-
இலங்கை கொழும்பு கெப்பிட்டல் 105 நாள் ஓடியது.
பாரத் எம்ஜிஆர் நடித்த" ராமன் தேடிய சீதை" 13-04-1972 வெளியானது.
புதுமையான கதை அருமையான பாடல்கள் 43 வகையான உடைகளில் பொன்மனச்செம்மல் super Title music இருந்தும் படம் வசூலில் பெரிய வெற்றி எம்ஜிஆர் ரசிகர்களுக்கு திருப்தி. சென்னை மிட்லண்ட் 64 நாள் கிருஷ்ணா 64 நாள் சரவணா 50 நாள் ஓடியது. மதுரை சிந்தாமணி 78 நாள் ஓடியது.......... Thanks.........
-
மாபெரும் பிரம்மாண்டமான வெற்றிப்படமான "மதுரை வீரன் ",வெளியாகி இந்த ஆண்டுடன் 64 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 65ம் ஆண்டு தொடங்குகிறது.
ஒன்றிரண்டு தியேட்டரில் படத்தை 100 நாள் ஒட்டுவதற்கே பெரும் பாடு பட்டு கொண்டிருந்த கால கட்டத்தில் கண்மண் தெரியாமல் புழுதியை கிளப்பி 33 திரையரங்கில் முதல் வெளியீட்டிலேயே 100 நாட்கள் கண்ட படம்.
அடுத்த கட்ட வெளியீட்டிலும் பெங்களூர், இலங்கை போன்ற இடங்களிலும் 100 நாட்கள் ஓடி மொத்தம் 38 திரையரங்குகளில் அதிரடி வெற்றியை பதிவு செய்த படம். மதுரையில் வெள்ளி விழாவை கொண்டாடிய படம். இதுதான் வெற்றி என்று வெற்றியின் வீரியத்தை திரையுலகுக்கு எடுத்து
காட்டிய படம். ............ Thanks.........
-
Raman thediya seethai - 1972
13.04.1972. இன்று என்னவொரு பொருத்தம்?! அதே ஏப்ரல் 13 ம் தேதி sunlife சனெலில் ஒளிபரப்பு செய்கிறார்கள்...
மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.
ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .
மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .
காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .
மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .
மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை
மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .
பாடல் காட்சிகள் - ஒரு அலசல்
முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .
என் உள்ளம் உந்தன் ஆராதனை ........
இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .
நல்லது கண்ணே ...........
1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - அசோகன்
மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .
கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .
நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த மஹா வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் ஓடியது .( ஒரு சில நடிகர் படங்கள் காசு கொடுத்தோ, சொந்த அல்லது ஒப்பந்த செய்த தியேட்டர்களில் கட்டாயப்படுத்தியோ பேருக்காக ஓட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இலங்கை - கொழும்பு - கேபிடல், லக்ஷ்மி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது . இலங்கையில் பல இடங்களில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடி திருப்தியான நல்ல வசூலை அள்ளியது......... Thanks.........
-
"தாய் சொல்லை தட்டாதே", தேவர் பிலிம்ஸில் எம்.ஜி.ஆர்., நடித்த இரண்டாவது படம். தமிழ் சினிமா உலகத்துக்கே வெளிச்சத்தை தந்த படம். குறைந்த பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜனரஞ்சகமான படம். பாடல்களில் புதுமை இசையில் இனிமை என ரசிகர்கள் துள்ளிக் குதிக்கும் அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியான தாய் சொல்லை தட்டாதே வியக்க தக்க வெற்றியை பெற்றது. அந்த காலத்தில் "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்" பாடல் இல்லாத
கல்யாண வீடே கிடையாது.
எம்ஜிஆரை தயாரிப்பாளர்கள் மொய்க்க துவங்கியது இந்த படத்திலிருந்துதான். மக்கள் குடும்ப கதையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்ததும் இந்த படத்திலிருந்துதான்.குடும்ப கதையில் கோலோச்சியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்துக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். சமூக படங்களுக்கு தலைவர் தாமதமாக வந்தாலும் விரைவில் சினிமா உலகத்துக்கே முடிசூடா மன்னனாக மாறினார். மக்கள் சக்தியை தன்னுடைய வசீகர நடிப்பாலும் சினிமா உலகின் நுணுக்கங்களை அறிந்ததாலும் எவரும் தன்னை நெருங்க முடியாத உயரத்துக்கு சென்றார். வடக்கே ராஜ்கபூர், தெற்கே தலைவர் கர்நாடகாவில் ராஜ்குமார், ஆந்திராவில் என்.டி.ஆர் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒருவர் ஆதிக்கத்தை செலுத்தினாலும் நடிப்பிலும்,மக்களை ஈர்ப்பதிலும் எம்ஜிஆர் அளவுக்கு எங்களால் முடியாது என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணம் எங்க வீட்டு பிள்ளை தான். பல மொழிகளில் தயாரித்த படத்தில் எம்ஜிஆர் அளவுக்கு சிறப்பாகவும், எனர்ஜியாகவும் நடிக்க யாராலும் முடியவில்லை. அதே போல் எங்க வீட்டு பிள்ளை தமிழில் பெற்ற வெற்றிக்கு ஈடாக எந்த மொழியிலும் பெறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால்தான் அவருக்கு நடிகப்பேரரசர் என்று பட்டம் மிகவும் பொருத்தமாக அமைந்தது..
தாய் சொல்லை தட்டாதே 7.11.1961 ல் வெளிவந்து தமிழ் நாட்டில் 7 திரையரங்குகளிலும் இலங்கையில் ஒரு தியேட்டர் என்று மொத்தம் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. தலைவர் படத்தோட வெளிவந்த மற்றுமொரு தேசபக்தி படம் வெளியான சில தினங்களிலேயே கட்டணத்தை குறைத்தும் ஓட்டமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது........... Thanks.........
-
தினமலர் -வாரமலர்*-12/04/20
-------------------------------------------------
கவிஞர் வாலி எழுதிய வாலிப வாலி நூலில் இருந்து*
சென்னை காமராஜர் அரங்கில் , ஒரு இந்து மத மாநாடு.* அதில் என் தலைமையில் கவியரங்கம், .* முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.*
மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*
புழுவை பூச்சி தின்ன*
பூச்சியை புறா தின்றது*
புறாவை பூனை* தின்றது*
பூனையை மனிதன் தின்ன*
மனிதனை மண் தின்றது*
மறுபடியும் மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*
புனரபி ஜனனம்*
புனரபி மரணம்*
என்று நான் கவிதையை படித்து முடித்தபோது , கைதட்டி ரசித்தார்* எம்.ஜி.ஆர்.*
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*சுடர்*எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
11/04/20* -* மெகா டிவி* *- காலை* 10 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தாயை காத்த தனயன்*
12/04/20* - சன் லைப்* * * - காலை 11 மணி - புதிய பூமி*
* * * * * * * * * *முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி - வேட்டைக்காரன்*
13/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி* & இரவு 7 மணி*- நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * * *புதுயுகம்* டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*
14/04/20* - சன்* லைப்* * *-* காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
15/04/20* - ஜெயா*மூவிஸ்*-காலை*7 மணி - தாயின்*மடியில்*
15/04/20 -* முரசு டிவி* * - காலை 11 மணி & இரவு 7 மணி *- *நீதிக்கு தலை வணங்கு*
-
வாழ்க வளமுடன்... அனைவருக்கும் மங்களகரமான இனிய, இன்ப "தமிழ் புத்தாண்டு", நல்வாழ்த்துக்கள்... கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மக்கள் திலகம் புகழ், மாண்பு விளங்கிட தொடர்ந்து நன்முறையில் பரப்புவோம்...
-
☘☘☘☘☘☘
*மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*
☘☘☘☘☘☘.......... Thanks.........
-
எம்.ஜி.ஆர்., என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு!
சிவாஜி அன்று அளித்த மனம் திறந்த பேட்டி
https://www.thaaii.com/?p=34538
கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்?
சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது திறமை பற்றி அவருக்கே தெரியும். யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர் அப்போதே அரசியலில் பெரிய அளவுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்.
அதனால் மக்களிடம் நன்மதிப்பு காணும் பாத்திரங்களிலேயே நடித்தார். ஆனால், நான் எனது கேரக்டர் தான் முக்கியம் என்று நினைத்தேன். எந்தப் பாத்திரமானாலும் சரி, அதை எப்படிச் செய்வது என்பதில் தான் எனது கவனம் இருந்தது.
