல் கத்தறாரு.இப்படி சத்தம் போட்டாத் தான் வேலை நடக்கும்ணு நெனைக்கிறாரா?. இப்போது தேவர் கத்துவது வெளியே கேட்டது.எவன் அப்பன் வீட்டுப் பணம்ணு நெனச்சீங்க ஆச்சா போச்சாவென ஒரே சவுண்ட்.ஓ இதுவா .இது இங்க வழக்கம் தான்.அது ஒண்ணும் இல்லண்ணி சின்னவரு வர லேட்டாகுதா அதை அடுத்தவங்க மேலே காட்டுறாரு.அவரு வந்தாப் பாரு சைலண்ட் ஆயிடும்.அதே போல் மக்கள் திலகம் உள்ளே நுழைகிறார்.அவரை கவனிக்காதது போலவே ஒரு பையனைப் பிடித்து மொத்துகிறார்.அட விடுங்கண்ணே!.. தப்பு எம்மேல தான்.சிலோன்ல இருந்து கொஞ்சம் ரசிகர்கள் தோட்டத்துக்கு வந்திருந்தாங்க.அவங்கள உட்கார வெச்சு சாப்பாடு கொடுத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு.
அட முருகா!... நீங்க எப்ப வேணாலும் வாங்க.இந்த புரக்க்ஷன் பையன் தொல்லை தாங்கல.நாலு பேருக்கு டீ கொடுத்திட்டு நாற்பது பேருக்கு கணக்கெழுதறான்.அவனை திட்டிக்கிட்டு இருந்தேன்.சரி சரி இப்பவே லேட்டு.தேவரைப் பற்றி எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.நம்ம பண்ணின தப்புக்கு எவனாவது சிக்குவானென்று.சில நேரங்களில் அசோகன் கூட சிக்குவார்.இருவருக்கும் இடையே ஊடல் வந்தாலும் இருவருமே சமாளித்துவிடுவார்கள்.ஆரம்ப ஊடலில் நஷ்டம் இருவருக்கும் தானே.
காலை 9.00மணி கால்ஷீட் என்றால் அரை மணி நேரம் முன்பே அனைத்தும் தயாராக இருக்கும்.அப்படித் தான் அன்று பக்காவான செட்டிங்ஸில் கேமிரா கோணங்களுக்கு ஏற்ப லைட்டிங் வைக்கப்பட்டு கேமிரா மேன் வர்மா தயாராக இருக்க கதா நாயகி தயாராக இருக்க கதா நாயகன் இன்னைக்கு என்ன சீன் ஏற்கனவே லேட் எல்லாம் ரெடியா என பரபரப்பானார்.இன்னைக்கு டூயட்ங்க அம்மா ரெடியா இருக்காங்க நீங்க ரெடியாயிட்டீங்கண்ணா ஆரம்பிச்சிடலாம்.கதா நாயகன் ரெடியாக வந்து நின்றார்.லைட்ஸ் ஆன்.செட்டே வெளிச்சக் காடாக அந்த லெஃப்ட் கொஞ்சம் ஆஃப் பண்ணப்பா.டாப் லைட் கொஞ்சம் ஃபோகஸூக்கு வா.வர்மா கட்டளைகளை இட ரெடி ஸ்டார்ட் கேமிரா ஆக்க்ஷன்.
ரெக்கார்டரில் இசையரசி மெதுவான குரலில் கதா நாயகன் கதை சொன்னான்.கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்.அம்சமான மேக்கப்பில் நாயகியாக நடிகையர் திலகம்.பக்கத்தில் பக்காவாக மக்கள் திலகம்.வித்தியாசமான உடை.தோள் முழுவதும் ஃபிரில் வைத்த கௌபாய் உடை.இருவரும் சாய்ந்து மயக்க நிலைக்குப் போக வர்மா இருவரையும் க்ளோஸப்பிற்குக் கொண்டு வர சரியான அளவில் அந்த லைட்டிங் இருவரையும் பளபளப்பாகக் காட்ட மெதுவாக எழுந்த மக்கள் திலகம் டி.எம்.எஸ்ஸின் குரலுக்கு லிப் மூவ்மெண்ட் கொடுக்க கதா நாயகி கதை சொன்னாள்.இந்தக் கதா நாயகி கதை சொன்னாள்.கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு கதா நாயகி கதை சொன்னாள்.
கவியரசின் அருமையான வரிகள்.திரையிசைத் திலகத்தின் மனம் மயக்கும் மெட்டு.எஸ்டேட் ஓனர் பாபு பக்கத்து எஸ்டேட் பொண்ணான லதாவை ஊடலுக்கு இடையே கூடலாக கூட்டிக்கொண்டு வந்து இங்கே கூடிக் குலாவிக்கொண்டிருக்கிறார்.கண் வழியே சொன்ன கதை நெஞ்சை ஊடுருவி இங்கே வஞ்சமில்லாமல் வார்த்தைகளாக வந்து விழுகிறது.மெல்ல எழுந்த பல்லவி வயலின் தப்லாக்களின் துணையோடு இடையிசையில் வீணையின் நாதம் கொண்டு மீண்டும் தப்லா வயலின் துணையாக காவிரிக் கரையை அடைகிறது.
காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் இளம்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்
கையுடன் கைகளை சேர்த்துக்கொண்டான்
என்னை கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்
வரிகளுக்கு வஞ்சகம் செய்யாமல் காவிரியைக் காட்டி அப்படியே மண்டபம் வந்து கொஞ்சம் நெருக்கமாக கையோடு கை கோர்த்து முகத்தோடு முகம் புதைத்து அப்படியே அணைக்க ஓகேயாகிறது அந்த சரணம்.
சிதாரின் சிருங்காரம் கொஞ்சம் தூக்கலாக அதே வயலின் தபலாக்களோடு இசையரசி இந்த முறை குற்றாலத்திற்கு அழைக்கிறார்.குற்றாலத்தின் ஒரு பிட் கொஞ்சும் கிளிகளின் ஒரு பிட் அப்படியே உடைகளை மாற்றிய கதா நாயகி உள்ளம் கவர் வேட்டைக்காரனை விழியால் விழுங்க நாயகன் சாய மீண்டும் ஒரு க்ளோஸப்பிற்குக் தயாராகும் வர்மா.
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழி சோலையிலே
முற்றாத கனி எனை தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்
அம்மாவின் பாடிக்கொண்டான் முடிவில் ஒரு அழகான ஆலாபனை தந்து அந்த வரிகளை அழகாக்கியிருப்பார் மாமா.கதா நாயகன் கதை சொல்லும் இடம் இப்போது மாமல்லபுரம் போகிறது.கடலலைகள் கரையைத் தாலாட்ட கற்பனைச் சிறகுகள் அகல விரிய அண்ணாந்து பார்த்தால் வெண்ணிலவு. கவியரசின் அருமையான கடைசி சரணம் அழகாக முடிகிறது.
மாமல்லபுரத்துக்கு கடலருகே
மங்கையிருந்தாள் என்னருகே
பார்த்துகொண்டிருந்தது வெண்ணிலவு நாங்கள்
படித்துக்கொண்டிருந்தோம் தேன் நிலவு.
அருமையான ஐந்து நிமிடப் பாடலுக்கு மேலே உச்சாணியில் அமர்ந்திருக்கும் லைட் பாயின் வேர்வை இந்தக் கதா நாயகன் மேனியில் வந்து விழும்.ஆனால் அவரது கவனமெல்லாம் அந்த வரிகளில் லயித்திருக்கும்.நாம் பாடல்களில் லயிக்க முதலில் அவர் லயிக்க வேண்டும்.அதற்குப் பின்னால் இருப்பது எத்தனை பேருடைய உழைப்பு.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பர்களே
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍......... Thanks wa.,
மாலை மலர் -16/4/19
http://i63.tinypic.com/6sxwdg.jpg
பாக்யா வார இதழ் -16/04/19
http://i68.tinypic.com/2ewzn2f.jpg
1972 ல் நடிகர் சி.கணேசனின் ப.பட்டணம்மா 12 திரையரங்கில் 50 ஒட்டப்பட்டு சென்னை 3 மதுரை சேலம் திருச்சி நெல்லை 100 நாள். 50 நாள் தஞ்சாவூர் ஈரோடு கோவை வேலூர் கும்பகோணம் மொத்தம்12 தியோட்டர் 1972ல் ராஜா 12 அரங்கு, ப.பட்டணம்மா 12 அரங்கு, நீதி 11.அரங்கு, வ.மாளிகை 31 அரங்கு, அதே ஆண்டில் வெளியான தலைவரின் நல்ல நேரம் திரைப்படம் முதல் வெளியீட்டில் திரையிடப்பட்ட 41 அரங்கில் 50 நாட்கள். அடுத்து வெளியீட்டில் 11 ஊர்களில் 50 நாட்கள். அதன் பின் இதய வீணை 32 அரங்கில் 50 நாள். நான் ஏன் பிறந்தேன் 25 அரங்கில் 50 நாட்கள். ராமன் தேடிய சீதை 22 அரங்கில் 50 நாள் சங்கே முழங்கு அன்னமிட்டகை திரைப்படங்கள் மற்ற நடிகர்களின் படங்களை குறைந்த நாள் ஒடி அதிக வசூலை பெற்று வென்றது.(ஆதாரம் பல உள்ளது ) முறையாக வசூல் மூலம் 1972 ல் ABC என்ற மூன்று சென்டர்களிலும் முதன்மை பெற்ற ஒரே நடிகபேரரசர் மக்கள் திலகமே! 1972 ல் மக்கள் திலகம் பவனி வந்த ஆறு திரைப்படங்களும் அன்று முதல் இன்று வரை வெளிவருவதே சாதனையாகும். ஆனால் நடிகர் சி.கணேசன் நடித்த ஏழு படங்களில் வ.மாளிகை மட்டும் இடை இடையே வந்தது. ப.பட்டணம்மா படம் சென்னையில் கடந்த 32 வருடங்களாக திரையிடப்படவில்லை. மற்ற படங்கள் பற்றி அறியவேண்டாம். நன்றி உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,
தமிழக அரசியல் வார இதழ் -20/04/19
http://i65.tinypic.com/dgjbwn.jpg
http://i63.tinypic.com/o6brti.jpg
http://i65.tinypic.com/2yltwdj.jpg
http://i68.tinypic.com/rhpl69.jpg
மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலில் உள்ள
புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/2upehhh.jpg