https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7c&oe=5EC18901
Printable View
நடிகை தேவிகா!
கலை மகளின் அருளினால் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மாணிக்கமே! வற்றாத நடிப்பினால் பார் போற்ற வாழும் கலைமகனும் அவரே!
அவரிடம் இனிய பண்பும் உண்டு, இல்லை என்போருக்கு கொடுக்கும் ஈகை குணமும் உண்டு.எல்லோரும் புகழ் பெற வேண்டும் என்ற பெருந்தன்மையான குணம் உண்டு. ஆனாலும் அவரிடம் முன் கோபம் உண்டு. மனதில் பட்டதைப் படறென்று உரைத்திடும் முன் கோபம் அவரிடம் இருக்கிறது.
தாமதமாக வந்தாலும், சரியாக நடிக்கா வீட்டாலும், வசனங்களை மறந்து விட்டாலும், அவர் கோபப்படுவார். ஆனால், அது ஒரு குறைபாடல்ல, அவருடைய கோபம் எங்களுக்கு எல்லாம் யோகம்.
சாந்தி,கர்ணன், ஆகிய படங்களில் நான் அவரோடு நடித்த போது படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவேன். இதற்க்காக சிவாஜி என்னை பல முறை திட்டி இருக்கிறார். ஆனால் அவருடைய கோபம் யாரையும் பாதிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்கு புரியும்.
நான் நடிகர் திலகத்துடன் பத்து திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். அதற்கு முன்பு பம்பாய் மெயில், பராசக்தி ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறேன்.நான் நாடகங்களில் நடிக்கும் போது அவருடன் கதாநாயகியாக நடிப்பேன் என்று நிச்சயமாக நம்பினேன்.
ஒருநாள் நான் கண்ட கனவில் கூட, பீச் ரோட்டில் சிவாஜி சென்று கொண்டிருப்பதை போலவும், திடீரென்று அவர் காரில் அடிபட்டு கீழே விழுவதை போலவும், உடனே அங்கு வந்த நான் என் மடியில் அவரை படுக்க வைத்து மருந்து போடுவது போலவும், கனவு கண்டேன்.
அந்த கனவை நான் வேடிக்கையாக தான் எண்ணினேன். ஆனால் பாவ மன்னிப்பு படத்தில் அதைப் போலவே நான் சிவாஜியை என் மடியில் கிடத்தி மருந்து போடுகிற காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் நானும் அவரும் நடித்தோம்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்து கொள்வேன்.
நான் சிவாஜியுடன் நடித்த படங்கள் குறைவு தான், என்றாலும் 100 படங்களில் நடித்ததை போன்ற நிறைவு எனக்குள் இருக்கின்றது.
சிவாஜியின் நடிப்பு முடிவு காணாத சிகரம், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். அவர் யாருக்கும் மனத்தால் கெடுதல் நினைத்தது இல்லை.
இத்தகைய பிறவி நடிகர் பல்லாண்டு வாழ பிராத்திக்கின்றேன்.
நடிகை தேவிகாவின் பத்திரிக்கை பேட்டியிலிருந்து...
நன்றி! திரு. வாசுதேவன் அச்சின் விஜயராகவன் அவர்கள்....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a4&oe=5EBEEEF0
Thank Ganesh Pandian
"கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே
கலை மகளே நீ வாழ்கவே.அவனே நினைத்தான் உறவை வளர்த்தான் "
இன்று 19/04/2020 மதியம் 01.30 மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த " கீழ்வானம் சிவக்கும் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெய்சங்கர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...5e&oe=5EC06E67
மீள் பதிவு,
தோழர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிவரும் நடிகர்திலகத்தைப் பற்றிய " செல்லுலாய்ட் சோழன்" தொடர் 'தமிழக அரசியல்' பத்திரிகையில் 50 ஆவது எபிசோட்டை இந்த வாரம் எட்டியிருக்கிரது,
நான் எத்தனையோ நடிகர்திலகத்தை பற்றிய தொடர்கள் படித்திருக்கிரேன், ஆனாலும் இந்த தொடரில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை படித்ததில்லை,
மூடி மறைக்கப்பட்ட பல உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது,
உதாரணமாக ஆரம்பத்தில் அவர் எழுதிய தொடரில்
பராசக்தி படத்தின் வெற்றி நடிகர்திலகத்தை உச்சத்தில் நிறுத்தியது அவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை நடிப்பு இவற்றுக்கு ஈடு கொடுக்க அப்போதைய மற்ற ஹீரோக்கள் என்ன செய்வதென புரியாமல் விழிபிதுங்கினர்,
அப்போது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் தங்கை படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தார்
இதனை கண்டித்து எம்ஜிஆர் முகநூல் வாதிகள் தமிழக அரசியல் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இன் தோல்வியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் தொடரில் எழுதக்கூடாது என எச்சரிக்கை செய்து இருக்கிறோம் என்கிற செய்திகள் முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது , இன்பா அவர்களை கடுமையாக தாக்கி இருந்தார்கள்.