பின்னாளில் நானும் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனாலும் காமராஜருடைய தொண்டனாக மட்டும் தானே இருந்தேன். அவருக்குப் பக்கத்திலேயே தலைவனாக வரவேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லையே!
கேள்வி : நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் ‘நல்ல’ பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?
சிவாஜி : இல்லை.. நடிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால், சம்பந்தம் உண்டு என்று மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.
அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed the bus. எனக்கு அரசியல் இரண்டாம் பட்சம் தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலை காரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால் தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
அரசியலில் இன்று வந்துவிட்டு, நாளை போய் விடுவார்கள். எத்தனை பேருக்குப் பேர் இருக்கு? ‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு’ என்று கூட, எடுத்துக் கொள்ளலாம்.
அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதற்காக, ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளுங்களேன்( சிரிக்கிறார்).
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்து கொண்டேன்.
அவர்கள் என்னை நடிகனாக மட்டும் தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சில பேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லை என்றால், அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள் ( உரக்கச் சிரிக்கிறார்).
கேள்வி : இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல இருக்கிறதே?
சிவாஜி : கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க.. நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள்.. அதுவும் இப்படித் தான் நடக்கிறது.. நடக்கப் போகிறது!
கேள்வி : எம்.ஜி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது?
சிவாஜி : நாங்கள் எதிரும், புதிருமாக இருந்ததாகத் தான் வெளியிலே தெரியும். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தோம்.
எவ்வளவு நாட்கள்.. எத்தனை பேர்களை.. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றியிருப்போம்… (சிரித்துக் கொண்டே சொல்கிறார்)
தனிப்பட்ட முறையில், எங்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றால், எதற்காகக் கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்?
எதற்காக நான் சார்டர்ட் பிளைட் வைத்துக் கொண்டு, பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன். எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு “வீட்டுக்கு வாடா.. முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்’’ என்று சொல்கிறார்?
எதற்காக மனைவியிடம் “தம்பி வருகிறான்.. அவனுக்குப் பிடித்த ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் செய்து வை’’ என்று சொல்கிறார்?
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தோம்..
நாங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்ததால் தான் இருவருமே பெரிய நிலைக்கு வர முடிந்தது. ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.
கேள்வி : எம்.ஜி.ஆர் எந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுக்க எண்ணியிருப்பார் என்று கருதுகிறீர்கள்?
சிவாஜி : எந்தப் பொறுப்பை என்னிடம் கொடுக்க நினைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது அதைச் சொல்வதில் என்ன பிரயோசனம்?
என்னுடைய நினைவுகள் என்னுடனே போகட்டும்’’
அரிதாரம் கலைத்த குரல்கள் – சுகதேவ் தொகுப்பு நூலில் – சிவாஜி கணேசனிடம் சுகதேவ் எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
பேட்டி முதலில் வெளிவந்தது 1997 தினமணி-தீபாவளி மலரில்.
நன்றி : சுகதேவ்
#MGR #MGRforever #CM #political #cinema #எம்ஜிஆர் #அரசியல் #அதிமுக #பொன்மனச்செம்மல் #சிவாஜி #மக்கள்திலகம் #SivajiGanesan #Actor #Parasakthi #Friendship #MGR_SIVAJI #Nadikar_Sangam....... Thanks...
-
பொக்கிஷம்!!
---------------------
நிறையப் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன்,,இவர்,,என் கடமையில் மட்டுமே தோன்றியவர்!
இவரது சுஜாதா கம்பெனி,,சிவாஜி,,ரஜினி கமல் போன்றோரை வைத்து நிறையப் படங்கள் எடுத்திருக்கிறது!!
சிவாஜியுடன் நிறையப் படங்கள் செய்திருக்கும் நடிகர் பாலாஜி இல்லையென்றால்--
நாகேஷ் என்ற அற்புதக் கலைஞர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்??
ஆரம்ப நாட்களில் வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த நாகேஷுக்கு,,இருக்க இடம்,,உணவு ஆகியன தந்து,,அவருக்கு நிறையப் படங்களில் சான்ஸ் வாங்கித் தந்தவர்!!
நடிகர் கம் தயாரிப்பாளர் பாலாஜியை இந்தியத் தொலைக்காட்சியினர் பேட்டி காண்கிறார்கள்!!
இரண்டு மணி நேரங்கள் நடந்த அந்தப் பேட்டி 1980களின் மத்தியில் டிவியில் ஒளி பரப்பாகிறது!!
தாம் திரையில் ஜெயித்தது,,சிவாஜி,,கண்ணதாசன் இவர்களைப் பற்றியெல்லாம் சுவை படக் கூறிக் கொண்டே வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது?
இவ்வளவு சாதித்தும் விருதுகள் பல சம்பாதித்தும் உள்ள உங்களது மனதுக்குப் பிடித்த விருது எது??
அவர் சிவாஜி,,ரஜினி,,கமல் மூவரில் யாரைக் குறிப்பிடப் போகிறார் என்று ஆவலோடு நோக்க--
இந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக பாலாஜி சொன்ன பதில்,,பேட்டி காண்பவரை மட்டுமல்லாது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவையுமே திகைப்பில் ஆழ்த்துகிறது??
எனக்குக் கிடைச்ச பெரிய விருது மட்டுமல்ல,,அதைப் பொக்கிஷம்ன்னும் சொல்லலாம் என்று கூறியபடியே நூறு ரூபாய் நோட்டு அன்றைக் காட்டியவர்,,மேலும் தொடர்கிறார்--
இது ஒரு பொங்கல் அன்னிக்கு தோட்டத்துல எம்.ஜி.ஆர் அண்ணனிடம் பரிசா வாங்கினது--
நான் அப்படி வாங்கணுன்னே அன்னிக்குப் போனேன்! என்ன இவ்வளவு லேட்டா வரியே என்று கேட்டபடியே இந்த நோட்டுல--வாழ்க வளமுடன் என்று எழுதித் தந்தார்!!
எம்.ஜி.ஆர் அண்ணனுக்குக் கைராசி உண்டுன்னு எல்லோரும் சொல்வாங்க. என் வாழ்க்கைலே அது நிஜமாச்சு!1
நான் எடுத்தப் படங்கள் எல்லாமே என்னை சினி லைன்லே தூக்கி விட்டுது!!
அதனால இந்த நோட்ட மட்டும் பொக்கிஷமா என் பர்சுலேயே வச்சிருப்பேன் என்று கூறி பாலாஜி புன்னகைக்கிறார்--
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆரின் பாதிப்பு சிறிதளவாவது பேசியிருக்கிறது என்று பிரமிப்போடு நினைக்கத் தொன்றுகிறது.
உங்களுக்கு???............ Courtesy: Mr.Venkat Thiyagu...
-
அந்தமான் கைதி!!
-------------------------------
ராமன் கிருஷ்ணன்!
கல்லிடைக் குறிச்சி!!
எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் மூத்த விழுதுகளில் ஒன்று!!
இவரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் ஒரே பதிவில் உரைக்க இயலாது!
அவ்வளவு சுவையான விபரங்களை,,மனிதர் கொண்டிருக்கிறார்!!
அவ்வப்போது இவர் பற்றிய சுவையான நிகழ்வுகள் வெளியாகும்!!
கல்லிடைக் குறிச்சியில் இவர் பெயர் சோத்து ஐயர்?
சிறு தொண்ட நாயனாருக்குப் பின் வந்த-
ஒரு தொண்டர் எம்.ஜி.ஆர் என்றால்--
எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு அவரிடமிருந்த அன்னதான சிறப்பை,,அவர் அனுமதியில்லாமலேயே பறித்துக் கொண்டவர்!!
அன்றைய தனுஷ்கோடி ஆதித்தனின் சகோதரர் ஆர்.பி.ஆத்தித்தன்,,சேரன்மாதேவித் தொகுதியில் எம்.எல்.ஏ ஆகியவரின் அத்யந்த ஆலோசகர் நம் சகோதரர் ராமன் கிருஷ்ணான்!!
திரு ஆர்.பி.ஆதித்தனை எவராது பார்க்கணுமா? இவரிடம் தான் கேட்கணும்.!
தேர்தல் செலவுக்குப் பணம் வேணுமா?
இவரிடம் தான் கேட்கணும்!!
ஆர்.பி.ஆதித்தனிடம் எவராது நங்கொடை கேட்டு வந்தால்--ஆதித்தனே இவரிடம் தான் கேட்பார்--
என்ன ஐயரே எவ்வளவு கொடுக்கலாம்??~
சென்னையில் அப்போதிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்ட்டலில் ஆதித்தன் தங்கியிருக்கும்போது-
இவர் சொந்த அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் சொந்த ஊர் சென்று விட்டு வருவதற்குள் தான்-
அந்த மோசமான சம்பவம் நடக்கிறது?
எம்.எல்.ஏவுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பணியாள்,,அவரிடமிருந்து கணிசமான பணத்தைக் களவாடி விடுகிறார்?
எம்.எல்.ஏ,,மிரட்டிக் கேட்கவும்,,அந்தப் பணியாளும் ஒப்புக் கொள்கிறார்??
இருபதாயிரம் பணம் எடுத்தேன். நாலாயிரம் சொச்சம் செலவு செய்துவிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க??
ராமன் சந்திரன் ஊரிலிருந்து வரவும்,,அவரிடம் விபரங்களை9க் கூறிய அந்த எம்.எல்,ஏ,,காவல்துறையில் இதுபற்றிப் புகார் கொடுப்பதற்காக இவரிடம் ஆலோசனை கேக்க-
ராமன் சந்திரன் அழுத்தமாக மறுத்துவிடுகிறார்--
வேணாம். அவன் தான் ஒப்புக் கொண்டுவிட்டானே. அவனிடமிருந்து மீதி பணத்தை வாங்கியாச்சு. என்று சொல்லி அந்தப் பணியாளை அழைத்துக் கடுமையாக புத்தி சொல்லி அனுப்பி விடுகிறார்!
ராமன் சந்திரன்,,அந்தப் பணியாளைப் போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டாம் என்பதற்கான காரணத்தை ஆதித்தனிடன் சொல்லியபோது அவரும் அதை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ராமன்சந்திரனை பிரமிப்போடு நோக்கவும் செய்கிறார்??
காரணம்??/
அந்தப் பணியாளின் பெயர்--
ராமச்சந்திரன்???
எம்.ஜி.ஆர் பெயரை வைத்திருந்ததாலேயே அந்தப் பணியாள் அன்று சிறை தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறார்???
எம்.ஜி.ஆர்--
ரசிகர்களின் மனக் கைதி!
ஆனால்---
சிறைக்கு அனுப்பக் கூடாத கைதி???
இப்படியெல்லாம் மிக நுணுக்கமாக எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ரசிகர்கள் போல் வேறு எவருக்கு அமைந்திருக்கிறார்கள்???
ஒவ்வொரு அமைப்பும் எம்.ஜி.ஆர் விழா நடத்தும்போது தெரிந்த வி.ஐ.பிக்களையே மேடையில்; ஏற்றி பேசச் சொல்கிறார்கள்! அவர்களும் அரைத்த மாவையே அரைக்கிறார்கள்!
இவர்களைப் போன்றவர்களை மேடையில் ஏற்றி பேசச் சொல்வதால் இன்றைய இளைய சமுதாயத்துக்கு எம்.ஜி.ஆர் பற்றிய அனேக தகவல்கள் கிடைக்கும் என்பதுடன்--
இவர்களையும் உரிய முறையில் கௌரவப் படுத்தினாலும் ஆகும் என்பது நம் கருத்து!
நியாயம் தானே நேசங்களே???......... Thanks fb.,
-
மின்னலாய் ஒரு மனிதம்!!
------------------------------------------
எம்.ஜி.ஆர் நிகழ்வைப் பார்த்து நாளாயிற்று!!
அரசவைக் கண்ணதாசனின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் இறுதிவரை பங்கு கொண்டது மட்டுமல்லாது,,தாமும் நடந்தே சென்றது நமக்குத் தெரியும்.
அந்த ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி ஒன்றையே இன்று பார்க்கப் போகிறோம்!!
திரையில்,,எம்.ஜி.ஆர்-தேவர்-கண்ணதாசன்-கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியே/
கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல்!
கண்ணதாசனுக்கு ஒரு சின்னப்ப வள்ளல்!!
அடிக்கடி எம்.ஜி.ஆருக்கும் கவிஞருக்கும் முட்டிக் கொள்ளும்!
கவிஞர் இல்லேன்னா வேற ஆளே இல்லையா? சினந்து கேட்கும் எம்.ஜியாரை நொடியில் சமாதானப்படுத்துவார் தேவர்.
நல்ல மனுஷன் தான் முருகா,,சமயத்துல ஏடாகூடமாப் பேசிடுவாரு. நீங்க தான் முருகா விட்டுக் கொடுக்கணும்??
தேவரின் நைச்சியத்தில் பாகாய் உருகி விடுவார் எம்.ஜி.ஆர்!
சரி--இந்தப் பதிவுல தேவர் எதுக்கு வரார்??
பார்க்கலாம். பதிவில் எங்கேயாவது இணைவார்?
தேவருக்கும்,,கண்ணதாசனுக்கும் உள்ள நெருக்கத்தை எம்.ஜி.ஆரும் உணர்வார்
கண்ணதாசனுக்கு தேவர் செய்த அளவு எம்.ஜி.ஆரும் செய்திருக்கிறார்!!
மகனால் தனக்கு வந்த சிறப்புக்களை எண்ணிய வண்ணம் தமிழன்னை மௌனமாய் கண்ணீர் வடிக்கிறாள்--
மகனின் மரண ஊர்வலமோ மயானத்தை நோக்கி?
கவியரசனின் கடைசி ஊர்வலத்தில் கலங்கியபடி-
புவியரசன்!!
திருமலைப் பிள்ளை சாலையில் திடீர் என ஊர்வலத்தைத் திருப்புகிறார் எம்.ஜி.ஆர்??
தீச்சட்டி ஏந்தியபடி வரும் கவிஞர்களின் வாரிசுகள் திகைக்க--
அந்த அலுவலகத்தை மௌனமாய்,,சற்று மெல்ல அந்தக் கூட்டம் நெருங்க-அது--?
தேவரின் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ்!!
சிலை வடிவில் தேவர்,,தன் தோழனைப் பார்க்க-
மடியளவு கொள்ளாது அன்று பொருள் இட்ட தேவரின் உறவுகள்,,மௌனமாகக் கவிஞரைத் தொழுது-
பிடியளவு வாயில் இடுகிறார்கள்??
ஆயிரம் தேள்கள் கொட்டிய அதிர்ச்சியில் கண்ணதாசனின் வாரிசுகள் உறைந்து போகிறார்கள்? அடே? நாம் மறந்து போனதை எம்.ஜி.ஆர் எப்படி நுணுக்கமாக நினைவில் வைத்திருக்கிறார்??
தேவர் வழியனுப்பாமல் தந்தையின் தேகம் வேகுமா??
சூட்சும வடிவில் புன்னகைத்த தேவரையும்-
அதற்கு வழி செய்த எம்.ஜி.ஆரையும் அலங்க மலங்கப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தோன்றப் போகிறது?
இந்த இடத்தில் நன்றாக கவனிக்க வேண்டும்!
தன்னை விட நெருக்கமாக தேவருடன் கவிஞர் பழகியிருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த மா மனிதர்,சட்டென்று தேவர் அலுவலகம் நோக்கி ஊர்வலத்தைத் திருப்பியது--
உப்பிட்ட தேவரை,,அவரது சிலை வடிவிலாவது-
உப்பி விட்ட கவிஞரின் பூத உடல் சந்திக்கவும்,,
கவிஞரின் வாரிசுகளுக்கும்,, கடமையைச் செய்தாற் போலவும்--
மின்னல் வேகத்தில் எத்தனை விதமான மனித நேயங்கள்???
அதுவும் செல் ஃபோன் இல்லாத அன்றைய சூழலில்?
எம்.ஜி.ஆர்--
இவன் சித்தனா???........... Thanks mr.VT.,
-
☘☘☘☘☘☘
*மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*
☘☘☘☘☘☘......... Thanks.........
-
நம் தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.
ஒருமுறை ஏ. எல்.சீனிவாசன் என்ற பிரபல தயாரிப்பாளர் ஆரூர்தாஸ் அவர்களை பெண் என்றால் பெண் என்ற படத்துக்கு இயக்குனர் ஆக்கி முன்பணம் கொடுத்துவிட..
விஷயம் அறிந்த வாத்தியார் அவரை அழைத்து நீங்க பெற்ற முன்பணத்தை திருப்பி கொடுங்கள் வசனம் எழுதுவது போதும் ஏன் இயக்குனர் வேலை என்று சொல்ல.
இல்லை அண்ணே ஒத்துக்கொண்டு பணம் வாங்கி விட்டேன் இனி எப்படி என்று தயங்க.
படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவராக சரோஜாதேவி நடிப்பதாக மாலைமுரசு நாளிதழில் சரோ அவர்கள் திருமணத்துக்கு பின் நடிக்கும் முதல் படம் என்று வர....சரோஜாதேவி அவர்களுக்கு அப்போது திருமணம் முடிந்து இருந்தது.
ஏற்கனவே பெற்றால்தான் பிள்ளையா பட இறுதியில் சரோஜாதேவி அம்மா அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் சரோஜா தேவி அவர்களுக்கு இடையில் சற்று உரசல் இருந்தது.
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் படப்பிடிப்பில் அது எதிர் ஒலித்தது.
அரச கட்டளை அடுத்து வந்தது...அதுவே வாத்தியார் சரோஜாதேவி நடித்த கடைசி படம் ஆனது.
இவை எல்லாம் நன்கு தெரிந்த ஆரூர்தாஸ் அந்த படத்தை இயக்குவது சரியல்ல என்று தலைவருக்கு தோன்றவே அப்படி சொல்ல....அவர் திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்தால் உங்கள் படம் பாதியில் நிற்காதா...
வேண்டியதை விடாதே..வேண்டாததை தொடாதே என்று ஒரு பழமொழி உண்டு...
ஆனால் இயக்குனர் மோகம் அவர் கண்ணை மறைக்க பெண் என்றால் பெண் படம் முழுவீச்சில் தயார் ஆனது.
தலைவரிடம் ஒரு நாள் தொலைபேசியில் இந்த படம் வெற்றி பெற்றவுடன் ஒரு பெரிய ரோஜாமாலையுடன் உங்களை வந்து சந்திப்பேன்...அல்லது உங்கள் முகத்தில கூட முழிக்கமாட்டேன் என்று ஆரூர்தாஸ் வருந்தி சொல்ல....இனி உங்கள் விருப்பம்... என்று தலைவர் பதில் சொல்ல..
அடுத்து தேவரின் விவசாயி படத்தில் நீங்கள் இல்லாததால் மாரா... இப்போது எழுத ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளார்.... அடுத்த படங்களும் தொடர்ந்து இருக்க......சரி இனி...என்று தலைவர் முடித்து கொள்ள.
ஏ. எல்.எஸ்.ஸ்ரீனிவாசன் பெரிய தயாரிப்பாளர் என்பதால் பெண் என்றால் பெண் படத்தை போட்டி போட்டு கொண்டு வினியாகஸ்தர்கள் வாங்க.
1967 இல் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியான பெண் என்றால் பெண் மாபெரும் தோல்வி அடைய.
மீண்டும் பலகாலம் தலைவருடன் பயணித்த ஆரூர்தாஸ் தலைவருடன் மீண்டும் சேர்ந்தாரா.
பொறுத்து இருங்கள் .
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன் .....நெல்லை மணி......தொடரும்.......... Thanks.........
-
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலே தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எம்ஜிஆர்
உலகிலே மொழிக்கு ஆராட்சி பல்கலைகழகம் நிறுவியவர் எம்ஜிஆர்
அரசாணை தமிழில் இடவேண்டும் என உத்தரவு இட்டவர் எம்ஜிஆர்
தமிழ் புலர்வர்கட்கு மானியம் வழங்கியவர் எம்ஜிஆர்
தமிழ் புலவர் திருவள்ளுவர்க்கு சிலை நிறுவ அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர்
தமிழ் சீர்திருத்த பெரியார் எழுத்தை நடைமுறை படுத்தி கணணியில் வரசெய்தவர் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ்.......... Thanks.........
-
ஈட்டிய பொருளை கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
பெற்ற அதிகாரத்தை தமிழர்களை வாழவைக்க பயன்படுத்தியவர் எம்ஜிஆர்
தன் மருத்துவ செலவையே அரசுக்கு திருப்பி கொடுத்த ஒரே இந்திய தலைவன் எம்ஜிஆர்
நினைவகம் அரசு செலவு செய்ய கூடாது என அதன் சிலவை தானே சிலவு செய்ய வழி வகுத்த ஒரே தலைவன் எம்ஜிஆர்
M an
G od.
Ramachathiran
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks.........
-
மக்கள்திலகம் அதிமுகவை தொடங்கி அவர் நம்மைவிட்டு பிரிந்தபின் இயக்கம் பல முறை பிளவுபட்டு பின் மீண்டது.
தலைவர் இருக்கும் போதே 1973 இறுதியில் 74 தொடக்கத்தில் ஒரு முறை நடந்தது...தெரியுமா..
கட்சி ஆரம்பித்தவுடன் திருமதி பி.டி.சரஸ்வதி அவர்கள் மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தார்.
சென்னையில் ஷீலா பஜாஜ் என்கிற ஒரு பெண்மணி வட இந்தியர். கட்சியில் சேர விரும்பி பி.டி.சரஸ்வதி மூலம் வேண்டுகோள் விடுக்க.
படித்த பெண் ஆக இருக்கிறாரே என்று தலைவரும் கட்சியில் சேர்த்துக்கொண்டு சென்னை மாவட்ட அளவில் மகளிர் அணியில் ஒரு பொறுப்பு கொடுத்தார்.
அவர் மிகவும் ஒரு நடிகையை போல அழகான தோற்றம் கொண்டவர்...அவர் பெயரை டாக்டர் பொற்செல்வி என்று மாற்றி சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் பொது கூட்டங்களில் பேசி வந்தார்.
அவரின் வசீகர தோற்றத்தை கண்டு சில வக்கீல்களும், சில தொண்டர்களும் அவர் பின்னால் நின்றனர்.
ஒரு கட்டத்தில் மாநிலம் முழுவதும் கூட்டம் பேசுகிறேன் என்று சொல்லி தலைவரும் அனுமதிக்க.
செல்லும் நகரங்கள், ஊர்களில் கட்சி நிர்வாகிகள், மன்றம் கண்ட தோழர்களை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தார்.
விளைவு...தலைவருக்கு தெரிந்து உடனே கட்சி பொறுப்பில் இருந்து பொற்செல்வி நீக்க பட்டார்.
உடனே அவர் கோவம் கொண்டு புரட்சி அதிமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து தலைவரை பற்றி தவறாக பேட்டி எல்லாம் கொடுத்தார்.
ஆனால் அவர் கட்சி ஓர் இரு மாதங்களில் மக்கள் திலகத்தின் மகத்தான செல்வாக்கின் முன் கட்சியும் கரைந்து போய் அவரும் காணாமல் போனார்.
இதுதான் அதிமுகவின் முதல் சிறு சலசலப்பு...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி........... Thanks...
-
நம் தலைவரின் கடைசி நிமிடம்...இந்த மண்ணில்.
பல எம்ஜியார் நெஞ்சங்கள் என்னிடம் கேட்டனர்...
என்ன இருந்தாலும் நம்ம தலைவர் கிட்ட போய் அவரை... அவருக்கு தொல்லை கொடுத்தவரை. என்று.
நான் சொன்னேன் நடந்து விட்டது...அதுவும் நன்மைக்கே...உலகெங்கும் இருந்து இங்கே வரும்போது...
எம்ஜியார் போல வாழ வேண்டும்....அவர் போல கூடாது என்று தன் சந்ததியினருக்கு ஒரே இடத்தில் அடையாளம் காட்ட நல்ல வசதி என்றேன்.
வாழ்க எம்ஜியார் புகழ்
தொடரும்...நெல்லை மணி...நன்றி..
வழக்கம் போல house full போர்டு .....இங்கேதான்...அங்கே காத்து வாங்குது........... Thanks.........
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பண்டிகை
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.
எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு........ Thanks...
-
நினைத்ததை முடிப்பவன் MGR ன் உரிமைக்குரல் ,,,,
1917 முதல் 1987ல் உடல் மட்டும் இந்தியமண்ணுக்கு உரமாகி பல்லாயிரம் கோடி மக்களின் இதயங்களில் இதயக்கனியாக உயிரிலே கலந்து உறவாடிகொண்டு ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தலைவனின் இந்த ஒரு ஸ்டில்லின் ஸ்டைலுக்கு எவனாலும் ஈடுகொடுக்கவே முடியாது......... Thanks...
-
மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்கள் முதன் முறையாக தனது பெயரில் தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்து டைரக்ட்டும் செய்த #நாடோடிமன்னன்
22 ஆக. -1958 வருடம் வெளி வந்து நம்மை மகிழ்வித்த தலைவனின் தமிழ் பற்று
முதல் வரியிலே செந்தமிழுக்குத் தான் முதல் வணக்கத்தை தெரிவித்தார் என்பதை இந்நாளை உங்களுடன்
இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்........... Thanks.........