நடிகர்திலகத்தை நேசிப்பவர்ககளிடம் ஒற்றுமை கிடையாது என்ற கோணத்தில் அவர்களின் பதிவையும் புரிந்து கொள்ள முடிகிறது
50 வது தொடரில் இடம்பெற்ற முத்தாய்ப்பான நிகழ்வுகள்
"வ உ சி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் என்பதால் அவரின் வரலாற்றை படமாக எடுக்கும்போது எந்தவித தவறான தகவலும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது படக்குழு.
படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாத்திரமாகவே மாறி இருந்தனர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளையும் தியாகத்தையும் மக்களுக்கு கொண்டு போகும் அற்புத படமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழனை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை என்பது வேதனையின் உச்சம்,
நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்ப இருந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பிய கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்து திமுக பயந்தது. காங்கிரஸ் மெத்தனத்தில் கோட்டை விட்டது,
வ உ சி அவர்களை கடைசி காலத்தில் கேட்பார் அற்று விட்டது போல் காங்கிரஸ் க்காக வந்த படத்தை காங்கிரஸ் கேட்பார் அற்று விட்டது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் , வரி விலக்கு அளிக்க வேண்டிய படம் என்று தெரிந்து இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருந்தது.
காங்கிரஸின் இது போன்ற மெத்தனங்கள்தான் அதன் வாக்கு விழுக்காடு 4 % என சரிந்தது,
கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு காங்கிரஸ் வழங்காத வரி விலக்கை 1967 ல் ஆட்சியை கைப்பற்றிய திமுக அளித்தது.
நமது நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் எவ்வளவு குருதியைச் சிந்தி துன்பப்பட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த பணியை கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களின் மூலம் தான் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டு வரி விலக்கை அளித்தது திமுக அரசு.
தனது படத்திற்கு காங்கிரஸ் அரசு வரி விலக்கு அளிக்காதது சிவாஜிக்கு வருத்தம் என்றாலும் காமராஜர் மேல் கொண்ட பற்றினம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காங்கிரஸ் கொடியை தனது உயிராகப் போற்றினார் சிவாஜி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பது முன் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கிய சிவாஜி ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்,
முத்துராமலிங்க தேவரை முதுகுளத்தூர் கலவர வழக்கில் காமராசரின் அரசு கைது செய்ததால் தேவர் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மீது ஆத்திரம் கொண்டு இருந்தனர்
தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் என்ற பெயரை தவறிக்கூட உச்சரித்தாலும் தர்ம அடிதான் கிடைக்கும், அந்த அளவுக்கு அந்த மக்கள் மத்தியில் காங்கிரஸ். துடைத்தெரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடியோடு தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரப்புரை செய்யப் போனார் சிவாஜி காங்கிரஸ் மீது தேவர் இன மக்கள் கொண்ட வெறுப்பு சிவாஜியின் மீது திரும்பியது
வேல்கம்பு வீச்சரிவாள் என ஆயுதங்களை கொண்டு சிவாஜியைத் தாக்கினார்கள் சிவாஜி சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது ஆனாலும் சிவாஜி காங்கிரஸ் கொடியை தனது காரிலிருந்து கழற்றாமலே தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேவர் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் சிவாஜி மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்ததால் சிவாஜியின் வாகணத்திற்கு முன்பு பாதுகாப்புக்குச் சென்றார்கள்
இன்று காங்கிரஸ் என்று மார் தட்டும் எந்தத் தலைவரும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருந்த தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் யாரேனும் உண்டோ என்றால் பூஜ்ஜியம் தான் பதில்
கல்லெரியையும் அரிவாள் வெட்டையும் வேல்கம்பு தாக்குதலையும் எதிர்கொண்டு காங்கிரஸிர்காக உழைத்த ஒரே தலைவர் சிவாஜி மட்டும் தான்
காங்கிரஸ் கொடி மெல்ல மெல்ல தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் பறக்க தொடங்கியது.