-
எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும்--
-------------------------------------------------
கண்ணதாசன்--வாலி-
ஏராளமான கவிஞர்கள் இருக்க-இவர்கள் இருவர் மட்டுமே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வாயில் அதிகம் விழுந்து எழுந்தவர்கள்? காரணம்--
இவர்களிருவருமே எம்.ஜி.ஆரை அதிகம் தொட்டவர்கள்!!
கருணா நிதியை உயர்த்தி வாலி பேசியதையோ-கண்ணதாசன் இன்னா நாற்பது எம்.ஜி.ஆரை நோக்கி எய்ததையோ நாம் என்றுமே பெரிய அளவில் சிந்தித்து மனதைக் குழப்பிக் கொண்டதில்லை!
எம்.ஜி.ஆர் இருக்கும்வரையும்,,அவருக்குப் பின்னும் அவரை மறக்காமல் இருந்தார்களா என்பதே நமக்குத் தேவை என்ற கருத்து நமக்கு இருந்ததால்??
கருணா நிதியோடு தோன்றியதாலேயே இவர்கள் இருவரில் வாலி அதிகம் இலக்கானார்!
சரி! பதிவுக்குள் செல்வோம்-
சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி!
ராம்ஜி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்!!
அனேகமான அந்தரங்கங்களை எம்.ஜி.ஆர்,,ராம்ஜியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!
இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் எனக்கும் வாலிக்குமே ஒரு விஷயத்தில் மோதல் உண்டாகி,,அதை இந்த ராம்ஜியே தீர்த்து வைத்தார்!!
சில ஆண்டுகளுக்கு முன் ராம்ஜி ஒரு நிகழ்ச்சியில் வாலியை சந்தித்தபோது கிடைத்த ஒரு சேதியை--
அண்மையில் நான் ராம்ஜியை சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார். அதையே நானும் உங்களுடன்---
என்னங்க,,அவ்வளவு க்ளோஸா அவரோட இருந்துட்டு கருணா நிதியோட மேடையிலே நீங்க---ராம்ஜியின் கேள்விக்குக் கசப்பாய் புன்னகைத்த வாலி சொல்கிறார்-
கரெக்ட்டுங்க. ஆனால் அதுக்காக நான் எம்.ஜி.ஆரை நான் எந்த இடத்திலும் மட்டப்படுத்தலே. அப்படி நான் பேசினா நான் சாப்பிடற உப்பு விஷமாயிடும்?
தமிழ் என்ற தளத்தில் நான் கருணா நிதி கூப்பிடற நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கலாம். அங்கே உயர்வு நவிற்சியாக அவரை உசத்திப் பேசியிருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்த இங்க சொல்றேன்--
அது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சிருந்த நேரம்-
என்ன வாலி,,நம்மக் கட்சியிலே சேர்ந்துட வேண்டியது தானே??
எம்.ஜி.ஆர் கிண்டலாக் கேக்கறார்னு உணராம நான் சீரியஸா பதில் சொன்னேன்-
கண்ணதாசனுக்கு நான் செஞ்சு கொடுத்த மூணு சத்தியங்களில்--
எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேங்கறதும் ஒண்ணு. இல்லேன்னா உங்கக் கட்சியிலே முதல் ஆளா நான் சேர்ந்திருப்பேனே??
பலமா சிரிச்சுண்டே எம்.ஜி.ஆர் சொன்னார்-
யோவ் நான் விளையாட்டாக் கேட்டேன்!!
நான் சொன்னேன்--
நீங்க விளையாட்டாக் கேட்டிருக்கீங்க. ஆனால் நான் இப்போ உங்கக்கிட்டே ஒரு சத்தியம் செய்யறேன்-
என் மூச்சு இருக்கற வரைக்கும் என் வயிறும் இருக்கும். என் வயிறு இருக்கறவரைக்கும் அது உங்களை மட்டுமே நினைக்கும்!! அதாவது உங்கக் கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவேன்.
என் ஒரு ஓட்டுக்காகத் தான் உங்கக் கட்சி இருக்குன்னு சொன்னால் என்னை விடப் பைத்தியக்காரன் எவனும் இருக்க முடியாது? ஆனாலும் நான் சொன்னது சொன்னது தான்-
இந்தத் தேர்தல் வரைக்கும் நான் அ.தி.மு.கவுக்குத் தான் ஓட்டு போட்டிருக்கேன். அடுத்த தேர்தலுக்கு நான் இருப்பேனோ தெரியாது???
தமிழில்-
ஒரு வார்த்தை வெல்லும்!!
ஒரு வார்த்தை கொல்லும்!!
சத்தியத்தை இறுதி வரை வாலி காத்ததாலோ-
இறக்கை நிலை வரும் வரையிலும் தமிழ்,,வாலியை-
இறக்கை கட்டிக் கொண்டாடியது???........ Thanks...
-
எம்.ஜி.ஆர் அஞ்சலி!!
------------------------------------
இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை!
இந்தப் பதிவிலும் அப்படியொரு நிலை!!
திண்டுக்கல் மலரவன்.
மனித நேய மக்கள் திலகம் என்ற எம்.ஜி.ஆர் அமைப்பை நடத்தி வரும் எம்.ஜி.ஆரின் முரட்டுக் குழந்தை?
வருடந்தோறும் மிகச் சிறப்பாக இவரது குழுவால் எம்.ஜி.ஆர் விழா நேர்த்தியுடன் நடை பெறும்/
அப்படி நடத்துவதில்-
மாரி பொய்த்தாலும் இவர் நெஞ்சம் மட்டும்-
மாறிப் பொய்க்காது?
உறவினரால் ஒதுக்கப்பட்ட இவரது மாமியார் இருதயமேரியை கடைசிக் காலத்தில் இவரே மகனாக இருந்து போஷித்தார்!
எண்பதுக்கும் மேலே அகவை கண்ட அந்த மூதாட்டி ஏறக் குறைய சுய நினைவில்லாமலே தன் உயிரை உடற் கூட்டுக்குள் உறுதியாகப் பிடித்திருந்தார்.
இருக்குமிடத்திலேயே எல்லா கடன்களையும் கழிக்கும் நிலையில் அவர்!
முகம் கோணாது அந்த மூதாட்டியை மலரவனும் அவர் துணைவியாரும் கடைசிக் காலத்தில் காத்து வந்திருக்கிறார்!!
இருப்பதிலேயே கொடியது ஜீவ ஹிம்சை!
நிரந்தர ஓய்வை அந்த மூதாட்டி நேற்று மேற்கொண்டு விட்டார்!!
உறவுகள் சரிவர உதவாத நிலை?
கொரானாவால் திண்டுக்கல்லே இடிந்து போய் இருக்கிறது?
என்ன செய்வது?? திகைத்து நின்ற மலரவனுக்கு தெய்வம் போல் கைக் கொடுக்கிறது ஒரு நட்பு!!
சென்றாய் பெருமாள்!
அந்த எம்.ஜி.ஆர் அமைப்பின் பொதுச் செயலர்.
எம்.ஜி.ஆரை நெஞ்சிலும்,,அவர் மூலம் மலரவனை நட்பிலும் கொண்டிருக்கும் அந்தப் பெருந்தகை மின்னல் வேகத்தில் ஆஜராகிறார்.
இடிந்து போய் செய்வதறியாது நின்ற மலரவனை ஆற்றிவிட்டு,,அடுத்தடுத்து நடக்க வேண்டியவைகளைக் கிரமத்தோடு செய்து இரவு வரை அங்கேயே அதன் பின்னரே புறப்பட்டிருக்கிறார்?
நினைத்துப் பாருங்கள்?
பொருளாதாரத்தில் மிக சாமானியனாகவும் எம்.ஜி.ஆர் பக்தியில் உலக கோடீஸ்வரராகவும் இருக்கும் மலரவன் மகன் போல் அந்த மூதாட்டிக்குச் செய்தவை கொஞ்சமல்ல என்றால்--
கொரோனா பீதியில் நாடே உறைந்திருக்கும்போது,,தன்னுயிர் பற்றி சிறிதும் கவலையுறாமல் உடனே வந்து சேவை செய்த சென்றாய் பெருமாளின் மனித நேய மாண்பு??
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அதிசயங்கள் மிக எளிதாக நடக்கின்றன??
அணைந்த சென்றாய் பெருமாளின் கரங்களால்-துக்கத்தில்-
அணைந்த மலரவன் உள்ளத்தில் ஒளி உண்டாகியிருக்கிறது என்பது உண்மை தானே?
மூதாட்டியை மனதோடு நினைத்துக் கொண்டு-
|சென்றாய் பெருமாளின் சீர்மையை வாய்க் கொள்ளாமல் வாழ்த்துவோமே???......... Thanks...
-
இது எம்.ஜி.ஆர் சினிமா!!
---------------------------------------
கொரானாவுக்கு பயந்து அவரவர் கட்டிலுக்கு அடியிலும் சோஃபாவுக்குக் கீழேயும் பதுங்கிக் கொண்டிருப்பதால் இன்று ஒரு சினிமாப் பதிவு?
கண்ணதாசன்,,வாலி,,இருவரும் இணைந்து இயற்றிய பாடல்? அதுவும் எம்.ஜி.ஆர் படப் பாடல்??
உரிமைக் குரல் படத்தில் எம்.ஜி.ஆரின் சங்கதி தெரியாமல் கண்ணதாசனை வைத்து ஸ்ரீதர் இயற்றிய பாடல்--
விழியே கதை எழுது!!
எம்.ஜி.ஆரிடம் பஞ்சாயத்துக்குப் போய்--
இந்தப் பாடலில் கவிஞர் பெயரையே டைட்டிலில் போடுங்கள். ஏனையப் பாடல்களை வாலியை வைத்து எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆரும் தீர்ப்பு சொன்ன விபரம் நமக்குத் தெரிந்தது தான்!
விழியே கதை எழுது பாடலை எழுதியக் கவிஞரே இன்னொரு பாட்டுக்கானப் பல்லவியையும் எழுதிக் கொடுத்துவிட்டு,,பாடலின் சரணங்களை மறு நாள் எழுதித் தருகிறேன் என்று ஸ்ரீதரிடம் சொல்லியிருக்கிறார்.
அதற்குள் தான் இவ்வளவு அமளிகள்??
கிராமிய மணம் தவழும் அந்தப் பல்லவியை இயக்குனர் ஸ்ரீதருக்கு இழக்க மனம் வரவில்லை?
என்ன செய்யலாம் என்று கவிஞரிடமே யோசனை கேட்க--
அதுக்கென்ன--சரணங்களை வாலியை வச்சு எழுதிக்கங்க என்று பிரச்சனைக்கு வழி சொல்ல--
அப்படி,,இருவராலும் உருவான அந்தப் பாடல் தான்--
கல்யாண வளையோசைக் கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு!
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு!!!
இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டியவை மூன்று--
கண்ணதாசனுக்கு வாலியின் திறமை மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால்,,தன் பல்லவியை வாலியைக் கொண்டு பூர்த்தி செய்யச் சொல்லியிருப்பார்?
வாலியிடம் எத்தனைத் திறமை இருந்திருந்தால் கண்ணதாசனது நம்பிக்கையைக் காப்பாற்றி இருப்பார்??
இரண்டுக்கும் மேலாக--
அன்றையக் கவிஞர்களிடையில் எவ்வளவு புரிதல் உணர்வு இருந்திருந்தால் இப்படி ஒரு பெரிய சிக்கலின் முடிச்சு சிக்கல் இல்லாமல் அவிழ்ந்திருக்கும்??
உண்மை தானே உறவுகளே???......... Thanks...
-
எழுகவே!!
----------------
முன்பே அறிவித்து விட்டேன்!
இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
எம்.ஜி.ஆரே சாரதி!!
கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
குறிப் பார்த்து நடத்தும் போர்!!
இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
1977க்குப் பிறகோ அல்லது-
1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
1958இல் கால் முறிவு!
நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
வருடாதே துன்பமே என் சிந்தையை என-
திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
1967!
தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
நான் குணம் பெறுவேன் என்று--
சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
துள்ளி எழுந்தார்!!
1972!
சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
1984!
அரசியல் உலகமே அன்று-
எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
தாயம் விழுந்து கொண்டிருந்தது?
காயம் பட வைத்த காலனின்
சாயம் தானே வெளுத்தது?
ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
கொரானா--
வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
மரணம் எப்போது வரும்?--தெரியாது!
மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
மரணத்தை எண்ணி மருகுவதை விட-
மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
விண் இரக்கம் கொண்டாலும்--
மண் இரக்கம் கொண்டாலும்-
மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!......... Thanks...
-
போட்டியிடு! தோற்கலாம்!!
--------------------------------------------
எம்.ஜி.ஆர் கொடையாளி!! என்று ஆரம்பித்தால்--யாருய்யா இல்லேன்னது என்று நீங்கள் சீறும் அபாயம் ஒரு புறம் இருந்தாலும்--
இன்றைய நமது பதிவின் சாராம்சமே--
அவர் கொடைத்தன்மை அன்றைய எதிர்க்கட்சியாளர்கள் மத்தியில் எப்படி பேசப்பட்டது என்பதே!!
அது அவ்வை இல்லம் கட்டிடம் கட்டும் விழா!!
சென்னையில் இன்று செம்மையான முறையில் இயங்கி வரும் அவ்வை இல்லத்துக்கு முதன் முதலில் கட்டிடம் கட்ட பெருத்ததொரு தொகையை தனி ஒரு நபராக அளித்தவர் எம்.ஜி.ஆர்!!
1960ஆம் ஆண்டிலேயே,,அப்போதிருந்த பண மதிப்பில் எம்.ஜி.ஆர் அன்று கொடுத்த நன்கொடை-- நாற்பதாயிரம் ரூபாய்! கணக்குப் போட்டுக்குங்க--
பலரின் நன் கொடை வேண்டியும்,,எம்.ஜி.ஆர் கொடுத்த நன்கொடையில் கட்டடம் கட்ட ஒரு விழா நடக்கிறது!
அண்ணா,,அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம்,,அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்வதால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆரும் கலந்து கொள்கிறார்!
அன்று சி.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு சி.எஸ் சுப்பிரமணி அவர்கள் பலத்தக் கரவொலியின் பின்னணியில் இப்படிப் பேசுகிறார்--
எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்துக்கு நன்கொடை தரார்னு சொன்னாலே அது கற்பனைக்கும் மிஞ்சியதாகத் தான் இருக்கும். அதுவும் பசிக்கு,,கல்விக்கு என்றால் பெரிய அளவிலே இருக்கும்! அதனால இந்தக் கட்டடத்துக்கு நன்கொடை தர விரும்பறவங்க எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு அவர ஜெயிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கறேன்??
அடுத்தது பேச எழுகிறார் யு.கிருஷ்ணா ராவ்!
காங்கிரஸ்கட்சியாளரும்,,அப்போதைய சட்டப்பேரவை தலைவருமான அவர் பேசியது--
எம்.ஜி.ஆரோடு நன்கொடை விஷயத்தில் போட்டியிடுமாறு சி.எஸ் சொன்னார். ஆனால்-?
எம்.ஜி.ஆரோடு இந்த விஷயத்துல யாரும் போட்டி போட முடியாதுங்கறது தான் உண்மை!
நாலுபேர் ஒண்ணா சேர்ந்து கொடுக்கற தொகையை அவர் ஒருத்தரே கொடுத்துடுவார்.
யாரேனும் அதிகமாக் கொடுக்கக் கூடியவங்க இருந்தாலும்,,அவுங்க கொடுக்கற தொகைக்கு மேல தான் எம்.ஜி.ஆர் பங்கு இருக்கும்??
அதனால வெற்றிகள வரிசையா அடைஞ்சிட்டு வரும் எம்.ஜி.ஆருக்கே இந்த விஷயத்திலும் வெற்றி தான் கிடைக்கும்???
நன்றாக கவனிக்கவும்!
நடந்தது அன்றைய தி.மு.க விழா அல்ல!
சொல்லப் போனால் தி.மு.கவின் நேர் விரோதியான காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் விழா!
கிருஷ்ணா ராவ்,,சி.எஸ்-இருவருமே காங்கிரஸை சேர்ந்த பெரிய பதவியில் இருப்பவர்கள்!!
அவர்கள் இருவருமே,,பல நூறு பேர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை இப்படிப் புகழ்கிறார்கள் என்றால்??
புகழ்ந்தது அவர்களல்ல??
எம்.ஜி.ஆரின் கொடை!!
மகிழ்ந்தது எம்.ஜி.ஆர் அல்ல??
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தர்மதேவதை!!
உண்மைதானே உறவுகளே???!!!... Thanks.........
-
யார் தலைவன்?
----------------------------
ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
வசமான பதிவும் கூட!
சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
கண்ணியத்தின் அடி தொட்டு-
விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
பதிவுக்குள் புகுவோமா??
பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
குளத்தில்--
சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
இங்கோ--
செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???!!!... Thanks...