காமராஜரோ, கக்கனோ, சி.சுப்பிரமணியமோ, லூர்து அம்மாவோ அதற்கு காரணமல்ல !
சிவாஜி! சிவாஜி! என்ற தனியொரு மனிதன் மட்டுமே காரணம்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியான சில மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வந்தது.
குலக்கல்வித் திட்டத்தால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த ராஜாஜி அந்தத் தேர்தலில் தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்தார்.
சுதந்திரா கட்சி என்ற பெயரில் ராஜாஜி நிறுவிய கட்சிக்கு என் ஜி ரங்கா தலைவர் ஆனார்.
ஏழை மக்களின் பிரச்சனைகள் மையப்படுத்தியே அரசியல் இயக்கங்கள் தோன்றியிருக்கின் றன, ஆனால் ராஜாஜி சுதந்திராக் கட்சியை நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் வேண்டி தொடங்கி இருப்பதாக அறிவித்தது இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் வாயை பிளந்தார்கள் ஆனால் ராஜாஜி அவைகளை சட்டை செய்யவில்லை.
காமராஜரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜாஜி, திமுக வுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என அறிவித்து காங்கிரஸின் வயிற்றில் புளியைக் கரைத்தார். திமுக விற்கு ராஜாஜி அளித்த திடீர் ஆதரவு திமுக தலைவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது
சுதந்திரா கட்சியில் அங்கம் வகிக்கும் பணக்காரர்கள் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை நன்கொடையாக தருவார்கள் என திமுக கணக்கிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜாஜி அமைத்த வியூகம் காமராஜரை சற்று யோசிக்க வைத்தது.
திமுகவின் வேகத்தோடு ராஜாஜியின் விவேகமும் சேர்ந்தால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமோ எனப் பயந்தார். ஆனாலும் கடந்த ஆட்சியில் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் கைவிட மாட்டார்கள் என காமராஜர் நம்பினார்.
காமராஜருக்கு எதிராக ராஜாஜி எழுப்பிய ராஜதந்திரம் பெரியாரை ஆத்திரம் கொள்ள வைத்தது, சாதிய அடிப்படையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராஜாஜியின் வளர்ச்சியை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன் காமராஜருக்கு ஆதரவளித்தார் பெரியார்.
திராவிட இயக்கத் தோழர்களை காங்கிரஸ் வெற்றிக்குப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சிவாஜி தனது மன்றப் பிள்ளை களை தேர்தல் பணி செய்ய களத்தில் இறக்கி விட்டார்
சிவாஜியை நம்பி பல வேட்பாளர் கள் தவம் இருந்தனர். சிவாஜி ஒருமுறை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்தால் போதும் வெற்றி உறுதி ஆகிவிடும் என நம்பினார்கள். வேறு எந்த தலைவரையும் தேடி அவர்கள் ஓடவில்லை தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர், சிவாஜி என்ற இரண்டில் மட்டுமே அடக்கம் என்பது அவர்களுக்கு தெரியும்.
* சிவாஜி பெட்டி நிறைய தனது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் ஒவ்வொரு சிறிய கிராமமாக பிரசாரம் செய்தார்.
சிவாஜி சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. போட்டி யிட்ட பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முடிந்த அளவு நிதியையும் அள்ளிக் கொடுத்தார். *சிவாஜியிடம் நிதி பெறாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை.
ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரம் செய்து விட்டு சிவாஜி திண்டுக்கல் வரும்போது அவருடைய தொண்டை புன்னாகிப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொன்டு சிவாஜி அந்த வலியோடு மறு நாளும் பிரசாரம் தொடர்ந்து செய்தார்.
* தனது உடல, பொருள், ஆவி என அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்ட சிவாஜியைத் தலைவராகப் பார்க்க காங்கிரஸ் தவறி விட்டது. காமராஜரின் தொண்டன் என்ற ஒற்றை சொல்லிற்குள் அவரைச் சுருக்கிக் கொண்டு அரசியலை கச்சிதமாக செய்தது.