-
இது எம்.ஜி.ஆர் வழி!!
---------------------------------
அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
என் பாலிஸி இது தான்!
உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
உங்களுக்கு?!......... Thanks.........
-
இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
------------------------------------
வரலாறு!
இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
சரி! பதிவுக்குள் செல்வோம்!
இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
இந்த நிலையில் ---
ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
சரித்திரம்--
சிலரை முழங்கும்
சிலரை முழுங்கும்!!
வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
அனு தினமும் வழங்கும்!!
அந்த வகையில்--
எங்கே எம்.ஜி.ஆர்? என்ற கேள்விக்கு--
மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???........ Thanks...
-
தமிழை உயிராய் நேசிக்கும் அனைத்து தமிழ் உறவுகளே!
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர
உங்கள் அனைவருக்கும் எங்களின்
இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
எம்.ஜி.ஆர் கலைமகள்
டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம்
Dr.MGR Global Research Centre
MGR Productions Resources......... Thanks.........
-
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#திருமணம்_அழைப்பு
எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.
நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்........ Thanks...
-
#புரட்சிதலைவர்
#இதய_தெய்வம்_எம்ஜிஆர்
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_காலை #வணக்கம்
#மனிதாபிமானத்தின்_மகாத்மா" #எம்_ஜி_ஆர்.
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.
#மக்கள்_திலகத்தின்_திரைத்துறை #வெற்றிக்கு_பிரபல_தயாரிப்பாளர் #தேவர்_பிலிம்ஸ்
#சாண்டோ_சின்னப்பதேவரும் #வசனர்த்தா_ஆரூர்தாசும்_முக்கிய #காரணம்_ஆவார்கள்.
#அவரது_உடன்_பிறந்த_சகோதரர்
#எம்_ஜி_சக்கரபாணி_என்றாலும்,
#தேவர்_அவர்களுக்கு_உடன்_பிறவா #சகோதரர்_என்ற_அந்தஸ்தை #கொடுத்திருந்தார்
குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.
சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.
நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.
1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி #இப்பூவுலகை_விட்டு_மறையும்_வரை #ஏழைகளின்_நலனுக்கு_பெரும் #முக்கியத்துவம்_கொடுத்த_இந்த #பொன்மனச்_செம்மலை #மனிதாபிமானத்தின்_மகாத்மா_என்று #குறிப்பிடுவது_சாலச்சிறந்தது.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........... Thanks.........
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பண்டிகை
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.
எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு....... Thanks...
-
சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே ஒரு முதன்மை மாநிலமாக திகழ்கிறது....
உணவளிப்பதன் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க வேண்டியும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவுத் திட்டம் 1982ல் தொடங்கப்பட்டது...
பசியோடு உள்ள குழந்தையாலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தையாலும் படிப்பின் மீது கவனம் செலுத்த இயலாது என்ற காரணியின் அடிப்படையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், மதரசாக்கள் மற்றும் மக்தப்களில் பயிலும் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், மற்றும் உயர் துவக்கப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் சமைத்து சூடான இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது......... Thanks.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
-------------------------------------------------------------------------------------------------------
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3மணி வரையில் 1 yes news tv யில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த சவால்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது .இந்த நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள்* விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1936ல் சதி லீலாவதி என்கிற படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அதன் பிறகு 10 ஆண்டுகளாக பல படங்களில் துணை நடிகராகவும், சிறிய பாத்திரங்களிலும் நடித்து வந்ததோடு , சில படங்களில் நடனமும் ஆடியுள்ளார் .அந்த காலத்தில் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் , நடிகர் பி.யு.சின்னப்பா , பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, நடிகை டி.ஆர்.ராஜகுமாரி , ஆகியோருடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . அந்த கால கட்டங்களில் நாடக துறையின் அனுபவம் காரணமாக* தனது நடிப்பில் மெருகேற்றி , வளர்ச்சி அடைந்து வந்தார் .* மேலும்* அப்போது சொந்த குரலில் பாடுபவர்களே கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று ஒரு நிலை இருந்தது .* நாடகங்களில் நடித்துக் கொண்டும் ,வரும் சினிமா வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டும் , அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாள்* சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை , சிலம்பம் குதிரை சவாரி* ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டார் .**
நடிகர்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் மிகவும் பிசியாக இருந்த சமயத்தில் ஜூபிடர் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் திரு.சோமு அவர்களுக்கு சினிமா படம் எடுக்க நல்ல கதை ஒன்று கிடைத்தது .* ஏற்கனவே பிரபலமாக இருந்த நடிகர்களிடம் கால்ஷீட் கிடைப்பதில் சிரமம் , அதிக சம்பளம் , தயாரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய நடிகர் , நடிகைகள்,அல்லது சினிமா கம்பெனியில் ஒப்பந்தத்தில் உள்ள நடிகர்கள் வைத்து படம் எடுக்க*இயக்குனர் ஏ.எஸ். ஏ.சாமியிடம் ஆலோசனை மேற்கொண்டார் .இயக்குனர் சாமி ஸ்ரீமுருகன் என்ற படத்தில் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் பரமசிவனாகவும், மாலதி பார்வதி யாகவும் அருமையாக நடனமாடி உள்ளனர் .* மேலும் ராமச்சந்திரனுக்கு நாடக அனுபவமும் உள்ளது , கடந்த பல வருடங்களாக சினிமாவிலும் பல வேடங்களில் திறம்பட நடித்து வருகிறார்* *அவரது கால்ஷீட் எளிதில் கிடைக்கும் . வளர்ந்து வரும் நடிகர் . நமக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார் , சம்பளம் நாம் தருவதை வாங்கி கொள்வார் . தயாரிப்பு செலவும் குறைவு. நிறைவான படம் உருவாக்க வாய்ப்பு என்று பல யோசனைகளை சொன்னதும் , சிறிது தயக்கத்துடன்* தயாரிப்பாளர் சோமு , பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினார் .இந்த விஷயங்கள் எம்.ஜி.ஆருக்கு சில நண்பர்கள் மூலம் தெரிய வர , உடன் இயக்குனர் சாமியிடம் தயக்கத்துடன் விசாரித்தார் .இயக்குனர் சாமி,, உனது நடிப்பு திறமை, நடன திறமை, சண்டை காட்சிகளில் வேகம், விறுவிறுப்பு ஆகியன பற்றி தயாரிப்பாளர் சோமுவிடம் சொல்லியிருக்கிறேன் . முடிவு அவர் கையில்தான் உள்ளது .என்றார் .*அதன்பின் எம்.ஜி.ஆர். தயாரிப்பாளர் சோமுவிடம் இயக்குனர் சாமி கூறிய யோசனைப்படி சந்தித்து பேசினார் .* தயாரிப்பாளர் சோமு , தான் இயக்குனர் சாமியிடம் பேசிவிட்டு இதுபற்றி சொல்லி அனுப்புகிறேன் என்று கூறினார் .
இதற்கு முன்பு சாயா என்ற படம் பாதி வளர்ந்த நிலையில் கைவிடப்பட்டு வெளியாகவில்லை .* அதே போல இந்த படமும் ஆகிவிடுமோ என்ற கவலை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . நிரபராதி ஆகிய நான் குற்றவாளி கூண்டில் நின்று ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் என் மனம் அப்போது இருந்தது . மிகவும் பதட்டமாக இருந்தது . கதாநாயகன் வாய்ப்பு கைகூடுமா*என்ற சந்தேகம் , நல்ல வேளை , தயாரிப்பாளர் சோமுவும், இயக்குனர் சாமியின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்து முடிவெடுத்து*ஒப்பந்தம் செய்தார் . கதாநாயகி மாலதி . இந்த படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடியவர் எம்.எம்.மாரியப்பா .* எம்.என்.நம்பியார் நகைச்சுவை* வேடத்தில் நடித்தார்*
எம்.ஜி.ஆர். ஆத்திகராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்தார் .கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார் .இந்த கால கட்டத்தில் கோவை, மற்றும் ஈரோடு நகரங்களில் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .எம்.ஜி.ஆர். காந்தியின் புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பார் .* கருணாநிதி தந்தை பெரியாரின் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்கு தருவித்தார் நெருங்கிய நண்பர்களானார்கள் .* ராஜகுமாரி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது .* ஆனால் படத்தில் உதவி ஆசிரியர் என்று டைட்டில் வரும் .