*1962 சட்டமன்ற தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பஸ் முதலாளி நடேச முதலியார் களத்தில் நின்றார். *தனது மாநசீகக் குருவான அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் சிவாஜி பிரசாரம் செய்யவில்லை. *மனித நேயமும் செய்நன்றி மறவா குணமும் சிவாஜியிடம் இருந்ததால்தான் அவர் மற்றவர்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
*சிவாஜியின் அரசியல் பயணங்கள் பற்றிய நிகழ்வுகளை எல்லா பத்திரிகைகளும் மூடி மறைத்து அவரை ஒரு நடிகராகவே முன்னிலைப்படுத்தி முனைந்து வந்தன.
சிவாஜி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தாய்மார்களும் பெருமளவு திறன்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள். தங்கள் குழந்தைகளை சிவாஜி கையில் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்கள்.
பெரும்பாலான ஆண் குழந்தை களுக்கு காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார், பெண் குழந்தை களுக்கு சாந்தி என முதலிடம் பிடித்தது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த திமுக விற்கு சிவாஜியின் பிரசாரம் பெரும் தலைவலியைக் கொடுத்தது, திமுக வை நோக்கி திரும்பிய இளைஞர்கள் சிவாஜியால் கவரப்பட்டு காங்கிரஸ் அனுதாபியானார்கள் .
பிப்ரவரி 17, 1962 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 139 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது
திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, அதிர்ச்சியாக அண்ணாவும் தோல்வியை தழுவினார்.
1962 ல் வெளியான ஒரு நாளிதழ் காங்கிரஸின் வெற்றியை சிவாஜியின உழைப்பு எனக் குறிப்பிட்டது.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...4d&oe=5EC02946
Thanks Sekar
'கல்வியா செல்வமா வீரமா.... அன்னையா தந்தையா தெய்வமா..
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா..இதில் உயர் வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா... ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா...'
இன்று 19/04/2020- இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த" சரஸ்வதி சபதம் ". ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், ஜெமினிகணேசன், சாவித்திரி, பத்மினி, கே.ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
சிறந்த படத்தை காண தவறாதீர்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...78&oe=5EBFB0BD
பின்னுட்டம்
சகோதரர் சேகர் பரசுராமன் இந்த மாதிரியான பதிவுகளுக்கு பொருத்தமான படம் ஒன்று வையுங்கள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...36&oe=5EC11991
நடிகர் திலகத்திற்கு அமைந்த சற்றும் எதிர்பாராத சிறப்புகள்,
முதலில் பதிவிற்கான காரணம் என்னவெனில் இன்று மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்
"அம்பிகாபதி" ஒளி பரப்பாகிறது,
அம்பிகாபதி போன்ற திரைப்படங்களைத் தான் காவியம் என்று சொல்ல வேண்டும், சன் நெட்வொர்க் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அம்பிகாபதியை பார்த்தார்களேயானால் சன் நெட்வொர்க் ஒளி பரப்பில் நடிகர் திலகம் தவிர்த்து இதர எந்த நடிகர்களின் திரைப்படங்களையும் "காலத்தை வென்ற காவியங்கள் " என்ற அடைமொழியை பயன்படுத்தியதற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து விடுவார்கள்,
அந்தளவிற்கு நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே காவியங்கள் என்று பேசும் தகுதியை பெற்று இருக்கின்றன,
அம்பிகாபதி திரைக்காவியம் மாசற்ற காதலை பார்ப்போர் அனைவரையும் உணர்வுபூர்வமாக உணர வைத்த ஒரு திரை ஓவியம்,
அவ்வாறு மக்களின் ரசனையை மெருகேற்றுவதென்பது பிற நடிகர்கள் நடித்து வெற்றி பெறாத ஒன்று,
அம்பிகாபதி வெளியான தினம் 22 அக்டோபர் 1957, அம்பிகாபதியின் இயக்குநர் ப.நீலகண்டன் அதற்கு முன் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, முதல் தேதி ஆகியவற்றை இயக்கியவர், என்னக் காரணமோ அம்பிகாபதிக்குப் பின் அவர் மசாலாப் பட நடிகரின் இயக்குனரானார்,
அம்பிகாபதி மிகப்பெரிய நடிப்பு மேதைகள் இடம்பெற்ற உயர்ந்த காவியமாகவே திகழ்கிறது,
நடிகர் திலகம் பெரிதும் மதித்து வந்த மூத்த நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஆர்.மதுரம் இனை, எ.கே.ராதா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, பானுமதி ராமகிருஷ்ணா, கே.ஏ.தங்கவேலு, கே.டி.சந்தானம், ராஜசுலோசனா ஆகியோரெல்லாம் தங்களது பங்கிற்கு நடிப்பை கொட்டித் தீர்த்த திரைக்காவியம்,
திரைப்படம் என்னவோ காதல் காவியம் தான் ஆனால் உண்மையில் ஒரு நடிப்புக் காவியம்,
நடிகர் திலகம் என்ற டைட்டிலை முதலாக ஏந்திய பெருமைப் பெற்ற காவியம்,
நடிகர் திலகத்திற்கு அம்பிகாபதி 42 வது திரைப்படம்
நடிகர் திலகத்திற்கு எந்தப் படத்திலிருந்து "நடிகர் திலகம்" என்ற டைட்டிலை அறிமுகம் செய்து இருக்கலாம்? என்று பின்னோக்கி சென்றோமானால் அதற்கு முன்னர் தங்க மலை ரகசியத்திற்கே இருந்து இருக்கலாமே?
ஏன் அதற்கும் முன்னரே மக்களை பெற்ற மகராசிக்கு என்ன குறை செங்கோடன் பேச்சை வேறு ஒரு நடிகனால் பேசுவதென்பது நடக்கிற காரியமா?
இப்படி பின்னாடியே சென்றோமானால் கள்வனின் காதலி, தூக்குத் தூக்கி, அந்த நாள், திரும்பிப் பார்
இவ்வளவு ஏன் பராசக்தியிலேயே நடிகர் திலகம் என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அது திருப்தி பொருத்தம்,
அம்பிகாபதியில் நடித்துக் கொண்டிருந்த போது படத்தில் "நடிகர் திலகம்" என்ற டைட்டிலை பயன்படுத்த போகிறார்கள் என்று நடிகர் திலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை, வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்கே உரிய நடிப்புச் செல்வத்தை கொட்டிக் கொண்டே இருந்தார், அவ்வாறு தான் இந்த காதல் காவியமான அம்பிகாபதியிலும் பல நடிப்பு மேதைகளுக்கிடையே பரவசமூட்டும் நடிப்பு என்ற புதிய பரிணாமத்தை வழங்கி அசத்தினார், அதன் நூறு சதவீத பொருத்தம் நடிகர் திலகமாக காலமெல்லாம் கொண்டாடும் விதமாக நமக்கெல்லாம் அமைந்தது,
அம்பிகாபதியை பார்த்தவர்கள் இதில் நடிகர் திலகத்திற்கு பின்னணி குரல் டி.எம்.எஸ் கொடுத்தாரா? எனக் கேட்கும் அளவிற்கு பாடல் காட்சிகள் அத்தனை பொருத்தமானதாக அமைந்து போனது, பின்னர் வந்த வருடங்களான 70-80 களில் சினிமா ரசிகர்களின் ரசனை அதிக பாடல்களை கொண்ட திரைப்படங்கள் என்றால் சலிப்புத் தட்டுவதாக உணர்ந்த சூழலில் கூட அம்பிகாபதி பாடல்களை மெய் மறந்து ரசித்தார்கள்,
இசை மேதை ஜி.ராமனாதன் காலத்தால் அழியாதவர்,
நடிகர் திலகம் என்ற டைட்டிலை அம்பிகாபதியில் போடும்படியான யுக்தி தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் அவர்களுக்கு எப்படி தோன்றி இருக்கும்? என என் அறிவுக்கு எட்டியபடி படம் முழுக்க தேடினேன்? ஆயிரம் காட்சிகள் வந்து போகிறது? எந்தக் காட்சி காரணமாக இருக்கும்?
அம்பிகாபதி காவியத்தில் அமைந்த ஒரு கிளைமாக்ஸ் இறுதிக் காட்சி போல மற்ற காவியங்களில் அமைந்ததா?