படத்தின் வில்லியாக இலங்கை குயில் தவமணிதேவி மிகவும் கவர்ச்சியாக*ஜாக்கெட் அணிந்து கடைசி பட்டன் மட்டும் போட்டிருந்ததை கண்டு இயக்குனரும் தயாரிப்பாளரும் அசந்து போனார்கள். காரணம் ஹாலிவுட் நடிகை மார்லின் மன்றோ போல கவர்ச்சியாக தெரிந்ததுதான் .* கதாநாயகனை மயக்கும் பாத்திரம் என்பதால் இயற்கையாக இருக்கத்தான் இந்த உடை என்று தவமணி தேவி கூற , இயக்குனரின் யோசனைப்படி ஜாக்கெட்டுக்கு* நடுவில் பெரிய காகிதப்பூ**ஒன்றை வைத்து* படமாக்கினர் .* படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் எம்.ஜி.ராமச்சந்தர் என்று டைட்டிலில் இடம் பெற்றது .
எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்பு, டி.எஸ். பாலையாவுடன் போடும் கத்தி சண்டை, நம்பியாரின் நகைச்சுவை, தவமணிதேவியின் கவர்ச்சி நடனம் , கருணாதியின் வசனம் ஆகியன படத்திற்கு மெருகேற்றி , படத்தின் இமாலய வெற்றிக்கு வித்திட்டது .11/04/1947ல் ராஜகுமாரி வெளியானது . குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு பெற்று , இயக்குனர் ,நடிகர் நடிகையரை பாராட்டினார் .* சென்னையில் ஸ்டார், கிரவுன் , மதுரை சிந்தாமணி, திருச்சி வெலிங்டன் , கோவை ராஜா ,சேலம் ஓரியண்டல் ஆகிய அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி நல்ல வசூலை பெற்றது .* ராஜகுமாரியின் வெற்றிக்கு பிறகு*எம்.ஜி.ஆருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன .* எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க கருணாநிதி வசன ஆசிரியராக சில படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் .
-
#அனைவருக்கும் #இனிய #தமிழ்ப்புத்தாண்டு #வணக்கங்கள்
வாத்தியாரை வெறும் நடிகர் என்று பார்க்கும் பொது புத்தியில் இருந்து அவர் மீது வெற்று விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. இவை பெரும்பாலும் பொறாமை விளைச்சல்களே.
வாத்தியாரை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மூன்றாவது இடத்தில் தான் நடிகன் என்கிற பிம்பம் தெரியும்.
சிறப்பு மிக்க இரண்டு பிம்பங்கள் அவர்க்கு உள்ளன . அவைதான் அவரை இன்னமும் நினைக்க, பேச வைக்கிறன.
அவை...
#மனிதநேயமும், #கொடைத்தன்மையும்
பிறப்பு முதல் நீங்காமல் நம்முடன் இன்னமும் கூடவே வருபவர் பெற்றோருக்கு நிகராக வாத்தியார் மட்டுமே...
வாத்தியாரின் நாமத்தை மேன்மேலும் போற்றுவோம்.......... Thanks.........
-
1966 பிப் 4 ல் வெளியான படம்தான் "நான் ஆணையிட்டால்." 1966 பொங்கலுக்கு வெளியாக எம்ஜிஆரிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தார் R M வீரப்பன். ஆனால் ஏவிஎம்மின் 50வது படமும் அவர்கள் கம்பெனியின் முதல் வண்ணப்படமுமான"அன்பே வா"
ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் செட்டியார் அவர்கள்"அன்பே வா" படத்தை பொங்கலுக்கு திரையிட விரும்பினார். எம்ஜிஆரிடம் செட்டியாரின் விருப்பத்தை சொன்னதும் உடனே அவர் அது என் கையில் இல்லை. வீரப்பனுக்கு ஏற்கனவே "நான் ஆணையிட்டால்" திரையிட சம்மதம் கொடுத்து விட்டேன்.இனி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வீரப்பனை போய் பாருங்கன்னு சொல்லிட்டார்.
உடனே வீரப்பனை அணுகி வேண்டுகோள் வைத்தவுடன் அவரும் அவரது பொங்கல் கனவை செட்டியாருக்கு விட்டு கொடுத்து விட்டு 3 வாரம் கழித்து என் படத்தை வெளியிடுகிறேனு சொல்லிட்டார்.
எங்க வீட்டு பிள்ளை பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமானதால் எல்லோரும் பொங்கலன்று எம்ஜிஆர் படத்தை வெளியிட ஆசைப்பட்டார்கள். நினைத்தது மாதிரியே'அன்பே வா" மாபெரும் வெற்றி படமானது.
1965 லேயே நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு நடக்கும் போதே"அடிமைப்பெண்" படப்பிடிப்பு துவங்கப் பட்டது. "நான் ஆணையிட்டால்" படத்தில் வரும் ஒரு பாடலில் "நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்" என்ற அடி வரும் போது"வருகிறது" "அடிமைப்பெண்" என்ற விளம்பரம்
சீரியல் பல்புகளால் அலங்கரிக்கபட்டு காட்டப்படும். அப்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும்............. Thanks.........
-
#அதான் #வாத்தியாரு
பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின் 'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்
பவர்கள் உட்கார்ந்து அவர்களுக்காக காத்திருப்பர்.
ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்த இயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு !
ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது !
என்ன ஆச்சு ?
இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும்
சமயத்தில் .....அங்கே எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார் !
அவ்வளவுதான் !
எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !
இயக்குனர் கிருஷ்ணன் ?
அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் !
என்ன பண்றது......
ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !
எம்ஜிஆர், கிருஷ்ணன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக் கண்டு , பெரும் சினம் கொண்டார் !
நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்தார்......கேட்டார் :
"நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நல்லா இருக்கா? "
என்று கோபமாக கேட்டார் !
எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து "டென்ஷன்" ஆயினர் !
"என்ன நடக்குமோ?! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !
உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏதோ காதில் சொல்ல, அதனைக் கேட்டு எம்ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்...... மீண்டும் சிரித்தார் !
எல்லோருக்கும் குழப்பம் !
அப்படி
என்ன தான் சொன்னார் கிருஷ்ணன், எம்ஜிஆரிடம் ?
இதுதான் :
"எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து நின்றேன் !"
#அதுதான் #எம்ஜிஆர் !........ Thanks.........
-
ஸ்ரீ MGR. வாழ்க
சித்திரை 1 செவ்வாய் கிழமை
இன்று தமிழ் புத்தாண்டு
இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பசி பட்டினி நோய் கடன் இல்லாத வாழ்க்கை அமைய வேண்டும் என்று
ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
/////////////////////?///////////////////////////////
எம்ஜிஆர் பக்தர்களே
1977 ஆண்டு அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் முதலமை அமைச்சராக வந்தபிறகு
சினிமாவில் நடிப்பதற்காக பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம் அனுமதி கேட்டார்
அவர்களும் அனுமதி அளித்து விட்டார்கள்
அப்பொழுது எம்ஜிஆர் நடிப்பதாக ஒரு படத்தின் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்
அந்தப் படத்தின் பெயர்
நான் உன்னை விடமாட்டேன்
அந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது
எம்ஜிஆர் அவர்களுக்கு எதிர்ப்புறம் உயரமாக மீசையுடன் உள்ளவர் தான்
உன்னை விடமாட்டேன் படத்தின் தயாரிப்பாளர்
G.K.தர்மராஜ்
பக்கத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்
உன்னை விடமாட்டேன் படத்திற்கு இசை இளையராஜா
//////////////////////////////////////?///////?
அடுத்து எம்ஜிஆர் அவர்களுக்கு முன்பாக இரண்டு கைகளையும் பிணைந்து கொண்டிருப்பவர் பெயர்
சித்திர மஹால் கிருஷ்ணமூர்த்தி
இவரும் பல சினிமா படங்களை தயாரித்துள்ளார்
அடுத்து ஒரு மிக முக்கியமான செய்தி
1977 ஆண்டு எம்ஜிஆர் முதல் முதலாக சட்டசபை பொதுத் தேர்தலை சந்தித்தார்
அப்பொழுது
தியாகராய நகர் சட்டமன்ற வேட்பாளராக
சித்ரா மஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்களை
அண்ணா திமுக வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்........ Thanks fb
-
எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?
அந்த பத்திரிகையாளர் முதல்வர்
எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.
அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.
ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
"அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.
அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.
அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.
அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.
நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.
அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.
ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.
#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.
தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.
காலம் ஓடியது.
ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.
‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.
எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.
மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?
ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.
அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
----------------------------------------------------------
இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
பணி செய்ததுமுண்டு.
Ithayakkani S Vijayan......... Thanks.........