இணைப்பில் "வடிவேலும் மயிலும் துணை " பாடல் இருக்கிறது,
ஏதோ ஒரு பாடல் காட்சி மட்டுமே கிடையாது மூன்று மணி நேர திரைப்படத்தை மூன்று நிமிட பாடல் காட்சிகளே சொல்லி விடும்,
100 பாடல்களை பாடிவிட்டீர்கள் என்ற மகிழ்ச்சி விழியில் சொல்லும் நாயகியைப் பார்த்ததுமே ஆனந்த பெருவெடிப்பு வெடித்தார்போல நடிகர் திலகமாம் சிவாஜியின் முகத்தில் பிரதிபலிக்கும் ஆனந்த விழிகள் ஒரு உலக அதிசயம்,
இல்லை 99 பாடல்களைத் தான் நீ பாடி முடித்திருக்கிறாய் என்ற இடி போன்ற அவை அறிவிப்பை கேட்டமாத்திரம் நெஞசு விம்மி மரண பெருமூச்சை விடும் மேலும் ஒரு உலக அதிசயம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
எனவே தான் அம்பிகாபதியைப் பொறுத்த அளவில் " நடிகர் திலகம்" சற்றும் எதிர்பாராத விதமாக "நடிகர் திலகம்" என்று டைட்டிலை கொண்டு வெளி வந்ததால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது,
அத்தனை சவால்களையுமே எதிர்கொண்டு நாம் இன்று வரை கொண்டாடும் "நடிகர் திலகம்" கிடைத்த அம்பிகாபதி என்றென்றும் காவியமாக திகழ்கிறது,
Thanks Sekar
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b6&oe=5EC17EF1
(மீள் பதிவு,)
அட்டகாசமான ஸ்டில்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு குண்டுராவ் அவர்களுடன் நடிகர் திலகம்,
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...83&oe=5EBFED46
Thanks Sekar
பின்னூட்டம்
1984 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்ட போது ராஜீவ்காந்தியின் தூதராக அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த திரு குண்டுராவ் பெங்களூரில் இருந்த அண்ணன் நடிகர் திலகம் அவர்களை தனி விமானத்தில் டெல்லி அழைத்து சென்றார். பேச்சு வார்த்தைக்கு மன்றத்தலைவர்
திரு தளபதி சண்முகம் அவர்களும் பொதுச்செயலாளர்
திரு ராஜசேகரன் அவர்களும் வர வேண்டும் என்று அண்ணன் நடிகர் திலகம் சொல்லியதால் சென்னைக்கும் ஒரு தனி விமானம் அனுப்பி அவர்களையும் அழைத்து சென்று பேச்சு வார்த்தைக்கு உதவினார் திரு குண்டுராவ். இவர் அண்ணனின் சிறந்த நண்பர்.
.....................................
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d7&oe=5EBFFED4
பிள்ளைகளுக்கு பெயர்சூட்ட பெற்றோர்கள் குழுந்தைகளை அண்ணனிடம் கொடுக்கும்பொழுது..
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...17&oe=5EC2F5BB
முல்லை ரவி எழுத்தில்...
நாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..
யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள்..
’’ஆமா இவரு பெரிய சிவாஜி..’’
தங்கைப் பாசத்தைப் பொழிய யாரேனும் வந்தால் நாம் சொல்வது "இவரு அப்படியே பாசமலர் சிவாஜி..."
தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு அந்த படத்தில் சிவாஜி அப்படி அசத்தினார்.
அதனால்தான் கே.பாலச்சந்தர் முதல் மணிரத்னம் வரையிலான ஜாம்பவான் டைரக்டர்களில் யாரைக்கேட்டாலும் அவர்களது டாப்டென் லிஸ்ட்டில் சிவாஜியின் பாசமலர் தவறாமல் இருக்கும்..
பாசமலர் படத்தை எடுத்தது நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகர் சந்தான பாரதியின் தந்தையுமான எம்ஆர் சந்தானம், இவரும் நடிகரே.
பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும் சிவாஜி போன்றவர்களுக்கு..
அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர் என்ற நாடகம்..
முன்னணி நடிகர்கள் இருவர் கடைசிநேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்கு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் அவரின் திரையுலக பயணத்திற்கே அது வெற்றிப்பாதையையும் அமைத்தது…
நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் கடைசி நேரத்தில், நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார்.
அரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள் தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற இளைஞன்.
90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் எம்ஜி ஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள், கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன. நாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு அந்த மராட்டிய சிவாஜியாகவே தெரிந்தார்..பெரியாரின் வாயால் கணேசன் என்பவர் அன்றைய தினமே "சிவாஜி" கணேசனாக மாறிப்போனார்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e5&oe=5EC3366E
Thanks ..Palaniappan Subbu